Friday, April 18, 2008

ஏப்ரல் 20 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஏப்ரல் 20 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஈஸ்டர் 5வது ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 14

1 மீண்டும் இயேசு, ' நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். 2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ' உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ' என்று சொல்லியிருப்பேனா? 3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ' என்றார். 5 தோமா அவரிடம், ' ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? ' என்றார். 6 இயேசு அவரிடம், ' வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7 ' நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள் ' என்றார். 8 அப்போது பிலிப்பு, அவரிடம், ' ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் ' என்றார். 9 இயேசு அவரிடம் கூறியது: ' பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. 11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். 12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

(thanks to www.arulvakku.com)
"நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்" என்று இன்றைய நற்செய்தி முடிகிறது. யேசு எந்த அர்த்தத்தில் இதனை சொல்கிறார். நாம் எப்படி யேசுவைவிட, அவர் செய்ததைவிட அதிசயங்களையும், தெய்வீக காரியங்களையும் செய்ய முடியும். இதற்கான பதில் இந்த நற்செய்தியின் அதிகாரத்தில் முழுதுமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. யேசு கடவுளோடு உள்ள நெரூங்கிய உறவையும், அவரோடு சேர்ந்து செய்யும் செயல்களையும் கூறுகிறார். யேசு எல்லா செயல்களையும், கடவுளோடு சேர்ந்து செய்கிறார். யேசு மனிதனாகவும் தெய்வமாகவும் இருந்தார். இந்த வசனங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

"நான செய்யும் செயல்கள்" என்று கூறுவது, அவர் மனிதனாக இருந்து கடவுளுக்காக செய்த செயல்களை குறிக்கிறது. அதே செயல்களை, கடவுள் நம் மேல் வைத்த அன்பின் பொருட்டு, நாமும் கடவுளுக்காக செய்யலாம்.

கடவுளின் அன்பினை பெற்ற, அவரின் குழந்தகளாகிய நாம், கடவுள் மற்றவர்களை அன்பு செய்வது போல, நாமும் அன்பு செய்கிறோம். நாம் என்ன கற்றுகொண்டோமோ, அதனை மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்கிறோம். நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்கள் நம்முடன் அவர்களின் கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போதே, நாம் அவர்களுக்கு காது கொடுத்து, கேட்டு, அவர்களின் உணர்வுகளை , கவலைகள புரிந்து கொள்கிறோம். மேலும், நமது தின வேலையை முழுதுமாக செய்து, மற்றும், அருகில் இருப்பவர்களுக்கு அவர்களின் தேவையை உணர்ந்து, அவர்களுக்கு உதவி செய்வது. இன்னும் பல. இந்த செயலகள் எல்லாம் தெய்வீக செயல்கள் அல்ல. இவையெல்லாம், அன்பு தந்தையின், மனித குழந்தைகளாக நாம் செய்வது.


மிக பெரிய, அதிசய செயல்கள் எல்லாம், யேசு தெய்வீக நிலையில், கடவுளோடு சேர்ந்து செய்தவை. அவையெல்லாம் கடவுள் யேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள். ஏனெனில், கடவுளின் அன்பும், யேசுவின் அன்பும், ஒரே அன்பு ஆகும்.

யேசு, அவரையே, நம் பாவங்களுக்காக, சிலுவை தன்டனையில் அர்ப்பனித்து, கடவுள் அந்த மரணத்திலிருந்து யேசு எழுந்தருள செய்த பின், யேசு அவருடைய தெய்வீகத்தை , நமக்கு கொடுத்தார். அதனை கொண்டு நாம் யேசுவின் பணியை தொடர வேண்டும் என்று நமக்கு அருளினார். கடவுளின் தெய்வீகத்தை நாம் ஞானஸ்நானத்தின் போது பெற்றோம். கடவுள் நம் மூலமாக, அவரை இந்த உலகுக்கு எடுத்து செல்கிறார்.கடவுளோடு, நாம் அன்பிற்கு ஏங்குபவர்களுக்கு அன்பு செலுத்தலாம். புனித அதசயங்கள் நிகழ நாம் கருவிகளாக இருக்கலாம். கடவுள் என்ன பேசுகிறார் என்று நாம் கேட்டு, அவரின் ஞானத்தையும், அனுசரனையையும், நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நமக்கு என்ன குறைகள் இருந்தாலும், கடவுள் எதனை செய்ய சொன்னாலும், நாம் செய்யலாம்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, April 12, 2008

