Friday, March 15, 2013

மார்ச் 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
Isaiah 43:16-21
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11
யோவான் நற்செய்தி
அதிகாரம் 8 (1-11)
1 (இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,4 ' போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர்.6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ' உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்று அவர்களிடம் கூறினார்.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.10 இயேசு நிமிர்ந்து பார்த்து, ' அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? ' என்று கேட்டார்.11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம், 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, மிகவும் தாழ்ந்த நிலையில் சமூகத்தில் உள்ளவர்களை எப்படி கையாளவேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது. வாழ்வதற்கே தகுதியில்லாதவர் என சமூகத்தால் ஒதுக்கிவிடப்படுபவர் ஒருவர் இன்று கிறிஸ்துவின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுள்ளார். ஆனுக்கு கீழாக மதிக்கப்படும் பெண்களில், இப்பெண் இயேசுவின் இரக்கத்தை பெற்ற முதல் பெண்ணாகிறாள். அவள் ஒரு பாவி, அதனால் அவருக்கு தண்டனை கொடுக்கபடவேண்டும். அவளை கண்டித்த அனைவரையும் ஒரே ஆளாக எதிர் கொண்டு இருந்தாள். இதனை விட ஒருவர் எவ்வளவு தாழ்ந்து விட முடியும்.?

முக்கியமானவராக இல்லாமல், அல்லது தனித்து விடப்பட்டவராக எப்பொழுது எல்லாம் நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்? உங்களை சமூகமே கண்டித்த தருணங்கள் இருந்திருக்கலாம். மேலும், நீங்கள் யாரையாவது, அவர்கள் முக்கியமற்றவர்களாக நினைத்து ஒதுக்கியிருக்கிறீர்களா? இதுவும் சரியே, நம்மில் யாரும் முதல் கல்லை எறிய முடியாது.

இன்றைய திருச்சபையில், நிறைய பேர் ஒதுக்கி வைக்கபட்டும், மறக்கடிக்கபட்டும் இருக்கிறார்கள். நமக்கு அவர்களில் சிலரை தெரியும். அவர்களின் தனிமை நமக்கு தெரியாமல் போகிறது. நாம் நம் கடைமைகளில் மூழ்கியிருக்கும்போது, அதனிடையே, நாம் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நமக்கு அது ஒரு உற்சாகமான உணர்வை கொடுக்கிறது.  நாம் அவர்களோடு செலவிடும் நேரம், அவர்களின் தேவையைவிட பெரிதாக மதிக்கபடுகிறது. மேலும், நமது பங்கிற்கு இன்னும் ஒரு ஆள் கூடுகிறது, நம் சுகத்தை தியாகம் செய்வதால், திருச்சபை இன்னும் பலம் பெறுகிறது.

விவாகரத்தான கத்தோலிக்கர்களை எல்லோரும் கண்டிக்கிறார்கள் என்று அவர்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். திவ்ய நற்கருணையை கூட அவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். ஏனெனில், திருச்சபையின் சட்டத்தை அவர்களுக்கு தவறுதலாக புரியவைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் யாரும் அவர்களை அனுகி அவர்களை திருச்சபைக்கு கொண்டு வர முயல்வதில்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்க்களை திருச்சபையில் நிறுத்தினாலும், பெரியவர்களுக்கு எதிரான அநீதியை யாரும் சட்டை செய்யவில்லை. ஏனெனில், அதனை யாரும் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.

சில நேரங்களில் சமயம் சாராத நிறுவனங்கள் சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளவர்களை அனுகி அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதே போல், அவர்களை அனுகி , அவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பது, இத்தவக்காலத்தின் முக்கிய செயலாக இருக்ககூடும்.

