Friday, November 30, 2007

டிசம்பர் 2 , 2007, ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 2 , 2007, ஞாயிறு நற்செய்தி மறையுரை:



Isaiah 2:1-5
Ps 122:1-9
Rom 13:11-14
Matt 24:37-44

எசாயா

அதிகாரம் 2

1 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: 2 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 3 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந 4 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோது 5 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்: 6 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: 7 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 8 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந 9 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோது 10 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 24

37 நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். 38 வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். 39 வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். 40 இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். 41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். 42 விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. 43 இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். 44 எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

thanks www.arulvakku.com
இன்று கிறிஸ்து பிறப்பு காலத்தின், முதல் ஞாயிறு. இன்றைய முதல் வாசகத்தில், இசையாஸ், முக்கிய செய்தியை கொடுக்கிறார். 1) கடவுள் மிக அதிகமான, முழுமையான அதிகாரத்தை உடையவர். 2)அவரையும், அவருடைய வழிகளையும் பின்பற்றுவதுதான், மக்கள் அனைவரின் முதன்மையான, முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இருக்க வேண்டும்.

இந்த அறிவாற்றல் மிகுந்த காட்சி தான், அடிமைபட்ட இஸ்ரேயலர்களுக்கு நம்பிக்கை தந்தது. இந்த மோட்சத்தின் படம், நமக்கும் மிக பெரிய நம்பிகையை தந்தது. உத்தரிக்கிற ஸ்தலமும் நமக்கு கொடுக்கபட வேண்டும், ஏனெனில், நாம் முழுமையாக கடவுளின் பாதையில் செல்லவில்லை. சில நேரங்களில் பாதை தவறி விடுகிறோம். நமது மரணத்திற்கு பிறகு, நாம் கடவுளின் ஒளியில் வாழ்வோம். மேலும், அங்கே எந்த ஒரு போரும் இருப்பதில்லை.

இது நமது எதிகாலம் என்று தெரிந்த பிறகு, நாம் இன்றைய சோதனைகளை, நமக்கு மோட்சத்தின் தயாரிப்பிற்கு உதவுவதாக பார்க்க வேண்டும். இந்த தீய சோதனைகளை தோற்கடிக்கும் ஆயுதங்கள், பூமியை ஏர் உழுது மண்ணை பண்படுத்தும் ஏராக நிணைத்து, அந்த சோதனைகள் இறைவனுக்கு செய்யும் சேவைகளாகும். துன்பத்துற்கு ஆளாகுதல்,இறைவனின் சேவையாகும், அது மற்றவர்களின் துயரங்களை போக்க உதவுவது, நிச்சயம், அது நமக்கு நன்மை தரும்.

மெசியா இஸ்ரேயலிலிருந்து வருவார் என்று இசையாஸ் கூறினாலும், இந்த வேத வாக்குகள், "நாம் இறைவனின் அதிகாரத்திற்கு மதிப்பளித்து, கிறிஸ்துவை போல வாழவது, நமது முக்கிய சாய்ஸாக " இருக்க வேண்டும் என நமக்கு நினைவுபடுத்துகிறது. பேயிடமிருந்து, நமது போராட்டம் இன்னும் முடியவில்லை. ஆனால், யேசு ஏற்கனவே, நமக்காக வெற்றியடைந்தார். நமது எதிர்பார்ப்பு, அமைதிக்கு ஆசைபடுவதாக இருக்க கூடாது. நமது எதிர்பார்ப்பு, யேசு என்ன செய்தாரோ, மீண்டும் என்ன செய்வார் என்பதாக இருக்க வேண்டும். "இறைவனின் வீட்டில், சந்தோசமடைவோம்" .