ஏப்ரல் 13, ஈஸ்டர் 4வது ஞாயிறு

ஏப்ரல் 13, ஈஸ்டர் 4வது ஞாயிறு
நற்செய்தி - மறையுரை

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 10

1 ' நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். 2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். 3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். 4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். 5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது. ' 6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 7 மீண்டும் இயேசு கூறியது: ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆடுகளுக்கு வாயில் நானே. 8 எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. 9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். 10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.


(thanks to www.arulvakku.com)


உனது புனித வாழ்வின் வளர்ச்சி, அல்லது, மிகவும் கடினமான உறவை வளர்ப்பதில் அப்படியே தடை பட்டு இருக்கிறதா? அந்த தடையை உடைத்து வெளியே வரவேண்டுமா? ஒரு கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பது போல், நீ உணர்கிறாயா? அந்த வேலி அல்லது கூண்டு, உன்னுடைய அமைதியையும், சந்தோசத்தையும், திருப்திபடுதலையும், சுத்தமாக அண்ட விடுவதில்லையா? இன்றைய நற்செய்தியில், யேசுதான அந்த கூண்டின் அல்லது கொட்டடியின் கதவாக இருக்கிறார் என்று கூறுகிறது. யேசு நாம் மோட்சத்தின் கதவுகளை அடைவதற்கு உதவு செய்கிறார். இந்த பூமியின் வாழ்வில் ஏற்படும் தடைகளுக்கும் அவர் திறவுகோலாக இருக்கிறார். இதன் மூலம் இவ்வுலக வாழ்விலும், நித்திய மோட்ச வாழ்விலும், நிறைவாக பெரும் பொருட்டே அவர் நமக்கு உதவுகிறார்.

நமது பாதை தடை பட்டு இருந்தால், நாம் யேசுவை வழிகாட்ட சொன்னால் தான், நம்மால் மேலே செல்லமுடியும், மற்றும் தடைகளை தாண்டி நம்மை அழைத்து செல்வார். மற்றவர்கள் நமக்கு கதவை சாத்தினால், கடவுள் நம்மை அங்கே போகசொன்னால், யேசு நமக்கு கதவாக இருந்து நமக்கு வழி விடுவார். யாரும் அவருடைய வாயிலை மூட முடியாது. கடவுளின் திட்டத்தை நாம் நிறைவேற்றுவதற்கு யேசு நம்மை வழி நடத்தி செல்வார். மிகவும் பயப்படும்படியான திட்டத்தை கடவுள் நமக்கு கொடுத்தாரானால், அதனை கண்டு நாம் ஒதுங்கி விடாமல், யேசுவை நோக்கி பார்த்து, அவரே வாயிலாக கொண்டு நாம் அந்த இலக்கை அடையவேண்டும்.


மேலும் முழுமையாக அந்த இலக்கை அடையும் வரை, வாயில்லா ஆடாக நாம் யேசுவோடு செல்ல வேண்டும். அந்த பயனத்தின் மறு பக்கத்தை அடைய, இடையில் நாம் பயனம் செய்ய வேண்டியிருக்கிறது. திருடர்கள் நம்மை தாக்க வருவார்களேயானால், நாம் யேசுவோடு இருந்தால், அவர்களை மிகவும் எளிதாக வெல்லலாம். கவலையும், நம்பிக்கையின்மையும், நமக்கு முக்கியமான திருடர்கள் ஆவர். அவைகள் தான், நமது அமைதியையும், திருப்தியையும், சந்தொச்த்தையும், குணப்படுத்தலையும், நம்மிடமிருந்து எடுத்து சென்று விடுகின்றன. ஆனால் அவைகல் எல்லாம் அப்படி ஒன்ரும் சக்தி வாய்ந்தது அல்ல. நாம் பயப்படும் அளவிற்கு ஒன்றும் உண்மையை பேசுவதில்லை. அவைகள் நாம் யேசுவை மறக்க செய்வதற்கு எல்லா வேலைகளையும் செய்கின்றது. அவர் தான் உண்மையான மேய்ப்பன் மற்றும் நல்ல வழிகாட்டி, வெகுமதியுடன் கூடிய வெற்றியை பெற்று தருபவர்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, April 4, 2008

