Friday, September 2, 2011
செப்டம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
செப்டம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 18
பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)
15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் வாசகங்கள் நம்மை நீதிக்கும், பரிசுத்த வாழ்விற்கும், உண்மைக்கும் நாம் துணை நின்றால் தான் மற்றவர்களை பாவ வாழ்விலிருந்து மீட்க முடியும் . அப்படி செய்யாவிடில், அவர்கள் பாவத்திற்கு நாமும் துணை புரிந்த பாவத்திற்கு ஆளாவோம். அதற்கான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. (முதல் வாசகத்தை பாருங்கள்).
இரக்கம், நிபந்தனையற்ற அன்பு, கருணை இவை எல்லாவற்றுடனும் சேர்த்து நாம் பாவத்தை எதிர்த்தால் ஒழிய அது பாவமாகாது, இல்லையெனில், அதுவும் பாவமாகும். (இரண்டாவது வாசகம்). இன்றைய நற்செய்தியில், இயேசு சொல்கிறார். கிறிஸ்தவ குழுவோடு இணைந்து அவர்கள் ஆலோசனையுடனும், ஜெப உதவியுடனும் நாம் பாவத்திற்கு எதிராக போராடவேண்டும் என்று சொல்கிறார்.
முதலில் நாம் பாவியோடு பேசவேண்டும். எல்லா பாவங்களும் ஏதோ ஒரு வகையில் அவர்களை சேதப்படுத்துகிறது. (அவர்களுக்கு தெரியாமலே), இதனை நாம் பாவிகளிடம் எடுத்துரைக்க வேண்டும், இல்லையெனில் நாம் அவர்களை அன்பு செய்யவில்லை , அவர்கள் மேல் அக்கறை கொள்ளவில்லை என அர்த்தம்.
நாம் உண்மையை அவர்களுக்கு பகிர்ந்து கொண்டபிறகு, பாவிகள் மணம் திருந்தாவிட்டாலும், நாம் நமது பாவத்திலிருந்து விடுதலை அடைகிறோம். ஆனால், பாவிகளை அன்பு செய்வதை மட்டும் நிறுத்த கூடாது. அதனால், இன்னும் இரண்டு மூன்று பேரை அழைத்து கொண்டு, பாவிகள் திருந்துவதற்கு எது தடுக்கிறது, என்று ஆராய்ந்து அவர்களுக்கு உதவமுடியும்.
அதுவும் தோற்றுவிட்டால், இன்னும் வேறு உதவியுடன் நாம் முயற்சி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முயற்சிக்கும், பலன் தரவில்லையென்றால் மட்டுமே, நாம் நமது முயற்சியை கைவிட்டு நாம் நமது வழியில் செல்ல வேண்டும். நாமாக பிரிந்து செல்லவில்லை. பாவிகள் தான் பிரிந்து செல்ல காரணமாக இருக்கின்றனர். இயேசு வரி வசூலிப்போரையும், வெளியாட்களையும் எப்படி அனுகினார் என்பதை நாம் பார்க்கிறோம். : அவர்களை அன்பு செய்வதை என்றுமே அவர் நிறுத்தியதில்லை. அவர்களுக்காக மரணத்தையும் ஏற்றுகொண்டார்.
© 2011 by Terry A. Modica
Friday, August 26, 2011
ஆகஸ்டு 28, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆகஸ்டு 28, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
Jeremiah 20:7-9
Ps 63:2-6, 8-9
Rom 12:1-2
Matt 16:21-27
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 16
இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மாற் 8:31 - 9:1; லூக் 9:22 - 27)
21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.22பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார்.23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்றார்.24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் முதல் வாசகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஜெரமிய இங்கே என்ன செய்கிறாரோ அதையே தான் நான் அடிக்கடி நினைப்பேன்.
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: " கடவுளே, இது நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். எனக்கு ஏன் இந்த சோதனை? " இது மாதிரி நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?
ஏன் கடவுள் நமக்கு இது மாதிரி நடக்க அனுமதித்தார்? கடவுள் நமக்கு கடினமான நிலைமை கொடுத்தாலும், ஏன் அவரை நம்புகிறோம்? இயேசுவை பின் சென்று , நமது உதவியையும், அன்பையும் மற்றவர்களுக்கு கொடுத்தாலும், நமக்கு இன்னல்களும், நமக்கு மன நிம்மதியின்றியும், மேலும் வலியுடையதாக இருக்கும்பொழுது, நாம் இன்னும் ஏன் இயேசுவை பின் செல்கிறோம்?
