Friday, February 26, 2016

பிப்ரவரி 28 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 28 2016 ஞாயிறு  நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு 

Exodus 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Corinthians 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி

மனம் மாறாவிடில் அழிவு

1அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

2அவர் அவர்களிடம் மறுமொழியாக
இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?

3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?

5
அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்”  என்றார்.

காய்க்காத அத்திமரம்

6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 
ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.

8தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.

9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்என்று அவரிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இரக்கத்தின் அன்பளிப்பு
சிலர் உங்களை துன்புறுத்தியும், மோசமாக நடந்து கொண்டும் இருப்பவர்களை , அவர்களுக்கு ஏதாவது துன்பம் நேரவேண்டும் என்று நாம் நினைப்போமா? அப்படி நேரும்போது நாம் சந்தோஷ படவே செய்வோம். நியாயம் வென்றது என்று நாம் நினைப்போம்.
இயேசு இதனை இந்த வார  நற்செய்தியில் பேசுகிறார். நாம் யாரையும் "மிக பெரிய பாவி" என்று சொல்லி விட முடியாது. அவர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராக சில செயல்கள் செய்தாலும், மிக பெரிய அழிவை உண்டாக்கி விட்டாலும், சாத்தானின் செயல்கள் செய்தாலும் , நீங்கள் அவரை மிக பெரிய பாவி என்று சொல்லி விட முடியாது என்று இயேசு சொல்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் கடவுளை போல படைக்கபட்டிருக்கிறோம், மிகவும் மோசமான மனிதனும் கடவுளை போல தான் படைக்க பட்டிருக்கிறான் , கிறிஸ்துவுக்கு எதிராக செயல்களில் ஈடுபடுபவரும், இயேசுவால் அன்பு செய்யபடுகிறார். அவர்களுக்காகவும் இயேசு சிலுவையில் மரணமடைந்தார். கடவுள் அவர்களை எதற்காக படைத்தாரோ , அதனை செய்யாமல் அவர்கள் இருப்பது ஒரு துன்ப செயல். ஏனெனில் அவர்களின் செயல், மற்றவர்களை துன்புறுத்துகிறது. ஆனால், யாரும் அவர்களை மனம் திரும்பி கிறிஸ்துவிற்குள் திரும்ப அழைக்கவில்லை என்றால், அதை விட மிக பெரிய அழிவிற்கு கொண்டு செல்லும்.
யாருமே சாத்தானின் மனிதர்கள் கிடையாது. சாத்தானின் செயல்கள் செய்பவர்கள் , அவர்களின் உண்மையான அடையாளத்தை ஒதுக்கி   விட்டு செய்பவர்கள் ஆவர். சாத்தானின் செயல்களுக்கு ஆட்பட்டு , சாத்தானின் காட்டும் வழி தான் வாழ்வதற்கு நல்ல வழி என்று நினைக்கிறார்கள். பாவங்களையெல்லாம் அழித்து வெற்றி பெற்ற இயேசு ஒருவரால்,  அவர்கள் மிட்படைவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்காக நாம் வருத்தப்படவேண்டும். - இது தான் இரக்கத்தின் அன்பளிப்பு. அவர்களின் ஆன்மாவிற்கு ஏற்படும் அழிவை கண்டு இயேசுவுடன் சேர்ந்து நாமும் இரக்க பட வேண்டும். -- அது தான் மிகவும் மதிப்பு வாய்ந்த இரக்கத்தின் அன்பளிப்பு ஆகும்.

ஒருவரின் ஆன்ம அழிவிற்கு நாம் அக்கறை கொள்ள வில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். இயேசு சிலுவையில் அவர்களுக்காக என்ன செய்தாரோ அதனை உதறி தள்ளி விடுகிறோம். நம் சொந்த ஆன்மாவிற்கும் சேதம் ஏற்படுத்துகிறோம்.
உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், இன்றைய நற்செய்தியில் வரும் அத்தி மரத்தை போன்றவர்கள். உங்களால் அவர்களை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும் என்றால், அவர்களின் மண்ணை உழுது பயனுள்ளாதாக மாற்ற வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அவர்களின் ஆன்மாவை , அன்பினாலும், நற்செய்தியின் உண்மையாலும் அவர்களுக்கு உரமிட்டு, நமது செயல்களாலும் , அவர்களை கிறிஸ்துவுக்கு அழைத்து வர வேண்டும். மேலும், இயேசு உங்கள் சமாதான வார்த்தைகள் மூலம் அவர்களை சரியான பாதையில் வளர உதவிட வேண்டும் என்றும் விரும்புகிறார்.
மேலும், நோய்வாய்ப்பட்ட , ஆரோக்கியமில்லாத மரத்தை நீண்ட காலம் வைத்திருக்க இயேசு விரும்புவதில்லை என்பதையும் நாம் உற்று நோக்க வேண்டும். நம்மால் முடிந்த அனைத்தும் செய்த பின்பு, சாத்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் மனம் மாற விரும்பவில்லை என்றால், அந்த தோட்டத்திற்கு நாம் செய்யும் ஒரு நல்ல செயல், அந்த மரத்தை வெட்டி விடுவது தான். இதன் அர்த்தம் என்ன என்றால், அவர்களை விட்டு நாம் செல்வது, அல்லது, நமக்கு மேல் உள்ள குருக்கள், அல்லது வேறு சிலரிடம் அழைத்து செல்வது , மேலும், அவர்கள் செயலுக்கான பிரதிபலனை அவர்களே அனுபவிக்க விட்டு விடுவது ஆகும். இதனையும் அதிக அக்கறையுடனும் அன்புடனும் செய்தல் வேண்டும். இந்த உரங்கள் எல்லாம் ஒரு கனியும் கொடுக்க வில்ல என்றால், அந்த மரம் கிழே விழுந்து, புதிய வளர்ச்சிக்கு உரமாக ஆகிவிடும்.


