Friday, March 21, 2014

மார்ச் 23, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 23, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம ஞாயிறு
Exodus 17:3-7
Psalm 95:1-2, 6-9
Romans 5:1-2, 5-8
John 4:5-42
 யோவான் நற்செய்தி
அதிகாரம் 4: 5 – 42
5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். 7 அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.8 இயேசு அவரிடம், ' குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் என்று கேட்டார்.9 அச்சமாரியப் பெண் அவரிடம், 'நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.http://www.arulvakku.com/images/footnote.jpg10 இயேசு அவரைப் பார்த்து, ' கடவுளுடைய கொடை எது என்பதையும் ' குடிக்கத் தண்ணீர் கொடும் ' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.11 அவர் இயேசுவிடம், ' ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?12எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம் ' என்றார்.13இயேசு அவரைப் பாhத்து, ' இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் என்றார்.15 அப்பெண் அவரை நோக்கி, ' ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது ' என்றார்.16இயேசு அவரிடம், ' நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும் என்று கூறினார்.17 அப்பெண் அவரைப் பார்த்து, ' எனக்குக் கணவர் இல்லையே ' என்றார். இயேசு அவரிடம், ' எனக்குக் கணவர் இல்லை ' என நீர் சொல்வது சரியே.18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே என்றார்.19 அப்பெண் அவரிடம், ' ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே ' என்றார்.21 இயேசு அவரிடம், ' அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். http://www.arulvakku.com/images/footnote.jpg24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும் என்றார்.25 அப்பெண் அவரிடம், ' கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார் ' என்றார்.26 இயேசு அவரிடம், ' உம்மோடு பேசும் நானே அவர் என்றார்.27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ' என்ன வேண்டும்? ' என்றோ, ' அவரோடு என்ன பேசுகிறீர்? ' என்றோ எவரும் கேட்கவில்லை.28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,29 ' நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ! ' என்றார்.30அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.31 அதற்கிடையில் சீடர், ' ரபி, உண்ணும் ' என்று வேண்டினர்.32 இயேசு அவர்களிடம், ' நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது 'என்றார்.33 ' யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ ' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.34 இயேசு அவர்களிடம், ' என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.35 ″ நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.36 அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர.http://www.arulvakku.com/images/footnote.jpg37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.38 இவ்வாறு ' விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர் ' என்னும் கூற்று உண்மையாயிற்று என்றார்.39 \'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்\' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வவூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். 40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.42 அவர்கள் அப்பெண்ணிடம், ' இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம் ' என்றார்கள்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் எதற்கு தாகமாக இருக்கிறீர்கள்? நம்மிடம் எதோ ஒரு முக்கியமான ஒன்று இல்லாமல் இருக்கும்போது தான் நமக்கு தாகம் ஏற்படும்.  நமது உடலுக்கு தண்ணீர் அவசியம், நமது உடல் தண்ணீர் தேவைப்படும்போது, தாகம் என்ற அறிகுறி மூலம், நமக்கு உணர்த்துகிறது.
அதேபோல, நமது பரிசுத்த வாழ்விற்கு வேறு மாதிரியான தண்ணீர் தேவைபடுகிறது. -வாழும் தண்ணீர். இதனை ஞானஸ்நாணம் பெறும்போது, நாம் தண்ணீர் பெற்று, அதன் மூலம் நமது நித்திய வாழ்விற்கு நம்மை தூயபடுத்துகிறது. இந்த வாழ்வு தரும் தண்ணீர் நம்மை கிறிஸ்துவில் அதிகமான வளத்தை , வாழ்வில் கொடுக்கிறது

பரிசத்த ஆவி தான் வாழ்வை கொடுப்பவர். பைபிளில் கடவுள் பரிசத்த ஆவி இருப்பை வாழ்வு தரும் தண்ணீர் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இயேசு அந்த சமாரிய பெண்ணுக்கு பரிசுத்த ஆவியின் அன்பளிப்பை கொடுக்க முனைந்தார். ஏன்? பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி எல்லோர் மேலேயும் இறங்கி வர இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது.
ஏனெனில்,அவளுக்கு உண்மை தெரிய வேண்டியிருந்தது. பரிசுத்த ஆவி தான் உண்மை, இயேசு அவளுக்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, அவள் மனம் திரும்பவும், மீட்படையவும் விரும்பினார். மேலும், அந்த மீட்பை, அவளுடன் கூட இருப்பவர்களுக்கும், அதனை பகிர்ந்திட வேண்டும் என விரும்பினார்.

நமக்கு தேவையான தண்ணீர் குடிக்காத பொழுது தான், நமக்கு தாகம் எடுக்கும். பரிசுத்த வாழ்வின் தாகம், நமக்கு பல வேறு மாதிரிகளில் வரும். போதைக்கு அடிமை, தனிமை, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , சுய ஈடுபாடு, அல்லது வேறு மாதிரியான எண்ணங்கள், அல்லது நமது வாழ்க்கைமுறை மாற்றங்கள், நமது வாழ்வில் எதோ ஒரு குறையை கொண்டு, நமக்கு பரிசுத்த ஆவியின் உதவியை , தாகத்தை ஏற்படுத்தும்.
மேலும், நாம் பரிசுத்த வாழ்வில் குறைகளோடு இருக்கிறோம்.? ஏனெனில், சமாரிய பெண் போல, கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்று சில நேரங்களில் நாம் புரிந்து கொள்வதில்லை. இதனை எப்பொழுது நம் நினைவில் கொள்ள, நாம பரிசுத்த வாழ்வில் குணப்படுத்துதல் தேவை.
கடவுள்  எப்படி பரிசுத்த குணப்படுத்துதலை நமக்கு செய்வார் ?  அவரின் அன்பை போதும், போதும் என்கிற அளவிற்கு நமக்கு கொடுக்கிறார். அதனை முழுதும் ஏற்று கொள்ள, கிறிஸ்துவை முழுதும் திறந்த மனதுடன் நாம் அவரின் வார்த்தைகளை கேட்க வேண்டும். அந்த சமாரிய பெண்ணை போல, நாம் உண்மைக்காக மனம் மாறிட தயாராக இருக்க வேண்டும்.


© 2014 by Terry A. Modica Facebook

Friday, March 14, 2014

மார்ச் 16, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 16, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Psalm 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9

மத்தேயு நற்செய்தி
இயேசு தோற்றம் மாறுதல்
(
மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.4பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார்.அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது.அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் என்றார்.அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், உயர்ந்த மலையின் மேல், இயேசுவின் பிரகாசமான ஒளி இன்று காட்டப்பட்டது. தந்தை கடவுள் “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று கூறினார்
இந்த தோற்றம் மாறுதல், ஒவ்வொரு முறையும், நாம் இயேசுவை கேட்கும் பொழுது, நமது விசுவாசத்தை இன்னும் விசாலாமாக்க அனுமதித்தால், நம் முன் இயேசுவின் தோற்றம் மாறுதல் நடைபெறுகிறது. இப்போது, நாம் தோற்றம் மாறுகிறோம்!. நமது உண்மையான அடையாளம் அப்பொழுது தெரியும். நமது உண்மையான அடையாளம் என்ன? நமது உள்ளார்ந்த இருப்பு. நாம் கடவுளின் உருவம் போல படைக்கப்பட்டு, கடவுளை போல ஞானஸ்நாணம் பெற்றோம்.
நமது உண்மையான அடையாளத்துடன் நாம் வாழும்பொழுது, அதிக சந்தோசமான வாழ்வில் வாழ்கிறோம். எடுத்த் காட்டாக, நீங்கள் பொருமையிழந்து இருக்கும்பொழுது எப்படி உணர்கிறீர்கள்.? அவ்வளவு நல்ல விதமாக உணர்வதில்லை? ஏனெனில், கடவுள் மிகவும் பொறுமையானவர்( 1 கொரிந்தியர் 13: 4-7 உண்மையான அடையாளத்திற்கும், உங்களுக்கும் உள்ள விளக்கங்களை பார்க்கலாம்). மேலும், நாம் பொறுமையாக இருக்கும்பொழுது, இன்னும் அதிக சந்தோசத்துடன் இருக்கிறோம்.
இந்த தவக்காலத்தில், நாம் எந்த அளவிற்கு கிறிஸ்துவை போல அல்லாமல், இருக்கிறோம் என்பதை அறிந்து, அந்த பாவங்களுக்காக மனம் வருத்தப்பட்டு, கிறிஸ்துவின் ஒளி நம் இருட்டை அகற்றிட நாம் அனுமதிக்க வேண்டும்.
இயேசுவின் அழைத்தலை நிறைவேற்றவே, இந்த மலை மேல் இருந்து இறங்கி வந்தார். கிறிஸ்துவை பின் பற்றும் நாமும், மலை மேலிருந்து இறங்கி வந்து , கடவுள் என்ன ஆற்றலை, திறமைகளை கொடுத்திருக்கிறாரோ, அதனை உபயோகித்து, இறை அழைத்தலுக்கு சேவை செய்தல் வேண்டும். திமோத்தயு கூறுவது  போல பரிசுத்த வாழ்வு வாழ்தல் மிகவும் கடினமானது. ஆனால், ஒவ்வொரு கல்வாரி பின்னும், ஈஸ்டர் வரும் என்பது நமக்கு ஆறுதலாக இருக்கும். கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஆற்றலை நம்பி பரிசுத்த வாழ்வு தொடரலாம்.
கடவுள் உங்களை பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். இயேசுவை பற்றி தேபார் மலையில் என்ன சொன்னாரோ : ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று சொல்கிறார். கிறிஸ்துவின் தோழனாக இறை சேவையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


© 2014 by Terry A. Modica 
Facebook