© 2013 by Terry A. Modica

Friday, March 8, 2013

மார்ச் 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மார்ச் 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
Jos 5:9a, 10-12
Ps 34:2-7
2 Cor 5:17-21
Luke 15:1-3, 11-32

லூக்கா நற்செய்தி
காணாமற்போன ஆடு பற்றிய உவமை
(மத் 18:12 - 14)
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
காணாமற்போன மகன் உவமை
11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '
(thanks to www.arulvakku.com)

கடவுளின் அன்பையும், நிபந்தனையற்ற மன்னிப்பையும் பெற யாரெல்லாம் தகுதி உள்ளவர்கள்? ஒவ்வொரு திருப்பலியிலும் “ஆண்டவரே உன்னை பெற நான் தகுதியற்றவன், என்றும் மேலும், “ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்” என்று சொல்கிறோம். இயேசு இன்றைய நற்செய்தியில் நாம அனைவருமே தகுதியானவர்கள் என்று காட்டுகிறார். நாம் செய்யும் செயல்களால் அல்லாமல், இயேசு சிலுவையில் செய்த தியாகத்தினால் நாம் கடவுளின் மன்னிப்பை பெறுகிறோம். இயேசு சிலுவையில் நம் பாவங்களை ஏற்று கொண்டு, சிலுவை மரணம் அடைந்து, நாமும் அவரோடு உயிர்த்தெழுந்து,  நிலைவாழ்வுடன் ஈஸ்டரில் கடவுளொடு இனைவோம்.

இன்றைய நற்செய்தியில் வரும் நீதிகதையில், மகன் தந்தையிடம் திரும்பி வந்ததாலோ, அல்லது மகன் மனம் திருந்தியதாலோ, தந்தையின் அன்பை பெற தகுதியுள்ளவானாக ஆகிவிடவில்லை. மாறாக, தந்தை அவன் மேல் கொண்டுள்ள அன்பினால் தான் அவனை வரவேற்றார்,. தந்தை மகன் மேல் அன்பு கொண்டிருந்தார். மகன் வெகு தூரத்தில் இருக்கும்போதும், அவன் மேல் அன்பு கொண்டிருந்தார். அவன் பாவ வழியில் செல்லும்பொழுதும் அவன் மேல் தந்தை அன்பு கொண்டிருந்தார்.

நிபந்தனையற்ற, விசுவாசமான தந்தையின் அன்பை, மகனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார், ஆனால் மகனோ, அதனை நிராகரித்து விட்டார். மகன் தந்தைக்கு கொடுத்த அன்பளிப்போ, தந்தையிடம் திறந்த மனதுடன் திரும்பி வந்து, தந்தை அவன் மேல் கொண்ட அன்பை, எப்பொழுதும் இருக்கு அன்பை பெற்று கொள்வது தான்.

ஒவ்வொரு திருப்பலியிலும், இந்த ஊதாரியான மகனை போல தான் நாமும் கோவிலுக்கு செல்கிறோம். அந்த வாரம் முழுதும்,  நல்ல கிறிஸ்தவர்களாக நாம் இருந்திருந்தாலும், நாம் பாவியாக தான் கோவிலுக்குள் செல்கிறோம். ஏதோ ஒரு தருணத்தில், கடவுளின்  நிபந்தனையற்ற முழுமையான அன்பை நாம் நிராகரித்திருக்கிறோம். அதனை நாம் மற்றவர்களிடம் பகிராமல் கூட இருந்திருக்கலாம். அதனால் தான், திருப்பலியின் ஆரம்பத்தில், நாம் நமது பாவத்தை மன்னிக்க வேண்டுகிறோம். இந்த மன்னிப்பு கோரும் வாய்ப்பை மனப்பூர்வமாக உளமார பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அடுத்ததாக, நாம் இறைவார்த்தையை கேட்கிறோம். இறைவார்த்தைகள், கடவுளடான நமது உறவில் உள்ள காயங்களை ஆற்றுகிறது. ப்ரசங்கம் இதனை இன்னும் மேன்மைபடுத்துவதாக தயாரிக்கபடவேண்டும். அப்படி இல்லை என்றாலும், இயேசு பரிசுத்த ஆவியின் மூலம் நம்மிடையே பேசுகிறார். உங்கள் இருதயத்தை கவனியுங்கள், வார்த்தை உருவானவர், இயேசு உங்கள் கோரிக்கையை ஏற்கனவே கேட்டு, அதற்கு பதிலை கொடுக்க தயாராகிவிட்டார். அவரின் நற்செய்தி உங்களை குணமாக்குகிறது.