© 2016 by Terry A. Modica

Saturday, February 20, 2016

பிப்ரவரி 21 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 21 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்கால 2ம் ஞாயிறு
Genesis 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Philippians 3:17--4:1
Luke 9:28b-36

லூக்கா நற்செய்தி
28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.

29அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.

30மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.

31மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

33அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
34இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

35அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்என்று ஒரு குரல் ஒலித்தது.
36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(Thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னுடைய உண்மையான அடையாளத்தை அங்கே காட்டுகிறார். மேலும் தந்தை கடவுள், இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் என்று கூறியதை நாம் கேட்கிறோம்.
கிறிஸ்துவின் வார்த்தைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போழுதும், பரிசுத்த ஆவியின் துணையுடன் கிறிஸ்துவின் வார்த்தைகளை புரிந்து கொள்ளும்பொழுது , நாம் கிரிஸ் துவை அவரது முழு அடையாளத்தையும் தெரிந்து கொள்கிறோம். மேலும் அவரது வழிகாட்டுதலையும் தெரிந்து கொள்கிறோம்.

கிறிஸ்துவை அவரின் வார்த்தைகளை நாம் கேட்கும்பொழுது, கிறிஸ்துவின் ஒளியை நாம் உள் வாங்கி நம்மில் உள்ள இருளை எடுத்து கொள்ள நாம் அனுமதிக்கிறோம். அதன் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்கள் இயேசுவை அனுபவிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இயேசுவை நம்மிடம் காண்கின்றனர். நமது செயல்களிலும், இரக்கத்திலும், மன்னிப்பிலும், அவர்கள் இயேசுவை நம் மூலம் காண்கிறார்கள். இது தான் மனம் மாறுதல் !

இந்த தவக்காலத்தில் தான், நாம் கிறிஸ்துவின் ஒளி நம் இருளை அகற்றும் வாய்ப்பாக எடுத்து கொண்டு, அதில் நாம் கவனத்தை செலுத்தும் காலம் ஆகும். நாம் மனம் வருந்தி, மன்னிப்பை கோரும் பொழுது, பரிசுத்த ஆவியின் ஆற்றல் மூலம் நாம் நல்ல வழியில் மாறி , இயேசுவின் ஒளி நம்மில் ஒளிர செய்கிறார். அவரோடு இணைந்து இன்னும் நாம் மிளிர்வோம். மேலும், இந்த உலகை மீட்பதற்கு நாம் இயேசுவோடு இணைகிறோம். இந்த இறை சேவையில், கண்டிப்பாக கஷ்டப்படவேண்டும். பெரிய வெள்ளியின் வழியும், துன்பமும், ஈஸ்டர் அன்று வெற்றியானது என்று நமக்கு தெரியும்.

சோதனைகளிலும், தியாகத்திலும் -- நம் சொந்த சிலுவைகள் - இதில் தான் நம் பரிசுத்தம் இந்த உலக வாழ்வை . இயேசுவை கல்வாரி வரை பின் செல்ல நீங்கள் தைரியாமாக இருக்கிறீர்களா? ஈஸ்டர் வெற்றியை அடைய இது தான் ஒரே வழி! நமது சோதனைகளில் தான் இயேசுவின் இரத்தம் மீண்டும் சிந்துகிறது. நமது வழியெல்லாம் அவரின் வெளியாகிறது. நாம் இயேசுவோடு ஏற்கனவே சிலுவையில் இருக்கிறோம். நம்மை ஏமாற்றியாவர்களுக்காகவும் , துன்புருத்தியவர்களுக்காகவும், ஏன் நாம் இயேசுவை இன்னும் அரவணைத்து அவரோடு இணைந்து செயல்பட்டால் என்ன ?
நம்மை அன்பு செய்யாதவர்களிடம் அன்பு செலுத்துவது, நம்மை தவறாக நடத்தியவர்களை மன்னித்து , சாத்தானை இந்த இறையரசில் இருந்து நீக்குவோம். இயேசுவின் ஒளியை இருளில் வாழ்வபர்களுக்கு வெளிபடுத்துவோம்.
 © 2016 by Terry A. Modica



