Friday, June 27, 2014

ஜுன் 29, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜுன் 29, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
அப்போஸ்தலர்கள் பேதுரு, பவுல் திருவிழா
Acts 12:1-11
Psalm 34:2-9
2 Timothy 4:6-8, 17-18
Matthew 16:13-19

மத்தேயு நற்செய்தி

இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார்.16சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.http://www.arulvakku.com/images/footnote.jpg19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என்றார்.
(thanks to www.arulvakku.com)

எது மிக சரியான தலைமைத்துவம்? அதற்கு சரியான எடுத்து காட்டாக, பவுல், மற்றும் பேதுருவிடம் காண்கிறோம். என் இயேசுவிடம் கூட பார்க்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், பேதுரு முதலில் இயேசுவை மெசியா என்று சொல்கிறார், பிறகு, அவர் மற்றவர்களை அழைத்து இயேசு மெசியா என்ற உண்மையை கண்டறிய உதவுகிறார். பேதுருவை நல்லாயனாக இருக்க அமர்த்த பட்டுள்ளார்  அதன் மூலம் இயேசுவோடு ஒவ்வொருவரும் அன்பில் இணைந்திருக்க நல்லாயனாக பேதுருவுக்கு அதிகாரம் வழங்கபட்டுள்ளது.
இன்றும், நமக்கும் அதே பொருப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமது வார்த்தைகளால், நம்மால் சிலரை மனமாற்றம் செய்ய முடியாவிட்டாலும், நமது நடவடிக்கைகள் மூலமும்,  நல்ல குணத்தினாலும், இறக்கத்தினாலும், இயேசுவை போல இருந்து நம் கடைமையை செய்தல் வேண்டும்.

பவுல் அவரது இறைசேவையில் துன்புறுவதை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். இயேசுவும் துன்புற்றதை , அவர் நல்லாயனாக இருந்த பொழுது, பல சோதனைகளை சந்தித்ததை நாம் அறிந்திருக்கிறோம். நாமும், இவ்வுலகில், இறையரசை கொண்டு வர ஈடுபடும்பொழுது, நாமும் பல துன்பங்களை சந்தித்து இருப்போம். இதில் சந்தோசமான விசயம் என்ன என்றால்,  சாத்தானின் எந்த ஒரு சக்தியும், கிறிஸ்துவினால், ஆன காரியம் எதையும் வெற்றி கொள்ள முடியாது.

கிறிஸ்துவின் வாயில்கள், சாத்தானிடமிருந்து நாம் எல்லாம் வெளியே வர கதவுகளாக உள்ளன. கிறிஸ்துவை பின் பற்றுபவர்களாக, ஒவ்வொரு தலைமைத்துவம் பெற்றவர் அனைவரும், பலரை பாதாலாத்திளிருந்து கிறிஸ்துவின் வாயிலுக்கு கொண்டு செல்ல முனைவோம். நாம் உண்மையாகவே கிறிஸ்துவை பின் பற்றினால், நாம் கிறிஸ்துவோடு, அவர் எதிரியின் எல்லைக்கு செல்லும்பொழுது, இதற்கிடையே பரிசுத்த ஆவி யாரை நாம் கிறிஸ்துவிடம் கொண்டு வர முனைகிறோமோ, அவர்களை கிறிஸ்துவிடம் வர தயார் படுத்துகிறார். நாம் அவர்களிடம் மாற்றத்தை காணாமல் இருந்தால் கூட, மாற்றம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பாவ வாழ்க்கையில் வாழ்பவர்கள், நாம் முயற்சியை நிராகரிப்பார்கள், ஆனால், அவர்களுக்கு எதுவெல்லாம் ஆற்றல் கொடுக்கிறது: நிபந்தனை இல்லா அன்பிற்காக அவர்கள் பல்வேறு வழிகளில், தேடி அலைவது தான் அவர்களின் நோக்கமாக இருக்கும். இது தான் அடிப்படை என்றால், அவர்கள் நல்லாயனை நெருங்கி , கடவுளின் மன்னிப்பிற்கும், மீட்புக்கும், அருகில் வருகிறார்கள் என்று அர்த்தம்.
அவர்களை கதவு வழியாக இழுத்து கொண்டு வர முடியாது, அவர்களுக்கு வழியை காண்பிக்கலாம், மேலும், அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடி, அவர்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ள ஜெபம் செய்யலாம். இது தான் நமக்கு கொடுத்த அழைப்பு.
© 2014 by Terry A. Modica 