காணிக்கை நிகழ்ச்சியில், நாம் நம்மையே தந்தை கடவுளிடம் அர்ப்பணிக்கிறோம். இந்த தருணத்தில் நாம் அவரிடம் சரணடைகிறோம்: “உங்கள் மகன் என்று அழைக்க நான் தகுதியற்றவன், உங்கள் விருப்பம் போல என்னை என்ன செய்ய வேண்டுமோ அதன்படி செய்யுங்கள்” என்று அவரிடம் மன்றாடுகிறோம்.  நம் முழுமையான வாழ்க்கைக்கு கடவுளின் விருப்பம் என்ன? நம்மிடம் உள்ளதை கொடுத்தும், அவரிடம் பெற்றுகொள்வதுமாக நம் உறவு கடவுளோடும் , அவரின் குடும்பத்தோடும் இருக்க வேண்டும். அந்த குடும்பம், இந்த திருச்சபை. (சிலர் நேரடியாக திவ்ய நற்கருணை பெற முடியாமல் இருந்தால், அவர்கள் ஆவியுடன் இணைவார்கள்).

© 2013 by Terry A. Modica

Friday, March 1, 2013

மார்ச் 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி,
13:1-9
மனம் மாறாவிடில் அழிவு
1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.

காய்க்காத அத்திமரம்
6 மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7 எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8 தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9 அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். ' 
(thanks to www.arulvakku.com )

சிலர் மிகவும் புன்படுத்துபவர்களாயும், மோசமானவர்களாகவும், அநியாயமாகவும் இருப்பவர்களுக்கு, சில நேரங்களில், மிக பெரிய அடி விழுந்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இயற்கையாக நியாய தீர்ப்பு கிடைத்துவிட்டது என்றும், அவர்களை விட்டு விலகியே இருப்போம்.

இதனை இந்த வார நற்செய்தியில், குறிப்பிடுகிறார். யாரையும் மிக பெரிய பாவி என்று நாம் சொல்லிவிட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார். நம்மைவிட மிக பெரிய பாவம் அவர் செய்தாலும், கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்தாலும், சாத்தானின் வேலைகள் செய்தாலும், அவர் ஒன்றும் நம்மை விட பெரிய பாவி இல்லை.

ஒவ்வொருவரும் கடவுளை போல படைக்கபட்டிருக்கிறார்கள். மிகவும் மோசமானவர்கள் கூட கடவுளை போல உருவாக்கபட்டிருக்கிறார்கள். கடவுளுக்கு எதிர்மாறாக செயல்கள் செய்தாலும், அவர்களையும் இயேசு அன்பு செய்கிறார். அவர்களுக்காகவும் சேர்த்து தான் இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் மரணமடைந்தார். கடவுள் எப்படி படைத்தாரோ, எதற்காக படைத்தாரோ, அதற்கு மாறாக, நடந்து கொள்வது என்பது, மிகபெரிய துயரமான விசயம். மேலும், யாரும் அவர்களை கிறிஸ்துவின் அன்பான வாழ்விற்கு அழைப்பு விடுக்காவிடில், அது இன்னும் துயரமாகும். கிறிஸ்து அவர்களை அன்பு செய்தது போல, நாமும் அவர்கள் மேல் அன்பு காட்டி, அரவனைக்க வேண்டும்.

