Friday, May 18, 2012

மே 20, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 20, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 7ம் ஞாயிறு

Acts 1:15-17, 20-26

Ps 103:1-2, 11-12, 19-20
1 John 4:11-16
John 17:11b-19


யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 17

11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.12 நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.13 ' இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். '
(thanks to www.arulvakku.com)


விசுவாசத்தில் நம்மை எல்லாம் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் ஒன்றாய் இனைப்பது எது? ஒரே கடவுளை, இயேசு கிறிஸ்துவை யாரெல்லாம் அன்பு செய்து, அவரை பின்செல்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றாய் இருக்கிறார்கள்.

நம்மில் பல வேற்றுமைகள் இருக்கலாம், ஆனாலும், ஒன்றாய் இருக்கிறோம். கடவுளுக்கு சேவை செய்பவர்களுக்குள், கோவிலில் வேலை செய்பவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம், ஆனலும் ஒற்றுமை இருக்கிறது. கத்தோலிக்கர்களிடமிருந்து, பிரிந்த புராடஸ்டன்டு கிறிஸ்தவர்கள் நம்மிலிருந்து வேறுபட்டு இருக்கலாம், இருந்தாலும், கிறிஸ்துவின் மேல் ஒரே நம்பிக்கையுடன் நாம் இனைந்து இருக்கிறோம்

இயேசு இந்த ஒற்றுமைக்காக வேண்டிக்கொண்டார், இதனை தான் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். நாம் அவரின் வேண்டுதலை நிறைவேற்றுகிறோமோ? அல்லது அதற்கு எதிரான பாதையில் செல்கிறோமோ?

நம்மில் என்ன வேறுபாடு இருந்தாலும், கடவுளில் ஒன்றாக இருப்பது எந்த பாதிப்பையும் கொடுக்காது. நாம் கிறிஸ்துவை ஒன்றாக ஆராதிப்பதில் இனைந்து இருக்கிறோம். ஆராதனை வழிபாடுகள் வேறு மாதிரியாக இருக்கலாம், ஆனாலும், நாம் கிறிஸ்துவை கடவுளாக ஏற்று கொள்கிறோம். எல்லோரிடமும், ஒரே எண்ணத்துடன் கடவுளை வணங்குவது, நம்மில் பலருக்கு ஊக்கத்தையும் கொடுக்கிறது. ஒரே உடலில் உள்ள பல பாகங்களாய் இருக்கிறோம் , இருந்தும், ஒரு உறுப்புக்கு இன்னோரு உறுப்பு தேவையாக இருக்கிறது என்பதை நாம் ஏற்று கொள்ள வேண்டும், அதே போல், கிறிஸ்துவின் உடல் இப்பூமியில் நன்றாக வளர நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இனைந்து செயல்பட வேண்டும்.


இயேசுவின் ஒன்றாக இருப்பது, உலகில் மற்ற அனைத்திடமிருந்தும் பிரிந்து இருக்கிறோம். இறையரசில் , நாம் ஒன்றாய் இருக்கிறோம் அதனால், இவ்வுலகில் சாத்தானின் அரசிடமிருந்து வெளியே இருக்கிறோம். நமது பாவங்களை கழுவி , நமது ஒற்றுமையை இன்னும் உறுதியாக்க வேண்டும்

இயேசு அவரது தந்தையிடம், " உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது." என்று சொல்கிறார்.

எல்லோருமே, எந்த கிறிஸ்தவ பிரிவுகளில் இருந்தாலும், கிறிஸ்துவின் பின்பற்றுபவர்களும், அவரை அன்பு செய்பவர்களும், இறைசேவை செய்பவர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், திருக்குடும்பத்தை சேர்ந்தவர்கள். சிலுவையின் ஒரே பக்கத்தில் நாம் எல்லோருமே இருக்கிறோம், அது நித்திய வாழ்வையும், மீட்பையும் கொடுக்கும் சிலுவையாகும்.

எனினும், நாம் பாவத்தில் விழுந்தோமென்றால், இவ்வுலகம் நினைப்பது போல, நாமும் நினைத்து மற்ற கிறிஸ்தவர்களை கண்டித்தும், நிந்தித்தும், பரிகாசம் பன்னியும் இருந்தோமானால், இறையரசின் அன்பிலிருந்தும், நமது சகோதர சகோதரிகளிடமிருந்தும், நாம் பிரிந்து செல்கிறோம். இயேசு வேண்டிகொண்ட ஒற்றுமையை நாமே உடைக்கிறோம்.
© 2012 by Terry A. Modica


Friday, May 11, 2012

மே 13, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 13, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 15

9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12 ' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)




உண்மையான கிறிஸ்தவ வாழ்வில் பணியாளானாக இருப்பது  ஒரு குறிக்கோளாகும். இதனை இறுதி உணவில் இயேசு இன்னும் அழுத்தமாக நமக்கு குறிப்பிட்டு சொன்னார்பணிவிடை பெறுவதற்கு அல்ல, பணி செய்யவே இவ்வுலகிற்கு வந்தேன். அதே போல் நாமும் ஒருவருக்கு ஒருவர் பணிவிடை செய்ய வேண்டும். இறையரசின் பணியாளராக கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை நாம் அழைக்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தியிலோ, இயேசு நம்மை அவரின் நண்பர்களாக இருக்க அழைக்கிறார். அவரின் அடிமையாக அல்ல. அவரே மாற்றி பேசுகிறாரா?

அப்படி ஒன்றும் இல்லை! நண்பர்கள் ஒருவொருக்கு ஒருவர் மற்ற நண்பர்களுக்கு பணிவிடை செய்து கொள்வார்கள் ஏனெனில் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளனர். அடிமைகள் கடமைக்காகவும், தண்டனைக்கு பயந்தும் வேலை செய்வார்கள். இயேசு சொல்கிறார்: "எனது கட்டளைகளை கடைபிடித்தால், எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள்". இதனை நண்பனாக அல்லது அடிமையாக ஏற்று கொள்கிறீர்களா?
அடிமைகள், கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்காவிட்டால், என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார்கள். தன்னையே காத்து கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் நண்பர்களோ, மற்றவர்களை பற்றி அக்கறை கொண்டு, கடவுளின் கட்டளைகள் என்ன என்று தேடியும், அதன் மூலம் அன்பினால் பகிர்தலும், மற்றவர்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பாகவும் எடுத்து கொள்வார்கள்.

"இது என் கட்டளை: நான் உங்களை அன்பு செய்வது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்" என்று இயேசு கூறுகிறார். இது தான் எல்லா கட்டளைகளுக்கும் பெரிய கட்டளை; நட்பின் கட்டளை என்று நாம் சொல்லி கொள்ளலாம். மேலும் இயேசு: "நான் உங்களை எந்த அளவிற்கு அன்பு செய்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் நன்பரே: தந்தை கடவுள் எனக்கு என்ன சொல்கிறாரோ, அதை எல்லாவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்" என்று சொல்கிறார்அவரின் நண்பர்கள் இயேசு எதையெல்லாம் பகிர்ந்து கொள்கிறார் (நற்செய்தியின் மூலமாகவும் , திருச்சபையின் மூலமாகவும்) , அதன் மூலமாக அன்பை பகிர்ந்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு கட்டளையும் அன்பின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு போதனையும் , எப்படி, எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
நாம் கீழ்ப்படிய மறுக்கும்பொழுது, நாம் கடவுளின் அன்பை இழக்கிறோமோ? எப்பொழுதும் கிடையாது, அவரின் அன்பில் உள்ள இடத்தை இழக்கிறோமோ? ஆம். அவரின் கட்டளைகளை விட்டு நாம் வெளியே வாழ்கிறோம். அவர் நம்மை அன்பு செய்தாலும், நமக்கு அன்பு கிடைக்கவில்லையே என நாம் நினைக்கிறோம்.

இது தான் அடிமை தனம். தவறான நம்பிக்கைகளாழும், நமக்கு ஏற்பட்ட காயங்களாலும், பயத்தினாலும், நமக்கு முழுமையான அன்பு கிடைக்க வில்லை என நினைக்கிறோம்அதனால், கடவுளின் கட்டளைகள் நம்மை ஒரு எல்லைக்குள் வைப்பதாக நினைக்கிறோம், அதனை விட்டு வெளியே வரும்போது, அதனை எதிர்ப்பதாக ஆகிவிடும். அதனை எதிர்க்காதவர்கள், கடவுளின் அன்பை பெறுவதற்காகஅவரின் கட்டளைகளை ஏற்று கொண்டு, அவரின் அடிமையாக இருப்போம். நண்பர்கள், மாறாக, கடவுள் எப்பொழுதும் அன்பு செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அந்த அன்பில், ஒருவருக்கொருவர் அன்பு செய்து, மற்றவர்களுக்கு சந்தோசமாக சேவை செய்வார்கள்.