இன்றைய நற்செய்தி, நாம் விழிப்பாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. நாம் விழிப்பாக இருந்தால் தான், இறைவன் யேசுவின் நடவடிக்கைகள் நமக்கு தெரியும். நீ எதற்காக நம்பிக்கை இழக்கிறாய். எதனால் மன சஞ்சலம் அடைகிறாய். இதெல்லம் சாத்தானின் வேலைகள், உங்களை கிறிஸ்துவை விட்டு விலகிவைக்க முயற்சி செய்கிறது. இந்த முயற்ச்யில், யேசு ஏற்கனவே நமக்காக வெற்றியடைந்து விட்டர். நாம், கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, விழிப்புடன் இருந்து கவனிது, அவருடைய அதிகாரத்து ஏற்று கொண்டு, அவர் வழியில் நடந்தல், நாம் நல்ல எதிர்பார்ப்போடு வாழலாம், நமது விருப்பங்களால் அல்ல, யதார்த்தமான உண்மை நிலையோடு வாழ்வோம்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 23, 2007

ஞாயிறு நவம்பர் 25, நற்செய்தி மற்றும் மறையுரை:

ஞாயிறு நவம்பர் 25, நற்செய்தி மற்றும் மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 23

35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள். 36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, 37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர். 38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. 39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான். 40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். 41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான். 42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான். 43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார்.


http://www.arulvakku.com (thanks)


இன்றைய நற்செய்தியில், யேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனை நாம் பிரதிபலிக்கிறோம். யேசு தான் நமது அரசர். மேலும் நமது நித்திய காலத்தை அவரோடு சேர்ந்து அவரது ராஜ்ஜியத்தில் வாழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த எண்ணத்தோடு இருக்கும் வரை, நாம் இறந்த பிறகு, கடவுளரசில் சேர்வோம் என்பதில் எந்த வித ஐயமும் தேவையில்லை.


மோட்சத்தின் அரசராக யேசு இருப்பதினால், யேசுவிற்கு , யாரையெல்லாம் அவரது அரசிற்குள் சேர்க்கலாம் என்ற அதிகாரம் இருக்கிறது. அவருடைய அதிகாரத்தை ஏற்று கொள்கிறவர்கள் அனைவரையும் அவரது அரசில் "பெரிய வெள்ளியின் குற்றவாளியிடம்" சொல்வது போல், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் " என்று சொல்வார்.

யேசுவின் அதிகாரங்களை பார்ப்போம்: கடைசி இரவு உணவு விருந்தில், யேசு ஒவ்வொரு சீடர்களின் பாதங்களையும் கழுவியபோது, மோட்ச ராஜ்ஜியத்தின் சார்ந்த் ஒவ்வொருவருக்கும், மோட்சத்தின் அரசர் சேவை/உதவி செய்வார் என்பதை மிகவும் உறுதியாக கூறுகிறார்.

அந்த பெரிய வெள்ளியின் அடுத்த நாள், தங்க கீரீடம் சூட்டிகொள்வதற்கு பதிலாக, முள்முடி சூட்டிகொண்டார். ஏனெனில், அவருடைய போற்றுதலுக்குரிய அரசு, இந்த பூமியின் பொருட்களால் ஆனதில்லை. அதனுடைய பணத்தால், நகைகளால், மிகுதியான செல்வங்களால் ஆனதில்லை. அன்பின் ஊக்கத்தால் நடைபெறும், சுய தியாகங்களாலும், யேசுவின் அரசு போற்றப்படுகிறது.

யேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின், அவருடைய மரண காயங்கள் ஆறிவிட்டது. ஆனால், உடலில் ஏற்பட்ட ஐந்து காயங்களும், இன்னும் ஆறவில்லை. இன்றும், அந்த காயங்களை, யேசு வைத்துகொண்டு இருக்கிறார். அவருடைய அதிகாரத்தை, வைத்து, அவர் காயங்களை ஆற்றவில்லை. அந்த காயங்கள் மூலம், அவருடைய நமக்கான தியாகத்தை நினைவுபடுத்துகிறார். இவ்வுலகில் உள்ள அரசர்கள் விலையுயர்ந்த மோதிரத்தை அணிந்து கொள்கின்றனர். நம் மோட்சத்தின் அரசர், அவருடைய தியாகத்தின் குறியீடுகளை அனிந்து கொண்டு இருக்கிறார்.

