Friday, September 25, 2015

செப்டெம்பர் 27 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டெம்பர் 27 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆண்டின் 26ம் ஞாயிறு

Numbers 11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48
எதிர்பாராத நட்பு

மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், ``போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார்.
அதற்கு இயேசு கூறியது: ``தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.''


இன்றைய நற்செய்தியில் இயேசு, “ நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்று கூறுகிறார். இதன் உண்மை தன்மை நம் வாழ்வில் பல முறை நமக்கு தெரியாதவர்களிடமிருந்து வரும்பொழுது .நமக்கு அது . ஆச்சரியம் . தருகிறது
பல்வேறு சமயங்களில், சிலர் நமக்கு எதிராக இருப்பதாக நமக்கு தோன்றும், ஆனால் உண்மையில் நமக்கு எதிராக அவர் எண்ணம் கூட இல்லாமல் இருப்பார். எடுத்து காட்டாக, நமக்கு பிடிக்காத உண்மை விசயத்தை பற்றி பேசும்பொழுது, அவர் நமக்கு எதிரி போல நமக்கு தோன்றும், ஆனால், அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர் ஆவார்.
சில நேரங்களில், பலர் நமக்கு பிரச்சினையின் போது நமக்கு உறுதுணையாக இருப்பார்கள், ஆனால், அதன் நோக்கம், அவர்கள் சுய நலம் சம்பத்தபட்டதாக இருக்கும். கடவுள் நம் வாழ்விற்கு கொடுத்த காரியத்தை செய்ய அவர்கள் நமக்கு உதவி செய்வதில்லை.
சில நேரங்களில், சில நண்பர்கள், கடவுளின் இறைபணியை செய்வார்கள், ஆனால், நாம் விருபியபடி அவர்கள் செய்வது இல்லை. மேலும், கடவுள் எப்படி செய்ய சொன்னாரோ அப்படி அவர்கள் செய்யவில்லை என நாமாக அனுமானித்து கொள்கிறோம். நீங்கள் யாரிடமாவது, உங்களுக்காக ஜெபிக்க சொல்லி , அவர்கள் அதற்கு எதிரான கருத்தை கொண்டு ஜெபித்தார்களா ?
பல வருடங்களுக்கு முன்பு, எனது கணவரின் நிறுவனத்தில், பலரை வேலையை விட்டு நிக்கினர். எனது நண்பர் ஒருவரிடத்தில், எனது கணவருக்கு நல்ல புதிய வேலை கிடைக்க வேண்டி ஜெபிக்க சொன்னேன். அனால், அந்த நண்பரோ, அந்த நிறுவனத்திற்காக ஜெபித்தார், அதன் முலம், எனது கணவர் வேலை விட்டு வெளியேற தேவை இல்லாமல் போனது. எனது எதிர்பார்ப்போ அவருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று, அதனால், எனது நண்பரின் ஜெபம் எனக்கு பிடிக்காமல் போனது. ஆனால் இறுதியில், அந்த நண்பர் தான் கடவுள் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று ஆசை பட்டாரோ அப்படி செபித்தவர்.
யாரேனும் நமக்கு எதிராக இருக்கிறார்கள் என்று அறிய , இயேசுவிடம் அமர்ந்து, நம் குற்றம் குறைகளை, பிரச்சினைகளை , வேதனைகளை எல்லாம் அப்புற படுத்தி விட்டு, அவரோடு நாம் ஜெபித்தால், கடவுள் நமக்கு உறுதுணையாக இருந்து, நமக்கு தேவையான உதவியை அவர் செய்வார். நமது பயன்களையும், கோபத்தையும் கடவுளிடம் கொட்டிவிட்டு, நமக்கு எதிராக இருப்பவர்களை அம மன்னித்து விட்டு கடவுளிடம் மன்றாடினாள், ;தெய்வீக அருளால், நமக்கு என்ன செய்தி கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும்.
உண்மையிலே சிலர் நமக்கு எதிராக இருப்பவர்களையும், ஜெபத்தில் அமைதியாய் அமர்ந்து, பரிசுத்த ஆவியிடமிருந்து ஞானம் பெற தேடினோம் என்றால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை அறிய முடியும், அது தான் நமக்கு மிகவும் முக்கியம். அவர் நமக்கு ஆறுதலையும், உற்சாகத்தையும், தந்து , எந்த ஒரு பிரச்சினையையும், எதிர்கொள்ள ஆற்றல் தருகிறார்.


