Friday, August 29, 2008

31 ஆகஸ்டு 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

31 ஆகஸ்டு 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22வது ஞாயிறு

Jer 20:7-9
Ps 63:2-6, 8-9
Rom 12:1-2
Matt 16:21-27

எரேமியா

அதிகாரம் 20

7 ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். 8 நான் பேசும்போதெல்லாம் வன்முறை அழிவு என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. 9 அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன் என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

உரோமையருக்கு எழுதிய திருமுகம்

அதிகாரம் 12

1 சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. 2 இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 16

21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். 22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார். 23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்றார். 24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். 26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? 27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியின் முதல் வாசகம், எனக்கு மிகவும் பிடித்தமான வாசகம் ஆகும். நானும், எரேமியா என்ன நினைத்தாரோ அதையே பல தடவை நினைத்துள்ளேன். நானும் கடவுளை பல முரை கோபமாக கூச்சலிட்டுள்ளேன். "ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்", நான் மீண்டும் மீண்டும் இந்த ஏமாற்றுதலை அனுமதிக்கிறேன், நீங்களும் இதே போல் நினைத்தது உண்டா?


ஏன் நாம் இப்படி செய்கிறோம்? கடவுள் நம்மை கடினமான் வாழ்க்கைக்கு இட்டு சென்றாலும், ஏன் நாம் அவரை நம்பிகொண்டிருக்கிறோம். இந்த கடினமான வாழ்க்கையில், உதவியும் அன்பும் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது, அது ஆறுதலாக இருக்காது, மேலும், மிகவும் வலியுடையது.

இறைவனுக்கு சேவை செய்வது என்பது ஒரு துணிகரமான, சாகச செயலாகும். நாம் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம். மேலும், அடிக்கடி இது வேதனையை , துன்பத்தை கொடுக்கும். நாம் நம்மையே துறக்க வேண்டும். சிலுவையை சுமந்து, யேசுவை கல்வாரி வரை அவரை பின் சென்று, உயிர்ப்பு வரைக்கும் செல்வதாகும்.


இரண்டாவது வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல, கடவுள் மேல் நம் வைத்த அன்பால், நாம் நம்மையே அவருக்காக தியாகம் செய்கிறோம். இதுதான் மிகவும் உயர்ந்த கடவுள் வழிபாடு/வணக்கமாகும். இது ஆவியோடு சேரும் சேவையாகும், நாம் திருப்பலிக்கு கூட இந்த அனுபவத்தை அறிய செல்லவேண்டியதில்லை. யேசுவோடு சேர்ந்து, நாமும் திவ்ய நற்கருணை ஆகிறோம்.

எரேமையா முதல் வாசகத்தில் செய்வது போல, நாம் கடவுளிடம் குற்றம் சொல்லலாம். நாம் எந்த தண்டனையும் இல்லாமல், நாம் அவரிடம் குறை சொல்லலாம். நாம் அவருக்காக எந்த இறைசேவையும் செய்ய மாட்டேன் என்று சொல்லலாம். ஆனால் அவரை பற்றி மற்றவர்களிடம் கூறுவது, என்பது பாவமாகும். இது வம்பளப்பது போன்றது ஆகும். தவறான எண்ணத்தை உண்டு பன்னகூடியது ஆகும். மேலும் கடவுளை தவறான பிம்பத்தில் பார்க்க தூண்டும்.

மற்றவர்களை நமக்காக வேண்டிக்க சொல்வது, மிகவும் முக்கியமானதாகும். இதனை நாமும் தொடர்ந்து செய்ய வேண்டும். மற்றவர்களிடம் குறை கூறுவது என்பது, நாம் கடவுளை மிகவும் குறைவாக விசுவசிக்கிறோம் என்பதாகும். நம்முடைய தியாகத்தால், பின் வரும் நாட்களில், நல்லதையே பார்ப்போம், நமக்கு நல்லதே நடக்கும். இதை தான், நாம் மற்றவர்களிடம் எடுத்து சொல்லவேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 22, 2008

ஆகஸ்டு 24, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 24, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21வது ஞாயிறு

Isaiah 22:19-23
Ps 138:1-3, 6, 8
Rom 11:33-36
Matt 16:13-20
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 16

13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள். 15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார். 16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.'பேதுரு' என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் 'பாறை' என்பது பொருள்.19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார். 20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

யேசு கிறிஸ்து புனித பீட்டரை/ராயப்பரை திருச்சபையின் தலைவராக ஆசிர்வதித்து,
"உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" என்று கூறுகிறார். எந்த தீங்கும் இந்த திருச்சபையை தீண்டாமலிருக்க தான் பார்த்து கொள்வதாக உறுதி கூறுகிறார்.

