Saturday, March 27, 2010

மார்ச் 28, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

மார்ச் 28, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
குருத்து ஞாயிறு

Procession with Palms: Luke 19:28-40
Is 50:4-7
Ps (2a) 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11
Luke 22:14 -- 23:56


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 22

14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.15 அப்போது அவர் அவர்களை நோக்கி, ' நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.16ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.17 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், ' இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.18ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்றார்.20 அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, ' இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.21என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.22மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு ' என்றார்.23 அப்பொழுது அவர்கள், ' நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார் ' என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.24 மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.25 இயேசு அவர்களிடம், ' பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.26ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.27யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.28நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.29என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.30ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.31 ' சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.32ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து ' என்றார்.33 அதற்கு பேதுரு, ' ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன் ' என்றார்.34 இயேசு அவரிடம், ' பேதுருவே, இன்றிரவு, ″ என்னைத் தெரியாது ″ என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.35 இயேசு சீடர்களிடம், ' நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா? ' என்று கேட்டார். அவர்கள், ' ஒரு குறையும் இருந்ததில்லை ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.37ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ' கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார் ' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன ' என்றார்.38அவர்கள் ' ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன ' என்றார்கள். இயேசு அவர்களிடம், ' போதும் ' என்றார்.39 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.40 அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், ' சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், ' என்றார்.41 பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்;42 ' தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ' என்று கூறினார்.43 (அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.) 45 அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.46 அவர்களிடம், ' என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார்.47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.48 இயேசு அவனிடம், ' யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? ' என்றார்.49 அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, ' ஆண்டவரே, வாளால் வெட்டலாமா? ' என்று கேட்டார்கள்.50 அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.51 இயேசு அவர்களைப் பார்த்து, ' விடுங்கள், போதும் ' என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.52 அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, ' ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்?53நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது ' என்றார்.54 பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.55 வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.56 அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, ' இவனும் அவனோடு இருந்தவன் ' என்றார்.57 அவரோ, ' அம்மா, அவரை எனக்குத் தெரியாது ' என்று மறுதலித்தார்.58 சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், ' நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ' என்றார். பேதுரு, ' இல்லையப்பா ' என்றார்.59 ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், ' உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான் ' என்று வலியுறுத்திக் கூறினார்.60 பேதுருவோ, ' நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது ' என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.61 ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; ' இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,62 வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.63 இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.64 அவரது முகத்தை மூடி, ' உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல் ' என்று கேட்டார்கள்.65 இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.66 பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.67 அவர்கள், ' நீ மெசியா தானா? எங்களிடம் சொல் ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;68நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.69இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார் ' என்றார்.70 அதற்கு அவர்கள் அனைவரும், ' அப்படியானால் நீ இறைமகனா? ' என்று கேட்டனர். அவரோ, ' நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள் ' என்று அவர்களுக்குச் சொன்னார்.71 அதற்கு அவர்கள், ' இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே ' என்றார்கள்.
அதிகாரம் 23
1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே சியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.3 பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க, அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார்.4 பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ' இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை ' என்று கூறினான்.5 ஆனால் அவர்கள், ' இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான் ' என்று வலியுறுத்திக் கூறினார்கள்.6 இதைக் கேட்ட பிலாத்து, ' இவன் கலிலேயனா? ' என்று கேட்டான்;7 அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.8 இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.9 அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.10 அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.11 ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.12 அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.13 பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.14 அவர்களை நோக்கி, ' மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.15 ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.16 எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் ' என்றான்.17 (விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.) 18 திரண்டிருந்த மக்கள் அனைவரும், ' இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும் ' என்று கத்தினர்.19 பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.21 ஆனால் அவர்கள், ' அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள்.22 மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, ' இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் ' என்றான்.23 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.24 அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.25 கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.26 அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.27 பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.28 இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, ' எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.29ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது ' மலடிகள் பேறுபெற்றோர் ' என்றும் ' பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் ' என்றும் சொல்வார்கள்.30அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ' எங்கள் மேல் விழுங்கள் ' எனவும் குன்றுகளைப் பார்த்து, ' எங்களை மூடிக்கொள்ளுங்கள் ' எனவும் சொல்வார்கள்.31பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்! ' என்றார்.32 வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.33 மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.34 அப்போது (இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' என்று சொன்னார். ) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள். 35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள்.36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர்.38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான்.40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான்.42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான்.43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார்.44 ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.45கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.46 ' தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.47 இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், ' இவர் உண்மையாகவே நேர்மையாளர் ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.48 இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.49 அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.50 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.51 தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.52 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.53 அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.54 அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம். 55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,56 திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.