Saturday, February 6, 2016

பிப்ரவரி 7 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 7 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் பொதுகாலத்தின் 5ம் ஞாயிறு
Isaiah 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Corinthians 15:1-11
Luke 5:1-11

லூக்கா நற்செய்தி

ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கிவலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ``ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய்மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார்.
சீமோன் மறுமொழியாக, ``ஐயாஇரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லைஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவேமற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுருஇயேசுவின் கால்களில் விழுந்து, ``ஆண்டவரேநான் பாவிநீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.
சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.
இயேசு சீமோனை நோக்கி, ``அஞ்சாதேஇது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

அதிக நேரங்களில், கடவுள் நாம் கேட்காமலே , நமக்கு உதவி செய்கிறார். இன்றைய நற்செய்தியில் , இராயப்பருக்கும், ஜேம்சுக்கும் மற்ற சீடர்களுக்கும் நிறைய மீன் கிடைக்கும் என்று அவராகவே உதவி செய்தார்

இயேசுவின் நோக்கம் என்ன? இயேசுவிற்கு ஒரு படகு கொடுத்தால், அவர் அவர்களுக்கு கைம்மாறு செய்கிறாரா? உங்களுக்கும் நீங்கள் நல்லது செய்தால், அவர் பிரதிபலனாக ஏதாவது செய்வார் என்று நினைக்கிறீர்களா? 
கண்டிப்பாக அது பிரதிபலன் இல்லை. அதனை தாண்டி அதற்கு மிக பெரிய காரணம்
ஒன்று இருக்கிறது.
கிறிஸ்து நம்மோடு எப்படி கலந்து உரையாடுகிறார் என்று இந்த நற்செய்தி சொல்வது போல பாருங்கள்.
1. முதலில், மினவர்கள், இயேசுவை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தனர், அவரை "ஐயா" என்று அழைக்கின்றனர் ஏனெனில், இயேசு அவர்களுக்கு  போதகராக , அவர்கள் மாணவர்களாக இருந்தனர்.
2. இரண்டாவதாக, இயேசு அவர்கள் எதிர்பாராத நேரத்தில் , அவர்களுக்கு உதவி செய்தார்.
3. மூன்றாவதாக இயேசு அந்த அன்பளிப்பை , கடவுளின் அழைப்பாக மாற்றினார்.
4. நான்காவதாக, அந்த சீடர்கள்  அனைத்தையும் விட்டு விட்டு , கடவுளின் அழைப்ப ஏற்றனர்.
கடவுள் நம் வாழ்வில் நுழைந்தால், அது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க விழைகிறார். நாம் ஒரு சமுகத்தில் இருக்கிறோம். கடவுளின் குடும்பத்தில் இருக்கிறோம்; நாம் தனி ஒரு ஆளாக கடவுளோடு நட்பில் இருப்பதில்லை, கடவுளோடு நமது ஜெபத்திலும் , நற்கருனையிலும், ஜெப கூட்டத்திலும் , நாம் மற்றுவர்களோடும் , அவர்களின் நலன்களோடும் இணைந்து இருக்கிறோம்.
நீங்கள் கேட்கும் அணைத்து ஜெபங்களும் உங்களுக்காக மட்டும் கடவுள் கொடுக்கவில்லை, மற்றவர்களும் அதனால் பயன் அடைய வேண்டும் என்று மிக பெரிய திட்டத்தோடு தான் கடவுள் நமக்கு இல்லாம் செய்கிறார்.
நீங்கள் கேட்கும் வரங்களை கடவுள் கொடுக்க வில்ல என்றால், அவர் இன்னும் மிக பெரிய திட்டம் தயாரித்து கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம் . உங்கள் ஜெப தேவைகள் மற்றவர்களுக்கு எந்த பயன் கொடுக்கும் என்று ஆய்ந்து அதனை செய்கிறார்.
உங்கள் தனிப்பட்ட விருப்பங்களையும், ஆசைகளையும் கண்டிப்பாக கடவுள் அக்கறை கொள்கிறார். அதே போல மற்றவர்களின் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்ற அவர் ஆசை கொண்டுள்ளார். மற்றவர்கள் கேட்டாலும்  கேட்காவிட்டாலும்,  கடவுள் அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற விரும்புகிறார். உங்கள் தேவைகளை அழைத்தலாக மாற்றுகிறார் , உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இறை சேவை. அதன் அர்த்தம் என்ன வென்றால், கடவுளிடம் நீங்கள் கேட்ட நேரத்திலிருந்து , மற்றவர்களுக்கும் உதவ ஆரம்பிக்க கடவுள் உங்களை அழைக்கிறார்

நமது பிரச்சினைகள் முடியும் வரை, நாம் அதனை விட்டு வெளியே சிந்திக்க வேண்டும், மற்றவர்களை பற்றியும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். இதனால் கடினமான நேரங்களிலும், நாம் உள்ளத்தில் அமைதியும் , நம்பிக்கையும் கொள்வோம். இது தான் நம் அனுதின வாழ்வின் அழைத்தல் ஆகும்.

© 2016 by Terry A. Modica