ஏப்ரல் 6 2008 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 6 2008 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஈஸ்டர் 3 வது ஞாயிறு

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 24

13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வ+ரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. 17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். 18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார். 19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். 20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. 22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; 23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். 24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள். 25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! 26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார். 27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். 28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். 30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். 31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். 32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள். 33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். 34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள். 35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் வரும் இரு சீடர்களும், யேசுவை அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. யேசு இறைவாக்கினரின் நூல்களில் உள்ள வசனத்தை சொல்லியதும், பிறகு, அப்பத்தை எடுத்து கடவுளை போற்றி பிட்டு கொடுத்ததும் தான், அவ்விரு சீடர்களின் கண்களும் திறந்தது. இது இரண்டு பகுதிகளாக நடந்த செயல்முறையாகும். முதலில் இறைவாக்கினரின் வசனத்தை கேட்ட பின்பு, அவர்கள் இதயம், யேசுவை அறிந்து கொண்டது, ஆனால், கண்களால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. (அவர்கள் இதயம் பற்றி ஏறிந்தது). இரண்டாவது பகுதி, யேசு அப்பத்தை எடுத்து, கடவுளை போற்றி, அதை பிட்டு கொடுத்தபோது தான் அவர்களின் கண்கள் திறந்து கொண்டது.


இப்போது, நாம் திருப்பலியில் பங்கு கொள்ளும்போது, நாம் யேசுவோடு இதேபோல ஒரு பயணம் செல்கிறோம். முதலில் நாம் இறைவார்த்தை கேட்கும் பகுதியில் செல்கிறோம்.அதன் பிறகு ப்ரசங்கம் நடக்கிறது, அதில் நற்செய்தி விளக்கமளிக்கபடுகிறது. இப்போது, நாம் நமது முழு இதயத்தோடு, நற்செய்தியையும், ப்ரசங்கத்தையும் கேட்க வேண்டும்.

நன்கு பயிற்சி பெற்ற சகோதரர், சகோதரிகள் வாசகத்தை, அதற்குரிய அர்த்தத்துடன், வாசிக்கும்போது, நமது இதயம் யேசுவை அறிந்து கொள்ளமுடியும். நன்கு பயிற்சி பெற்ற பாதிரியாரோ அல்லது டீகண் நமக்கு அந்த நற்செய்தியை பற்றி விளக்கமளிப்பார்கள். ஒருவேளை அவர்கள் நல்ல ப்ரசங்கம் செய்யாவிட்டால் கூட, நமது இதயம் யேசு என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியும்.

அதன் பிறகு, நாம் நற்கருணை வழிபாட்டிற்கு செல்கிறோம். திருப்பலியில், குருவானவர், அப்பத்தையும், திராட்சை இரசத்தையும், புனிதமாக்கும்போதும், யேசுவேதான் அதனை செய்கிறார். குருவானவரின் கைகளையும், குரலையும் உபயோகித்து யேசுவே தான் அந்த அப்பத்தையும் இரசத்தையும் புனிதப்படுத்துகிறார். யேசு எப்படி அந்த இரண்டு சீடர்களுக்கும் செய்தாரோ அதையேதான் நமக்காக செய்கிறார்.