(thanks to www.arulvakku.com)

புனித வாரம் குருத்து ஞாயிறோடு தொடங்குகிறது. இது உங்களையும் , உங்கள் பரிசுத்த வாழ்வயும், யேசுவோடும், அவரின் அன்போடும் இனைக்குமா?
இன்றைய குருத்து ஞாயிறின் வாசகத்தில் "போதகருக்கு இது தேவையாக இருக்கிறது" என்ற முக்கியமான வசனம் கூறப்படுகிறது. இந்த குருத்து ஞாயிறின் பவனியில், நாம் இந்த இனைப்பை (யேசுவோடு ) நாம் முக்கியமாக கருத்தில் கொன்டு இந்த புனித வாரத்தை தொடங்குவோம்.


ஏன் இந்த நற்செய்தியை எழுதியவர், யேசு ஏன் கழுதையை பயன்படுத்தினார் என்று சரியாக விளக்கமாக எழுதவில்லை என்று நாம் நினைக்கலாம், ஆனால், இன்றைய நமது சுற்றுபுரத்தையும், தற்போதைய நிகழ்விலும் நாம் காரனத்தைய அறியவேண்டும். நம் வாழ்விலும், சில நேரங்களில், நமக்கும் கழுதை கட்டப்பட்டுள்ளது. எதுவுமே நமக்கு மட்டும் பயன் கொடுத்து, கிறிஸ்துவோடு அது பகிரப்படாமல் இருந்தால், அது நம்மில் கட்டப்பட்டுள்ள கழுதையாகும். இது நம் சொத்தாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், திறமைகளாக இருக்கலாம், அரிய திறன்களாக இருக்கலாம், நமது சொந்த நேரமாக இருக்கலாம் அல்லது ஆற்றலாக இருக்கலாம். நம் தலைவன் இதனையெல்லாம் கேட்கிறார். சில நேரங்களில், நாம் நமது சொந்த தேவைகளை மட்டும் பார்க்கிறோம். யேசுவுக்கும் அதனை நாம் கொடுத்தால், அவருக்கு உதவியாக இருக்கும். யேசு ஏறி சென்ற கழுதை போல, நமது மீட்பருக்கு அது பெரும் அன்பளிப்பாக இருக்கும்.

கிறிஸ்துவின் அளப்பர்கரிய அன்பிற்காக, நாம் அவரை பாராட்ட வேண்டும், கொண்டாட வேண்டும் என குருத்து ஞாயிறு நமக்கு அறிவுருத்துகிறது. அவரது அன்பை, சிலுவையின் மூலம் நமக்கு காட்டினார். உங்களுக்காக வேறு யார் இறப்பார்? இவ்வளவு வேதனைகளோடு யேசு தான் இறந்தார். யேசுவின் சகல வசதிகளையும், இன்பங்களையும் நமக்காக விட்டு கொடுத்தார். அவரது உடலை, இரத்ததையும் கொடுத்தார். இதனையெல்லாம் நமகு கிடைக்க வேன்டிய தன்டனைக்கு பதிலாக கொடுத்தார்.