Friday, June 13, 2014

ஜுன் 15 2௦14, ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜுன் 15 2௦14, ஞாயிறு நற்செய்தி மறையுரை
மூவொரு கடவுளின் திருவிழா
Exodus 34:4b-6, 8-9
Daniel 3:52-56
2 Corinthians 13:11-13
John 3:16-18

யோவான் நற்செய்தி
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை
(thanks to www.arulvakku.com)
பரிசுத்த ஆவியின் விழாவிற்கு அடுத்த வாரத்தில், நாம் மூவொரு கடவுளின் விழாவாக கொண்டாடுகிறோம்.
முதல் வாசகத்தில், தந்தை கடவுள் இஸ்ரேயல் நாட்டை தந்தை போல கவனித்து கொள்வதை பார்க்கிறோம். அவர் இரக்கமும், அருளும் நிறைந்தவராய் பார்க்கிறோம். மிகவும் மெதுவாக கோபம் கொள்வராகவும் , இரக்கத்திலும் , விசுவாசத்திலும் மிகவும் தாராளாமானவராகவும் இருப்பவர் என்பதையும் பார்க்கிறோம் – மிகவும் சரியான தந்தை அவர் .
தந்தை கடவுளை இவ்வாறு நாம் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? ஏனெனில், நாம் இதனை இன்னும் அனுபவிக்கவில்லை, நாம் மனித தந்தையே பார்த்து, பார்த்து, தந்தை என்றால் இப்படி தான் இருப்பார் என்று நாம் நினைக்கிறோம். நமது ஆவிக்கு குணப்படுத்தல் வேண்டும். தந்தை கடவுளை , குறையுள்ள மனித தந்தையாகவே நாம் பார்க்கிறோம். நல்ல அப்பாக்களும், நல்ல திறமையான ஆசிரியர்களும் கூட கடவுளின் தரத்திற்கு குறைவாகவே உள்ளனர். இதனை நன்றாக நினைவில் வைத்து கொண்டு நாம் தந்தை கடவுளை பார்க்க வேண்டும் .
இரண்டாவது வாசகம், மூவொரு கடவுளை முழுமையாக நமக்கு காட்டுகிறது. இயேசுவின் அருளும், தந்தை கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும், நமக்கு சொல்ல படுகிறது. இதனால், இதன் மூலம் , இதனுள், நாம் சந்தோசம் பெறுகிறோம். இவர்களுள் நம் வழியை செம்மபடுத்துகிறோம். மேலும் நம்மில் ஒருவரோடு ஒருவர் அமைதியோடு வாழ்கிறோம்.
இதனை வேறு மாதிரி சொல்வாதானால், இயேசு நம் பாவங்களை ஏற்று கொண்டு, நமக்காக இறந்தார், நாம் பாவங்களை எதிர்கொள்ளும் திறனை அருளை நமக்கு வழ ங்கினார்.  மேலும், தந்தை கடவுளின் அன்பை நமக்கு கொடுத்து நாமும் மற்றவர்களை அன்பு செய்ய நம்மை தயார்படுத்துகிறார். மேலும், பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்து, பரிசுத்த கிறிஸ்தவனாக நாம் தொடர்ந்து வாழ நம்மை ஆயத்தப்படுத்துகிறார்
நற்செய்தி வாசகம், தந்தை கடவுளின் அன்பின் ஆழத்தை காட்டுகிறது. அவர் நம்மை தண்டனைக்குள்ளாக்க விரும்பவில்லை; அவரின் மகனை அனுப்பி பாவத்தின் அழிவிலிருந்து நம்மை மீட்க தயாரானார். நமது பாவங்கள், நம்மை தீர்ப்புகுள்ளாக்கி நம்மை சாவிற்கு அழைத்து செல்கிறது. ஆனால், இயேசு நம்மை மீட்டு நம்மை நித்திய வாழ்விற்கு , வெற்றியின் வாழ்வை கொடுத்துள்ளார், - அதனை ஏற்பது நம் கையில்.