நாம் நமது இதயத்தை திருப்பலியின் முதல் பகுதியில் திறந்தோமானால், மேலும் தொடர்ந்து அவரையே நோக்கினால், நாம் அப்பத்தையும், இரசத்தையும் அதற்குரிய சுயமான அர்த்ததை விட , அதை விட மேலே நாம் பார்க்க முடியும். நாம் யேசுவை பார்ப்போம். அவரை நம் இதயத்தில் அறிந்து கொள்வோம். எவ்வித சந்தேகமுமின்றி,உயிர்த்த யேசுவை நாம் நற்கருணையில் காண்போம். அவரை அடைவோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

www.gnm.org

Saturday, March 29, 2008

மார்ச் 30 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 30 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை



யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார். 24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார். 26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார். 28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார். 29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார். 30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

thanks to Www.arulvakku.com


ஈஸ்டர் வெற்றியோடு அனுபவித்து வாழ்வது என்பதற்கு என்ன அர்த்தம்.? நாமெல்லாம் ஈஸ்டர் மக்கள். ஏனெனில் யேசு மரனத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பது தெரிந்து நாம் கொண்டாடுகிறோம். இருந்தாலும், நாம் எப்பொழுதும் "அல்லேலுயா" என்று சொல்லி கொண்டிருப்பதில்லை. நாம் இந்த வெற்றியை கொண்டாடுவதில் எந்த எண்ணமும் இல்லாமால், நிணைப்புமில்லாமல், திருப்பலியிலும், வெளியேயும், நாம் சந்தோசமடைவதில்லை, அந்த சந்தோசம் மற்ற சகோதரர்கள் மணமாற உதவியாக இருக்கும்.

பெரிய வெள்ளியின் சிலுவைகளை தொடர்ந்து தூக்கி செல்வதில் நாம் முடித்து கொள்ள முடிவதில்லை.
இன்றைய நற்செய்தியில், ஈஸ்டர் வெற்றியை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது: விவரிக்க முடியாத சந்தோசத்துடனும், புகழுடனும் கொண்டாட படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் எப்படி?

சந்தோசமடைவதற்கு தேவையான மண நிலை, சிலுவை போல் உள்ள துன்பங்கள் முடிவதிலிருந்து ஆரம்பிப்பது இல்லை. அல்லாமல், கிறிஸ்து, நமக்காக இறந்து நம்மையெல்லாம் இரட்சித்தார், அதன் மூலம் கடவுளின் அபரிதமான அன்பும், அமைதியும், நமக்கு கிடைக்கும் என்று நிணைத்து நமது சந்தோசம் ஆரம்பமாகும். சாகாவரம் பெற்ற இந்த அன்பளிப்பு நமக்கு கிடைத்த இந்த இன்பத்தினால் நாம் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் யேசு அதனை நமக்காக தயாராய் வைத்திருக்கிறார். நாம் மரனமடையும்போது, நாம் இந்த அன்பளிப்பை பெறுவோம். இந்த அன்பளிப்பு நாம் கடவுளை ஏற்று கொண்டதால், கடவுள் நமக்காக காத்து வைத்திருக்கிறார். நமது விசுவாசம் இந்த அன்பளிப்பை பெற்று கொடுக்கிறது.

நம்பிக்கையின் முழு அர்த்தம் என்னவென்றால், பின்னால் நடக்கபோவது உறுதி என்று தெரிந்து, அதனை நாம் கொண்டாடுவதில் தான் உள்ளது.

பெரும்பாலான கத்தோலிக்கர்கள், மீட்பும், மோடசமமும் கிடைக்காது என்று பயம் கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் அவர்களையே நம்புவதில்லை. இன்றிலிருந்து இறக்கும் காலம் வரையில், யேசுவிடமிருந்து விலகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள். நீயும் அப்படி பயப்படுகிராயா? : உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்? உங்கள் துன்ப நேரங்களில், கடவுளை ஒதுக்கி தள்ளுகிறீர்களா அலலது அவரிடம் ஓடி செல்கிறீர்களா?
நாம் கடவுள் மேல் கோபம் கொண்டால் கூட, நாம் அவரோடு அருகில் தான் இருக்கிறோம். நாம் அவர் மேல் வைத்த நம்பிக்கையால், நாம் எதிர்பார்ப்பதை கடவுளிடமிருந்து வராமல் இருக்கும் போது, நாம் அவர் மேல் கோபப்படுகிறோம். அவர் மேல் விசுவாசம் இல்லாமல், கோபம் கொள்வதில்லை. நமது சோதனையில் தான், நமது விசுவாசம் சுத்தப்படுத்தபடுகிறது. ஈஸ்டர் மக்களாகிய நாம், நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் தற்காலிகமானது தான். நித்திய இன்பத்தை ஒரு நாள் பெறுவோம். அதனைதான் நாம் இப்போது தான் கொண்டாடுகிறோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, March 21, 2008