நமது சகோதரர்களுக்கு, கிறிஸ்துவோடு நாம் சேவை செய்யும் போது, நாம் கடவுளரசை சேர்ந்தவர்கள் என்பது நமக்கு தெரியும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதால் வரும் இன்பத்தையும், சுய தியாகத்தால் வரும் சந்தோசத்தையும், நமது அன்புக்கு தகுதி இல்லாதவர்களிடம், அன்பு செய்வதும் நாம் கடவுளரசில் இருக்கிறோம் என்பதற்கு அறிகுறியாகும். நமது துன்பங்களை யேசுவிடம் காணிக்கையாக்கும் போது, அதனுடைய உண்மையான மதிப்பை அறிகிறோம். நாமும், நமது ஆன்மாவில் அவருடைய ஐந்து காயங்களையும் அனிந்திருக்கிறோம். மேலும் கடவுளரசில் நாமும் இணைந்திருக்கிறோம்.
கண்டிப்பாக, நாம் யேசுவின் பேரரசில் சேர்வோம். நாம் யேசுவோடு ஏற்கனவே இனைந்து விட்டொம்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, November 17, 2007

நவம்பர் 18 2007 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை

நவம்பர் 18 2007 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21

5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். 6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார். 7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள். 8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். 9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார். 10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். 11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். 12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். 13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். 14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. 16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். 17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். 18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. 19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

thanks to http://www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில்,
"ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ", இந்த பூமியில் உள்ள எல்லாமும் தற்காலிக்மானவை என்று நினைவூட்டுகிறார். அனைத்தும் நிரந்தரமானவை இல்லை.

இந்த உலகில் நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள், அவையெல்லாம் தற்காலிகமானவை. எவையெல்லம் உங்களை துன்புறுத்துகிறது. அதுவும் நிரந்தரமானதில்லை. இந்த உலகத்தில் நீ எவர்றை சார்ந்திருக்கிறாய்.? அவைகளும் தற்காலிகமானவை. நீ எதனை பார்த்து அதிசயிக்கிறாய்? நம்பிக்கை வைக்கிறாய், நீ எதுவெல்லாம் திட்டமிடுகிறாய், நீங்கள் நிறைவேற்ற துடிக்கும் சாதனைக்காக, எவ்வள்வு நேரம் செலவழித்தாலும், மிகப்பெரிய அவார்டு கிடைத்தும், அதன் பிறகு மகிழ்ச்சியாக ஓய்வெடுத்தாலும், அவையெல்லாம் தற்காலிகமானவை. அவையெல்லாம் கடவுளுக்காக (அவரது அரசிற்காக) செய்யபடும்போது அது உன்மையான உபயோகமாகும்.

நாம் கடவுளின் நோக்கத்தோடு தான், ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும் என்பது தெரிந்து வைத்திருக்கிறோம். அந்த செயல்கள் எல்லாம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும். ஆனால், இந்த கண்மூடிதனமான நம்பிக்கையை விரும்பவில்லை. நாமும் யேசுவின் சீடர்களை போல, கடவுள், இவ்வுலகில் நடக்கும் தீமையானவைகளையும், அநீதிகளையும் பழி வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.யேசு இரண்டாம் முறையாக இவ்வுலகில் வந்து, எல்லாவகையான தீமைகளையும் நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆசைபடுகிறோம்.

நமது ஒவ்வொரு நாளிலும், நாம் இறைவனின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், நமது நம்பிக்கைக்கு தகுந்தாற்போல், அந்த உதவி கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கடவுள் என்ன திட்டம் நமக்காக வைத்திருக்கிறார் எனபதை அறியாத ஒரு பய உணர்வை நாம் விரும்புவதில்லை. பார்க்க முடியாத கடவுளை சார்ந்திருப்பதை விட, நாம் கண்ணால் என்ன பார்க்கிறோமோ அதையே சார்ந்திருக்கிறோம். அதனால், கடவுளிடம் எடுத்துகாட்டு அல்லது குறியீடுகளை எதிர்பார்க்கிறோம்.