இதற்காக ஒவ்வொரு ஞாயிறும் ஓசானா சொல்லி நாம் கிறிஸ்துவுக்கு புகழ்மாலை பாடவேண்டும். திவ்ய நற்கருணையில் நாம் கிறிஸ்துவோடு இனையவேன்டும். இந்த இனைப்பில், நாம் ஏன் காதலர்கள் போல நாம் மிக மகிழ்ச்சியுடனும், பிரகாசத்துடனும் இருப்பதில்லை. இதற்கெல்லாம் பதில், நாம் இன்னும், கழுதைகளை நம்மில் கட்டி வைத்து இருக்கிறோம்.


இயேசு, அவரது சீடர்களை அனுப்பி, உங்கள் கழுதையை அவருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். அவைகள் எல்லாம், நற்கருஅனை பலி பீடத்தில், உங்கள் அர்ப்பனிப்புக்காக காத்திருக்கின்றன. அவர்கள் எல்லாம், "உதவி தேவை" என்றும், உங்கள் வேலையிடையே , உங்களிடம் வந்து, அவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்றும், யோசனையும் கேட்கலாம் புதிவர்களாக வந்து பல நற்பனிகளுக்காக நன்கொடை கேட்கலாம்.
கடவுளின் இறையரசில் நீங்கள் ஈடுபட யாராவது அழைத்து நீங்கள் பார்த்ததுன்டா?

© 2010 by Terry A. Modica

Saturday, March 20, 2010

21 மார்ச் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

21 மார்ச் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு

Isaiah 43:16-21
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 8

1 (இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,4 ' போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர்.6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ' உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்று அவர்களிடம் கூறினார்.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.10 இயேசு நிமிர்ந்து பார்த்து, ' அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? ' என்று கேட்டார்.11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம், 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.)

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, எப்படி நலிவுற்றவரில், மிகவும் சிறியவரை , பாவப்பட்டவரில் மிகவும் மோசமானவரை , எப்படி நாம் நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டான ஒரு உவமையை சொல்கிறது. யேசு (மத்தேயு 25)ல் சொல்வதை போல மிகவும் வறியவர்கள், சிறியவர்கள் விண்ணரசிற்குடையவர்கள். கிறிஸ்துவின் இரக்கத்தை இன்று பெறும் பெண், வாழ்வதற்கே தகுதியற்றவள் என்று அந்த சமூகம் அவள் மேல் குற்றம் சுமத்தியது. மேலும் அவள் பெண்ணானதால், ஆண்களைவிட, மிகவும் கீழாக அவள் மதிக்கப்பட்டாள். மேலும் அவள் பாவம் செய்ததால், அவள் தண்டனைக்கு உரியவள். அந்த கூட்டத்தினர் அவளை குறை சொல்லியும், அவள் ஒருவளே தனியாக நின்றாள். மற்றவர்களை விட அவள் எவ்வளவு சிறியவராய் இருந்திருப்பாள் என்று நினைக்கிறீர்கள்?

நீங்கள் எப்பொழுது மிகவும் தனியாகவும், எந்த ஒரு மதிப்புமின்றி இருந்தீர்கள்? உங்களை குற்றம் சாட்டும் கூட்டத்தின் முன் கூட நின்றிருக்கலாம். மாறாக, நீங்கள் யாரையாவது உதாசீனப்படுத்தினீர்களா? ஆம், நாம் யார் மேலும் கல்லெறியமுடியாது.