23 மார்ச் 2008 ஈஸ்டர் திருவிழா நற்செய்தி , மறையுரை

23 மார்ச் 2008
ஈஸ்டர் திருவிழா
நற்செய்தி , மறையுரை


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார். 3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. 6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், 7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார். 9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

thanks to www.arulvakku.com

உனக்கு யேசு எப்படி உதவி செய்தார் என்று பிரகடனம் செய்ய தயாராய் இருக்கிறாயா? அல்லது எப்படி உன் வாழ்வின் இறந்த துக்கங்கள்,வெற்றியாக உயிர் பெற்றன என்பதில் ஐயம் இருப்பதால், யேசுவின் உதவியை பிரகடனம் செய்ய தயங்குகிறாயா? எப்படி உன் வாழ்வின் நடந்த ஆபத்துகள், துன்பங்கள், இன்பமாக மாறியது? மிக சிறந்த ஆசிர்வாதமாக மாறியது என்பதை உலகிற்கு சொல்ல தயங்குகிராயா?

இந்த மாதிரியான மண நிலையில் தான், ஈஸ்டர் அன்று எல்லா சீடர்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் புனித பேதுரு "யேசுவை சிலுவையில் கொன்றார்கள், ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உய்ரோடு எழுப்பி, காட்சி அளிக்க செய்தார்" என்று கூருகிறார்.
சீடர்களுக்கு இப்போது தான அவர்கள் அழைப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்கள். யேசு தான மீட்பர், என்று சாட்சி பகர அவர்கள் அழைக்கப்பட்டனர். அந்த வேலையை நற்செய்தி சேவையை முழுதுமாக செய்ய ஆரம்பித்தனர்.

"சாட்சி பகர்தல்" என்பது, நமது சொந்த அனுபவத்திலிருந்து, யேசு நமக்கு கொடுத்த மீட்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்தல் ஆகும். புனித பேதுரு "யாரெல்லாம், யேசுவை நம்பினார்களோ, அவர்கள் யேசுவிடம் , அவர்கள் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவர்" என்று அதிகாரப்புர்வமாக சொல்கிறார். ஏனெனில், பீட்டருக்கு தான் முதன் முதலாய் தெரியும், கடவுளின் மன்னிப்பை எப்படி பெறுவது என்று.

நமது துன்பங்கள், நம்மை எப்படி புதிய வாழ்விற்கு அழைத்து சென்றது என்பதை நாம் மற்றவர்களோடு பேசி பகிர்ந்து கொண்டால் தான், நமக்கு அந்த மீட்பு முழுமையாக புரிய ஆரம்பிக்கும். தெளிவில்லாத நமது உள்ளத்தில் உள்ள விசயங்கள், நமது நெருங்கிய நண்பர்கள், கோவில் நண்பர்களோடு பேச ஆரம்பிக்கும்போதுதான, கொஞ்சம், கொஞ்சம்மாக புரிய ஆரம்பிக்கும். மகதலே மேரியும், அப்படித்தான, அவர்களுடைய குழப்பத்திலிருந்து, மீள்வதற்குள், பேதுருவிடம், அருளப்பரிடம் ஓடி, அவர்களிடம், கல்லறையில் யேசு இல்லை என்பதை பகிரிந்து கொண்டார்கல். அவர்கள் மற்ற சீடர்களிடம் கூறினர். அப்போது தான், அவர்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேந்து சமூக கூட்டமாக ஒன்றானார்கள். அப்போதுதான், பரிசுத்த ஆவியின் உதவியுடன் யேசு அவர்களிடையே தோன்றி, உண்மையை அவர்களுக்கு கூறினார். சீடர்கள் அனைவரும், அந்த உண்மையை உலகம் முழுவதும் எடுத்துரைத்து மணம் மாற்றினர். யார் கேட்டார்களோ, அதை ஏற்று கொண்டார்களோ, அவர்கள் மணம் திரும்பி, யேசுவோடு ஒன்றினைந்தனர்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, March 14, 2008