எப்படியிருந்தாலும், கடவுளோடு நாம் ஒன்றாய் பயனம் செய்ய, நாம் ஒரு காலை எடுத்து தூக்கி கொண்டு அடுத்த அடி வைக்கும் முன்: "கடவுளே அடுத்த அடியை எங்கே வைப்பது? " என கேட்போம்.

கடவுளரசோடு சேர்ந்து அதற்காகவே வாழ்வது என்பது, எப்போதுமே நமது காலை தூக்கி நிறுத்தி கொண்டு காத்திருக்க வேண்டும், இந்த நிலையில், நாம் ஒற்றைகாலில், தள்ளாடமல், சமனாய் நிற்க வேண்டும். கடவுளை சுற்றியே நமது வாழ்வு இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால், நாம் தடுமாறி வீழ்ந்துவிடுவோம். கடவுள் நாம் அடுத்த அடியை எங்கே வைக்கவேண்டும் என்று சொல்லவில்லையெனில், நாம் வீழ்ந்து இறப்போம். நாம் ஒன்று வேறு எங்கேயாவது வீழ்வோம், அல்லது கடவுளின் கைகளில் விழுவோம். அது எப்போதுமே நம்மை தாங்கி கொன்டுதான் இருக்கிறது. (நமக்கு தெரிந்தோ தெரியாமலோ) அதன் பிறகு, நமது சொந்த விருப்பங்களும் முடிந்து /இறந்து , மேலும் அடுத்து எங்கே போகவேண்டும் என தெரியும்.

கடவுளின் கைகள், எப்போதுமே நிரந்தரமானவை. அவருடைய கைகள் தான் நித்தியத்திற்கும் நிரந்தரமானவை. அவருடைய கைகள் தான், நமக்கு உன்மையான காவல், முடிவில்லாத காவலாயிருப்பார். எல்லா ஆற்றலும், எல்லாம் தெரிந்த அன்புமாயிருப்பார். அவருடைய அன்பும், காவலும், என்றுமே தோல்வி அடைவதில்லை.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 9, 2007

ஞாயிறு நற்செய்தி , மறையுரை: நவம்பர் 11 2007

ஞாயிறு நற்செய்தி , மறையுரை: நவம்பர் 11 2007

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 20

27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, 28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். 29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். 30 இரண்டாம், 31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; 32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? ' என்று கேட்டனர். 34 அதற்கு இயேசு அவர்களிடம், ' இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். 35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. 36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. 37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ' ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று கூறியிருக்கிறார். 38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே ' என்றார்.
thanks to www.arulvakku.com

மறையுரை
உயிர்த்தெழுதலில் உங்களுக்கு நம்பிக்கையுன்டா? இந்த கேள்வியைதான் இன்றைய நற்செய்தியில் யேசு சுற்றி வளைத்து கேட்கிறார். இதனை சதுசேயர்களின் கேள்விக்கு பதிலாக கூறுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம், ஒரு நாள், நாமும் யேசுவை போல, இன்றைய உலக வாழ்விலிருந்து மறைந்து, உயிர்த்தெழுந்த வாழ்வில் நிலைத்திருப்போம் என்று நம்புகிறோம். யேசுவை பின் செல்லும் எல்லா விசுவாசிகளும் வான தூதர்கள் போல் வாழ்வர். அதனால் தான், கத்தோலிக்க கடைசி திருப்பலியில் (மரணம்), உயிர்த்தெழும் திருப்பலியாக நிறைவேற்றப்படுகிறது. திருப்பலி உடைகளும் வெள்ளை உடைகளாகும்,(கருப்பு அல்ல)

