Saturday, August 29, 2015

ஆகஸ்டு 30 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஆகஸ்டு 30 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஆண்டின் 22ம் ஞாயிறு
Deuteronomy 4:1-2, 6-8
Ps 15:2-5
James 1:17-18, 21b-22, 27
Mark 7:1-8, 14-15, 21-23


மாற்கு நற்செய்தி
ஒரு நாள் பரிசேயரும் வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான,அதாவது,கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.
பரிசேயரும்,ஏன் யூதர் அனைவருமே,தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள்,பரணிகள்,செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ``உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?''என்று கேட்டனர்.
அதற்கு அவர், ``வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்;இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்'என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்''என்று அவர்களிடம் கூறினார்.
இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து,அவர்களை நோக்கி, ``நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.
ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை ,கொலை விபசாரம் ,பேராசை ,தீச்செயல் ,வஞ்சகம் ,காமவெறி,பொறாமை,பழிப்புரை,செருக்கு,மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்து கின்றன'' என்றார்.




இன்றைய நற்செய்தியில் , இயேசு, பரிசேயர்களை வெறும் உதட்டளவில் கடவுளை புகழ்கின்றனர் , ஆனால் அவர்கள் இருதயமோ கடவுளை விட்டு விலகி நிற்கிறார்கள் என்று கூறி பரிசேயர்களை கண்டிக்கிறார். அவர்கள் இயேசுவும் , அவரது சீடர்களும், ஏதாவது ஒரு செயலில்,யூதர்களின் சட்டத்தை மதிக்காமல் இருக்கிறார்களா ? என்று அவர்கள் மேல் குறைகளை பார்த்தார்கள். அவ்வாறு செய்வதில் எந்த வித அன்பும் இல்லை.


மனிதர்களை விட , சட்ட திட்டங்கள் தான் முக்கியம் என்று அவர்கள் இருந்தனர். “எனக்கு உன்னை விட அதிகம் தெரியும், நான் உன்னை விட பெரியவன், ஏனெனில், நான் எல்லா சட்ட திட்டங்களை ஒழுங்காக கடைபிடிக்கிறேன் " என்று பரிசேயர்கள் தான் தான் சரி என்ற நினைப்பில் இருந்தவர்கள்.

சட்ட வரைமுறைகளுக்காக நாம் கீழ்படிந்து நடப்பது, ஒரு பாசாங்கான விசயம். சட்ட திட்டங்களை வைத்து கொண்டு, அதனை நாம் தான் சரியாக செய்கிறோம் என்று சொல்லி கொண்டு மற்றவர்களை விட நாம் தான் பெரியவன் என்ற நினைப்புடன் இருந்தனர். இன்றைய கால கட்டத்தில், நாம் திருப்பலியை ரோமன் கத்தோலிக்க திருசட்ட்டத்தின் படி சரி வர கடை பிடிக்க வில்லை என்று நாம் பாவ சங்கிர்த்தனம் செய்யும் பொழுது, அதனை ஏற்று கொண்டு, செயல்படுபவர் ஆனால் , யார் பாவி இங்கே ?

இப்படி நடக்கிற பொழுது, “உபயோகம் இல்லாமல் என்னை வணங்குகின்றனர்" என்று இயேசு சொல்கிறார். திருப்பலியின் முக்கிய நோக்கம் அங்கே இல்லாமல் போய் விடுகிறது.
பல சட்ட திட்டங்கள் நம்மிடையே உள்ளன. சில கால கட்டத்திற்கு தகுந்தாற்போல சில சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, ஆனால், கடவுளின் முக்கிய கட்டளைகள் , நல்லொழுக்க கட்டளைகள் மிகவும் முக்கியமானது அது எதுவும் மாற போவதில்லை . எல்லா சட்ட திட்டங்களும், நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்ல உதவுபவை


யாரும் சட்டத்திற்கு கீழ் படியவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும், கண்டிப்பாக இதனை செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் பரிசுத்த வாழ்வின் வளர்ச்சியை இந்த பாவங்கள் தடுக்கும். அவர்கள் ஏன் அவ்வாறு கட்டளைகளுக்கு கிழ்படியவில்லை என்று காரணத்தை கண்டு பிடித்து அதன் வேர்களை ஆராய்ந்து தெரிந்து , அதனை களைய நாம் அன்புடன் முற்பட்டால் , நாம் உண்மையாகவே அவர்களை பரிசுத்த வாழ்விற்கு அழைத்து செல்ல முடியும்.

இவ்வாறு செய்தால், "இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள் " என்று இரண்டாம் வாசகத்தில் கூர்பட்டுள்ளது போல நாம் நடந்து கொள்ள முடியும். ஜேம்ஸ் சொல்வது போல உண்மையான மதம், மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளும். அனால் இன்றைய நர்செய்தியிலோ , பரிசேயர்கள், சீடர்களின் பசியை பார்க்க வில்லை .


© 2015 by Terry A. Modica

Saturday, August 22, 2015

ஆகஸ்டு 23 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு 23 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு

Joshua 24:1-2a, 15-18b
Ps 34:2-3, 16-21 (with 9a)
Ephesians 5:21-32
John 6:60-69

யோவான் நற்செய்தி

60அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, ' இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ' என்று பேசிக் கொண்டனர்.61இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம்,' நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?62அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.64அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை 'என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.65மேலும் அவர்,' இதன் காரணமாகத்தான் ″ என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது ″ என்று உங்களுக்குக் கூறினேன் 'என்றார்.
பேதுருவின் அறிக்கை
66அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.67இயேசு பன்னிரு சீடரிடம்,' நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? 'என்று கேட்டார்.68சீமோன் பேதுரு மறுமொழியாக, ' ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.69நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் ' என்றார்

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் , இயேசுவின் உண்மையான இறைபணியை பலர் கேட்டும், அவரை பார்த்தும் இருப்பவர்கள் , இயேசுவை ஏற்று கொள்ளாததை நாம் பார்க்கிறோம். எப்படி அவர்கள் இயேசுவின் செய்தியை சரியாக எடுத்து கொள்ள வில்லை ?”நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. “ என்று அவர் கூறியதை , வெறும் வார்த்தைகளாக அவர்களுக்கு தெரிந்து இருந்தது, ஆனால், அதன் உள் அர்த்தம் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அவரது வாழ்வையே நமக்காக கொடுத்தார் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். அதன் மூலம் அவர் நமக்கு , குணமான நல்ல வாழ்க்கையையும், சந்தோசமான வாழ்வும், வெற்றியின் வாழ்வும், நித்திய வாழ்வும் அவர்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டனர்.


அவர்கள் இயேசுவை தேய்விகமாக பார்க்கவில்லை , அவரை மனிதனாக பார்த்தார்கள். மெசியாவாக பார்கவில்லை, உடல் நோய்கள் குணமாக்கும் தெய்வமாக அவரை பார்க்கவில்லை, ஆன்மாவை காப்பாற்றுபவர் என்றும் பார்க்கவில்லை, ரோமானியர்கள் இடமிருந்து தங்களை காப்பாற்றுபவராக பார்த்தார்கள்.

அதனால், அவரின் உடலையும், இரத்தத்தையும் உணவாக உட்கொள்ளுதல் (போன வாரம் நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல ) , அவர்களின் மனதில் ஒரு குறிப்பாக கூட உணரவில்லை. அவர் வார்த்தைகளில் உள்ள ஆவியும் வாழ்வும் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வில்லை. இயேசு அவர்களுக்கு ஒரு வினோதமான ஆளாக தெரிந்தது போல இருக்கிறது.


உண்மயான சீடர்கள் அவாரோடு எப்பொழுது இணைந்து இருந்து இன்னும் அவரிடம் கற்று கொள்ள ஆசைப்பட்டவர்கள் , அவர் என்ன சொன்னார் என்பதை , அறிந்து கொள்ள வில்லை, ஆனால், பரிசுத்த ஆவியானவர் அவரின் வார்த்தைகளில் இருந்ததை அறிந்து கொண்டனர்.

இயேசு உங்களிடம் வேறொரு மனிதர் மூலம் வந்துள்ளார், ஆனால், நீங்கள் அவரை அறிந்து கொள்ளாமல் எத்தனை முறை இருந்துள்ளீர்கள் ? ஏனெனில், உங்களிடம் வந்தவரை நீங்கள் மனிதராக மட்டுமே பார்த்திர்கள் . கிறிஸ்து அல்லாத அந்த மனிதரின் பழக்க வழக்கங்களை மட்டுமே நீங்கள் பார்க்கிறிர்கள் ?

ஒவ்வொருவரும் கடவுளை போல படைக்க பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வாழ்வு கொடுக்க வில்லை என்றால், அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்ட்டிருக்க மாட்டார்கள் . மற்ற மதத்தை சார்ந்தவர்களும் , இயேசு அவர்களிடம் இருக்கிறார். வெற்றியான வாழ்வு வாழ, நாம் இயேசுவை இன்னும் ஆழ்ந்து அறிந்து கொள்ள ஒவ்வொருவரிடமும் மறைந்து இருக்கும் இயேசுவை பார்க்க வேண்டும்.