© 2014 by Terry A. Modica

Friday, June 6, 2014

ஜுன் 8 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 8 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த ஆவி விழா
Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Corinthians 12:3b-7, 12-13
John 20:19-23

யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார் அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று வாழ்த்தினார்.20இவ்வாறு. ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா என்றார்.
(thanks to www.arulvakku.com) 

கடவுளே உமது ஆவியை நீர் அனுப்பி, மன்னகத்தை புதுப்பித்தள் செய்வாயாக “ என்று இன்றைய பதிலுரை பாடலில் நாம் சொல்கிறோம். இந்த பரிசுத்த ஆவியின் விழாவில், நமது ஜெபமாக இது இருக்கிறது. இதனால், தான், நமது திருச்சபை இன்னும் இப்பூவுலகில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்கிறோம்.


கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், , கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. மேலும், ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும் , தடையும் தாண்டி கிறிஸ்தவம் வளர்ந்திருக்காது.
கிறிஸ்துவின் அவையின்றி, நாம் இந்த உலகில் கிறிஸ்து ஆக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மிடம் செய்ய சொன்னதை நம்மால், செய்ய முடியாது.
பரிசுத்த ஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை , புதுப்பிக்கப்பட்ட நாளை குறிக்கிறது. அதே போல, நம் பரிசுத்த வாழ்வின் பிறந்த நாளையும் குறிக்கிறது. இது, திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினாராக சேர்ந்து கொண்டதை குறிக்கிறது. இந்த நாள் பெரிய விழா நாள், நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் நாள், நமது ஞானஸ் நாணத்திலும், உறுதி பூசுதலிலும் நாம் பெற்ற பரிசுத்த ஆவியை மிண்டும் புதுப்பித்து கொள்ளவும், ஆவியின் இருப்பை உறுதிபடுத்தும் விழா.

இந்த பரிசுத்த ஆவியின் நாளில், அருட் சாதனங்களின் மூலம் நாம் பெற்ற கடவுளின் ஆற்றல், சக்தி, அவரின் நம்மோடு இருப்பது ,ஆகியவற்றால், நாம் பாவங்களை விட்டு விலகியும், பரிசுத்த வாழ்வில் வாழ்ந்தும், இந்த பூவுலகை நாம் மாற்ற முடியும் என்பதனை நமக்கு நினைவுருத்தபடுகிறது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்ற போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் பரிசுத்த ஆவியை , அவரின் மகனுக்கு கொடுத்து இந்த உலகின் இறை சேவையை செய்ய அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்கு கொடுத்தார். அதன் மூலம் நாம் பரிசுத்த வாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்த பணிகளில் நாம் ஈடுபடலாம்.
பரிசத்த செயல் செய்ய, நாம் எதோ ஒரு தகுதியை இழந்து இருக்கிறோம், என்று நீங்கள் நினைத்தால், அது சரியாக கூட இருக்கலாம், ஆனால், கடவுளின் ஆவி உன்னில் இருந்து குறைகளை துரத்தி நிறைகளாக்கும், இந்த இணைப்பில், தொடர்ந்து நம்பிக்கையோடு செல்வாயாக!.

© 2014 by Terry A. Modica