யாருமே தீயவர்கள் கிடையாது. தியவற்றை செய்பவர்கள், கடவுளின் குழந்தைகள், ஆனால், அவர்கள் யார் என்ற உண்மையை அறியாதவர்கள். சாத்தானின் சூழ்ச்சியில் விழுந்தவர்கள், மேலும் இப்படி தீயவற்றோடு வாழ்வது நல்ல வாழ்வு என்று மயக்கப்பட்டிருக்கிறார்கள். பாவமில்லாத தூய இயேசு நம்மையெல்லாம் மீட்டு, அதன் பொருட்டு நம் பாவங்கள் மன்னிக்கபடும் என்பதை இன்னும் அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அவர்கள் வாழ்வில் நடக்கும் துயரங்களுக்காகவும், அவர்கள் ஆண்மாவிற்காகவும், இயேசுவை போல நாம் துயரமடைய வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் உள்ளம் உடையும் பொழுது, அவர்களுக்காக நாம் துக்கபடாமல், கண்டு கொள்ளாமல், இருக்கும்பொழுது நாம் பாவம் செய்கிறோம். சிலுவையில் இயேசு என்ன செய்தாரோ அதனை நாம் மதிக்காமல் நடந்து கொள்கிறோம். நாம் நம் ஆண்மாவிற்கு சேதம் விளைவிக்கிறோம்.

உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், இன்றைய நற்செய்தியில் வரும் அத்திமரத்தை போல. உங்களால் அவர்களை அனுக முடியும் என்றால், அவர்களது ஆண்மாவை தயார் செய்ய இயேசு அழைக்கிறார். அவர்கள் ஆண்மாவிற்கு உரமிடவும், உற்சாகபடுத்தவும் உங்களை இயேசு அழைக்கிறார். அவர்கள் மேல் அன்பையும், நற்செய்தியையும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவர்கள் தயாராய் இருக்கும் பொழுது உங்கள் வார்த்தைகளால், அன்பினையும் நல்வழியையும் காட்டுங்கள். சாந்தமாகவும், கட்டாயமாகவும், சரியான வழியில் செல்ல அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.

கவனமாக கேட்டு கொள்ளுங்கள், இயேசு உங்களை ஒன்றும், நோயாளியையோ, பாவம் செய்பவர்களையோ, நிரந்தரமாக உங்களோடு வைத்து கொள்ள சொல்லவில்லை. நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பும், தீயவர்கள் மாறவில்லை என்றால், நம் தோட்டத்திற்கு நாம் செய்யும் முதல் வேலை, அந்த மரத்தை வெட்டுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களிடமிருந்து விலகி செல்வது, சரியான அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அவர்களை கொண்டு சென்று அவர்களின் தீய நடவடிக்கைகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது. இதனையும் அன்புடன் செய்ய வேண்டும். கீழே விழுந்த மரம் கூட மக்கி போய் உரமாக மாறி புதிய செடிகளுக்கும், மரங்களுக்கும் புத்துயிர் கொடுக்கும்.
© 2013 by Terry A. Modica

Friday, February 22, 2013

பிப்ரவரி 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு
Gen 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17–4:1
Luke 9:28b-36
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1 - 8; மாற் 9:2 - 8)
28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று,  இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்  என்று ஒரு குரல் ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(Thanks to www.arulvakku.com)


இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் என்று கடவுள் கூறியதையும், இயேசு , அவரின் உண்மையான கடவுள் என்பதையும் இன்றைய நற்செய்தியில் நமக்கு காண்பிக்கபடுகிறது.

உண்மையான கிறிஸ்துவை ஒவ்வொரு முறை அவரின் நற்செய்தியை கேட்கும்பொழுதும், பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்த அனுமதிக்கும் போதும், நாம் அறிந்து கொள்கிறோம்.

இதுவரையிலும் பார்க்காத ஒளியை கொண்டு, நம்மிடம் இன்னும் இருக்கும் தீயவற்றை முழுதுமாக எடுத்து கொள்ள, நாம் இயேசுவின் நற்செய்தியை கேட்க வேண்டும். அதன் மூலம் நம்மில் உள்ள தீயவற்றை அழிக்க நாம் அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதன் பிறகு, நம்மை சுற்றியுள்ளவர்கள், இயேசுவை நம்மிடமிருந்து அனுபவிப்பார்கள். ஏனெனில் இயேசுவை நம்மில் கான்பார்கள். நமது செயலிலும், இரக்கத்திலும், மன்னிப்பிலும் கான்பார்கள். இதன் மூலம் நாம் இயேசுவை இவ்வுலகிற்கு காட்டுகிறோம்.