யேசு நரகம் இந்த திருச்சபையுடன் மோதி வெற்றி கொள்ளாது என்று கூறவில்லை. நன்றாக கவனியுங்கள், பாதாளத்தின் வாயில்/கதவுகள் வெற்றி கொள்ளாது என்று கூறுகிறார். கதவுகள் எதிலும் போரிடாது ஆனால், தன்னையும், உள்ளே இருப்பவர்களையும் காத்துகொள்ளும். யாரவது உனக்கு தெரிந்தவர்கள், அவர்கள் பாவத்தினால், சிறைக்குள் இருக்கிறார்களா? அல்லது தவறான சுற்று புறத்தினால் சிறைக்குள் இருக்கிறார்களா?

சாத்தானின் தாக்க்குதலுக்கு, கிறிஸ்தவர்கள் தற்காத்து கொண்டு இருக்க கூடாது. கிறிஸ்தவர்கள் திரும்பி தாக்க அழைக்கப்படுள்ளோம். நரகத்தின் கதவுகளை தாக்கி, அதனை கீழே விழச்செய்யவேண்டும், மேலும், மற்றவர்களை தவறான வழிக்கு இட்டு செல்லும், பேய்களை மிதித்து உங்கள் காலடிக்கு கீழ் கொண்டுவரவேண்டும்.

2000 வருடங்களுக்கு முன் யேசு எப்படி சாத்தானின் மீது வெற்றி கொண்டாரோ, அவ்வாறே நம் மூலமாக சாத்தானை வென்று வருகிறார்.

பாவிகள் தீமைகளிலிருந்து திருந்தி மீண்டு வரும் சாவியை, யேசு பேதுருவுக்கு கொடுத்தார், அவருக்கு திருச்சபையின் தலைவராக பட்டம் கொடுக்கும்போது கொடுத்தார். அவரே முதல் போப்பான்டவராக ஆனார். அந்த சாவி தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களின் போப்பானவர்களூக்கு தரப்படுகிறது. இந்த தொடர்பில், இதுவரை தொடர்பு அறுந்து விட வில்லை.

அந்த சாவிகள் எல்லாம் எது? சாத்தானின் கதவுகள் "அருட்சாதனங்கள்" மூலம் திறக்கபடுகிறது. அந்த அருட்சாதனங்கள் தான் மோட்சத்தின் வாயிலுக்கு திறவுகோலாக உள்ளன. பாவசங்கீர்த்தனத்தின் போது குருவானவர் அவர்களின் பாவங்களை மன்னிக்கும்போதும், குருவானவர் ஆனையும் பென்னையும் திருமணத்தில் இணைக்கும் போது, யேசுவே குருவானவர் மூலம் செய்கிறார்.

அருட்சாதனத்தின் தெய்வீக ஆற்றல், சாத்தானின் ஓவ்வொரு தாக்குதலையும் காலடியும் வீழ்த்திவிடும், ஆனால், நாம் ஒவ்வொரு அருட்சாதனத்தையும் அக்கறையுடன் நடத்திடல் வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 15, 2008

ஆகஸ்டு 17, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 17, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20வது ஞாயிறு
Isaiah 56:1, 6-7
Ps 67:2-3, 5-6, 8 (with 4)
Rom 11:13-15, 29-32
Matt 15:21-28

