Friday, June 22, 2018

ஜூன் 24 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை


ஜூன் 24 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை

புனித திருமுழக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

Isaiah 49:1-6
Ps 139:1b-3, 13-15
Acts 13:22-26
Luke 1:57-66, 80
 லூக்கா நற்செய்தி
  
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ``வேண்டாம்அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார்.
அவர்கள் அவரிடம், ``உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, ``குழந்தைக்கு என்ன பெயரிடலாம்உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ``இக்குழந்தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.
அப்பொழுதே அவரது வாய் திறந்ததுநா கட்டவிழ்ந்ததுஅவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.
கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ``இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.


(thanks to www.arulvakku.com)
நீங்கள் திருமுழுக்கு யோவான் போல இருகிறீர்களா?
இன்றைய ஞாயிறு நாம் திருமுழுக்கு யோவானின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நீங்களும் யோவானும் எந்த விசயத்தில் ஒன்றாக இருக்கிறீர்கள் ?
கடவுள் யோவானுக்கு தேவ அழைப்பை விடுத்து , அவரது பெயரை , அவர் கருவில் இருக்கும் போதே கொடுத்து ஆசிர்வதித்தார். கடவுள் அதே செயலை நமக்கும் செய்துள்ளார். உங்கள் கருவிலிருந்தே , மனித உருவம் எடுக்கும் முன்பே, மூச்சு விடும் ஆற்றல் பெரும் முன்பே, மூளை வளரும் முன்பே, உங்களுக்கு கடவுள் பெயரை வைத்து, உங்களை மிக சிறந்த குழந்தையாக உருவாக்குகிறார்.
கடவுள் யோவானுக்கு கூரிய கத்தியை அன்பளிப்பாக கொடுத்தார் (உண்மையை பேசுதல்) , இந்த உண்மை தான், பல பொய்களையும், சாத்தானையும் கிழித்து வெளியே வந்தது. இதே கொடையை உங்களுக்கும் உங்கள் ஞானஸ்நானம் மூலம் கடவுள் பரிசுத்த ஆவியின் துணை கொண்டு கொடுத்துள்ளார்.
கடவுள் யோவானை தனது கரங்களால் அணைத்து கொண்டார். யோவானை காத்து வந்தார். உங்கள் வாழ்வு எதுவாக இருந்தாலும், கடவுளை விட்டு நீங்கள் தூராம் சென்றாலும், அவரது கரங்களில் உங்களை காத்து வருகிறார்.
நீங்கள் கடவுளுக்காக பல இறைபணி செய்தும், அதனால் பயன் ஏதும் இல்லை என நீங்கள் நினைத்து கவலை பட வேண்டியதில்லை. ஆனால் கடவுள் யோவானுக்கு கொடுத்த பரிசை போல உங்களுக்கும் இறுதியில் கடவுள் பல வெகுமதிகளை கொடுப்பார்.
நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள் என்று நினைத்து வெதும்பினாலும், குள்ளமாக இருந்தாலும், மிக அதிக உயரமாக இருந்தாலும், அல்லது பிறப்பிலேயே குறையிலே இருந்தாலும், கடவுளை பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் மிக சிறந்தவராகவே காநிகிறார். அவர் தான் உங்களை படைத்தவர். வியத்தகு முறையில் நீங்கள் படைக்கபட்டீர்கள் என்று இன்றைய பதிலுரை பாடல் சொல்கிறது. கரு உருவானதில் இருந்தே , உங்கள் வாழ்வு  மிகவும் முக்கியமானது ஆக கடவுளுக்கு உண்டு.
யோவானுக்கு இருந்தது போல, கடவுள் உங்கள் ஆற்றலாக இருக்கிறார். சக்தியாக இருக்கிறார். யோவான் மிகவும் சுலபமாக செய்ததை போல , உங்களாலும் செய்ய முடியும். கடவுள் உங்களுக்கு தேவையான அணைத்து ஆற்றலையும், கொடைகளையும், திறமைகளும் , அனுபவம், மற்றும் பயிற்சியை கொடுத்துள்ளார். கடவுளின் ஒளி உங்கள் மூலம் பரவட்டும் என ஆசைபடுகிறார். அவரின் மீட்பு உங்கள் மூலம் மற்றவர்கள் பெறவேண்டும், அதற்காக நீங்கள் இறைபணி செய்ய வேண்டும்.
"ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார்." என்று இன்றைய நற்செய்தி கூருகிறது.  உங்கள் கடின காலத்தில் நீங்கள் அனுபவித்து உள்ளீர்கள், உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றும் , உங்களுக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை , திறமையை கொடுக்கும். மேலும் அதனை மெருகேற்ற, கடவுள் உங்களை இறையரசை பரப்பும் மனிதராக அனுப்புகிறார்.
© 2018 by Terry A. Modica