ஆனால் நீ அன்பின் உயிர்த்தெழுதலை நம்புகிறாயா? யேசு திருமணத்தின் மூலம் நடைபெறும் உயிர்த்தெழுதலை விளக்குகிறார். திருமணம் என்பது கடவுளின் அன்பை பிரதிபலிக்கும் சாதனமாகும். திருமணத்தின் மூலம், ஆனும் பெண்ணும், இனைந்து, நீடித்த அன்போடு இருப்பது ஆகும். அந்த அன்பு கடவுளிடமிருந்து வரும் அன்பு ஆகும். திருமணம் கடவுளின் அன்பை காட்டும் சாட்சியாக இருக்கிறது. இதன் மூலம் கடவுளின் நம்பிக்கையையும், பொறுப்பையும் காட்டுகிறது.

யேசு எதனால் திருமணம் உயிர்த்தெழுதலில் இல்லை என்று கூறுகிறார்? , ஏன் இவ்வுலகில் நடைபெற்ற திருமணம், தொடர்ந்து விண்ணுலகிலும் இருப்பதில்லை? மன்னுலகில், அன்பு முழுமையாக கொடுக்கபடுவதுமில்லை, முழுமையாக ஏற்றுகொள்ளப்படுவதுமில்லை. அதனால், அன்பான தொடர்ந்து மடிந்து மீண்டும் உயிர்த்தெழுகிறது. ஒவ்வொரு நாளும், கணவனும் மனைவியும், மற்றவர்கள் மேல் பச்சாதாபம் கொண்டு மனம் திரும்பி, மன்னிக்கின்றனர்.

கடவுள் தான் முழுமையான அன்பானவர். நாம் அவரின் உன்மையான சந்ததியாக இருந்துகொன்டு, நமது சகோதர சகோதரிகளை கடவுள் அன்பு செய்வது போல அன்பு செய்கிறோம். இன்று நாம் குறையுள்ள குழந்தகளாக இருக்கிறோம். உத்தரிக்கிற ஸ்தலத்தில், நமது குறைகள் களையபடுகின்றன. அதற்கு பிறகு, மோட்சத்தில், நாம் கடவுளை போல, குறைகளற்றவர்களாக இருப்போம்.
திருமனம் மோட்சத்தில் இருப்பதில்லை ஏனெனில், இது, கடவுளின் அன்பை குறைகளோடு பிரதி பலிக்கிறது. நாம் நமது துனையை, மற்றவர்களை விட அதிகமாக நேசிக்கிரோம். மோட்சத்தில், நமது முன்னால் மனைவி உட்பட அனைவரையும் முழுமையாகவும், ஒரே மாதிரியாகவும் அன்புசெய்வோம். நம்மை குறைவாக அன்பு செய்தவர்கள், நமது துனை அன்பு செய்வதை விட அதிகமாக அன்பு செய்வர்.

திருமனம் என்பது, மோட்சத்தில் ஒவ்வொருவரும் எப்படி அன்பு செய்வார்களோ, அதனை கணவனும் மனைவியும் இவ்வுலகில் காட்டுவதாகும்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 2, 2007

ஞாயிறு நவம்பர் 4 2007 , நற்செய்தி மறையுரை:

ஞாயிறு நவம்பர் 4 2007 , நற்செய்தி மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 19

1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். 2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். 3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். 4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். 5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் ' என்றார். 6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். 7 இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர். 8 சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார். 9 இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! 10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் ' என்று சொன்னார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், சக்கேயுவின் மன உறுதியை பாருங்கள். யேசுவை பார்க்க பல வழிகளில் அவருக்கு தடுப்பு உண்டாக்கபட்டது. யேசுவை சுற்றியிருந்த கூட்டம், அவர் அருகில் நுழைய வழி விடவில்லை. மேலும், அவர் குள்ளமானதால், அவரால் தொலைவில் இருந்து பார்க்க முடியவில்லை. இருந்தும் அவர் யேசுவை பார்ப்பதை விடவில்லை. எந்த ஒரு தடையையும், ஏற்று, அவர் விலகவில்லை. மரத்தின் மேல் ஏறி முழுமையாக யேசுவை கண்டார்.