இந்த திருச்சபையில்,பலர் நிராகரிக்கப்பட்டும், மறக்கப்பட்டும் இருக்கின்றனர். நமக்கு அது மாதிரி சிலரை தெரிந்த்திருக்கலாம். நாம் நமது பங்கிலோ அல்லது மறைமாவட்டத்தில் உள்ள இறைசேவை நிலையத்திலோ அல்லது, நமது சொந்த வாழ்விலோ, இது மாதிரி நிராகரிக்கப்பட்டவர்களை, நாம் கண்டு கொண்டு, அவர்களுக்கு நாம் நேரத்தை ஒதுக்கி, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நிச்சயம் மிகவும் சந்தோசமாக இருக்கும். அவர்கள் அனைவரும் இன்னும் முக்கியமற்றவர்களாக இருக்க முயல்வார்கள், அதன் மூலம் உங்கள் நேரத்தையும், உங்கள் நேரத்தையும், அதிக வளங்களையும், நமது விருப்பங்க்களையும் இழக்க வேண்டியிருக்கும்.

நோயுற்றவர்களும், வலியும் வேதனையிலும் இருப்பவர்களை எப்படி கையாள்வது என நமக்கு தெரியாது, அதனால், வேறு பக்கம் பார்த்து கொண்டு திரும்பி விடுகிறோம். திருமண முறிவு ஆனவர்கள் எப்போதுமே, மற்றவர்களின் பழிசொல்லுக்கு ஆளாகிறோம் என்று நினைக்கிறார்கள், மேலும் பலர் திவ்ய நற்கருணை கூட பெறுவதில்லை, ஏனெனில் அவர்களுக்கு சிலர், திருச்சபையின் வழிமுறைகளை, தவறாக சொல்லி விடுகிறார்கள். மேலும் யாரும் அவர்களை, மீண்டும் மாற்ற முனைவதில்லை. அடுத்ததாக, சிறுவர்களுக்கு எதிராக எந்த துன்புறுத்தலும் இருக்க கூடாது என்று திருச்சபை முயற்சி செய்கிறது, ஆனால், பெரியவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை, யாரும் பேசவோ, அல்லது அதற்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் செய்வது இல்லை.


ஏனெனில் நாம் அதை "மிகவும் குறைவான துன்புறுத்தல்" என்று நிராகரித்து விடுகிறோம். கிறிஸ்தவ நிறுவனங்களை விட, மற்ற சமூக நிறுவனங்கள் "மிக சிறியவர்களுக்கு" அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முனைகிறது. இது மாதிரியான மிகவும் சிறியவர்களை விட சிறியவர்களாக இருக்கிறவர்களை கண்டு கொண்டு, அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த தவக்காலத்தில் முனைவது, ஒரு நல்ல தவக்கால பயிற்சியாகும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, March 12, 2010

14 மார்ச் 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

14 மார்ச் 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
Jos 5:9a, 10-12
Ps 34:2-7
2 Cor 5:17-21
Luke 15:1-3, 11-32



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 15

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '



(thanks to www.arulvakku.com)


கடவுளின் நிபந்தனையற்ற மன்னிப்பையும், அளவற்ற அன்பையும் ஏற்றுகொள்வதற்கு நாம் தகுதியானவர்களா? ஒவ்வொரு திருப்பலியிலும், நாம், "ஆண்டவரே, நாம் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லும், நான் குனமடைவேன்." என்று வேண்டுகிறோம். இன்றைய நற்செய்தியில், யேசு நாம் எல்லாம் தகுதி உடையவர்கள் என்று சொல்கிறார். நாம் என்ன செய்தோமோ அதனால் நாம் தகுதிஉடையவர்கள் இல்லை, யேசு நமக்கு என்ன செய்தாரோ அதனால் நாம் தகுதி உடையவர்கள் ஆகிறோம். யேசு நமக்கு செய்தது: சிலுவையைல் மரித்து, நம் பாவங்களை அவர் தோற்கடித்து அதன் மூலம், நித்திய வாழ்வில் நாமும் யேசுவோடு உயிர்த்தெழுந்து , கடவுளோடு இனைவோம்.