© 2012 by Terry A. Modica

Friday, May 4, 2012

மே 6, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 6, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 5ம் ஞாயிறு

Acts 9:26-31
Ps 22:26-28, 30-32
1 John 3:18-24
John 15:1-8

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 15

இயேசுவே உண்மையான திராட்சைச் செடி
1 ' உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் பார்ப்பது போல், நல்ல கணி கொடுக்கும் திராட்சை செடியாக, கிறிஸ்துவோடு இனைந்து இருக்கிறோம். இயேசுவும் ஒரு திராட்சை கொடி, அவரோடு நாமும் இனைந்து இருப்பதால், நாமும் அவரை போலவே அழைக்க பட்டிருக்கிறோம். நாமும் நல்ல கனிகளை தரவேண்டும். இயேசு கொடுத்த அதே கனிகளை தரவேண்டும்.


எனினும், நம்மில் பலர், இது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்து கொள்வதில்லை! கிறிஸ்துவின் கனிகளை கொடுப்பதை  நிதர்சனம் செய்யாமல் அதனை முக்கிய கடமையாக எடுத்து கொள்ள வேண்டும். தற்காலத்தில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள், சாதாரண கிறிஸ்தவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். கிறிஸ்தவர்களாக இருப்பதால் நமக்கு ஒரு நிறைவு இருக்கிறது. சில மனிதர்களுக்கு மட்டும், இரக்கத்தையும், தாராள குணத்தையும், அன்பையும் கொடுப்பதால், கடவுள் நம் செயல்களினால் திருப்தி அடைந்துவிட்டார் என நாம் நினைக்கிறோம்.
ஏன் இவ்வுலகில் அதிக கெட்டதும்  , தீமைகளும் நடக்கின்றன? என்ற கேள்வியை கேட்டதுண்டா? போரை அடக்கியும், ஊழலை ஒழித்தும், மிகப்பெரிய பனக்காரர்களின் கொட்டங்களை அடக்கியும், கடவுள் இவ்வுலகில் அமைதியை நாட்டவில்லை? என்ற கேள்வி நமக்கு எழலாம். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிரான சட்டங்களையும், கிரிமினல் குற்றங்களையும், ஏன் கடவுள் நிறுத்துவதில்லை என்ற கேள்வியும் நமக்கு எழுகின்றது
ஏன் கடவுள் ஏதாவது செய்வதில்லை?
கண்டிப்பாக அவர் செய்கிறார்! எனினும், திராட்சை செடிகளை வளர்ப்பது போலவே செய்கிறார். திராட்சை கொடிகள் ஒவ்வொரு கொடியாக சென்று கிளை கிளையாக கனிகள் கொடுப்பது போல நாமும் மற்ற கிறிஸ்தவர்களும் கனிகளை கொடுக்க வேண்டும். கிறிஸ்துவின் கொடியிலிருந்து நாம் சக்தியை பெற்று நாம் கனிகளை கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கனிகள் அந்த கொடியிலேயே இருக்க கூடாது.


இவ்வுலகிற்கு கொடுப்பதற்காக கிறிஸ்து பல பழங்களை உங்கள் மூலம் கொடுக்கிறார். இன்னும் பலத்துடனும், சக்தியுடனும், நமது கிளைகளை படர விட்டு, கிற்ஸ்துவிடம்  நாம் பெற்ற அத்தனையையும் மற்றாவர்களிடம் பகிர வேண்டும்.
ஓரளவிற்கு கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் இவ்வுலக இறைசேவையை செய்தால், தீமைகளை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர முடியும். தீமையின் மேல் வெற்றியை கிறிஸ்து கொண்டு வருவார். இவ்வுலகில் புனிததன்மை, கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியின் மூலம்  நாம் பெற்று , நம் புனித தன்மை மூலம் இவ்வுலகை புனிதமாக்குவோம்.

© 2012 by Terry A. Modica