Friday, June 10, 2016

12 ஜுன் 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

12  ஜுன்    2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 11ம் ஞாயிறு
2 Sam 12:7-10, 13
Ps 32:1-2, 5, 7, 11
Gal 2:16, 19-21
Luke 7:36--8:3

லூக்கா நற்செய்தி
இப்பெண் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-8: 3
அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ``இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே'' என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
இயேசு அவரைப் பார்த்து, ``சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்'' என்றார். அதற்கு அவர், ``போதகரே, சொல்லும்'' என்றார்.
அப்பொழுது அவர், ``கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?'' என்று கேட்டார்.
சீமோன் மறுமொழியாக, ``அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்'' என்றார். இயேசு அவரிடம், ``நீர் சொன்னது சரியே'' என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ``இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்'' என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ``உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார்.
``பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?'' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
இயேசு அப்பெண்ணை நோக்கி, ``உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க'' என்றார்.
அதற்குப் பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.
பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
நியாயமாக  இருப்பது என்பது எது ?
எப்படி பாவங்கள் மன்னிக்கபடுகிறது என்று நீங்கள் எப்பொழுதாவது நினைத்தது உண்டா ?
"நியாயமாக இருப்பது" என்றால், "நாணயத்துடனும், நல்ல குணத்துடனும் " இருப்பது ஆகும். ஏனெனில் சில நேரங்களில், நாமே நியாயமற்று நடந்து கொள்கிறோம். மிகவும் நல்லவரானா இயேசு (ஒரே பரிசுத்தமானவர்) நமது பாவங்களை சிலுவையில் எடுத்து சென்றார். எல்லா அநீதிகளும் அவரோடு இறந்து விட்டன.
நீதி  என்பது சட்ட துறையை சார்ந்த வார்த்தை, ஆனால் இன்றைய இரண்டாவது வாசகம், " சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை", சட்டத்த்தினால் நாம் மன்னிக்கபடுவதில்லை என்று சொல்கிறது. (அப்படி என்றால் , நாம் இன்னும் நீதியுடனும் , அன்புடனும், நியாயமாகவும் முழுமையுடன் மாறவில்லை ) ஆனால் கிறிஸ்துவின் மேல் நாம் கொண்ட நம்பிக்கையினால் , நாம் வாழ்கிறோம், நம் பாவங்கள் மன்னிக்கபடுகின்றன. மேலும் " சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக் கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே! " என்றும் நமக்கு அறிவுறுத்த படுகிறது.

இயேசு இதனை இந்த ஞாயிறின் நற்செய்தியில் விளக்கி சொல்கிறார். பாவியான பெண் இயேசுவின் கால்களை கண்ணீரால் கழுவிய அந்த பெண் மன்னிக்கபட்டாள். அவளின் செயல்கள் அவளின் நீதியை நோக்கி செல்வ்வதாலும், இயேசுவின் மேல் அளவு கடந்த அன்பினாலும் மன்னிக்கபட்டாள். அன்பு தான் நம்மை பாவத்தின் பிடியிலிருந்து விலகி செல்ல வைக்கிறது. அன்பு தான் நம்மை நீதியுடன் நடந்து கொள்ள வைக்கிறது.
நம்மில் சிலர்  நியாயமாக நடந்து கொள்ளவே விருப்பம் கொண்டிருந்தாலும், சில நேரங்களில் நமக்கு தெரியாமலே பாவம் செய்து விடுகிறோம். சில நேரங்களில் மற்றவர்களை நமக்கு தேராமல்  காயபடுத்தி விடுகிறோம். வேண்டுமென்றே செய்வதில்லை. ஆனால், நாம் அநீதியாக நடந்து கொண்டோம்.
நாம் இயேசுவிடமிருந்து நம் கண்களை எடுத்து விடுவதால் நாம் பாவம் செய்கிறோம். நமது பழைய , தற்போதைய ஆசைகளினால் நாம் பாவம் செய்கிறோம். ஆனால், சிறிது நேரம் எடுத்து , இயேசுவிடம் ஜெபம் செய்து அவரோடு மீண்டும் நாம் இணைந்தால் , நம்மால் கட்டுபாட்டுடன் இருக்க முடியும். அன்போடு வாழ நாம் நம்மை ஆட்படுத்தி கொள்ளலாம்.
அன்பு தான் நம் வாழ்வின் முதல் செயலாக இருக்கும்பொழுது, சோதனைகள் அதன் ஆற்றலை இழக்கிறது. நமது சொந்த ஆசைகாளால் ஏற்படும் பாவ எண்ணங்கள், மற்றவர்கள் மேல் நாம் கொள்ளும் அக்கறை அகற்றிவிடுகிறது , நமது பாவத்தினால், சிலருக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டதை நாம் உணரும்போது , அன்பினால் தூண்டபட்டு, அந்த காய்த்த போக்க நம்மால் முடிந்ததை செய்கிறோம். அங்கே தான் நாம் கடவுளின் நீதீயோடு இணைகிறோம்.
இயேசு மற்றவர்களை அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்யும்பொழுது, நமது விசுவாசம் நமக்கு மீட்பை கொடுக்கிறது, இன்றைய நற்செய்தியில் இயேசு அந்த பெண்ணிடம் கூறுவது போல , ``உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க'' என்று நம்மிடமும் சொல்கிறார்.

© 2016 by Terry A. Modica

Saturday, June 4, 2016

ஜூன் 5 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 5 2016 ஞாயிறு  நற்செய்தி மறையுரை
ஆண்டின் 10ம் ஞாயிறு 
1 Kings 17:17-24
Ps 30:2,4-6,11-13
Galatians 1:11-19
Luke 7:11-17

லூக்கா நற்செய்தி
நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல்
11அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்.

12அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.

13அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, அழாதீர் என்றார்.

14அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு என்றார்.

15இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.

16அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

17அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
(thanks to www.arulvakku.com)

எல்லா பிரச்சினைக்கும் நம்பிக்கையுடன் அணுகுங்கள்
இன்றைய நற்செய்தியே , நமக்கு நம்பிக்கை கொடுக்கும் செய்தியாகும். நற்செய்தியில் வரும் கைம்பெண்ணை அன்னை மரியாளாகவும் , இறந்த மகனை யேசுவாகவும் நினைத்து கொள்ளுங்கள். கிறிஸ்துவின் மீட்பை இந்த நிகழ்வு முன்னெடுத்து காட்டுகிறது.
விசுவசாத்தை விட்டு   போனவர்களை, அல்லது பலர் பேச்சுக்கு ஆளானவர்களை, அல்லது சிலர் மிக பெரிய இயற்கை அழிவிற்கு (நெருப்பு, வெள்ளம்) ஆட்பட்டு பல பொருட்களை இழந்தவர்களை , இந்த நற்செய்தியில் வரும்  இறந்த மகனை போல நினைத்து கொள்ளுங்கள்.
"கடவுள் இவர்கள் அனைவரையும் சென்று பார்த்துள்ளார்" என்பது நற்செய்தி. கிறிஸ்துவின் ஆவியானவர் , அவர்களிடம் உள்ள எல்லா பயத்தையும், கோபத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் , விரக்தியையும் போக்கி விடும். "நான் சொல்கிறேன், எழுந்திடு" என்று இயேசு சொல்கிறார். மோட்சத்தில் உள்ள கடவுள் நமக்கு புதிய வாழ்வை கொடுக்க இருக்கிறார்.
"எழுந்திடு" என்பதற்கு அர்த்தம் என்னவெனில், நமது அனுதின நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும் என்று அர்த்தம். மேலும், யாரும் பழித்தாலும், அவர்களுக்கு எதிராக நின்று போராட வேண்டும். இது மாதிரி பிரச்சினை பண்ணுபவர்களை  விட்டு விலகி செல்ல வேண்டும். மேலும், இந்த பழிகளிலிருந்து விடுபட பெருமக்களிடம் அறிவுரை பெற்று அதன் படி நடக்க வேண்டும்.
இரட்சிப்பில், எப்பொழுதுமே புதியதாக ஒன்று இருக்கும்: பிரச்சினைகளை கையாள புதிய முறை கிடைக்கும், புதிய வேலை கிடைக்கலாம், புதிய பங்கிற்கு சென்று சேரலாம், மாறிய வாழ்வுடன் வாழ, மனதில் தெம்பும், உறுதியும் கிடைக்கும்
"எழுந்திடு"  என்பது , தந்தை கடவுளின் அன்பும் பாதுகாப்பையும் பற்றிய புதிய புரிதலை நமக்கு கொடுக்கிறது. துன்பத்தில், வேதனையிலும் , சாத்தானின் புண்களால் ஏற்பட்ட துயரத்தின் நடுவினில் நமக்கு கடவுளின் அன்பு ஆறுதலாக இருக்கிறது. அந்த அன்பே நமக்கு மீட்பை கொடுக்கிறது. கடவுள் நமக்கு நாம் எப்படி , எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் வழங்குகிறார். அதன் படி நாம் நடக்காமல் , நம் வழியில் சென்று மீண்டும் துன்ப பட்டால், "எழுந்திடு ,புதிய நாள் தொடங்குகிறது " என்று கடவுள் மீண்டும் சொல்கிறார்.
இயேசு மீட்பர். அவர் எல்லா தடைகளையும், கடந்து, இறப்பை , சாத்தானை வெற்றி  கொண்டார். நாம் நமது சொந்த நடத்தைகளால், தவறு செய்து, சாத்தானின் தூண்டுதலால், நம் வாழ்வை நாமே குழைத்து கொள்கிறோம். ஆனால், நமது தவறுகளையும் பொறுத்து கொண்டு, இயேசு, நம்மோடு இருக்கிறார். நமக்கு உதவி செய்கிறார்.
நாம் கேட்காமலேயே இயேசு நமக்கு உதவி செய்கிறார். அவ்வளவு பேரிரக்கம் கொண்டவர்!. நாம் அவர் கொடுக்கும் உதவியை நிராகரித்தாலும், அவர் உதவி செய்வதை நிறுத்துவதில்லை. மிகவும் அக்கறை உள்ளவர்.
நம்பிக்கை என்பது கடவுளின் நல்ல செயல்களை, அவரின் பேரிரக்க மனப்பான்மையை எப்பொழதும் நினைவில் கொள்வது. நீங்கள் நம்பிக்கையில் இன்னும் சிறப்பாக விசுவாசத்தை வளர்க்கும் பொழுது , இந்த நம்பிக்கையை, விசுவாசத்தை உங்கள் அருகில் இருக்கும் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள் , அவர்களுக்கும் இயேசு சொல்லும் 'எழுந்திடு'  வார்த்தையை கேட்க வையுங்கள்.


© 2016 by Terry A. Modica