தவக்காலத்தில், கிறிஸ்து நம் மேல் ஒளியை நிரப்பி நம் தீயவைகளை அழிக்க அதிகம் நாம் கிறிஸ்துவை நோக்கி ஜெபிக்கவேண்டும். நம்மில் அவர் ஒளி பட்டால் தான் நாம் மனம் திருந்த முடியும். மன்னிப்பை கேட்டு பெற்று, பரிசுத்த ஆவியின் ஆற்றலால்,   நாம் மனம் திரும்ப முடியும். அதே போல் கிறிஸ்துவை போல மாற முடியும். கிறிஸ்துவோடு இனைந்து நாம் இன்னும் ஒளிருவோம். இவ்வுலகை மீட்கும் இயேசுவின் இறைசேவையில் முழுதுமாக இனைவோம். இந்த இறைசேவையில் கஷ்டம் இருந்தாலும், பெரிய வெள்ளியின் வலிக்கு பிறகு, ஈஸ்டர் அன்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது.

இந்த தியாகத்திலும், சோதனையிலும் – நமது சிலுவையும் – இவ்வுலகை பரிசுத்தமாக்குகிறது.  கல்வாரி வரைக்கும் இயேசுவோடு செல்ல தைரியாமக இருக்கிறீர்களா? ஈஸ்டருக்கு செல்ல அது ஒன்று தான் வழி.! நமது சோதனைகளில், கிறிஸ்துவின் இரத்தம் மீண்டும் சிந்துகிறது. நமது வலியெல்லாம், கிறிஸ்துவின் வலியாகும். இயேசுவோடு நாம் ஏற்கனவே சிலுவையில் இருக்கிறோம்!. ஏன் இதனை அப்படியே முழுமனதுடன்  நம்மை ஏமாற்றியவர்களுக்கும், துன்பபடுத்தியவர்களுக்காகவும் ஏற்று கொண்டால் என்ன.?

நம்மை அன்பு செய்யாதவர்களை நாம் அன்பு செய்வதாலும், நம்மை மதிக்காதவர்களை மன்னித்தும், சாத்தானை விரட்டி இறையரசை கொண்டுவர கடின உழைப்பு கொடுத்தும், இருளில் உள்ளவர்களுக்கு நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோம்.

© 2013 by Terry A. Modica

Friday, February 15, 2013

பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Deut 26:4-10
Ps 91:1-2, 10-15
Rom 10:8-13
Luke 4:1-13

லூக்கா நற்செய்தி

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1 - 11; மாற் 1:12 - 13)
1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.3 அப்பொழுது அலகை அவரிடம், ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது.4 அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,6 அவரிடம், ' இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது.8 இயேசு அதனிடம் மறுமொழியாக, ″ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.9 பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;10 ' உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும்11 ' உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது.12 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ″ என்றும் சொல்லியுள்ளதே ' என்றார்.13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.
(thanks to www.arulvakku.com)

நாம் நமது விசுவாசத்தில், மனப்பூர்வமாக இருந்தால்,  இயேசுவின் வாழ்வு தான் நம் வாழ்வாக இருக்கும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெற்று கொண்டும், நாம் அவரோடு இனைகிறோம். நற்செய்தி வாசகம் மூலம், அவரை பார்த்து, அவரோடு மோட்சத்திற்கு செல்கிறோம்.

இந்த தவக்காலத்தில், திருச்சபை ஒவ்வொரு திருப்பலியிலும் கொடுக்கும் நற்செய்தி வாசகங்கள், நமது பயணத்தை செம்மை படுத்த உதவுகிறது. அதனை முழு மனதோடு கேட்டு, அதனை நம் வாழ்வோடு ஏற்று கொண்டால், நாம் கிறிஸ்துவோடு இனைகிறோம்.

இன்றைய நற்செய்தியில்,  நாம் இயேசுவோடு பாலைவனத்திற்கு செல்கிறோம். சோதனைக்குள்ளான உங்கள் ப்ரச்சினைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாவங்கள் உங்களை வாழ்வை எப்படி பாலைவனமாக்கியது என்று நினைத்து பாருங்கள்.

