Friday, July 29, 2011

ஜுலை 31, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுலை 31, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு

Isaiah 55:1-3
Ps 145:8-9, 15-18
Rom 8:35, 37-39
Matt 14:13-21



மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 14

ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
(மாற் 6:30 - 44; லூக் 9:10 - 17; யோவா 6:1 - 14)
13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.16இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார்.17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள்.18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார்.19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

(thanks to www.arulvakku.com)


இந்த வாசகங்கள் எனக்கு தாகத்தையும், பசியையும் தூண்டுகிறது!. நாம் திருப்பலி முடிந்து இரவு உணவிற்கு செல்லலாமா?


இன்றைய பதிலுரை பாடலில், "தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்." இதனை தெரிந்து கொண்டும், நமக்கு போதுமானதாக இல்லை. நமக்கு இருக்கிறதே போதும் என்று நாம் இருப்பதில்லை.


வாழ்க்கையில் எல்லா விசயங்களும் நமக்கு நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், திருப்தி பட்டு கொள்வதில்லை. முக்கியமாக நமது உறவுகளில் நாம் இன்னும் திருப்தி அடைவதில்லை. நமக்கு இன்னும் அன்பும், நம்மை முக்கியமாக அக்கறையோடு மற்றவர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் அன்பிற்கு தாகமாக இருக்கிறோம். இருந்தாலும், அதிருப்தியால் முனுமுனுக்கிறோம். மற்றவர்களீன் அக்கறையய்யும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். யாரெல்லாமிடமிருந்து நமக்கு ஆதரவு தேவையோ ,அவர்களிம் ஆதரவை, கனிவையும் எதிர்பார்க்கிறோம்.


மேலும், நாம் வாழ்வில் அருகில் இருக்கும் மனிதர்கள், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடவுளின் அன்பையும், அக்கறையையும், உங்களுக்கு கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், யாருமே முழுமையாகவும் , பிழையற்ற அன்பினை கொடுப்பதில்லை. சிலர் இந்த அழைப்பை அப்படியே நிராகரித்து விடுகின்றனர். இதனால் தான், நாம் இன்பத்தை வெறுத்தும், கோபத்தோடும், செயல் குழைந்து போயும், தனிமைபட்டும், பசியோடும் இருக்கிறோம்.

நாம், பிழையுள்ள மனிதர்களை மன்னித்தும், இயேசுவை நோக்கி நாம் ஜெபித்தால், அவர் சின்னதை கூட பல மடங்காக பெருக்கி தருவார். நாம் பிழையுள்ள மனிதர்களை பார்காமல், இயேசுவை நோக்கி பார்த்தால், இயேசு நம் இதயம் முழுதும் நிரம்ப அன்பை பொழிவார்.

திருப்தியற்ற தன்மை என்பது, இயேசு உங்கள் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறார் என்று அர்த்தம்;இயேசு எதையோ கொடுக்க விரும்புகிறார், ஆனால், நாம் அதற்கு இன்னும் தயாரகவில்லை. நமது ப்ரச்னை என்ன வென்றால்: இயேசுவை நாம் பார்க்காமல், அவரை தொடாமால், எப்படி அவர் கொடுப்பதை நாம் வாங போகிறோம்?


கண்ணுக்கு தெரியாத கடவுளை நாம் எப்படி தொட்டு திருப்தியடைய போகிறோம், நாம் எப்பொழுது, ஜெபத்தில், கிற்ஸ்தவ குழுக்களிலும் இனைந்து, கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும். கடவுள் என்ன செய்கிறார் என்பதை கூர்ந்து நோக்கியே இருக்க வேண்டும். மேலும் யார் மூலம் அதனை செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள முற்பட வேண்டும். அதிக ஈடுபாடும், எதிர்பாராததை எதிர்பார்த்தும் தயாராக இருக்க வேண்டும்.

© 2011 by Terry A. Modica

Saturday, July 23, 2011

ஜூன் 24, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 13

புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
முத்து உவமை
45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
வலை உவமை
47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். '
முடிவுரை
51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள்.52 பின்பு அவர்,'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், விண்ணரசை, நிலத்தில் புதைந்துள்ள புதையலுக்கும், விலை உயர்ந்த முத்தாகவும், மீன் வலை பிடித்து, நல்லதை வைத்து கொண்டு, தீயதை தூக்கிபோதுவது போலவும் உவமையாக இயேசு சொல்கிறார். இதையே மாறாக சொல்வதானால், நமது கிறிஸ்தவ வாழ்வு தான், விலை மதிப்புள்ளவை ஆகும். நமது நெஞ்சில் வீனான பொருட்கள் இருந்தால், அதை தூக்கி எறிந்து விட்டு, விலை மதிப்புள்ள பொருட்கள் வைக்க அதனை தயார் படுத்துங்கள். நாம் வைத்திருக்கும் சில பொருட்கள் தற்காலிகமனவை, இவ்வுலகில் அதற்கு மதிப்பிருக்கலாம், ஆனால் அதனை வின்னரசிற்காக உபயோகப்படவில்லயென்றால், அவையெல்லாம் மதிப்பில்லாதவை தான்.

உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்று கூறுகிறது. தவறான முத்துக்களையும், வீனாய் போன மீன்களையும் நாம் களைந்து தூக்கி எறிந்தால் தான் நாம் கடவுளை போல் ஆக முடியும். நாம் வின்னரசிற்கு உபயோகமாக இருக்க முடியும். இரக்கமுள்ள கடவுளின் கைகளில், ஆற்றல் மிகுந்த கடவுளின் கைகளில் நாம் இருக்கும் பொழுது, நமக்கு கெட்டது நடந்தால் கூட, அது நமது நல்ல முத்துககளை மிண்ன செய்யும், நம்மிடம் உள்ள நல்ல விசயங்களை வெளியே காட்டும்.


முதல் வாசகத்தில், சாலமன், கடவுளிடம் அதிகம் சொத்துக்களும், பொன்னும் பொருளும் கேட்டிருக்கலாம், கடவுளும் கொடுத்திருப்பார். ஆனால், அதற்கு பதிலாக சாலமன், புரிந்து கொள்ளும் இதயத்தையும், ஆற்றலையும் கேட்டார். அதன் மூலம் அவர் ஞாணம் பெற்று அதனால், நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யமுடியும். அவர் அட்சி அவ்வளவு சரியாக செய்யாமல் இருந்தாலும், மிகவும் ஞானமுள்ள , அறிவும் நிறைந்த மன்னர் என்று உலகம் முழுதும் பேசியது. அதன் மூலம் அவர் பல செல்வங்களை பெற்றார்.

கடவுளரசின் செல்வத்தை முதலில் நாம் தேடினால் தான், இவ்வுலகின் பொருட்களை நாம் பாதுகாப்பாக உபயோகிக்க முடியும் என்று இந்த கதை சொல்கிறது. எவ்வளவு அதிகமாக நாம் கிறிஸ்துவை அன்பு செய்து, அவர் வழியில் செல்கிறோமோ, அப்போது தான், எது உண்மையான மதிப்புடையது என்பது நமக்கு தெரியும். நம்மால், கடவுளுக்கு ஆகாத குப்பை பொருள் என்ன என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும். மேலும் வின்னரசிற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் உபயோகிக்க முடியும்.


© 2011 by Terry A. Modica

Friday, July 15, 2011

ஜூலை 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு


Wisdom 12:13, 16-19 - சா ஞா 12 : 13, 16 - 19
Ps 86:5-6, 9-10, 15-16
Rom 8:26-27 - உரோ 8 : 26, 27
Matt 13:24-43 - மத் 13 : 24 – 43



நற்செய்தி வாசகம்
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன.
நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, `ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், `இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், `நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள். அவர், `வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், `முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன்'' என்றார்.
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.''
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.''
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர்.
அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு;அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''
(thanks to arulvakku.com)


அமெரிக்க பிஷப்கள் எல்லாம், இணைந்து கத்தோலிக்க மணமாற்றத்தை எப்படி செய்தல் வேண்டும் என்று வறையறுத்துள்ளனர். அதன் தலைப்பு "செல்லுங்கள், சீடர்களை உருவாக்குங்கள்".("Go and Make Disciples." ) இது மூன்று முக்கிய கட்டங்களை குறிப்பிடுகிறது.
1) உங்கள் விசுவாசத்தை நன்கு வளர்த்திடுங்கள்:
2) மற்றவர்களை மணமாறுதலுக்கு அழைத்திடுங்கள்
3) கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றிடுங்கள்

இன்றைய நற்செய்தியில், இயேசுவும் இதனையே மணமாற்றத்திற்கான நோக்கங்களாக உவமைகளாக சொல்கிறார்.


1) உங்கள் விசுவாசத்தை நன்கு வளர்த்திடுங்கள்: இறையரசில், நாமெல்லாம், களைகளுக்கிடையே உள்ள நல்ல கோதுமை பயிர்களாக இருக்கிறோம். நாம் பரிசுத்த வாழ்வில், மிக சரியாக வளரவில்லையென்றால், களைகள் நம்மை விட அதிகமாக வளர்ந்துவிடும், நம்மை நசுக்கிவிடும், உங்கள் பரிசுத்த வாழ்விலிருந்து களைகளை அகற்ற என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையற்றோரிடமும், சாத்தான் வழி செல்பவர்களிடமும் இடையே நீங்கள் வாழும்பொழுது, உங்கள் விசுவாச வாழ்வு எவ்வாறு பலனடைகிறது? , உங்கள் தந்தை கடவுள் - உலகை படைத்தவர் நீங்கள் பரிசுத்த வாழ்வில் வளர, உங்களுக்கு தேவையான எல்லா ஆற்றலையும், அதிகாரத்டையும் வழங்குகிறார்.
2) மற்றவர்களை மணமாறுதலுக்கு அழைத்திடுங்கள்: இறையரசில், நாம் கடுகை போல மிகச்சிறிய அளவுடன் உள்ளோம், ஆனால் வளர்ந்த பின் எல்லோருக்கும் அதிக பலனும் நன்மையும் கிடைக்கிறது. உங்கள் விசுவாசத்தால் யாரெல்லாம் பலன் அடைகிறார்கள்? உங்கள் பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி, மற்றவர்கள் இயேசுவோடு இனைய எவ்வாறு அழைக்கிறது? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எல்லா ஆற்றலையும் கொடுத்து, அவர்களின் விசுவாசத்தை வளர்க்க உதவிடுகிறார். ஆனால், நீங்கள் மனமுவந்து அவர்களை இறைவனின் பரிசுத்த வாழ்வை அனுபவிக்க அழைக்க வேண்டும்.
3) கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றிடுங்கள் : இறையரசில், நாம் எல்லாம் புளிப்பு மாவை போன்றவர்கள். அதனை மற்ற மாவோடு கலந்தால், எல்லா மாவையும் புளிக்க செய்துவிடும், அதே போல, நாம் கிற்ஸ்தவர்களாக , இவ்வுலகை முன்னேற்ற என்ன செய்து கொண்டிருக்கிறோம்? உங்கள் பரிசுத்த வாழ்வு, நீங்கள் வேலை செய்யும் இடத்தில், கோவிலில், சமூகத்தில் என்ன வித்தியாசத்தை கொடுக்கிறீர்கள்? திருப்பலியில் நீங்கள் பெற்று கொள்ளும் திவ்ய நற்கருணையினால், நீங்கள் இவ்வுலகை உங்கள் நன்மைகளால் இன்னும் வளமாக்க முடியும்.
© 2011 by Terry A. Modica

Friday, July 8, 2011

ஜுலை 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுலை 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு

Isaiah 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Rom 8:18-23
Matt 13:1-23
நற்செய்தி வாசகம்
விதைப்பவர் விதைக்கச் சென்றார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23
அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ,அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார்.
சீடர்கள் அவர் அருகே வந்து, ``ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ``விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: `நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது;காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' உங்கள் கண்களோ பேறுபெற்றவை;ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''

மறையுரை
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி கூறுகிறது. இதிலிருந்து நாம் கற்று கொள்வது என்னவென்றால், விதைக்கப்பட்ட விதை நிலத்தில் விழுந்து பலன் தராவிட்டால், விதை விதைத்ததற்கு உண்டான முயற்சி வீனாகிவிடும். ஒவ்வொரு விதையும், அது முன்னாடி இருந்தது போல் இல்லாமல், அழிந்து வேறொரு செடியை கொடுக்க வேண்டும். அந்த விதை மண்ணோடு அழிந்து, புதிய செடியை , தண்டிலிருந்து ஆரம்பித்து, பல மடங்காக பெருகி பெரிய மரமாக பலபேருக்கு உதவக்கூடியதாக மாறும். ஆனால், விதையிலிருந்து, மரமாக ஆகும், வரை தரமான பராமரிப்பு, வேண்டிய ஊட்டசத்தும் கொடுக்க வேண்டும்.


விதை மண்ணிலேயே அழிந்து, சரியான ஊட்ட்சத்துடன் வளரும்பொழுது, அது செடியாக மரமாக வளர்ந்து, பல மடங்காக பெருகி, இயற்கையின் எல்லா வளங்களும், இதன் பலனை அடைவது தான் இதன் நோக்கமாகும்.


இயேசு உவமையை சொல்லி நாம் கேட்கும் பொழுது, நாம் அதற்கு ஆம் என்று சொல்கிறோம். நாம் நல்ல விதையாக இருந்து, நல்ல பழங்களை தருவோம் என்று இயேசுவிடம் 'ஆம்' என்று சொல்கிறோம். நாம் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது மட்டும், நம்மை அப்படியே மாற்றிவிடாது. நமது வாழ்வின் மண்ணை, எப்படி மாற்றினால், நாம் நல்ல பழங்களை தரமுடியும் ?