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 15

21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். 22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார். 23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர். 24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ' என்றார். 25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார். 26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார். 27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார். 28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நாம் மற்றவர்களை எப்படி தீர்ப்பளிக்கிறோம், அவர்களை எப்படி கருத்து தெரிவிக்கிறோம். கானானியப் பெண்ணுக்கு இரண்டு விசயங்கள் பட்சபாதத்தை உண்டு பன்னுகிறது: ஒன்று அவர் ஓர் பெண், அடுத்தது அவர் இஸ்ரேயலர் அல்ல.
நிச்சயமாக, அகில உலகிற்கும் மெசியா யேசுதான், ஆனால், அதனை சீடர்கள் இன்னும் அறியவில்லை. அவர்களின் மனதை மாற்றவும் (நன்னுடையதையும்), யேசு அந்த பெண்மனி முழுமையாக அவளுடைய விசுவாசத்தை காட்டவேன்டும் என்பதற்காக காலம் தாழ்த்தினார். அந்த விசுவாசம் , அவருடைய மற்ற குறைகளை பின்னுக்கு தள்ளிவிடும்.

யேசுவை பொருத்தவரை, யாரெல்லாம் கடவுளரசில் சேருவதற்கு விரும்பாமல், வெளியே செல்கிறார்களோ, அவர்கள் வெளியாட்கள். மற்ற எல்லோருமே கடவுளின் அன்பு மக்கள் ஆவர். ஆனால், நாம் உடனே இந்த மாதிரியான எண்ணத்தோடு நினைப்பத்தில்லை. நமது திருச்சபையானது, பலவாறு தவறான தீர்ப்பளிக்கபட்ட மக்களை கொண்டுள்ளது. நிறைய பேர், நாம் இந்த திருச்சபையை விட்டு வெளியே இருக்கிறோம் என நினைக்கின்றனர். நாம் ஒருவர் மற்றவரை பற்றி மிகவும் சுலபமாக தவறான முடிவெடுத்து அப்படியே அவர்களை பற்றிய எண்ணங்களுடன் இருக்கிறோம்.

எடுத்து காட்டாக, எத்தனையோ பெற்றோர்கள், தனியாக உள்ளனர். நம்மில் எத்தனை பேர் அவர்களை கோவிலுக்கு அழைத்து செல்கிறோம். ஏன் அவர்களுக்கு கோவிலில் உள்ள பல சேவைகளையோ, அல்லது பங்கு வேலைகளில் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் அவர்கள் பங்கு வேலைகளில் ஈடுபடும்போது, அவர்கள் குழந்தைகளை நாம் ஏன் கவனித்துகொள்வதில்லை. ?
நீங்கள விவாகரத்து பெற்றவரா?, மற்றவர்கள் உங்களை ஒதுக்குகிறார்கள் என நினைத்து கொண்டிருக்கிறீர்களா? அதுவே உங்களை பற்றிய தவறான தீர்ப்பாகும்.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை, மிகவும் இரக்கத்தோடு நமது திருச்சபைக்கு அழைக்கவேண்டும். என்று சொல்லியபிறகும் ஏன் அவர்கள் கோவிலுக்கு வருவதில்லை.?

ஏன் சாதாரன பங்கு மக்கள், பங்கு குருவானவரோடு சேர்ந்து பனியாற்ற தடுக்கபடுகிறோம் என நினைக்கிறார்கள்.?

நமது திருச்சபையில், பல வேலைகள் இன்னும் செய்ய ஆளில்லாமல் இருக்கிறது, அது ஏனென்றால், நாம் நமது கிறிஸ்தவர்களை, சகோதரர்களை தவறாக எண்ணி, தவறான தீர்ப்பால், அவர்கள் அதனால், நமது திருச்சபையை விட்டு விலகியே நிற்கின்றனர். இந்த தவறான எண்ணங்கள், மற்றும் தீர்ப்புகள் விலக்கப்படுவதற்கான விளைவுகளை உண்டாக்குகிறது. ஆனால் நாம் விழிப்புணர்வுடன் இருந்து, இது மாதிரியான தவறான் அனுமானங்களுக்கும், தவறான நிந்தனைகளுக்கும், தீர்ப்புகளுக்கும், உடனே எதிர்வினை காட்டாமல், யேசுவின் ஆற்றலுக்கு நாம் அடிபனிந்து, அவரை மற்றவர்களுக்காக ஏற்று, கிறிஸ்துவை அவர்களுக்கும் கொடுத்திட வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 8, 2008