© 2015 by Terry A. Modica

Friday, September 18, 2015

செப்டம்பர் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Wisdom 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16--4:3
Mark 9:30-37


சுய நலமும், பொறாமையும் - மீண்டு வருவது
மாற்கு நற்செய்தி
அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ``மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்;அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்''என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ``வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?''என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.
அப்பொழுது அவர் அமர்ந்து,பன்னிருவரையும் கூப்பிட்டு,அவர்களிடம், ``ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்''என்றார்.
பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து,அவர்கள் நடுவே நிறுத்தி,அதை அரவணைத்துக் கொண்டு, ``இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல,என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்''என்றார்.


இன்றைய நற்செய்தியில், பொல்லாத குணத்தை பார்க்கிறோம்: எது நல்லதோ அதனை பொறாமை அழிக்கிறது, சுய லாபம் , மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்கிறது, அவர்கள் வரும் வழியில் தற்பெருமை மற்றவர்களை ஒதுக்கி விடுவதையும் பார்க்கிறோம்.
முதல் வாசகம் இஸ்ரேயல் நாட்டினை வெளியாட்கள் ஒடுக்கியதை எடுத்து காட்டுகிறது. நற்செய்தியிலோ இயேசு அவரின் இறைசேவையை எதிர்ப்பவர்களை கண்டு உணர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். யாக்கோபுவின் நற்செய்தியோ பொல்லாத குணங்களை சுட்டி காட்டி, திருச்சபைக்குள் உள்ள பிரச்சினையை பற்றி பேசுகிறார். கிறிஸ்தவர்களுக்குள்ளே உள்ள சண்டையை பற்றி பேசுகிறார்.
பொறாமையும், சுய நலமும் தான் நமது திருச்சபையில் நடக்கும் ஒவ்வொரு குற்ற செயலுக்கும் முழு முதல் காரணமாக . இருக்கிறது , பங்கில் உள்ள வேலையாட்களிடம் உள்ள பிரிவினை, இறைசேவை செய்ய ஆர்வத்துடன் வருபவர்களிடம் உள்ள பிணக்குகள், கிறிஸ்துவ குடும்பத்தில் உள்ளை பிரிவு, கத்தோலிக்க மதத்தில் இருந்து வேறு சபைக்கு வெளியே தள்ளும் செயல்கள் அனைத்தும், பொல்லாத குணங்களால் ஏற்படுகிறது.
எந்த பிரிவினை பிரச்சினையின் மூலத்தை அறிய வேண்டுமெனில், சுய நலத்துடன் உள்ள ஆசையை உற்று கவனித்தால் நமக்கு தெரிய வரும். நேர்மையாகவும், உண்மையான நோக்கத்துடனும் நாம் முயற்சி செய்யும் பொழுது, ஒவ்வொரு பிரிவினையின் முக்கிய காரணம் நமக்கு தெரிய வரும். மேலும் கடவுளின் மாற்று மருந்தும் அதற்கான சுலபமான மாற்று வழியும் நமக்கு தெரிய வரும். மற்ற குழுக்களில் பிரிவினை பார்க்கும் பொழுது , நீங்கள் அவர்களுக்காக வருத்த படுகிறீர்களா? அப்படி இல்லை என்றால், ஏன்? இதற்கான பதில், நம் சொந்த சுய விருப்பத்தினால் ஆன தற்பெருமை ஆகும்.
இயேசு இதற்கு சிகிச்சை தருகிறார் :"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் ( இதுவும் சுய நலத்தினால் மட்டுமே நமக்கு வருகிறது )அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்'
சுய நலத்துடன் கூடிய ஆசை பாவமாகும். இது மற்றவர்களின் வாய்ப்பை தட்டி . பறிக்கிறது. யாக்கோபு , நாம் என்ன ஆசையுடன் இருந்தாலும் , அது நல்ல விருப்பமாக இருந்தால் கடவுளிடம் கேளுங்கள், பரிசுத்த ஆவியுடன் இணைந்து அதனை அடைய முயற்சி செய்யுங்கள் என்று கூறுகிறார் , அதற்காக நமது சுய விருப்பங்கள் மட்டுமே அதில் நிறைவு பெற வேண்டும் என்று என்ன கூடாது.
நாம் கடவுளிடம் என்ன கேட்கிறோமோ, அது நம் முழு குடும்பத்துக்கும், பங்கு குழுக்களுக்கும், மேலும் பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் பொழுது, கடவுள் கண்டிப்பாக தருவார். மற்றவர்களுக்காக நாம் உதவி செய்ய ஆசைப்பட்டு, அவர்களுக்கு அது எப்படி உதவியாக இருக்கும் என்று நாம் முழுமையாக அறிந்து , அந்த ஆசையை நாம் கடவுளிடம் கேட்கும் பொழுது, அது அமைதியை தருவதாகவும், இரக்கத்துடனும், முழு பயனுடனும், எல்லோருக்கும் ஆதரவளிப்பதாக இருக்கும்.