இன்றைய உவமையில், அந்த இளைய மகன் வீட்டிற்கு திரும்பி வந்ததாலேயோ அல்லது, அவனின் பாவங்களை நினைத்து மனம்வருந்தி மீண்டும் வந்ததாலேயோ, அவரின் தந்தையின் அன்பை பெற்று கொள்ள தகுதியானவனாக ஆகவில்லை. அவனின் தந்தையின் அன்பினால் தான், அவன் தகுதி உடையவன் ஆனான். அந்த தந்தை மகனின் மேல் அன்பு கொன்டார். தன் மகன் தொலை தூரத்தில் இருக்கும்போதே அன்பு கொன்டிருந்தார். இன்னும் பாவ வாழ்க்கையில் அழிந்து கொன்டிருந்தான் என்று அறிந்தும் அந்த தந்தை அவன் மேல் அன்பு கொன்டிருந்தார்.

அந்த மகன் தந்தைக்கு எதிராக திரும்பினாலும், தந்தை நிபந்தனையற்ற அன்பை தன் மகன் மேல் வைத்திருந்தார், அந்த அன்பை தனது அன்பளிப்பாக தன் மகனுக்கு அளவற்ற அன்பை கொடுத்தார். மகனோ தனது தந்தைக்கு கொடுத்த அன்பளிப்பு என்னவென்றால், தந்தையின் அன்பை , திறந்த மனதோடு ஏற்று கொள்ள தயாராக வந்தது தான்.

ஒவ்வொரு திருப்பலிக்கும், ஊதாரித்தனமான மகனை போலத்தான், நாம் போகிறோம். வாரம் முழுவதும், நல்ல கிறிஸ்தவனாக இருந்தாலும், ஏதாவது ஒரு வழியில், நாம் கடவுளின் நிபந்தனையற்ற அன்பிற்கும், விசுவாசமுள்ள அன்பிற்கும் எதிராக இருந்திருப்போம். அதனால் தான், திருப்ப்லியின் ஆரம்பத்தில், நாம் பாவிகள் என்று ஏற்றுகொள்கிறோம். இந்த பாவ மன்னிப்பை ஏற்று கொள்வதில் நாம் மிகவும் முக்கியமான நிகழ்வாக எடுத்து கொள்ள வேன்டும்.


அடுத்ததாக, கடவுளோடு அறுபட்ட நம் உறவை குணப்படுத்தும் வார்த்தையை கேட்கிறோம். அடுத்ததாக நாம் ப்ரசங்கம் கேட்கிறோம், அது நல்ல முறையில் முறையாக தயாரிக்கப்பட்டு, நற்செய்தியின் கருத்துகளை முறையாக கூறப்படவேண்டும். மேலும், யேசு பரிசுத்த ஆவியின் மூலமாக நம்மிடம் பேசுகிறார். உங்கள் இதயதை கேளுங்கள்.யேசு வார்த்தை மறு உருவானவர் , நீங்கள் "வார்த்தை கூறினால், நாங்கள் குணமடைவோம்" என்ற வேன்டுதலுக்கு, யேசு ஏற்கனவே பதில் தர ஆரம்பித்து விட்டார்.


கானிக்கை நிகழ்வில், நாம் நம்மையே கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம். அவரிடம் நாம் சரண்டையும் தருணமாகும். " நான் உங்கள் மகனாக / மகளாக இருப்பதார்கு தகுதியற்றவன், உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்" அவரிடம் சரணடைகிறோம். கடவூளுடைய விருப்பம் என்னவென்றால், நாம் முழு அன்போடும், அதிகம் கொடுத்தும், மற்றவர்களிடமிருந்து நாம் பெற்றுகொள்ளும் உறவோடு, இறைவனின் குடும்பத்தோடு இனைய வேண்டும். என்று கடவுள் ஆசைபடுகிறார். அதனால், நமக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அன்பளிப்பான திவ்ய நற்கருணையை நாம் பெற்று , அதன் மூலம் கடவுளின் முழு குடும்பத்தோடும் நாம் ஒன்றினைவோம்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, March 5, 2010

மார்ச் 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 7, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 13

1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். '



(thanks to www.arulvakku.com)

மிகவும் கொடூரமான, தவறான முறையைல் எல்லோரையும் பாதிக்கும் செயல்கள் செய்பவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்து அவர்கள் மிகவும் கஷ்டப்படும்பொழுது, நாம் அனைவரும் சந்தோசப்படுவோம், ஏனெனில், அவர்களுக்கு சரியான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என நாம் நினைக்கிறோம்.