கடவுளோடு நடந்து, அவரது இறையரசிற்கு சேவை செய்வது என்பது ஒரு வீர செயலாகும். எதிர்பாரதது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம், துரதிஷ்டவசமாக இவ்வேளகளில், துன்பப்படுதலும், - நம் சுய ஆசைகளை உதறிவிட்டு, சிலுவைகளை நாம் துக்க வேண்டியும், மேலும், இயேசுவை கல்வாரி மலை வரை பின் செல்ல வேண்டியிருக்கும், (ஆனால் அதிலிருந்து நாம் மீட்பை அடைவோம் - எல்லா நற்செய்திகளிலும், மீட்பு சொல்லப்பட்டிருக்கிறது).
நாம் கடவுளை அன்பு செய்வதால், இரண்டாவது வாசகத்தில் கூறியுள்ளது போல, நம்மையே அவருக்காக தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். இது தான் கடவுளை வணங்குவதில் உயர்ந்தது; திவ்ய நற்கருணையை அடுத்து, இவ்விசயத்தில் தான் நாம் கடவுளோடு தெய்வீக ஒன்றினைப்பில் சேர்கிறோம். யேசுவோடு நாம் ஒன்றினைந்து , நாம் திவ்ய நற்கருணையாகிறோம்.
எரேமியாவின் குற்றச்சாட்டு சொல்வது போல, கடவுளிடம் முறையிடலாம். எவ்வித தண்டனையுமின்றி, அவரோடு வேலை செய்ய நமக்கு பிடிக்க வில்லை என்று கடவுளிடம் சொல்லலாம். எனினும், குற்றம் கூறுதல் ஒரு பாவமாகும், ஏனெனில், இது வம்பளப்பதையும், கடவுள் மேல் தவறான எண்ணதையும் உருவாக்கும். அது கடவுளை தவறான கண்ணோட்டத்தில் காட்டும்.
நமது சோதனை காலங்களில், ஜெபத்தினால், நமக்கு துனை வேண்டி நாம் கேட்பது நமக்கு முக்கியம், மேலும், இதனை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும். ஆனால், கடவுளை பற்றி மற்றவர்களிடம் குறை கூறும்பொழுது, நாம் எவ்வளவு குறைவாக கடவுளை நம்புகிறோம் என்பதை காட்டுகிறது. நமது தியாகத்தினால், வரும் நல்ல பலன்களை விரைவில் பார்ப்போம், அதனை தான் நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
© 2011 by Terry A. Modica
Friday, August 19, 2011
ஆகஸ்டு 21, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆகஸ்டு 21, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 22:19-23
Ps 138:1-3, 6, 8
Romans 11:33-36
Matthew 16:13-20
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 16
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார்.16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.20பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இயேசு இராயப்பரை பாறையாக்கி, அங்கு தான் திருச்சபையை கட்டுவேன் என்று சொல்கிற பொழுது, ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார். "பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" என்று கூறுகிறார். "அலகையால் எப்பொழுதும் வெற்றி கொள்ள முடியாது" (எபேசியர் 6)
இயேசு, "நரகம்" திருச்சபையை என்றுமே வெல்லாது என்று சொல்ல வில்லை, ஆனால், பாதாளத்தின் வாயில்களே விண்ணரசை வெல்லாது என்று கூறுகிறார். கண்டிப்பாக சாத்தான் வெல்லபோவதுமில்லை; வாயில்கள் என்றுமே தாக்காது, ஆனால் பாதுகாக்கும். ஒரு எல்லைக்குள் உள்ள , சுவருக்குள் உள்ள அனைத்தையும் கதவுகள் பாதுகாக்கிறது. உங்களுக்கு தெரிந்து யாராவது குற்றம் செய்து சிறைக்கு சென்றுள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது சாத்தானின் வேலைகளால் சிறைக்கு சென்றுள்ளார்களா?