இறைவாக்கினர் எசாயா வாசகத்தில், கடவுளே நல்ல விளைச்சலை தரும் மண் என்று சொல்கிறார். கடவுளும், அவர் வார்த்தைகளும், மேலும் அவர் எதையெல்லாம் விரும்புகிறாரோ அதனையெல்லாம் கொடுக்க கூடிய மண்ணாவகே கடவுள் இருக்கிறார். புனித பவுல் இரண்டாவது வாசகத்தில், துன்பப்பட்டால், தான், ஒன்றை உருவாக்க முடியும் என்று சொல்கிறார்.(விதைகள் மண்ணில் அழிந்து மீண்டும் செடியாக உருவானால் தான் பழங்களை தரமுடியும்). துன்பத்திலும், இறப்பிலும் தான் நமக்கு மீட்பு கிடைக்கும்.
நாம் மண்ணாக மாறி, கடவுள் நம்மை மாற்றியமைக்க அனுமதித்தால் மட்டுமே, நாம் உண்மையாகவே முழுதுமாக கணி தரும் மரமாக மாறமுடியும்.



© 2011 by Terry A. Modica

Friday, July 1, 2011

ஜூலை 3, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 3, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு

Zec 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Rom 8:9, 11-13
Matt 11:25-30


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 11



தந்தையும் மகனும்
(லூக் 10:21 - 22)
25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)




இயேசுவின் நுகத்தை சுமையை ஏற்று கொண்டதால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்களா? அல்லது கவலையோடு இருக்கிறீர்களா? இயேசுவின் நுகம், சுமை - அவரது வாழ்வில் வெளிப்படுத்தியது போல, சேவை செய்பவராகவும், மற்றவர்களின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும், தியாகமுள்ள அன்புடனும் இருப்பது தான் இயேசுவின் நுகம், சுமை ஆகும்.


எனினும், நமக்கு , பல சுய போராட்டங்கள் இருக்கிறது. நமது சொந்த சிலுவைகளை நாமே சுமக்க வேண்டியுள்ளது. பலரின் கவனம் நம் மேல் இருக்கும். அந்த சுமைகளெல்லாம் சேர்ந்து, நம்மை கிழே தள்ளும், சோர்வுற செய்யும். பிறகு ஏன் இன்றைய நற்செய்தியில், இயேசு, என் நுகம், எளிதானது, அதன் சுமைகள் அழுத்தாது என்று கூறுகிறார்.?

இயேசுவின் இறைசேவகளில் நாம் பங்கெடுக்கும்பொழுது, அது எப்படி நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ?

நமது வாழ்வின் சுமைகள் நம்மை கீழே தள்ளி விடும், ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட, அதிகமாக, நம் பொறுப்புகளை எடுத்து கொண்டு செய்கிறோம்.

அல்லது, இயேசு நம் சுமைகளை எடுத்து கொண்டவுடன், சிலுவைகளை நாம் எடுத்து கொண்டு, அதிகமாக நமது ஆற்றலை செலவிடுகிறோம். இந்த சுமைகளால், நாம் களைத்து போகும்பொழுது, கடவுள் நம்மை சோர்வுறசெய்கிறார். ஏனெனில், அவர் நம்மை எச்சரிக்கிறார். "மெதுவாக செய்யவும்!, உங்கள் வாழ்க்கையை சுலபமாக்குங்கள்!, ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்!. ஜெபத்தில் அதிக நெரம் செலவிடுங்கள்!"


இதெல்லாம், உங்களுக்கு, கோபத்தையும், மனக்கசப்பையும் கொடுத்தால், சுலபமான வாழ்க்கை வாழ விரும்பும், உங்கள் சுய நலத்தினால் தான், உங்கள் வாழ்வு இன்னும் கடினமாகியுள்ளது என்று கடவுள் நமக்கு காட்டுகிறார்.


நமது சுய தேவைகளை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும், அதற்கு பிறகு தான் இயேசுவின் சுமையை நம்மால் எடுத்து அவர் கேட்டதை செய்ய முடியும். கிறிஸ்துவின் நுகம், நமக்கு சுமையாக இருக்கும், எப்பொழுது? கிறிஸ்துவிடமிருந்து நாம் எதையும் வாங்காமல், நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது தான். இயேசு நமக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பார். அவரோடு இனைந்து, நாம் மற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை கொடுக்கலாம். அதன் பிறகு, நமது கோபமும், மனக்கசப்பும் நம்மை விட்டு விலகிவிடும். மேலும், பரிசுத்த வாழ்வின் இன்பத்தினை , நமது செயல்கள் மூல்ம் நாம் சுவைப்போம். ஏனெனில், கிறிஸ்துவின் சுமையையும், ஆற்றலையும், சக்தியையும் நாம் இயேசுவோடு இனைந்து, அவரது சுமையையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.


© 2011 by Terry A. Modica