மார்ச் 16, 2008 ஞாயிறு நற்செய்தி குருத்து ஞாயிறு

மார்ச் 16, 2008 ஞாயிறு நற்செய்தி:
மறையுரை
குருத்து ஞாயிறு


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 26

14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 15 ' இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். 17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள். 18 இயேசு அவர்களிடம், ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ' எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ' என்றார். 19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். 20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். 21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ' ஆண்டவரே, அது நானோ? ' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். 23 அதற்கு அவர், ' என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். 24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும் ' என்றார். 25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் ' ரபி, நானோ? ' என அவரிடம் கேட்க இயேசு, ' நீயே சொல்லிவிட்டாய் ' என்றார். 26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ' இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் ' என்றார். 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ' இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; 28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். 29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 30 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். 31 அதன்பின்பு இயேசு அவர்களிடம், ' இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ' ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது. 32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார். 33 அதற்குப் பேதுரு அவரிடம், ' எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன் ' என்றார். 34 இயேசு அவரிடம், ' இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார். 35 பேதுரு அவரிடம், ' நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ' என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள். 36 பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ' நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறி, 37 பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். 38 அவர், ' எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். 39 பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, ' என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ' என்று கூறி இறைவனிடம் வேண்டினார். 40 அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ' ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? 41 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார். 42 மீண்டும் சென்று, ' என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் ' என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 43 அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. 44 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 45 பிறகு சீடர்களிடம் வந்து, ' இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். 46 எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ' என்று கூறினார். 47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது. 48 அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 49 அவன் நேராக இயேசுவிடம் சென்று, ' ரபி வாழ்க ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். 50 இயேசு அவனிடம், ' தோழா, எதற்காக வந்தாய்? ' என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். 51 உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். 52 அப்பொழுது இயேசு அவரிடம், ' உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். 53 நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. 54 அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ' என்றார். 55 அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; 56 இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன ' என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள். 57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். 58 பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். 59 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். 60 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். 61 அவர்கள், ' இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ' என்று கூறினார்கள். 62 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ' என்று கேட்டார். 63 ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ' நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ' என்றார். 64 அதற்கு இயேசு, ' நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 65 உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ' இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. 66 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இவன் சாக வேண்டியவன் ' எனப் பதிலளித்தார்கள்.


thanks to www.arulvakku.com

"ஆழ்ந்த அன்பு" என்ற வார்த்தைக்கு அதிக ஆற்றலுடன் உள்ள விளைவுகள் கூடியது. யேசுவை அடிக்கும் போதும், சிலுவையில் அறைந்த போதும், அவர் அடைந்த வேதனையையும், அவர் நம் மேல் கொண்ட ஆழ்ந்த அன்பினையும், அக்கறையையும் இந்த வார்த்தை மூலம் நாம் குறிப்பிடுகிறோம்.

ஆனால் இந்த உலகமோ, ஆழ்ந்த அன்பினை, காதல் உணர்விற்கும், காம ஆசைக்கும், கவர்ச்சிக்கும் குறிப்பீடாக எடுத்து கொள்கிறது.

நாமும் அதிக ஊக்கத்திற்காகவும், உற்சாகப்படுத்துவதற்காகவும், ஏதாவது ஒரு விசயத்திற்காக சந்தோசப்படும்போதும், நமக்கு நாமே அக்கறை கொள்கிற போது, "ஆழ்ந்த அன்பு" , "பற்றுதல்", "தீவிர ஆர்வம்" என்ற வார்த்தைகள் உபயோக்கிறோம். அதே வார்த்தகள் மூலம் யேசுவின், அவரின் சிலுவை வேதனையை கஷ்டத்தை தாங்கிகொண்டார் என்பதனை சொல்கிறோம்.