மேலும், யேசுவை காணவேண்டும் என, கடுமையான ஒரு செயலை செய்தார். பயம் ஏதுமின்றி, ஒரு மரத்தின் மேல் ஏறினார். பல தடைகள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்: மரக்கிளை தொங்கி விழலாம், மற்றவர்கள் அவரை கேலியாக பார்க்கலாம், சிலர் அவரை இறங்கசொல்லலாம். மரத்தின் மேல் அவர் தோள்பட்டை தேய்ந்திருக்கலாம். இந்த் தடைகள் எல்லாம், அவரை நிறுத்தவில்லை.

கிறிஸ்துவ வாழ்க்கை, சுலபமானது இல்லை. நாம் எல்லாருமே ஒரு வகையில், ஊனமுற்றவர்கள் தான். - தவறான எண்ணங்கள், தீங்கு உண்டு பன்னுதல், தவறான பயிற்சி அளித்தல், ஆன்மிக விசயத்தில் சோம்பலாய் இருப்பது, பயம் மற்றும் சந்தேக எண்ணங்கள், இன்னும் பல. இவைகளெல்லம், நாம் யேசுவை காண தடையாக இருக்கின்றன. நாம் இறைவனின் உதவிக்காக, ஜெபம் செய்வோம். நமது ஜெபத்தை (அ) வேண்டுதலை இறைவன் பதில் அளிக்க வில்லையெனில், கடவுள் நம்மை நிராகரித்து விட்டார் என எண்ணிகொள்கிறோம். மேலும், எவ்வித நிபந்தனையுமின்றி, மற்றவர்களை அன்பு செய்வதில்லை. சிலர் மீண்டும், மீண்டும், நம்மை தொந்தரவு செய்தால், அவர்களை மன்னிக்க நமது மனம் இடம் கொடுப்பதில்லை. அதனால் யேசுவும், நம்மை மன்னிப்பதில்லை என எண்ணுகிறோம்.


யேசுவை பின் செல்வது என்பது, கஷ்டங்களிடையே நடந்து செல்வது போன்றது, மற்றும், மற்றவர்களின் நிராகரிப்பால், தவறான குற்றசாட்டுகளால், பல கடின சிலுவைகளை நாம் சுமக்கும் போது, யேசு நம்மிடம் வரவில்லை என நினைக்கிறோம். யேசு நம்மை இந்த சோதனைகளிலிருந்து நமக்கு வழி காட்டவில்லை என நினைக்கிறோம். அதற்கு பதிலாக, சக்கேய்உவை போல நாம் இருக்க வேண்டும். யேசுவை முழுமையாக பார்க்க வேண்டும் என்று எண்ணவேண்டும். அவர் செய்தது போல், எல்லா வகையான வழிகளிலும், தடைகளை தான்டி சென்று அவரை பார்க்க வேண்டும். அவர் நிஜமாகவே நமக்கு செய்வதை புரிந்து கொள்ள வேண்டும்.

சக்கேயு மரத்தில் மேல் ஏறியவுடன், யேசு என்ன செய்தார், அவரை பேர் கூப்பிட்டு, அவர் மேல் தனி கவனம் செலுத்தினார். சக்கேயு அவர் அழைத்தலை எவ்வாறு ஏற்றுகொண்டார்? மரத்திலிருந்து கீழே இறங்கி மிகவும் சந்தோசத்துடன் யேசுவை வரவேற்றார். அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார் என்றால், அவரின் பாவங்களுக்கு சன்மானமாக மூன்று மடங்கு தருகிறேன் என்று வாக்கு கொடுத்தார்.

நாம் யேசுவை கண்டவுடன் இதுமாதிரியான, பதிலுரைகள தராவிட்டால், நாம் மேலு உயர சென்று யேசுவைக் காண வேண்டும். ஏனெனில், நமக்குள் இன்னும் பல தடைகள் உள்ளன.

thanks to www.gnm.org coypright by Terry Modica