இதை தான் யேசு இன்றைய நற்செய்தியில் செய்தியாக நமக்கு கொடுக்கிறார். நம்மை விட மற்றவர்கள் பெரிய பாவிகள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். அவர்கள் நம்மை விட தீயவர்களாக இருந்தாலும், நாம் அவர்கள் பெரும்பாவிகள் என்று சொல்ல கூடாது.

ஒவ்வொரு மனிதனும், கடவுளின் உருவத்தை போல படைக்கப்பட்டுள்ளான், தீயவர்களும் அப்படியே படைக்கப்பட்டுள்ளனர். கடவுளுக்கு எதிரான உருவத்தை யாரும் காட்டினாலும், அவர்களையும் யேசு அன்பு செய்தார், அவர்களுக்காகவும் அவர் மரித்தார்.எந்த மனிதரும் தீய மனிதர் கிடையாது, அவர்கள் உடைந்த மனிதர்கள். அவர்கள் அனைவரும் பேயின் தூன்டுதலால், தவறான வழியில் செல்பவர்கள். நமக்காகவே உடைந்த யேசுபிரானின் பாவமற்ற மனம், இந்த பாவ வழியில் செல்பவர்களை புனிதமாக்கும், என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அந்த தியவர்கள் இன்னும் அந்த பாவத்திலேயே இருக்கிறார்களே என்று யேசுவோடு நாமும் சேர்ந்து கவலைபடவேன்டும்.


ஒரு மனிதனின் ஆன்மா அழிவு பாதையில் செல்வதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். யேசு நமக்காக சிலுவையில் செய்ததை நாம் அலட்சியம் செய்கிறோம். நாம் நம் ஆன்மாவையே புன்படுத்திகொள்கிறோம்.

உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், அத்தி மரத்தை போன்றவர்கள் ஆவர். உங்களால் அவர்களை கேட்க வைக்க முடியும் என்றால், நீங்கள் அவர்களுக்கு உரம் போட வேன்டும் என்று யேசு கூறுகிறார். உங்கள் நடவடிக்கைகள் மூலமும், உங்கள் வார்த்தைகள் மூலமும், அவர்களுக்கு நீங்கள் உரமாக இருக்க வேன்டும் என்று யேசு விரும்புகிறர். சரியான திசையில் அவர்களை செலுத்த நீங்கள் பனிவுடனும், கனிவுடனும் அறிவுறுத்த வேண்டும் என யேசு ஆசைபடுகிறார்.


யேசு கனிகொடாத மரத்தை அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மால் செய்ய முடிந்த்தெல்லாம் செய்தும், தியவர்கள் மனதிரும்பவில்லை என்றால், அந்த தோட்டத்திற்கு நம்மால் முடிந்த உதவி என்னவென்றால், அந்த மரத்தை வெட்டிவிடுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களை விட்டு விலகி விடுவது அல்லது, சரியான் அதிகார்த்தில் இருக்கும் நபரிடம், இந்த ப்ரச்னைகளை கையான்டு, அவர்களின் தீமைகளுக்கு சரியான தன்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேன்டும். இதனையும் மிகவும் கனிவுடனும், பொருமையுடனும் செய்ய வேன்டும். உரம் கொடுத்தும் , நல்ல பழங்களை தரவில்லையென்றால், அந்த மரம் கீழே விழுந்து, மக்கி மற்ற புதிய மரங்களுக்கு உரமாக இருக்கும்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica