Saturday, August 20, 2016

ஆகஸ்டு 21 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு   21 2016   ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  21ம் ஞாயிறு


Isaiah 66:18-21
Ps 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30

லூக்கா நற்செய்தி

இடுக்கமான வாயில்
22இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.

23அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:

24இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்.

25வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாதுஎனப் பதில் கூறுவார்.

26அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரேஎன்று சொல்வீர்கள்.

27ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்என உங்களிடம் சொல்வார்.

28ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.

29இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

30ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.
(thanks to www.arulvakku.com)

மோட்சத்திற்கு செல்லும் சாலை

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், மோட்சத்திற்கு செல்லும் குறுகிய வாயிலின் கதவுகளுக்கு செல்லும் சாலையின் வழி காட்டும் கருவியாக சொல்லபடுகிறது. இசையாஸ், கடவுளுக்கு நமது செயல்களும் , என்னங்களும் தெரியும் என்று சொல்கிறார். நமது செயல்களையும், எண்ணங்களையும் புனிதபடுத்தி, அதன் மூலம் கடவுளின் மாட்சிமையை நாம் இறக்கும் பொழுது  முழுதாக பார்க்க ,இசையாஸ் நமக்கு ஒரு அடையாளம் தருகிறார். அந்த அடையாளம், வழி காட்டும் கருவி  இயேசு , அவரின் வாழ்வும். -- இயேசு எப்படி வாழ்ந்தார் , எப்படி இறந்தார் -- என்பதெல்லாம் நமக்கு மோட்சத்திற்கு செல்லும் ஒரு வழிகாட்டியாக உள்ளது.

நற்செய்தியில் இயேசு, ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயலவர் , ஆனால் அவர்களால் முடியாது, ஏன் முடியாது ?

நற்செய்தி முழுதும் இயேசு அதற்கான பதிலை கொடுக்கிறார்: அன்பில் நாம் முழுதும் பரிசுத்தமாய் இருத்தல் வேண்டும். அதனால் நம்முடைய சின்ன தவறுகள், குறைகள் நம்மை மோட்சத்திற்கு செல்ல விடாமல் தடுத்து விடும் என்றில்லை. மோட்சத்தின் கதவுகளை திறக்கும் சாவி அன்பு தான், நாம் அன்பை புறக்கணித்து விட்டால், நாம் சாவியை தூக்கி எறிகிறோம்.

நாம் பாவம் செய்தாலும், நாம் எப்பொழுதுமே அன்பை ஒதுக்குவதில்லை, ஆனால், நாம் அன்பில் எப்பொழுதும் சரியாக இருக்க வேண்டும். அதன் அர்த்தம் என்னவெனில், முழுமையான அன்பை நாம் கொடுக்க வேண்டும். நிபந்தனையின்றி, தியாகத்துடனும் , தீவீரமாகவும் அன்புடன் செயல் பட வேண்டும்.

அன்பில் நாம் மிக சரியாக இருக்க, நமக்கு கடவுளின் அன்பு தேவையாக இருக்கிறது, இயேசு நம்மில் இருந்தால் தான், நம் மூலம் அவர் மற்றவர்களை சென்று அடைய முடியும். நம்மால் சொந்தமாக, முழுமையான அன்பை கொடுக்க முடியாது ஆனால், கடவுளை நம்பி, அவரின் அன்பை மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது , நம்மிலும் முழு அன்பு நிலைக்கும்.

கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருக்க , அதில் முழு நம்பிக்கை பெற, நம்மில் அதனை தடுக்கும் அனைத்தையும் துரத்தி விட வேண்டும்.: மன்னிக்காமல் இருப்பது, பழி வாங்கும் எண்ணம், பொறாமை ,  வெறுப்பு மனப்பான்மை, மற்றவர்களின் தேவை அறிந்தும் ஏதும் செய்யாமல் இருப்பது, இவை அனைத்தும் நம்மிடமிருந்து வெளியேற வேண்டும்.

இரண்டாவது வாசகம் கடவுளின் நீதீயை அலட்சியபடுத்த வேண்டாம் என சொல்கிறது. நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும், யாரையாவது நாம் குறை சொன்னாலும், கடவுள் அவர்களை பயன்படுத்தி நம் அன்பை சரி படுத்துகிறார். இதனை நாம் ஒரு வாய்ப்பாக  பயன்படுத்தி நம் அன்பை வளர்க்க வேண்டும். அதில் நாம் கடவுளிடம் வேண்டினால், , அவர் நம் அன்பை இன்னும் பெரிதாக்க உதவி செய்வார். நாம் இயேசுவை போல மாறுவோம். மோட்சத்திற்கு நேராக செல்வோம். நம் பரிசுத்த வாழ்வில் இருக்கும் தடைகள் அகலும்.