இயேசுவோடு நாம் இனைந்து நடக்கும்போது, அவரின் சாத்தானின் போராட்டத்தோடு,  துன்பத்தோடு நம்மை இனைத்து கொண்டு, சாத்தானை வெற்றி கொள்கிறோம். நமது சோதனைகள், தவறு செய்ய தூண்டும் உணர்வுகள், இயேசுவினுடையதாகிறது. மேலும் அவரோடு இனைந்து நாம் இருப்பதால், நமது சோதனைகள் அவருடையதாகவும் ஆகிறது. அவரோடு இனைந்து, நாம் சாத்தானை ஒதுக்கி, பரிசுத்த வாழ்வில் இருக்கிறோம். சுய கட்டுபாடுடனும் இருக்கவும், சுய நலத்தை விரட்டி அடிக்கவும், திருச்சபை இந்த தவக்காலத்தில் நமக்கு உதவுகிறது: விரதமிருத்தல், மற்றவர்களுக்கு உதவுவது, மனம் திரும்புதல், விசுவாச முனைப்பு,  பாவங்களை தவிர்த்து வாழ்தல், நற்செய்தி வாசகங்களை வாசித்தல், இன்னும் பல.

ஒவ்வொரு முறை நாம் உணவை தவிர்த்து, ஒவ்வொரு பாவத்தை நாம் பாவ சங்கீர்த்தனத்தில், கூறி மனம் திரும்புவதும், ஒவ்வொரு தியாகமும், அதிகரிக்கும் ஜெபங்களும், நற்செய்தி வாசகங்களும், நாம் அனுதின வாழ்வை சுய கட்டுபாடுடனும், அழைத்து சென்று இயேசுவோடு இந்த பாலைவனத்தில் நம்மை இனைக்கிறது.

சாத்தானோடு உண்டான சோதனையில் ,இயேசு உணவை தவிர்த்தார், உடல் அசதியின்றி ஜெபத்தில் ஈடுபட்டார். அதன் மூலம், இந்த தவக்காலத்தின் பின்பு வந்த இறைசேவையில், திடத்துடன் அவரால் ஈடுபட முடிந்தது. இதே போல தான் நமக்கும் இந்த தவக்காலம் இருக்க வேண்டும்.
சாத்தானை பார்த்து நாம் பயம் கொள்ள வேண்டியதில்லை. இயேசு ஏற்கனவே அவர்களை  நமக்காக தோற்கடித்துவிட்டார். முதலில் பாலைவனத்திலும், பிறகு சிலுவையிலும் சாத்தானை தோற்கடித்து விட்டார்.  நமது போராட்டமோ, நம்மை தவறு செய்ய தூண்டும். உணர்வுகளுடனும், நமது பலவீனங்களுடனும், பாவத்தில் விழாமல் இருப்பதற்கும் நாம் போராட வேண்டியுள்ளது  

எப்பொழுதுமே நாம் இயேசுவை பின் செல்ல விரும்புவதில்லை. இதனை தான் இயேசுவிடம் இந்த தவக்காலத்தில் அர்ப்பனித்து விட வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஈஸ்டர், நமக்கு அத்தமுள்ளதாய் இருக்கும். இந்த தவக்காலத்திலிருந்து நாம் ஆற்றலுடனும், உறுதியுடனும் நம் விசுவாசத்தோடு வருவோம்.
© 2013 by Terry A. Modica

Friday, February 8, 2013

பிப்ரவரி 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



பிப்ரவரி 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Cor 15:1-11
Luke 5:1-11

லூக்கா நற்செய்தி (5:1-11)

முதல் சீடரை அழைத்தல்
(மத் 4:18 - 22; மாற் 1:16 - 20)
1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் 'என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
(thanks to www.arulvakku.com)
அடிக்கடி, கடவுள் நாம் கேட்காததை கூட நமக்கு கொடுத்து உதவுகிறார். இன்றைய நற்செய்தியில், இராய்ப்பருக்கும்,ஜேம்சுக்கும், ஜானுக்கும்,  இயேசு அப்படிதான் செய்தார். அங்கே அதிக மீன்களை பிடிக்க உதவினார்.
இயேசுவின்  நோக்கம் என்ன? அவர்களின் படகை இயேசுவுக்கு கொடுத்ததால், இயேசு பதிலுக்கு அவர்களுக்கு நன்மை செய்தாரா? இயேசு உங்களுக்கும் சன்மானமாக கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா?

ஆம், இது சன்மானம் அல்ல. அது மிக பெரிய விசயம்.
நற்செய்தியில், உள்ள கதையை ஒவ்வொன்றாக பார்ப்போம்:
1.   முதலில், மீனவர்களுக்கு இயேசுவை முன்பே தெரியும்; அவர்கள் இயேசுவை “போதகரே” என்று அழைத்தனர். ஏனெனில், அவர்கள் இயேசுவின் சீடர்களாய் இருந்தனர்.
2.   இரண்டாவதாக, இயேசு அவர்கள் எதிர்பார்க்காமலேயே அவர்களுக்கு உதவி செய்தார்.
3.   மூன்றாவதாக, இயேசு அந்த அன்பளிப்பை, அவர்களின் அழைத்தலுக்கானதாக மாற்றினார்.
4.   நான்காவதாக, சீடர்கள் அவர்களுடைய  அனைத்தையும் விட்டு விட்டு, அந்த அழைத்தலுக்கு ஆயத்தமானார்கள்.

கடவுள் நம் வாழ்வில் தலையிடுகிறபொழுது, நம் நன்மைகளுக்காகவும், மற்றவர்களின் நமன்மைகளுக்காகவும் அவர் நமக்கு நல்லது செய்கிறார். நாம் சமூகத்தில் இனைந்து இருக்கிறோம். கடவுள் குடும்ப சமூகத்தில் இருக்கிறோம். தனியாக கடவுளோடு நாம் இனைந்து இருக்க முடியாது. கடவுளோடு ஜெபத்திலும், திவ்ய நற்கருணையிலும், வேண்டுதலிலும், நாம் கடவுளிடம் இருக்கும்பொழுது, மற்றவர்களோடு இனைந்து, , அவர்கள் மேல் அக்கறையோடும், அவர்களின் நலனுக்காகவும் நாம் ஜெபித்து இறையோடு இனைவோம்.
நமக்காக நாம் வேண்டும் ஜெபத்தை கடவுள் கொடுக்காமலிருப்பதும், நம் நன்மைக்கே.  கடவுள் எப்பொழுதுமே பெரிதாக தான் பார்ப்பார். எல்லோரையும் கவனித்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அவர் நன்மை செய்வார்.

உங்கள் மன்னிப்புக்கு கடவுள் செவி சாய்க்காத மாதிரி நமக்கு தோன்றும். ஏனெனில், அவர் மிக பெரிய திட்டத்திற்காக தயார் செய்து வருகிறார். மற்றவர்களுக்கும் சேர்த்து நீங்கள் கேட்ட உதவி எப்படி அவர்களுக்கும் பயன் தரும் என்று எல்லாவற்றையும் சேர்த்தே திட்டமிடுகிறார்.

உங்களின் தேவைகளையும், ஆசைகளையும் அறிந்து கடவுள் உங்கள் மேல் அக்கறை கொள்கிறார். அதே போல் மற்றவர்கள் மேலும் அக்கறை கொள்கிறார். அவர்கள் அனைவரும் கடவுளிடம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்கள் அனைவர் மேலும் அக்கறை கொள்கிறார். மேலும், உங்கள் தேவைகளை இறைசேவையின் அழைத்தலாக மாற்றுகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், உதவியாக கடவுளிடம் கேட்க ஆரம்பித்தவுடன், கடவுளின் உதவியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறார். நம்மை தாண்டி மற்றவர்களுக்காக நாம் யோசிக்க ஆரம்பித்த உடன், நமது ப்ரச்சினைகள் முடியும் மட்டும், அதனை தாங்கி கொண்டும், அதிலே, நாம் அமைதியையும், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கைவிடாமல் பெறுதல் வேண்டும். இது தான் நாம் அனுதினம் செய்ய வேண்டிய இறைசேவை ஆகும்.
© 2013 by Terry A. Modica