யேசு நம் எல்லார் மேலும், எவ்வளவு கருணையுடன் இருந்தார் என்பதை, அவரது இறைசேவையிலும், பெரிய வெள்ளியிலும், அவர் அடைந்த வேதனையையும், கஷ்டத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். இதுவே நமக்கு, "மற்றவர்கள் மேல் இரக்கம் கொள்தல்" என்ற பாடமாகிறது. மற்றவர்கள் துன்பத்தில் நாமும் அவர்களோடு சேர்ந்து, அந்த துன்பத்தில் நடந்து, அவர்களோடு நாமும் அந்த வேதனையை அடைவோம். இதுதான் உண்மையான, மிகவும் புனிதமான "ஆழ்ந்த அன்பு" க்கான அடையாளமாகும்.

இன்றைய நற்செய்தியை கவனமாக படித்து பார்த்தால், யேசு நம் மேல் எவ்வளவு ஆழ்ந்த அன்பு வைத்திருந்தார் என்பது தெரியும்.

உனக்குள்ளேயே, எத்தனை பேர் அதிக ஆர்வத்தோடு யேசு ஏற்றுகொண்டார்கள், எத்தனை பேர் நிராகரித்தார்கள் என்று எண்ணிபார்.

நீ எத்தனை முறை அவரை நிராகரித்தாலும், அவரை வேதனைபடுத்தியிருந்தாலும், உன் மேல் எவ்வள்வு அன்பு இருந்திருந்தால், இத்தனை பெரிய சிலுவை வேதனையை உனக்காக ஏற்று கொண்டிருப்பார் என்பதை எண்ணிபார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:

www.gnm.org

Friday, March 7, 2008

மார்ச் 9 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 9 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை

தவக்கால 5 வது ஞாயிறு


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 11

1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வு+ரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். 2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். 3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, ' ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான் ' என்று தெரிவித்தார்கள். 4 அவர் இதைக் கேட்டு, ' இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார் ' என்றார். 5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். 6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். 7 பின்னர் தம் சீடரிடம், ' மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள் ' என்று கூறினார். 8 அவருடைய சீடர்கள் அவரிடம், ' ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா? ' என்று கேட்டார்கள். 9 இயேசு மறுமொழியாக, ' பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. 10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை ' என்றார். 11 இவ்வாறு கூறியபின், ' நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் ' என்றார். 12 அவருடைய சீடர் அவரிடம், ' ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார் ' என்றனர். 13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். 14 அப்போது இயேசு அவர்களிடம், ' இலாசர் இறந்து விட்டான் ' என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, 15 ' நான் அங்கு இல்லாமல் போனது பற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள் ' என்றார். 16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ' நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் ' என்றார். 17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. 18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. 19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21 மார்த்தா இயேசவை நோக்கி, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் ' என்றார். 23 இயேசு அவரிடம், ' உன் சகோதரன் உயிர்த்தெழுவான் ' என்றார். 24 மார்த்தா அவரிடம், ' இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும் ' என்றார். 25 இயேசு அவரிடம், ' உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா? ' என்று கேட்டார். 27 மார்த்தா அவரிடம், ' ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன் ' என்றார். 28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ' போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார் ' என்று காதோடு காதாய்ச் சொன்னார். 29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். 30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். 31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். 32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் ' என்றார். 33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 34 ' அவனை எங்கே வைத்தீர்கள்? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' ஆண்டவரே, வந்து பாரும் ' என்றார்கள். 35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். 36 அதைக் கண்ட யூதர்கள், ' பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு! ' என்று பேசிக் கொண்டார்கள். 37 ஆனால் அவர்களுள் சிலர், ' பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா? ' என்று கேட்டனர். 38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. 39 ' கல்லை அகற்றி விடுங்கள் ' என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ' ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! ' என்றார். 40 இயேசு அவரிடம், ' நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா? ' என்று கேட்டார். 41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ' தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். 42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன் ' என்று கூறினார். 43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், ' இலாசரே, வெளியே வா ' என்று கூப்பிட்டார். 44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ' கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள் ' என்று இயேசு அவர்களிடம் கூறினார். 45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.
(www.arulvakku.com)