© 2016 by Terry A. Modica

Friday, August 12, 2016

ஆகஸ்டு 14, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு 14, 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டும் 20ம் ஞாயிறு
Jeremiah 38:4-6, 8-10
Ps 40:2-4, 18 (with 14b)
Heb 12:1-4
Luke 12:49-53

லூக்கா  நற்செய்தி

பிளவு ஏற்படுதல்
(மத் 10:34 - 36)
49மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

50ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.

51மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.

52இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.

53தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.
(thanks to www.arulvakku.com)

இந்த உலகை மாற்றும் தீ  

இன்றைய ஞாயிறு நற்செய்தியில், இயேசு "நாம் அமைதியை ஏற்படுத்த இந்த உலகிற்கு வரவில்லை " என்கிறார். தீ மூட்டவே வந்தேன் என்கிறார். இயேசு பரிசுத்த ஆவியின் தீயை அதன் நெருப்பை , ஒவ்வொருவரும் அவர்கள் உள்ளத்திலே பெறவேண்டும் என ஆசைபட்டார். இது தான் இந்த உலகை மாற்றுகிறது. இது தான் நிலையான அமைதியை தருகிறது, முதலில் நம்மிடையே அமைதியை தருகிறது, பிறகும், நம்மில்லிருந்து மற்றவர்களுக்கு செல்கிறது.  

நம்மில் உள்ள தீ நம்மில் உள்ள குறைகளை -- அன்பில்லாத நடத்தைகள் , தீய குணகங்கள் --நீக்கி சுத்தமாக்குகிறது. இவைகள் அனைத்தும், நம்மில், விரோதம், ஒற்றுமையின்மை, விவாதங்கள், மற்றும் போரை உருவாக்குகின்றன. பரிசுத்த ஆவி நம்மை சுத்தமாக்குவதால்,  நமது சோதனைகள், போராட்டங்கள் மத்தியிலும் நம்மால் அமைதியை உணர முடியும்.இதன் மூலம் கடவுளின் அமைதியை இந்த உலகத்திற்கு  எடுத்து வரும்  கருவியாக நாம் இருப்போம். பரிசுத்த ஆவியின் தீயை நாம் உணரவில்லை என்றாள், இயேசு உங்கள் மேல் வேதனையுடன் இருக்கிறார் என்று அர்த்தம்.

உங்களை சுற்றி உள்ள பேய்களை , அதனை நிறுத்த வேண்டும் என்று  நாம் நினைப்பவைகளை மனதில் கொண்டு வாருங்கள், இதற்கு, இயேசு நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்  ?  , பரிசுத்த ஆவியின் தீ , உங்களின் எந்த குறைகளை எரிக்க வேண்டும், அதன் மூலம் தெய்விகம் அந்த சாத்தானை விரட்டி அடிக்கும். ?  இயேசு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். என்ன மாதிரியான ஞானஸ்நானம் பற்றி இயேசு கூறுகிறார்? தண்ணீரால் ஆன ஞானஸ்நானம் அவர் ஏற்கனவே பெற்று விட்டார். தன்னையே வேதனைக்கு உட்படுத்தும் திரு முழுக்கை பற்றி நமக்கு சொல்லி, நமக்காக , பாவங்களை நம்மை விட்டு நீக்குவதற்காக அவராகவே முழு விருப்பத்துடன் தன்னை ஆட்படுத்தி கொண்டார்.

சாத்தானை நிறுத்த , நாம் இயேசுவை போல மாற வேண்டும். மர்ரவர்களுக்காக நம்மை தியாகம் செய்ய நாம் விருப்பத்துடன் இருப்பது, கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை காட்டுகிறது. நித்திய வாழ்வின் அமைதியை மற்றவர்கள் பெற , நம் இருதயமும், ஆன்மாவும் , ஜெபத்திலும் , செயல்களிலும் ஒரு தீயை போல ஈடுபாடு கொள்தல் வேண்டும். அப்பொழுது தான் நம் உள்ளத்தில் அமைதி ஏற்படும் என்ற வேட்கையுடன் செயல் பட வேண்டும்.

தீ குடும்பத்தை பிளவு படுத்தும் என்று இயேசு குறிப்பிடுகிறார் . எவரும், சுய நலத்துடன் இருப்பவரை நம்மை விட்டு பிரிக்கிறது. மேலும், தியாகம் செய்ய மறு ப்பவர்களுடனும் பிரிவு ஏற்படுகிறது. எனினும், நாம் அவர்கள் மேல் அன்பு செலுத்த வேண்டும். தொடர்ந்து நம் அன்பு பரவும்போழுது, நம்மில் தீ வளர்கிறது , அது மேலும், நம்மை புனிதமக்குகிறது, தொடர்ந்து, இந்த உலகம் மாறுகிறது.

 ©

Friday, August 5, 2016

ஆகஸ்டு 7, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஆகஸ்டு 7, 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 19ம்  ஞாயிறு

Wisdom 18:6-9
Ps 33:1, 12, 18-22
Heb 11:1-2, 8-19
Luke 12:32-48

லூக்கா நற்செய்தி

32சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
33உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.

34உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)

35உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.

36திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.

37தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

38தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

39எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

40நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.
41அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.

42அதற்கு ஆண்டவர் கூறியது: 
தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?
43தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.

44அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.

45ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்
46அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

47தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.

48ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.

(thanks to www.arulvakku.com)
கடவுள் கொடுக்கும் அனைத்தையும் பெற்று கொள்வது எப்படி ?

இன்றைய நற்செய்தியில், இயேசு, விண்ணரசை நம் எல்லோருக்கும் கொடுக்க திருஉளம் கொண்டுள்ளார் என்றும், அது விண்ணக வாழ்வும் , இந்த உலகில் உள்ள அனைத்தும் , அவரின் அன்பும், இன்னும் பல உங்களுக்கு சந்தோசமாக கொடுக்க ஆசைபடுகிறார் என்றும்  நமக்கு சொல்கிறார் .

எந்த ஒரு நல்லதையும் கடவுள் நம்மிடம் மறைப்பதில்லை. ஆனால், நாம் அதனை பெற்று கொள்கிறோமா ?

கடவுளின் அன்பையும்    அவரது ஆசிர்வாதத்தையும் மற்றவர்களுடன்  பகிர்ந்து கொள்ளாமல், இந்த உலக செல்வங்கள் மேல் நாம் பற்று கொண்டிருந்தாள், நம் கையில் நிலையான சொத்து என்று ஒன்று கிடையாது என்று இயேசு விளக்கி சொல்கிறார். உங்கள் பண பைகள் முழுதும் இந்த உலக ஆசைகளில் நிரம்பி இருந்தால், மற்றவர்களை அது தள்ளியே வைத்திருக்கும், மேலும், உங்கள் வாழ்வில் கடவுளடன் உண்டான பரிசுத்த  தொடர்பு உங்களை விட்டு சென்று விடும், கடவுளுடைய வியத்தகு காரியங்களுக்கும், நித்திய வாழ்வின் அன்பளிப்புகளுக்கும் உங்கள் வாழ்வில் இடம் இல்லாமல் போய்விடும் .
"34உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்." என்று இயேசு கூறுகிறார்

கடவுளுக்கு உகந்தது அல்லாத அனைத்தும், நிலையில்லா வாழ்வை கொண்டவை. அவை அனைத்தும், நம்மை கடவுளிடம் கொண்டு செல்பவை அல்ல, இவை அனைத்தையும், கடவுளிடமிருந்து வரும் அரிய வியத்தகு செல்வத்திற்காக நாம் விட்டு கொடுக்க வேண்டும்.

நம்மிடம் உள்ள எல்லா பொருட்களையும் விற்று விட்டு, பரலோக சொத்திற்காக காத்திருக்க வேண்டும் என இயேசு சொல்ல வில்லை. நம்மிடம் உள்ள இந்த உலக பொருட்கள் எல்லாம் வின்னகத்திற்கான நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும். என்று நாம் எடுத்து கொள்ள வேண்டும். அவைகள் எல்லாம் இறையரசிற்காக உபயோகமாக இருக்கிறதா? இல்லை இந்த உலக ஆசைகளுக்காக செலவிடபடுகிறதா ?
கடவுளோடு நம்மை இணைக்கும் அனைத்தும், அது மட்டுமே நம்மிடம் உள்ள செல்வம் ஆகும். அது நித்திய இன்பத்தை நமக்கு தரும்.

இந்த உலக சொத்துகளுக்காக நம் நேரத்தை செலவிட வேண்டாம் என இயேசு நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். எப்பொழுது வீட்டின் தலைவன் வருவார் என நமக்கு தெரியாது. அவர் நம்மை இங்கிருந்து எடுத்து நிலையான கடவுளுடன் ஆன வாழ்விற்காக அழைத்து செல்வார் என நமக்கு தெரியாது. நாம் தயாராய் இருக்கிறோமா? அல்லது இந்த உலக வாழ்விற்காக , அதன் ஆசைகளுக்குண்டான வேலைகளை செய்து கொண்டிருகிறோமா  ?

அதனால் தான் நம் மேல் பேரிரக்கம் கொண்டு, நமக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தை கொடுத்துள்ளார். இந்த உலக செல்வங்கள், பாவங்களை விட்டு நாம் விலக , நமக்கு வலி ஏற்படும், அதன் மூலம் மோட்சத்தின் நல்லவைகள் மேல் நாம் அசை கொள்வோம். இதனை தான் இயேசு "அடிபடுவான் " என்று வேலையாட்களுக்கு சொல்கிறார்.

ஏன் இதற்காக காத்திருக்க வேண்டும், இப்பொழுதே , நாம் விண்ணக அரசிற்கான செல்வத்தை தேடுவோம், கடவுளின் மாட்சிமையில் பங்கு கொள்ள நாம் முனைவோம். அந்த செல்வத்தை எந்த திருடனும் திருடவோ அழிக்கவோ முடியாது.


 © Terry Modica