© 2015 by Terry A. Modica

Friday, September 11, 2015

செப்டம்பர் 13 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 13 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு
Isaiah 50:5-9a
Ps 116:1-6, 8-9
James 2:14-18
Mark 8:27-35


மாற்கு நற்செய்தி
மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அவரிடம், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா'' என்று உரைத்தார். தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
``மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்'' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார்.
ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், ``என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்று கடிந்து கொண்டார்.
பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்'' என்றார்.




நம்பிக்கையை செயல்படுத்துதல்
இன்றைய இரண்டாவது வாசகம் , விசுவாசமும் நம்பிக்கையும் செயல்படுத்தினால் தான் , அது நம்பிக்கை என்று கூறுகிறது.
நம்பிக்கை இல்லா செயல்பாடுகள் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அது நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லாது. நம்மில் சிலர் கடவுளின் இருதயத்தில் இடம் பெற , பங்கு பணிகளிலும் , சரியாக ஜெபம் சொல்வதிலும் ஈடுபடுகிறோம் . இது மாதிரியான முறைகள், நாம் சிறு வயதிலிருந்து கற்று கொண்டுள்ளோம்: “ நான் நன்றாக இருந்தால், தந்தையும் தாயும், எனக்கு பரிசளிப்பார்கள் " என்ற மனப்பான்மையோடு வளர்கிறோம். “படிப்பில் நன்றாக செயல்பட்டால், ஆசிரியர்கள் என்னை பாராட்டுவார்கள்" என்றும் நாம் வளர்ந்து வருகிறோம்.


ஆனால், மோட்சத்திற்கு செல்லும் முழுமையான தகுதி நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் இயேசு இவ்வுலகிற்கு வந்து , நம் பாவங்களுக்காக சிலுவையில் மரணமடைந்தார் .
செயல்பாடுகள் இல்லாத விசுவாசம் நாம் மோட்சத்திற்கு அழைத்து செல்லாது . ஏனெனில்,
இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை, நம்மை அவர் முழுமையாக அன்பு செய்கிறார் என்பதை நாம் நம்புவதில் இருந்து ஆரம்பிக்கிறது. அவர் நமக்காக இறந்தார், பிறகு உயிர்த்தெழுந்தார் அதன் முலம் நாம் நித்திய வாழ்வு பெறுவோம் என்று நம்பி அதன் படி வாழ்வதில் இருந்து . ஆரம்பிக்கிறது. இது தான் நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறது. எனினும், அதன் நுழை வாயில் மூலம் நடப்பதற்கு , நாம் இயேசுவின் பின் செல்ல வேண்டும். அவ்வாறு பின் செல்வதற்கு, அவர் இறப்பிலும் உயிர்ப்பிலும் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது, அவர் வாழ்விலும் நம்பிக்கை கொள்ள வேண்டும். எப்படி வாழ்ந்தாரோ , அதில் விசுவாசம் கொள்ள வேண்டும். இயேசுவை பின் செல்வதில் நாம் வாழ்க்கை முறை மாற வேண்டும், நம் அனுதின நடவடிக்கைகள் மாற வேண்டும். கிறிஸ்துவை போல மாற வேண்டும்.
நாம் உண்மையாகவே நம்பிக்கையோடு இருக்கிறோம் என்பதை காட்டுவது தான் நாம் செய்யும் நல்ல செயல்கள். இயேசுவின் மேல் உள்ள விசுவாசம் , நாம் இயேசுவை அன்பு செய்வது போல , இயேசு அன்பு செய்யும் அனைவரையும் நாம் செய்தல் வேண்டும். எல்லோரையும், அவர்கள் நம் அன்புக்கு தகுதி உள்ளவர்கள் , தகுதியற்றவர்கள் என்ற பாகுபாடு தேவையில்லை.
மேலும், இயேசுவின் மேல் விசுவாசம் என்பது, அவர் என்ன சொன்னாலும் அதனை செய்வது - நம் நடவடிக்கைகளில், அவரை போலவே நடந்து கொள்வது, அதே மனப்பான்மை உடன் இருப்பது, அவர் அழைத்தலுக்கு செவி சாய்ப்பது : குருவானவராக, சாதாராண இறைபநியாளராக இருப்பது . இது அர்த்தமற்றது போல தோன்றினாலும் அதனை செய்வது.
இயேசு இன்றைய நற்செய்தியில் , இயேசு கேட்பது போல "``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' , நம் பதில் , நமது மீட்பர், நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர், நம் கடவுள், எப்படி வாழவேண்டும் என்று நமக்கு போதிப்பவர், நம்மை முழுதும் அன்பு செய்பவர், அதன் முலம் நாம் மற்றவர்களையும் கடினமாக இருந்தாலும், நாம் அன்பு செய்ய முடியும்.

© 2015 by Terry A. Modica