Friday, February 1, 2013

பிப்ரவரி 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Jer 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Cor 12:31 – 13:13
Luke 4:21-30


21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியை கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமானால், இயேசு போன  வாரம் உள்ள நற்செய்தியை வாசித்து முடித்து (' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்) , தொழுகை கூடத்தில் உள்ளவர்களிடம் , நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார். மேலும் அவர்கள் இயேசுவை பற்றி மிக உயர்வாக பேசினர். ஆனால், அந்த நற்செய்தியின் முடிவில்,  கடம் கோபம் கொண்டனர்.  எது அவர்களின் குணத்தை மாற்றியது?


அவர்களின் வியப்பு, அச்சம், “ஜோசப்பின் மகன் அல்லவர் இவர்? “ என்று பேசிகொண்டு இன்னும் குழம்பினர்.  புதிதாக இயேசுவை பார்த்தவர்களை விட, இயேசு குழந்தையாக இருந்தபோதே பார்த்து வந்த இவர்களுக்கு இயேசு வேறாக தெரிந்தார்.  தச்சு தொழில் செய்த போது, கையில் காயம்பட்டு இரத்தம் சிந்தின இளைஞன் இயேசுவையும், அவர் தந்தை சூசை இறந்தபோது அழுத இயேசுவையும் இவர்களுக்கு தெரியும்.


அவர்களது குணம், இயேசு சொல்வதை பரிசுத்த ஆவியின் துனையின்றி கேட்ட பொழுது, மாறியது. ஏனெனில், அவர்கள், ஏற்கனவே அறிந்த்திருந்த யேசுவின் மேல் ஒரு பிம்பத்தோடு அத்தனையும் கேட்டனர். அதனால் தெய்வீக உணர்வு அவர்களை விட்டு போய்விட்டது. அங்கே தெய்வத்துடன் உள்ள தொடர்பு அறுந்து விட்டது.


உங்களை ஒருவர் , அவர் எதிர்பார்ப்பது போல் நீங்கள் நடந்து கொள்ளாமல், வேறு மாதிரியாக நடந்து கொண்டால்,  நிச்சயம் அவர் குழம்பி விடுவார். உங்களை மிகவும் இளையவர் என்றோ, அல்லது, மிகவும் முதியவர் என்றோ, அவர்கள் நினைத்து அதற்கு மாறாக நீங்கள் நடந்து அல்லது, தகுதியான கல்வி அறிவை பெறாமல் இருந்து , அல்லது அவர்கள் என்ன கேட்க ஆசைபடுகிறார்களோ அதனை சொல்லாமல் இருப்பதும், அவர்களை குழப்பி மிகவும் உங்களுக்கு எதிராக கோபமடைய செய்கிறது.


நாம் அவர்கள், நம்மை நம்பவேண்டும் மற்றும், பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் நம்மை நம்பவில்லையெனில், நம்மை ஆச்சரியபடுத்தி, மேலும் நம்மை குழப்புகிறது, அதனால்,  நாம் உணர்ச்சி வயப்பட்டு அவர்கள் மேல் கோபம் கொள்கிறோம். ஆனால், இயேசுவை அவர்கள் இவ்வாறு நடத்தியபின்பு,  இயேசு எப்படி நடந்து கொண்டார்? பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால்,  பொறுமையாக இயேசு உண்மையை பேசினார். உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது செய்தாரா? கண்டிப்பாக, ஏனெனில், அவரும் மனிதனாக தான் இருந்தார். கடவுள் நம்மை படைக்கும்போது  உணர்வுகளுடன் தான் படைத்துள்ளார். நாம் பரிசுத்த ஆவியின் துனையில்லாமல் கேட்கும்பொழுது தான், நமக்கு ப்ரஸ்னை ஏற்படுகிறது.


© 2013 by Terry A. Modica