ஆகஸ்டு 10, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 10, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 19வது ஞாயிறு
1 Kgs 19:9a, 11-13a
Ps 85:8-14
Rom 9:1-5
Matt 14:22-33

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 14

22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். 23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். 24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. 25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர். 27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ' என்றார். 28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார். 29 அவர், ' வா ' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். 30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் ' என்று கத்தினார். 31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார். 32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. 33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு ரொட்டி துண்டுகளையும், இரண்டு மீன்களையும், பல மடங்காக பெருக்கி, ஆயிரக்கணக்கானோர் உணவு கொடுத்த புதுமையை முடித்து விட்டு, சீடர்களை தனியே அனுப்பி விட்டு, தந்தையிடம் தனியே ஜெபிக்க ஒதுங்கி மலை மேல் சென்றார். கடவுளோடு சில நேரங்கள் செலவிட்டு, பிறகு தண்ணீரின் மேல் நடந்து, சீடர்களை நோக்கி வருகிறார்.

யேசு அடிக்கடி ஜெபம் செய்வதில், அதிக நேரம் செலவிட்டார். நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதை விட, அவர் அதிகமாகவே ஜெபங்களில் ஈடுபட்டார். ஏன் இதனை இங்கே குறிப்பிடுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? எப்படி, ஆக்கபூர்வமான விசுவாசத்தை அடைவது என்பதனை மத்தேயு நமக்கு காட்டுகிறார்.

நமக்கும், அடிக்கடி ஜெபம் செய்ய, தனிமையான இடம் தேவைபடுகிறது. அந்த ஜெபங்களின் மூலம், நம்முடைய ஆற்றலையும், யேசு நம் குடும்பங்களில் நம் மூலம் நம் குடும்பங்களில் என்ன செய்ய சொல்கிறார் என்பதனை நாம் புதுப்பித்து கொள்கிறோம். நமது ஆற்றலுக்கு புத்துணர்வு கொடுக்கிறோம். நமது வேலையிடத்தில், பொழ்து போக்கும் இடங்களிலும், பங்கு கோவிலிலும், நமது ஆற்றலை அதிகம் செலவிட ஜெபங்களின் மூலம் நாம் புத்துணர்வு பெறுகிறோம். பல ப்ரச்னைகளில் மீண்டு வரும் ஆற்றல் அனைத்தும் ஜெபங்களின் மூலம் கிடைக்கும். நாம் மற்றவர்களுக்காக நமது நேரத்தை,நமது பொருட்களை செலவிட்டு விடுகிறோம். நம்மிடம் மற்றவர்களுக்காக செலவானது எல்லாம், ஜெபங்களின் மூலம் கடவுள் மீண்டும் நிரப்புகிறார்.

நாம் ஜெபங்களின் மூலம், நமது வழிகளில் என்ன நேர்ந்தாலும் அதனை எதிர் நோக்கும் திறமையை, ஆற்றலையும் பெற்று, நம்மையே தயார்படுத்திகொள்ளவேண்டும்., நாம் கடவுளோடு தனியே சென்று அவரோடு ஜெபம் செய்யும் நேரங்களில், நாம் பெறும் அன்பளிப்பு, நமக்கு தேவையானதாகவும், நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதற்கு ஏற்றார்போல நமக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஜெபங்கள் நமது விசுவாசத்தை உறுதியாக்குகிறது. தண்ணீறில் எப்படி நடப்பது என்று நமக்கு கற்று கொடுக்கிறது. கடவுளின் உதவி தேவைபடும் மக்களிடம் நம்மை அழைத்து செல்கிறது. கடவுள் அவர்களுக்கு நம் மூலமாக சேவை செய்ய விரும்புகிறார். நீங்கள் அதற்கு தயாரா?

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 1, 2008

ஆகஸ்டு 3, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 3, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 18வது ஞாயிறு


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 14

13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். 14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். 15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர். 16 இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். 17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள். 18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார். 19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். 21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி எனக்கு அதிக பசியையும், தாகத்தையும் தூண்டுகிறது! நாம் எல்லோரும் திருப்பலி முடிந்தவுடன், உணவருந்த செல்லலாமா?

இன்றைய பதிலுரையில் நாம் சொல்வது போல, "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன: தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்", இருந்தும், இந்த உண்மையை தெரிந்தும், நாம் நமக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம் என நாம் ஒரு போதும் நினைப்பதில்ல்லை. நம்மில் இருப்பவற்றில் நாம் திருப்தி அடைந்து விடுவதில்லை.

மேலும், நம்மில் எல்லா விசயங்களும், செயல்களும், நல்ல முறையில் அமைந்தால் கூட, நாம் முழு திருப்தியுடன் இருப்பதில்லை. நமக்கு இன்னும் தேவை அதிகமாகிறது. நாம் இன்னும் அதிகம் நேசிக்கப்படவேண்டும் என விரும்புகிறோம், இன்னும் அதிகம் நாம் கவணிக்கப்படவேண்டும் என கெஞ்சுகிறோம். நமக்கு தேவையான அங்கீகரிப்பும், உதவியும், நாம் எதிர்பார்ப்போரிடமிருந்து வரவில்லையெனில், நாம் அதிருப்திக்கு உள்ளாகிறோம். நமது துணிவு, தைரியம், எல்லாம், உடைந்து போகின்றன.

நமது வாழ்க்கையில் இணைந்துள்ள ஒவ்வொரு மனிதருக்கும், கடவுளின் அன்பை நமக்கு பகிர்ந்தளிக்கவும், நம் மேல் அக்கறையோடு இருக்கவும், பனிக்கபட்டுள்ளனர். ஆனால், யாரும் நம்மை முழுமையாக அன்பு செய்வதில்லை. மேலும், சிலர் இந்த பணியை, முழுதும் புறக்கணிக்கின்றனர். இதனால் தான், நாம் செயல்குழைந்து, அல்லது கோபத்துடன், அல்லது நம்மையே தனிமைபடுத்திகொண்டு, இருக்கிறோம். எனவே, நாம் எல்லாவற்றிர்காகவும் பசியோடு காத்திருக்கிறோம், ஏங்குகிறோம்.

குறையுள்ள மனிதர்களை நாம் மன்னித்து, யேசுவை நோக்கி வேண்டினால், அவர் மிகவும் சிறியதையும், பல மடங்காக பெருக்கி கொடுப்பார்.

அதிருப்தியுடன் இருப்பது, யேசு நமக்கு கொடுக்கும், ஒரு சைகை மூலம் காட்டும் அடையாளம் போல, அந்த அடையாளத்தின் மூலம், நாம் யேசுவை நோக்கி செல்லவேண்டும் எனபதே அதன் அர்த்தம். அந்த அடையாளம்: யேசு என்னவோடு நம்க்கு கொடுக்க விரும்புகிறார். அது என்ன? ஆனால், நாம் அதனை வாங்கிகொள்ள நாம் இன்னும் தயாராக இல்லை. மேலும், அதனை யேசு எப்படி நமக்கு கொடுக்க போகிறார். நாம் அவரை நேரடியாக பார்க்கவில்லை, அவர் நம்மை தொடுகின்ற உணர்வு இல்லை என்ற கேள்வியோடு இருக்கின்றோம்.

நமக்கு கண்களுக்கு தெரியாத கடவுளோடு, எப்படி திருப்தி அடைவது என்றால், நாம் அவரோடு சேர்ந்து இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஜெபத்தில் அதிகம் ஈடுபடவேண்டும். கடவுள் நம்க்கு கொடுத்துள்ள கிறிஸ்துவ சமூக குழுவோடு இணைந்து செயல்படவேண்டும். கடவுள் என்ன செய்கிறார், அவர் யார் மூலம அதனை செய்ய முற்படுகிறார் என தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் முயற்சிக்க வேண்டும். இதன் அர்த்தம் என்ன வென்றால், மேலும், மேலும் இதில் நாம் ஈடுபடவேண்டும், மற்றும், எதிர்பார்க்க முடியாத விசயத்தை எதிர்பார்த்து இருத்தல் வேண்டும்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm