Friday, August 8, 2014

ஆகஸ்டு 1௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 1௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:9a, 11-13a
Psalm 85:8-14
Romans 9:1-5
Matthew 14:22-33

மத்தேயு நற்செய்தி

கடல்மீது நடத்தல்
(
மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர்.27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் என்றார்.28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார்.29 அவர், ' வா என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் என்று கத்தினார்.31இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார்.32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.
(Thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு ரொட்டி துண்டுகளையும், மீனையும் பல மடங்காக்கிய புதுமையை நிகழ்த்திவிட்டு, தனியே ஜெபம் செய்ய செல்வதை பார்க்கிறோம்.
நீங்கள் மிக பெரிய விருந்தை முடித்து விட்டு, அல்லது மிக பெரிய செயலை செய்து விட்டு , சாதனை நிகழ்த்திவிட்டு , கஷ்டமான காரியங்களை கடந்து வந்த பின்பும், தனியே கடவுளிடம் சென்று அவருக்கு நன்றி  கூறி கடவுளிடமிருந்து ஆற்றலையும், சக்தியை பெற்று கொள்கிறோமோ?

இயேசு தந்தை கடவுளோடு அமர்ந்து சிறிது நேரம் செலவிட்ட பின்பு, இயேசு அதே அனுபவத்தோடு, அவர் தண்ணிரில் நடந்தார்.
இயேசு அடிக்கடி ஜெபத்தில் நேரம் செலவழிப்பவர், நற்செய்தியில் குறிப்பிட்டதை விட அதிக நேரம் நிச்சயம் செலவழித்திருப்பார். என் மத்தேயு இங்கே இதனை குறிப்பிடுகிறார் ? இந்த ஜெபத்திற்கு அப்படி என்ன முக்கியத்துவம்?

மத்தேயு மூலமாக , கடவுள் நாம் எப்படி விசுவாசத்தோடு தொடர்ந்து நம் வாழ்வை கொண்டு செல்ல முடியும் என காட்டுகிறார்.
நமது ஆற்றலை புதுபிக்க, அடிக்கடி ஜெபத்தில் நமது நேரத்தை செலவிட்டு , கடவுளை பற்றி இன்னும் அறிந்து, அவர் எப்படி நம்மை வழி நடத்துகிறார். என்பதை நாம் தெரிந்து கொண்டு, நம்மை நாமே மாற்றிகொள்வது நல்லது. நமது குடும்பத்திலும், வேலையிடத்திலும், சமூகத்திலும், கடவுளுக்காக, நாம் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. மற்றவர்களுக்காக நாம் நம் சக்தியையும் , நேரத்தையும் செலவிடும்போது, நாம் சக்தியை இழந்து சோர்வடைகிறோம்.  நாம் இன்னும் தொடர்ந்து கடவுளுக்காக இறைசேவை செய்ய, நாம் இழந்த சக்தியை மீண்டும் கடவுள் நிரப்ப நாம் அவருக்கு அனுமதி தரவேண்டும்.

நமக்கு என்ன நடந்தாலும், அதனை எதிர்கொள்ள ஜெபம் நமக்கு பெரிதும் உதவுகிறது. நாம் எங்கே செல்கிறோம், என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமலே, இருக்கும்பொழுது, ஜெபம் நமக்கு உதவும். நாம் தனியாக கடவுளிடம் அமர்ந்து ஜெபிக்கும்போழுது, அவரிடமிருந்து நாம் பெரும் அருள், நமக்காக வடிவமைக்கப்பட்ட அன்பளிப்பாகும். அந்த அன்பளிப்பின் மூலம், பிறருக்கு நாம் உதவ முடியும். இது நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்கும். எப்படி தண்ணீரில் நடப்பது என நமக்கு கற்று கொடுக்கும். , கடவுளின் தேவை உள்ள அடுத்த கரைக்கு மக்களிடம் நாம் செல்ல உதவும். கடவுள் அவர்களுக்கு நம் மூலம் சேவை செய்கிறார். நீங்கள் ஜெபம் செய்து தயாராக இருக்கிறீர்களா?
© 2014 by Terry A. Modica


Saturday, July 26, 2014

ஜூலை 27, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூலை 27, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
1 Kings 3:5, 7-12
Psalm 119:57, 72, 76-77, 127-130
Romans 8:28-30
Matthew 13:44-52

மத்தேயு நற்செய்தி
புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

முத்து உவமை
45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

வலை உவமை
47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். '

முடிவுரை
51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள்.52 பின்பு அவர், 'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்என்று அவர்களிடம் கூறினார். 
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு விண்ணரசு புதையலுக்கு ஒப்பானது என்று சொல்கிறார். மற்ற எல்லாவற்றையும் விற்று வாங்கப்பட்ட முத்து, மீன் வலையில், நல்ல மீன்களை எடுத்து கொண்டு, தீய மீன்களை வெளியே தூக்கி எறிவார்கள் என்றும் அதனை விளக்கி கூறுகிறார்.

வேறு மாதிரியாக சொல்வதானால், நம் கிறிஸ்துவ வாழ்வு, மிகுதியான செல்வத்தை கொண்டுள்ளது, நம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள் ஏதேனும் இருந்தால், அதனை,  அகற்றி விட்டு, விலை மதிப்புள்ள பொருளுக்காக தயார் படுத்த வேண்டும். நம்மிடம் மதிப்பான பொருள் சில, தற்காலிக மதிப்புள்ளது, இந்த உலகத்தில் தான் மதிப்பாக இருக்கும். மேலும், அதே பொருட்கள், வின்னரசிற்காக உபயோகபடுத்தப்படும்பொழுது அது உண்மையான மதிப்பை பெறுகிறது.
இரண்டாவது வாசகத்தில், எல்லாம் கடவுளின் அன்பிற்காக இணைந்து செயல்படுகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் நம்மிடம் உள்ள தவறான முத்தையும், இறந்த மீன்களையும் தூக்கி எறிந்தோமானால், நாம் தந்தை கடவுளை போல ஆகி விடுவோம். அதன் பிறகு, விண்ணக அரசிற்கு மிகவும் உபயோகமாக இருப்போம். மிகவும் மோசமாக ஏதாவது நமக்கு நடந்தால் கூட, மிக கீழ் தரமான ஆளாக நாம் இருந்தால் கூட , நம்மை எல்லாம் படைத்த , வானாளாவிய இரக்கம் கொண்ட கடவுள் , நம்மையும் நல்ல செயல்களுக்கு உபயோகமாக ஆக்குவார். நல்ல முத்தாக நாம் இருப்போம்.

முதல் வாசகத்தில், சாலமோன் கடவுளிடம் பெரிய சொத்தை கேட்டிருக்கலாம், கண்டிப்பாக கடவுள் அவருக்கு கொடுத்திருப்பார். ஆனால், எல்லாவற்றையும் அறியும் ஞானத்தை கேட்டார். அதன் மூலம் நாட்டை நல்லாட்சி செய்ய முடியும். அவர் ஆட்சி அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும், கூட, மிகவும் ஞானமுள்ள அரசர் ஆள்கிறார் என்றும், மேலும் பல சொத்துக்கள் சேர்த்தார் எனவும் அவர் பெயர் பெற்றார்.
இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால், நாம் இறையரசின் செல்வத்தை நாம் தேடினால், இவ்வுலக செல்வத்தை நம்மால் சரியாக உபயோகிக்க முடியும், ஏனெனில், கடவுளின் ஞானம் அவரின் அரசிற்காக இந்த செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும். எவ்வளவு அதிகம் நாம் கிறிஸ்துவை அன்பு செய்கிறோமோ , மேலும், அவர் வழியில் செல்கிறோமோ , எது உண்மையான மதிப்புள்ள பொருள், செயல் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அதன் மூலம் கடவுள் அரசிற்கு எல்லாவற்றையும் உபயோகிக்க முடியும்.
© 2014 by Terry A. Modica


Friday, July 18, 2014

ஜூலை 2௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 2௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Wisdom 12:13, 16-19
Psalm 86:5-6, 9-10, 15-16
Romans 8:26-27
Matthew 13:24-43
மத்தேயு நற்செய்தி
வயலில் தோன்றிய களைகள் உவமை
24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ' ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.28 அதற்கு அவர், ' இது பகைவனுடைய வேலை ' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ' நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? ' என்று கேட்டார்கள்.29 அவர், ″ வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்.30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ' முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் ' என்று கூறுவேன் ″ என்றார். '

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்
(
மாற் 4:30 - 32; லூக் 13:18 - 21)
31 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 'ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது.http://www.arulvakku.com/images/footnote.jpg32 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ' பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும். '

உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு
(
மாற் 4:33 - 34)
34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.35 ' ' நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் ' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம்
36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ' வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும் ' என்றனர்.37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: ' நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;38 வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;http://www.arulvakku.com/images/footnote.jpg42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். '

புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

நீங்கள் போய் சீடர்களை உருவாக்குங்கள்: அமெரிக்காவில், மனமாற்றத்திற்கான திட்டத்திற்கு தலைப்பு இதுதான். (1992) , இது மூன்று முக்கிய குறிக்கோள்களை செயல் திட்டத்தில் உருவாக்கப்பட்டது. (1) உங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல் , (2) மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழையுங்கள். (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றுங்கள். இன்றைய நற்செய்தியில், இயேசுவும் உவமைகள் மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்கு போதிக்கிறார்.
(thanks to www.arulvakku.com)

உங்கள் விசுவாசத்தை உறுதியாக வளர்த்தல்: இறையரசில், நாம் நல்ல கோதுமை போல , களைகளோடு இருக்கிறோம். களைகள் நம்மை தாண்டி வளர்ந்து விடும். அதனால், நாம் தினமும், பரிசுத்த வாழ்வில் வளர முயற்சித்து கொண்டே இருத்தல் வேண்டும். உங்கள் பரிசுத்த வாழ்வை தடுக்கும் களையை எடுக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியில், சாத்தானின் தூன்டுதலோடு நடப்பவர்கள் மத்தியில், உங்கள் விசுவாசம் எப்படி வளர்கிறது? உங்கள் தந்தை கடவுள் இந்த உலகை உருவாக்கியவர் விசுவாசத்தில் வளர உங்களுக்கு தேவையான எல்லா ஆற்றலையும் கொடுக்கிறார்

(2) மற்ற சகோதரர்களை இறையரசிற்கு அழைத்தல்: நாம் எல்லாம், மிகச் சிறிய விதை ஆக இருந்து புதர்களுக்கு இடையே மிக பெரியதாக வளரும் மரமாகி, பலருக்கு பயனுள்ளவர்களாக இருப்போம். உங்கள் விசுவாசத்தினால், யார் பயன் பெறுகிறார்கள்? உங்கள் பரிசுத்த வாழ்வு எவ்வாறு அவர்களை இயேசுவை நோக்கி அழைக்கிறது. ? பரிசுத்த ஆவியானவர் , உங்கள் அனுபவத்திலிருந்து, அவர்களை மனம் மாற தயாராக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு தேவையான ஆற்றலையும் அருளையும் வழங்குகிறார் .
(3) சமூகத்தை மாற்றுதல்: இறையரசில், நாம் ஈஸ்டை போல, சிறிய மாவை மிக பெரியதாக மாற்றி ரொட்டி துண்டுகளாக மாற்றுவது போல, நாமும் இருக்கிறோம். கிறிஸ்தவர்களாக இந்த உலகை முன்னேற்ற நீங்கள் எந்த செயலை செய்கிறீர்கள்? உங்கள் வேலையிடத்தில், உங்கள் விசுவாசம், ஒரு மாற்றத்த்தை கொண்டு வருகிறதா? உங்கள் வீட்டிற்கு அருகில், மற்றும், கோவிலில் மாற்றத்தை கொண்டு வருகிறீர்களா? திருப்பலியில், நீங்கள், திவ்ய நற்கருணையை பெற்று, அதனால், பலம் பெற்று, நீங்கள் இந்த உலகிற்கு, திவ்ய நற்கருனையாக மாற உங்களுக்கு ஆற்றல் தரப்படுகிறது. திருப்பலியில், முடிவுறும் தருவாயில், குருவானவர், உங்களை ஈஸ்டாக மாற ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

© 2014 by Terry A. Modica

Saturday, July 12, 2014

ஜூலை 13, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூலை 13, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Isaiah 55:10-11
Psalm 65:10-14 (with Luke 8:8)
Romans 8:18-23
Matthew 13:1-23

மத்தேயு நற்செய்தி

உவமைப் பொழிவு
விதைப்பவர் உவமை
(
மாற் 4:1 - 9; லூக் 8:4 - 8)
அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ' விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.9கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் என்றார்.

உவமைகளின் நோக்கம்
(
மாற் 4:10 - 12; லூக் 8:9 - 10)
10 சீடர்கள் அவரருகே வந்து, ' ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்? ' என்று கேட்டார்கள்.11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ' விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.13அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ' நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன். ' 16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

விதைப்பவர் உவமையின் விளக்கம்
(
மாற் 4:13 - 20; லூக் 8:12 - 15)
18 ' எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்:19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.22முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி கூறுகிறது. இதில் முக்கியமான செய்தி என்ன என்றால், விதைத்த விதை மண்ணில் கலந்து, அது அழிந்து முளைக்காவிடில், விதைத்த விதை வீணாகிவிடும், ஒவ்வொரு விதையும், விதைத்தவருக்கு கொடுக்க வேண்டும், அது அழிந்து, புதிய முளையாக உருவாக வேண்டும். அதன் பிறகு தான், வேர் வளர்ந்து, பல தண்டுகள் உருவாகி, மேல் நோக்கி வளர ஆரம்பிக்கும், இருந்தும், அந்த செடிக்கோ, மரத்திற்கோ, இன்னும் உரம் போட்டு வளர்க்க பட வேண்டும்.

இந்த வளர்ச்சி எல்லாம் நடந்த பிறகு, அந்த தாவரம் , செடியோ, விதை போல் இல்லாமல், இந்த உலகத்தின், இயற்கையோடு ஒத்து, எல்லோருக்கும் உதவிடும் , பயனுள்ளதாக மாறிவிடும்.

இயேசுவின் உவமையை கேட்டு, நாமும், பல மடங்காக கொடுக்க தயார் என்று அறிவிக்கிறோம். ஆனால், சும்மா ஆமோதித்து விட்டு, நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால், நாம் பல மடங்காக பெருகி விளைச்சலை கொடுக்க முடியாது. நம்மை எப்படி அதிக விளைச்சல் கொடுக்கும்  மண்ணாக செடியாக மாற்றுவது. ?

இசையாஸ் வாசகத்தில், கடவுளே மிகவும் தரமான மண் என்று சொல்லபடுகிறது – கடவுளும் அவரது வார்த்தைகளும், நல்ல மண். பவுலடியார் இரண்டாம் வாசகத்தில், துன்புறுவதும் அழிவதும், உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார் (விதைகள் மண்ணில் விழுந்து மடிந்து தான் புதிய செடியாக மாறுகிறது ). மீட்பு, துன்பத்திலும், மரணத்திலும் இருந்து வருகிறது.

நாம்  நம்மையே இந்த திட்டத்திற்கு உட்படுத்தி கொண்டு, கடவுளிடம் வேண்டி, நம்மை வளர்க்க விட்டால் தான், நாம் முழுமையாக பலன் தருவோம்.


© 2014 by Terry A. Modica


Friday, June 27, 2014

ஜுன் 29, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜுன் 29, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
அப்போஸ்தலர்கள் பேதுரு, பவுல் திருவிழா
Acts 12:1-11
Psalm 34:2-9
2 Timothy 4:6-8, 17-18
Matthew 16:13-19

மத்தேயு நற்செய்தி

இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார்.16சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.http://www.arulvakku.com/images/footnote.jpg19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என்றார்.
(thanks to www.arulvakku.com)

எது மிக சரியான தலைமைத்துவம்? அதற்கு சரியான எடுத்து காட்டாக, பவுல், மற்றும் பேதுருவிடம் காண்கிறோம். என் இயேசுவிடம் கூட பார்க்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், பேதுரு முதலில் இயேசுவை மெசியா என்று சொல்கிறார், பிறகு, அவர் மற்றவர்களை அழைத்து இயேசு மெசியா என்ற உண்மையை கண்டறிய உதவுகிறார். பேதுருவை நல்லாயனாக இருக்க அமர்த்த பட்டுள்ளார்  அதன் மூலம் இயேசுவோடு ஒவ்வொருவரும் அன்பில் இணைந்திருக்க நல்லாயனாக பேதுருவுக்கு அதிகாரம் வழங்கபட்டுள்ளது.
இன்றும், நமக்கும் அதே பொருப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமது வார்த்தைகளால், நம்மால் சிலரை மனமாற்றம் செய்ய முடியாவிட்டாலும், நமது நடவடிக்கைகள் மூலமும்,  நல்ல குணத்தினாலும், இறக்கத்தினாலும், இயேசுவை போல இருந்து நம் கடைமையை செய்தல் வேண்டும்.

பவுல் அவரது இறைசேவையில் துன்புறுவதை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். இயேசுவும் துன்புற்றதை , அவர் நல்லாயனாக இருந்த பொழுது, பல சோதனைகளை சந்தித்ததை நாம் அறிந்திருக்கிறோம். நாமும், இவ்வுலகில், இறையரசை கொண்டு வர ஈடுபடும்பொழுது, நாமும் பல துன்பங்களை சந்தித்து இருப்போம். இதில் சந்தோசமான விசயம் என்ன என்றால்,  சாத்தானின் எந்த ஒரு சக்தியும், கிறிஸ்துவினால், ஆன காரியம் எதையும் வெற்றி கொள்ள முடியாது.

கிறிஸ்துவின் வாயில்கள், சாத்தானிடமிருந்து நாம் எல்லாம் வெளியே வர கதவுகளாக உள்ளன. கிறிஸ்துவை பின் பற்றுபவர்களாக, ஒவ்வொரு தலைமைத்துவம் பெற்றவர் அனைவரும், பலரை பாதாலாத்திளிருந்து கிறிஸ்துவின் வாயிலுக்கு கொண்டு செல்ல முனைவோம். நாம் உண்மையாகவே கிறிஸ்துவை பின் பற்றினால், நாம் கிறிஸ்துவோடு, அவர் எதிரியின் எல்லைக்கு செல்லும்பொழுது, இதற்கிடையே பரிசுத்த ஆவி யாரை நாம் கிறிஸ்துவிடம் கொண்டு வர முனைகிறோமோ, அவர்களை கிறிஸ்துவிடம் வர தயார் படுத்துகிறார். நாம் அவர்களிடம் மாற்றத்தை காணாமல் இருந்தால் கூட, மாற்றம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பாவ வாழ்க்கையில் வாழ்பவர்கள், நாம் முயற்சியை நிராகரிப்பார்கள், ஆனால், அவர்களுக்கு எதுவெல்லாம் ஆற்றல் கொடுக்கிறது: நிபந்தனை இல்லா அன்பிற்காக அவர்கள் பல்வேறு வழிகளில், தேடி அலைவது தான் அவர்களின் நோக்கமாக இருக்கும். இது தான் அடிப்படை என்றால், அவர்கள் நல்லாயனை நெருங்கி , கடவுளின் மன்னிப்பிற்கும், மீட்புக்கும், அருகில் வருகிறார்கள் என்று அர்த்தம்.
அவர்களை கதவு வழியாக இழுத்து கொண்டு வர முடியாது, அவர்களுக்கு வழியை காண்பிக்கலாம், மேலும், அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடி, அவர்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ள ஜெபம் செய்யலாம். இது தான் நமக்கு கொடுத்த அழைப்பு.
© 2014 by Terry A. Modica 

Friday, June 13, 2014

ஜுன் 15 2௦14, ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜுன் 15 2௦14, ஞாயிறு நற்செய்தி மறையுரை
மூவொரு கடவுளின் திருவிழா
Exodus 34:4b-6, 8-9
Daniel 3:52-56
2 Corinthians 13:11-13
John 3:16-18

யோவான் நற்செய்தி
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை
(thanks to www.arulvakku.com)
பரிசுத்த ஆவியின் விழாவிற்கு அடுத்த வாரத்தில், நாம் மூவொரு கடவுளின் விழாவாக கொண்டாடுகிறோம்.
முதல் வாசகத்தில், தந்தை கடவுள் இஸ்ரேயல் நாட்டை தந்தை போல கவனித்து கொள்வதை பார்க்கிறோம். அவர் இரக்கமும், அருளும் நிறைந்தவராய் பார்க்கிறோம். மிகவும் மெதுவாக கோபம் கொள்வராகவும் , இரக்கத்திலும் , விசுவாசத்திலும் மிகவும் தாராளாமானவராகவும் இருப்பவர் என்பதையும் பார்க்கிறோம் – மிகவும் சரியான தந்தை அவர் .
தந்தை கடவுளை இவ்வாறு நாம் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? ஏனெனில், நாம் இதனை இன்னும் அனுபவிக்கவில்லை, நாம் மனித தந்தையே பார்த்து, பார்த்து, தந்தை என்றால் இப்படி தான் இருப்பார் என்று நாம் நினைக்கிறோம். நமது ஆவிக்கு குணப்படுத்தல் வேண்டும். தந்தை கடவுளை , குறையுள்ள மனித தந்தையாகவே நாம் பார்க்கிறோம். நல்ல அப்பாக்களும், நல்ல திறமையான ஆசிரியர்களும் கூட கடவுளின் தரத்திற்கு குறைவாகவே உள்ளனர். இதனை நன்றாக நினைவில் வைத்து கொண்டு நாம் தந்தை கடவுளை பார்க்க வேண்டும் .
இரண்டாவது வாசகம், மூவொரு கடவுளை முழுமையாக நமக்கு காட்டுகிறது. இயேசுவின் அருளும், தந்தை கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும், நமக்கு சொல்ல படுகிறது. இதனால், இதன் மூலம் , இதனுள், நாம் சந்தோசம் பெறுகிறோம். இவர்களுள் நம் வழியை செம்மபடுத்துகிறோம். மேலும் நம்மில் ஒருவரோடு ஒருவர் அமைதியோடு வாழ்கிறோம்.
இதனை வேறு மாதிரி சொல்வாதானால், இயேசு நம் பாவங்களை ஏற்று கொண்டு, நமக்காக இறந்தார், நாம் பாவங்களை எதிர்கொள்ளும் திறனை அருளை நமக்கு வழ ங்கினார்.  மேலும், தந்தை கடவுளின் அன்பை நமக்கு கொடுத்து நாமும் மற்றவர்களை அன்பு செய்ய நம்மை தயார்படுத்துகிறார். மேலும், பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்து, பரிசுத்த கிறிஸ்தவனாக நாம் தொடர்ந்து வாழ நம்மை ஆயத்தப்படுத்துகிறார்
நற்செய்தி வாசகம், தந்தை கடவுளின் அன்பின் ஆழத்தை காட்டுகிறது. அவர் நம்மை தண்டனைக்குள்ளாக்க விரும்பவில்லை; அவரின் மகனை அனுப்பி பாவத்தின் அழிவிலிருந்து நம்மை மீட்க தயாரானார். நமது பாவங்கள், நம்மை தீர்ப்புகுள்ளாக்கி நம்மை சாவிற்கு அழைத்து செல்கிறது. ஆனால், இயேசு நம்மை மீட்டு நம்மை நித்திய வாழ்விற்கு , வெற்றியின் வாழ்வை கொடுத்துள்ளார், - அதனை ஏற்பது நம் கையில்.

© 2014 by Terry A. Modica

Friday, June 6, 2014

ஜுன் 8 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 8 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த ஆவி விழா
Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Corinthians 12:3b-7, 12-13
John 20:19-23

யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார் அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று வாழ்த்தினார்.20இவ்வாறு. ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா என்றார்.
(thanks to www.arulvakku.com) 

கடவுளே உமது ஆவியை நீர் அனுப்பி, மன்னகத்தை புதுப்பித்தள் செய்வாயாக “ என்று இன்றைய பதிலுரை பாடலில் நாம் சொல்கிறோம். இந்த பரிசுத்த ஆவியின் விழாவில், நமது ஜெபமாக இது இருக்கிறது. இதனால், தான், நமது திருச்சபை இன்னும் இப்பூவுலகில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்கிறோம்.


கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், , கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. மேலும், ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும் , தடையும் தாண்டி கிறிஸ்தவம் வளர்ந்திருக்காது.
கிறிஸ்துவின் அவையின்றி, நாம் இந்த உலகில் கிறிஸ்து ஆக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மிடம் செய்ய சொன்னதை நம்மால், செய்ய முடியாது.
பரிசுத்த ஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை , புதுப்பிக்கப்பட்ட நாளை குறிக்கிறது. அதே போல, நம் பரிசுத்த வாழ்வின் பிறந்த நாளையும் குறிக்கிறது. இது, திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினாராக சேர்ந்து கொண்டதை குறிக்கிறது. இந்த நாள் பெரிய விழா நாள், நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் நாள், நமது ஞானஸ் நாணத்திலும், உறுதி பூசுதலிலும் நாம் பெற்ற பரிசுத்த ஆவியை மிண்டும் புதுப்பித்து கொள்ளவும், ஆவியின் இருப்பை உறுதிபடுத்தும் விழா.

இந்த பரிசுத்த ஆவியின் நாளில், அருட் சாதனங்களின் மூலம் நாம் பெற்ற கடவுளின் ஆற்றல், சக்தி, அவரின் நம்மோடு இருப்பது ,ஆகியவற்றால், நாம் பாவங்களை விட்டு விலகியும், பரிசுத்த வாழ்வில் வாழ்ந்தும், இந்த பூவுலகை நாம் மாற்ற முடியும் என்பதனை நமக்கு நினைவுருத்தபடுகிறது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்ற போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் பரிசுத்த ஆவியை , அவரின் மகனுக்கு கொடுத்து இந்த உலகின் இறை சேவையை செய்ய அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்கு கொடுத்தார். அதன் மூலம் நாம் பரிசுத்த வாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்த பணிகளில் நாம் ஈடுபடலாம்.
பரிசத்த செயல் செய்ய, நாம் எதோ ஒரு தகுதியை இழந்து இருக்கிறோம், என்று நீங்கள் நினைத்தால், அது சரியாக கூட இருக்கலாம், ஆனால், கடவுளின் ஆவி உன்னில் இருந்து குறைகளை துரத்தி நிறைகளாக்கும், இந்த இணைப்பில், தொடர்ந்து நம்பிக்கையோடு செல்வாயாக!.

© 2014 by Terry A. Modica