திருப்பலியில் இயேசு திவ்ய நற்கருணையில் இருப்பதை உங்களால் அறிந்து கொள்ள ஏதாவது கஷ்டமாக இருக்கிறதா ? இயேசு மற்றவர்கள் மூலம் உங்களிடம் வருவதை ஒவ்வொரு முறையும் பயிற்சி கொள்ளுங்கள். அப்போது , திவ்ய நற்கருணையை நீங்கள் புதிய வழியில் பார்ப்பிர்கள் .


© 2015 by Terry A. Modica

Friday, August 14, 2015

ஆகஸ்டு 16 2015 ஞாயிறு திருப்பலி மறையுரை


ஆகஸ்டு 16 2015 ஞாயிறு திருப்பலி மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு
Proverbs 9:1-6
Ps 34:2-7
Ephesians5:15-20
John 6:51-58

யோவான் நற்செய்தி


அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?''என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்,நானும் அவர்களோடு இணைந் திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே;இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''



இன்றைய நற்செய்தியில், இயேசு " வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" எந்த மாதிரியான வாழ்வை இயேசு குறிப்பிடுகிறார்? அவர் குறிப்பிடும் வாழ்விற்கும், நீங்கள் பிறந்த வாழ்விற்கும் வித்தியாசம் என்ன ?

இயேசு அவரது உடலையும் இரத்தத்தையும் ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்கு தருகிறார். அதன் முலம் நாம் அவரை முழு மனிதனாகவும், தெய்வமாகவும் எடுத்து கொள்ள முடியும். கிறிஸ்து அவரின் முழு அன்பையும் நாம் பெற்று அதன் முலம் நாம் வளர வேண்டும் என ஆசைபடுகிறார். நாம் சொதனைகளை எதிர் கொள்ளும் பொழுது , அவரிடமிருந்து ஆற்றல் பெற்று கொண்டு, அதனை எதிர் கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறார். நமது காயங்கள் அவர் உணவின் முலம் ஆரவேண்டும் எனவும், அவரின் முழு வாழ்வும் நாம் இங்கேயே பெற வேண்டும் எனவும் அவர் ஆசைபடுகிறார் , மோட்சத்தில் அல்ல , இந்த உலகிலே நாம் அவரை முழுமையாக பெற வேண்டும் என ஆசைபடுகிறார்.
இயேசுவை நாம் உட்கொண்டு அவரை போல மாறவேண்டும். உண்மையாகவே திவ்ய நற்கருணை யும் திராட்சை இரசமும், இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் தான் நாம் நம்பினால், அவர் தான் மீட்பர் என்றும் நம்பினால், திருப்பலியில் அவரை பெற்று கொண்டு வெளியில் வரும் பொழுது நாம் ஏன் மாறாமல் இருக்கிறோம் ?

திருப்பலியின் தொடக்கத்தில், முழு மனதோடு பாவ மன்னிப்பு நிகழ்வில் பங்கு கொண்டு, நற்செய்தி வாசகங்களில் முழுமையாக கேட்டு குருவானவரோடு இணைந்து எல்லா ஜெபங்களும் சொல்லி, இறைவனிடம் வேண்டி, கடவுளின் சக்தி மேல் முழுமையான நம்பிக்கை கொண்டு , நாம் "நாம் உன்னை பெற தகுதியில் லாதவன் ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும் " என்று சொல்லி, திவ்ய நற்கருணையை நாம் பெரும்பொழுது , அவரோடு நாமும் இணைந்து ஒன்றா கிறோம்.


இப்போது , நாமும் இயேசுவின் உடலாக இரத்தமாக , இந்த உலகில் இருக்கிறோம். மற்றவர்கள் கிறிஸ்துவை நம் முலமாக பெறுகிறார்கள் . இதையே மாற்றாக சொல்வதானால், மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் பிரசன்னத்தை நம் முலம் பெற்று கொள்ள ஒரு வாய்ப்பை நாம் வழங்குகிறோம்.

நாம் அன்பை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது அவர்கள் கடவுளின் அன்பை பெறுகிறார்கள். அதே அன்பை அவர்கள் திருப்பி கொடுக்க வில்லை என்றால், நாம் அதிகமாக கொடுக்கிறோம், குறைவாக பெற்று கொள்கிறோம் . அதே போல நமது நேரத்தையும் , திறமைகளையும், இறையரசிற்காக நாம் எந்த ஒரு வெகுமதியும் பெறாமல் செலவிடும் பொழுது , நாம் திவ்ய நர்கருனையாக மாறி விடுகிறோம். நாம் இயேசுவோடு ஒரே உடலும் இரத்தமாக மாறி விடுகிறோம்
இயேசுவிடமிருந்து நாம் பெற்று கொண்டால் ஒழிய, நம்மிடமிருந்து வெளியேறினாலும், நம்மிடம் எதுவும் அழியாது. அதனால் தான் ஒவ்வொரு திருப்பலியும், அதில் வழங்கப்படும் திவ்ய நற்கருணை யும் நம்மை வாழ வைக்கிறது. வளர்க்கிறது. இது தான் நம் வாழ்வின் ஊற்று கண்ணாகவும் , அடித்தளமாகவும் இருப்பது.

© 2015 by Terry A. Modica

Friday, August 7, 2015

ஆகஸ்டு 9 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை



ஆகஸ்டு 9 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு


1 Kings 19:4-8
Ps 34:2-9
Ephesians 4:30--5:2
John 6:41-51


யோவான் நற்செய்தி
அக்காலத்தில் ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே'' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.
``இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, `நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படிச் சொல்லலாம்?'' என்று பேசிக் கொண்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ``உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். `கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.''



"என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே" என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
ஏன் திவ்ய நற்கருணை யை வாழ்வு தரும் உணவு என்று கூறுகிறார் ? இது எப்படி நமக்கு வாழ்வை கொடுக்கும். ?
அவரே பதிலும் கூறுகிறார் "இந்த உணவை உண்பவர் என்றுமே வாழ்வார், எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.'' இதனயே மாற்றாக சொல்வதானால், இயேசு அவரையே நமக்காக கொடுத்தார் – சிலுவையில். நமது பாவங்கள் நம்மை மரணத்தின் பாதைக்கு அழைத்து சென்றனர் . ஆனால், பாவமில்லாத இயேசு , தெய்விக இயேசு நமக்காக நம் மரணத்தை அவர் ஏற்று கொண்டு, மரணத்தை தழுவி உயிர்த்தெழுந்தார். அதன் மூலம் நாம் நித்திய வாழ்வு பெறுகிறோம்.


மீண்டும் உயிர்த்தெழுந்த அவரது உடல் மரணத்தை வெற்றி கொண்டது. அவரது உடல், சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்ந்த்தெழுன்தது , நமது வாழ்விற்கு உணவாக வருகிறது . இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம் . ஒரு சிலர் , திருப்பலியில் பலி பிடத்தில் , நாம் அவரது மரணத்தை மிண்டும் செய்து பார்க்கிறோம் என்று நினைக்கின்றனர். அது தவறு. நம் நம்மையே , அவரது வாழ்வோடு இணைக்கிறோம்.

ஒவ்வொரு கத்தோலிக்க திருப்பலியிலும், , நமது மிட்பரின் உடலும் இரத்தத்தையும் நமக்கு வழங்கி , அவரோடு இணைவது நடக்கிறது. அதன் முலம் நமக்கு வாழ்வின் உணவு கிடைக்கிறது. . போப் ஜான் பால் " திருப்பலியில் நடைபெறும் திவ்ய நற்கருணை விருந்து , கிறிஸ்துவ வாழ்விற்கு ஊற்றாக உள்ளது " என கூறுகிறார்


திவ்ய நற்கருணை நமக்கு கிறிஸ்துவின் கடைசி இரா உணவிலிருந்து வருகிறது அப்போஸ்தலர்களின் தலைமுறை தலைமுறையாக வருகிறது . தற்போது குருவின் முலம் நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொருவரும் திருப்பலியில் கலந்து கொள்ளும்பொழுது இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை அறிந்து , நாம் திருப்பலியை கொண்டாடுதல் வேண்டும். நாம் பாவிகளாக இருந்தாலும், அதனை போக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும், அதே நேரத்தில் நாம் தொடர்ந்து திருப்பலியில் இயேசுவோடு நாம் இணைதல் வேண்டும்.

கிறிஸ்து, உண்மையாக வே முழுமையாக அப்ப்போச்தலர்களோடு இருந்தது போல இங்கும் இருக்கிறார். “இது என் உடல் என் இரத்தம் " இதற்கு மரியாதையும் , ஆராதனையும் கொடுப்பவர்கள் , மீட்பர் அங்கே இருப்பதை நம்புகின்றனர் , மேலும் நித்திய வாழ்வை கொண்டாடு பவர்கள்.

NOTE: Let me walk you through Pope John Paul II's wonderful encyclical Ecclesia de Eucharistia ("The Church of the Eucharist"). Take my easy online course at http://catholicdr.com/e-Classroom/Eucharistia

© 2015 by Terry A. Modica