சாத்தானில் வேலைகளை செய்பவர்களை, கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களுக்கு எதிராக இருக்க வேண்டியதில்லை. ஆனால், நாம் பாதாளத்தின் வாயில்க்ளை தாக்க வேண்டும். அதனை தாக்கி கீழே தள்ள வேண்டும், மேலும், சாத்தான்கள் இழுத்து செல்லும் நம் சகோதரர்களை நாம் இழுத்து விண்ணரசிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
2000 வருடங்களுக்கு முன் இயேசு எப்படி சாத்தானிடமிருந்து மனிதர்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்தாரோ, அதையே, உங்கள் மூலம் இயேசு இன்று செய்கிறார்.
பாவங்களிலிருந்து விடுதலை பெற துடிக்கும் பாவிகளை மீட்க, இயேசு இராயப்பருக்கு சாவியை கொடுத்து, நல்லாயனாக (போப்) கிறிஸ்தவர்களுக்காக அவரை திருநிலை படுத்தினார். இதே சாவி ஒவ்வொரு தலைமுறையாக அடுத்தடுத்த போப்பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த சாவிகள் எவை? பாதாளத்தின் வாயில்களை அருட்சாதனங்கள் மூலம் திறக்க முடியும்; அந்த சாவிகள் முடிவில்லா வாழ்விற்கு உள்ள கதவை திறக்கிறது. பாவ மனிதன் பாவ சங்கீர்த்தனத்தில் இருக்கும் பொழுது, குருவானவர் மன்னிபின் அருளை கொடுக்கும்பொழுதும், மணமகனையும், மணமகளையும் திருமணத்தில் இணைக்கும் பொழுதும், இயேசுவே குருவாணவர் மூலம் அதனை செய்கிறார்.
இந்த அருட்சாதனங்களை, நாம் மிகவும் கவனமாகவும், ஆர்வத்துடனும் எடுத்து கொள்ளும்பொழுது, கடவுள் உண்ணத ஆற்றல், சாத்தானை வெற்றி கொள்ள முடியும்.
© 2011 by Terry A. Modica
Friday, August 12, 2011
ஆகஸ்டு 14, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆகஸ்டு 14, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு
Isaiah 56:1, 6-7
Ps 67:2-3, 5-6, 8 (with 4)
Romans 11:13-15, 29-32
Matthew 15:21-28
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 15
கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(மாற் 7:24 - 30)
21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் 'என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார்.26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் 'என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, நாம் மற்றவர்களை பற்றி நாம் மதிப்பிடவும், தீர்ப்பளிக்கவும் நம்மில் ஏற்படும் மனப்போக்கையும் நாம் ஆராய வேண்டும் என்று நமக்கு சவால் விடுகிறது. கானானிய பெண்ணுக்கு அவளுடைய பெண் பாலும், நாடும் அவளுக்கு எதிராக இருந்தது.
கண்டிப்பாக, இயேசு உலகம் எல்லாவற்றிற்கும் இரட்சகர் தான், ஆனால், சீடர்களுக்கு இந்த உண்மை தெரியவில்லை. நமக்கும் தான் தெரியவில்லை. அவர்களுடைய மனதை இன்னும் விசாலாமக்க (நம் மனதையும்) , இயேசு கானானிய பெண் அவளுடைய விசுவாசம் , அவளுக்கு உள்ள தடைகளையெல்லாம் தாண்டவேண்டும் என்று காத்திருந்தார், பிறகு இயேசு குணமாக்கினார்.
இயேசுவிற்கு, வெளியாட்கள் யார் என்றால், இறையரசை ஏற்காதவர்கள் மட்டுமே, ஆவர். ஆனால், நாம் உடனேயே இவ்வாறு நினைப்பதில்லை. நமது திருச்சபையில், நிறைய பேரை தவறாக தான் நாம் மதிப்பீட்டு வருகிறோம். நிறைய பேர் இக்குழுவிலிருந்து நீக்கப்பட்டவராகவே நினைக்கின்றனர். நாம் ஒருவரையொருவர் பற்றி தவறான முடிவிற்கு மிக விரைவாகவே வந்து விடுகிறோம்.
எடுத்து காட்டாக, ஒரு பெற்றோராக உள்ளவர்களை, நாம் ஏன் அங்கீகரித்து, அவர்களை நமது கோவிலுக்கு அழைப்பதில்லை. கோவிலில் பல நிகழ்ச்சிகளில், அவர்கள கலந்து கொள்ள அழைத்து, அவர்கள் கலந்து கொள்ளும்பொழுது, அவர்கஆள் குழந்தகளை நாம் பார்த்து கொள்ளலாமே?
நீங்கள் விவாகரத்தானவர்கள் என்றால், மற்றவர்கள் உங்களை ஒதுக்குகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இதுவே தவறான முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஓரினச்சேர்க்கையாளர்களை , திருச்சபை இரக்கத்துடன் அவர்களை பரிசுத்த வாழ்விற்கு அழைத்தும், அவர்கள் வெளியாட்களாக அவர்கள் நினைக்கிறார்கள்.?
சாதாரன மக்காள், இறைசேவையில் குருவானவரோடு சேராமால் தடுக்கபடுகிறோம் என்று நினைக்கிறார்கள். ?
நமது சக கிறிஸ்தவர்களை நாம் தவறாக தீர்ப்பளிப்பதால், அவர்களை வருத்தப்பட வைக்கிறோம். இதனால், கோவிலில் தேவையான வேலைகள் நடைபெறாமலே போய்விடுகின்றன. யாரையெல்லாம், நாம் தவறாக தீர்ப்பளிப்பதால் அவர்களுடைய திறமைகளை நாம் ஒதுக்கி தள்ளுகிறோம். ஆனால் நாம் நல்ல உணர்வுடன், மற்றவர்களை பற்றி தவறாக எண்ணாமல் இருந்தால், நாம் கிறிஸ்துவை போல இருந்தும், அவர்களிடமிருந்து கிறிஸ்துவை நாம் பெறுவோம்.
© 2011 by Terry A. Modica
Friday, August 5, 2011
ஆகஸ்டு 7, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆகஸ்டு 7, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:9a, 11-13a
Ps 85:8-14
Roman 9:1-5
Matthew 14:22-33
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 14
கடல்மீது நடத்தல்
(மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர்.27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ' என்றார்.28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார்.29அவர், ' வா ' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் ' என்று கத்தினார்.31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார்.32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு ரொட்டி துண்டுகளையும், மீண்களையும் பல மடங்காக பெருக்கி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்த பின் , ஜெபம் செய்வதற்காக தனியே செல்வதை பார்க்கிறோம்.
நீங்கள் பெரிய விருந்தோ, அல்லது, பெரிய திட்ட வேலையை முடித்த பின், அல்லது கஸ்டமான காரியத்தை முடித்த பின்பு, ஆண்டவரோடு சிறிது நேரம் செல்வழித்து, அவரிடம் உங்களை அர்ப்பணித்து, அவர் உங்களுக்கு சேவையாற்ற கோரியதுன்டா?
தந்தை கடவுளிடம் அதிக நேரம் செலவழித்த பின்பு, இயேசு அந்த அனுபவத்தின் மூலம், தண்ணீரின் மேல் நடந்து செல்கிறார்!
இயேசு அடிக்கடி ஜெபம் செய்வார். நற்செய்தி வாசகங்களி கூறப்பட்டவைகளுக்கு அதிகமாகவே, அவர் ஜெபம் செய்திருப்பார். பிறகு ஏன் மத்தேயு இங்கே அவர் ஜெபம் செய்ய சென்றார் என்று கூறுகிறர். மத்தேயு மூலமாக, கடவுள் நமக்கெல்லாம், நல்ல சமமான விசுவாச வாழ்வில் நாம் இருக்க வேண்டும் என்று காட்டுகிறார்.
கடவுள் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறார் என்பதையும், நாம் இழந்த ஆற்றலையும் மீண்டும் பெற, நமக்கு ஜெப வாழ்வு தேவைபடுகிறது. நமது குடும்பத்தில், வேலையிடத்தில், சமூக குழுக்களில், பங்கு கோவிலில், எங்கெல்லாம் ப்ரச்னை ஏற்படுகிறதோ கடவுளுக்காக நாம் சில வேலைகள் செய்ய வேண்டும். நாமே நம்மை மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது, நாம் ஆற்றல் இழந்து விடுவோம்; கடவுளுக்கு உதவ நாம் ஆட்பட்டு, அதில் வளர்ந்தால், கடவுள் நம்மை , ஆற்றலை புதுபிக்க நாம் அனுமதித்தால், அவர் நிச்சயம் செய்வார். இது அப்படியே அடிக்கடி நமது ஜெப வாழ்வின் மூலம் நடந்து கொண்டிருக்க வேண்டும்.
நமக்கு வரும் நாட்களில் நடக்கும் எதையும் நாம் எதிர்நோக்கிட, நம்மை தயார் படுத்துவது ஜெப வாழ்வு தான். நாம் எங்கு நடந்து செல்கிறோம் என்பதை கூட நாம் தெரியாமல், ஜெப வாழ்வில் நம்மால் தைரியமாக செல்ல முடியும். நாம் தந்தை கடவுளோடு தனியாக அவரோடு நேரம் செலவிட்டு , என்ன நமக்கு கிடைக்கிறது என்றால், நமது நலன்களுக்காக தேவைபட்ட அன்பளிப்பும், மற்றவர்களின் தேவகளுக்கு நாம் சென்று நிற்கும்போது கொடுக்க வேண்டியவகளையும் கடவுள் நமக்கு கொடுப்பார். ஜெபம் நம் விசுவாசத்தை உறுதிபடுத்துகிறது. தண்ணீரில் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிகொடுக்கிறது. கரையின் அக்கறைக்கு சென்று கடவுளின் உதவி தேவைபடுவோருக்கு உதவச் செய்கிறது. கடவுள் நம் மூலமாக அவர் களுக்கு உதவ ஆசைபடுகிறார். நீங்கள் ஜெபம் செய்து தயாராய் இருக்கிறீர்களா?

Friday, July 29, 2011
ஜுலை 31, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜுலை 31, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு
Isaiah 55:1-3
Ps 145:8-9, 15-18
Rom 8:35, 37-39
Matt 14:13-21
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 14
ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
(மாற் 6:30 - 44; லூக் 9:10 - 17; யோவா 6:1 - 14)
13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.16இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார்.17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள்.18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார்.19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.
(thanks to www.arulvakku.com)
இந்த வாசகங்கள் எனக்கு தாகத்தையும், பசியையும் தூண்டுகிறது!. நாம் திருப்பலி முடிந்து இரவு உணவிற்கு செல்லலாமா?
இன்றைய பதிலுரை பாடலில், "தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்." இதனை தெரிந்து கொண்டும், நமக்கு போதுமானதாக இல்லை. நமக்கு இருக்கிறதே போதும் என்று நாம் இருப்பதில்லை.
வாழ்க்கையில் எல்லா விசயங்களும் நமக்கு நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், திருப்தி பட்டு கொள்வதில்லை. முக்கியமாக நமது உறவுகளில் நாம் இன்னும் திருப்தி அடைவதில்லை. நமக்கு இன்னும் அன்பும், நம்மை முக்கியமாக அக்கறையோடு மற்றவர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் அன்பிற்கு தாகமாக இருக்கிறோம். இருந்தாலும், அதிருப்தியால் முனுமுனுக்கிறோம். மற்றவர்களீன் அக்கறையய்யும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். யாரெல்லாமிடமிருந்து நமக்கு ஆதரவு தேவையோ ,அவர்களிம் ஆதரவை, கனிவையும் எதிர்பார்க்கிறோம்.
மேலும், நாம் வாழ்வில் அருகில் இருக்கும் மனிதர்கள், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடவுளின் அன்பையும், அக்கறையையும், உங்களுக்கு கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், யாருமே முழுமையாகவும் , பிழையற்ற அன்பினை கொடுப்பதில்லை. சிலர் இந்த அழைப்பை அப்படியே நிராகரித்து விடுகின்றனர். இதனால் தான், நாம் இன்பத்தை வெறுத்தும், கோபத்தோடும், செயல் குழைந்து போயும், தனிமைபட்டும், பசியோடும் இருக்கிறோம்.
நாம், பிழையுள்ள மனிதர்களை மன்னித்தும், இயேசுவை நோக்கி நாம் ஜெபித்தால், அவர் சின்னதை கூட பல மடங்காக பெருக்கி தருவார். நாம் பிழையுள்ள மனிதர்களை பார்காமல், இயேசுவை நோக்கி பார்த்தால், இயேசு நம் இதயம் முழுதும் நிரம்ப அன்பை பொழிவார்.
திருப்தியற்ற தன்மை என்பது, இயேசு உங்கள் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறார் என்று அர்த்தம்;இயேசு எதையோ கொடுக்க விரும்புகிறார், ஆனால், நாம் அதற்கு இன்னும் தயாரகவில்லை. நமது ப்ரச்னை என்ன வென்றால்: இயேசுவை நாம் பார்க்காமல், அவரை தொடாமால், எப்படி அவர் கொடுப்பதை நாம் வாங போகிறோம்?
கண்ணுக்கு தெரியாத கடவுளை நாம் எப்படி தொட்டு திருப்தியடைய போகிறோம், நாம் எப்பொழுது, ஜெபத்தில், கிற்ஸ்தவ குழுக்களிலும் இனைந்து, கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும். கடவுள் என்ன செய்கிறார் என்பதை கூர்ந்து நோக்கியே இருக்க வேண்டும். மேலும் யார் மூலம் அதனை செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள முற்பட வேண்டும். அதிக ஈடுபாடும், எதிர்பாராததை எதிர்பார்த்தும் தயாராக இருக்க வேண்டும்.

Saturday, July 23, 2011
ஜூன் 24, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 13
புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
முத்து உவமை
45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
வலை உவமை
47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். '
முடிவுரை
51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள்.52 பின்பு அவர்,'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்' என்று அவர்களிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், விண்ணரசை, நிலத்தில் புதைந்துள்ள புதையலுக்கும், விலை உயர்ந்த முத்தாகவும், மீன் வலை பிடித்து, நல்லதை வைத்து கொண்டு, தீயதை தூக்கிபோதுவது போலவும் உவமையாக இயேசு சொல்கிறார். இதையே மாறாக சொல்வதானால், நமது கிறிஸ்தவ வாழ்வு தான், விலை மதிப்புள்ளவை ஆகும். நமது நெஞ்சில் வீனான பொருட்கள் இருந்தால், அதை தூக்கி எறிந்து விட்டு, விலை மதிப்புள்ள பொருட்கள் வைக்க அதனை தயார் படுத்துங்கள். நாம் வைத்திருக்கும் சில பொருட்கள் தற்காலிகமனவை, இவ்வுலகில் அதற்கு மதிப்பிருக்கலாம், ஆனால் அதனை வின்னரசிற்காக உபயோகப்படவில்லயென்றால், அவையெல்லாம் மதிப்பில்லாதவை தான்.
உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்று கூறுகிறது. தவறான முத்துக்களையும், வீனாய் போன மீன்களையும் நாம் களைந்து தூக்கி எறிந்தால் தான் நாம் கடவுளை போல் ஆக முடியும். நாம் வின்னரசிற்கு உபயோகமாக இருக்க முடியும். இரக்கமுள்ள கடவுளின் கைகளில், ஆற்றல் மிகுந்த கடவுளின் கைகளில் நாம் இருக்கும் பொழுது, நமக்கு கெட்டது நடந்தால் கூட, அது நமது நல்ல முத்துககளை மிண்ன செய்யும், நம்மிடம் உள்ள நல்ல விசயங்களை வெளியே காட்டும்.
முதல் வாசகத்தில், சாலமன், கடவுளிடம் அதிகம் சொத்துக்களும், பொன்னும் பொருளும் கேட்டிருக்கலாம், கடவுளும் கொடுத்திருப்பார். ஆனால், அதற்கு பதிலாக சாலமன், புரிந்து கொள்ளும் இதயத்தையும், ஆற்றலையும் கேட்டார். அதன் மூலம் அவர் ஞாணம் பெற்று அதனால், நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யமுடியும். அவர் அட்சி அவ்வளவு சரியாக செய்யாமல் இருந்தாலும், மிகவும் ஞானமுள்ள , அறிவும் நிறைந்த மன்னர் என்று உலகம் முழுதும் பேசியது. அதன் மூலம் அவர் பல செல்வங்களை பெற்றார்.
கடவுளரசின் செல்வத்தை முதலில் நாம் தேடினால் தான், இவ்வுலகின் பொருட்களை நாம் பாதுகாப்பாக உபயோகிக்க முடியும் என்று இந்த கதை சொல்கிறது. எவ்வளவு அதிகமாக நாம் கிறிஸ்துவை அன்பு செய்து, அவர் வழியில் செல்கிறோமோ, அப்போது தான், எது உண்மையான மதிப்புடையது என்பது நமக்கு தெரியும். நம்மால், கடவுளுக்கு ஆகாத குப்பை பொருள் என்ன என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும். மேலும் வின்னரசிற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் உபயோகிக்க முடியும்.

Subscribe to:
Posts (Atom)