மறையுரை

தவக்காலம் என்பது வெறும் தியாகங்களுக்கும், வேதணைகளுக்குமான காலமில்லை. இது புது வாழ்விற்கான வழியாகும். பெரிய வெள்ளி ஒன்றும், சாத்தானுக்கும், வலிகளுக்கும், சாவிற்கும் உள்ள நாளாகாது. அதை ஒரு கதவாக உபயொகித்து, யேசு நம்மை புதிய வாழ்விற்கு அழைக்கிறார்.

துன்பமடைதல் என்பது தவக்கால பயனத்தின் ஒர் அங்கமாகும். (அதனை ஒரு வருடத்தின் எந்த காலங்களிலும் அனுபவிக்கலாம்). மேலும், விரதமிருப்பதும், எளியோருக்கு உதவுவதும், சுய கட்டுபாடு மற்றும் பல தியாகங்களும் தவக்காலத்தில் செய்ய வேண்டியது என்று ஒத்துகொள்ளலாம். ஆனால் இவையெல்லாம், புதிய வாழ்வின் பய்னத்திற்கான கருவிகளாகும்.


நாம் அனுமதித்தால், கடவுள் நமது வேதனைகளை உபயோகித்து, அதனை ஒரு கருவியாக்கி, நம்மில் இரக்கத்தையும், கருணையும், இடைவிடாது முயற்சி செய்தலிலும், சேவை செய்வதிலும், வளர செய்கிறார். நமது தியாகங்கள் மூலம் நாம் நமது கட்டுபாடு, ஒழுங்கு முறையுடன் வாழ கற்றுகொள்கிறோம். இதன் மூலம் நாம் நம்மை தூய்மையாக்கி, புனித வாழ்வில் சிறந்து வாழ விழைகிறோம். ஆனால்,இந்த ப்யணம் ஒன்றும் முடிவல்ல, போகுமிடம் இன்னும் இருக்கிறது..

தவக்காலம் என்பது, மீண்டும் உயிர்த்தெழுதல், புதிய வாழ்வை அடைவது ஆகும். புதுபிக்கப்பட்ட விசுவாசம், பழைய பாவங்களிலிருந்து மீண்ட புதிய வாழ்வு, சமாதானமான உறவுகள், முன்னை விட அதிகமாக கடவுளின் ஆவியில் வாழ்வது.

உஙகளுக்கு பெரிய வெள்ளி முக்கியமான நாளா? அல்லது கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளா? மிகவும் பயமடைய செய்கிற கல்வாரி நாள் மிக முக்கியமானது தான், அந்த பெரிய வெள்ளி ஈஸ்டர் திரு நாளுக்கு தேவையான நாள் தான். ஆனால், நாம் இப்பொது உயிர்த்தெழுந்த, சிலுவையிலிருந்து வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கத்தோலிக்கர்கள் அனைவரும் ஈஸ்டர் மக்கள் ஆவர். அப்படியென்றால், யேசுவை நமது வாழ்வில் கடவுளாக ஏற்றுகொண்டால், நமக்கு எதுவும் தவறான நிகழ்ச்சி, விபத்து எதுவும் நடந்து விடாது.

யேசுவே, அவரே மீட்பின் வெற்றி நாயகன் என்று நிருபித்துள்ளார். மேலும் நமது வாழ்வின் வெற்றி நாயகன் என்று வாழ்வின் பிறப்பிலும், இறப்பிலும் வெண்று நமக்கு காட்டியுள்ளார். இப்போது மீண்டும் அதனை நிருபிக்க விரும்புகிறார்- உன் மூலம், மேலும், உன்னை சுற்றி பார்ப்பவர்களுக்கும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
www.gnm.org