Friday, March 16, 2018

மார்ச் 18 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை


மார்ச் 18 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை
தவக்கால  5ம் ஞாயிறு
Jeremiah 31:31-34
Ps 51:3-4, 12-15
Hebrews 5:7-9
John 12:20-33

யோவான் நற்செய்தி

கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்
20வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.

21இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்என்று கேட்டுக் கொண்டார்கள்.
22பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.

23இயேசு அவர்களைப் பார்த்து
மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
24கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

25தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

26
எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்
 என்றார்.
மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்
27மேலும் இயேசு
இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.
28
தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்
 என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்என்று ஒலித்தது.
29அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சுஎன்றனர்.
30இயேசு அவர்களைப் பார்த்து
இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.

31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.

32
நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்
 என்றார்.

33தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)
நீங்கள் எப்பொழுதும் பதற்றத்துடன் இருக்கிறீர்களா?
நாம் கடவுளை நம்பி, இயேசுவின் பின் செல்ல நாம் ஆசைப்பட்டாலும், அதனால் ஒரு கலக்கத்துடன் இருந்தால், அது ஒன்றும் பாவம் இல்லை.

கண்டிப்பாக நம் சொந்த வாழ்க்கையை விட வேண்டும் (நம் சொந்த ஆசைகள், எப்படி நம் நேரத்தை செலவழிப்பது என நாம் தீர்மானிக்க தீர்மானம் செய்ய முடியாது, இன்னும் பல ) இது அத்தனையும் விட்டு விட்டு ,  கிறிஸ்துவோடு நாம் இணைந்து, அவரின் இறைபணியில் சேர முடியும். எனினும், நமக்கு ஏற்படும் இழப்பை பற்றி நாம் கவலை பட வேண்டியதில்லை.
இன்றைய நற்செய்தியில், இயேசு கலக்கத்துடன் இருந்தார், என்று குறிப்பிட்டுள்ளனர். அவர் செய்ய வேண்டிய தியாகத்தை நினைத்து, கலக்கமுற்றார். இருந்தாலும், இயேசுவே கலக்கமடைந்ததை நாம் பார்க்கிறோம்.! மேலும், கடவுள் இயேசுவை மாட்சிமை படுத்தினார்.
இயேசு இவ்வுலகிற்கு வந்து கடவுளின் வழியையும், கடவுளின் அன்பையும் வெளிப்படுத்தி நம்மை விண்ணுலகம் அழைத்து செல்ல வந்தார். தற்போது, அவரை பின் செல்பவர்களாக நாம், கடவுளின்வழியையும், அன்பையும் வெளிப்படுத்த , அருட்சாதனங்கள் மூலம் அழைக்கப்பட்டுள்ளோம். அதன் மூலம் இயேசு எல்லோரையும் விண்ணுலகம் அழைத்து  செல்வார். இது தான் நமக்கு கொடுக்கப்பட்ட இறைபணி, திருச்சபையில் இருக்கும் அனைவருக்கும் - குருக்கள் , பொதுவானவர்கள் - அழைக்கப்பட்ட இறைபணி.
ஞானஸ்நானம் திருவருட்சாதனம் மூலம் முதல் அழைப்பு விடபடுகிறது. உறுதி பூசுதல் நம்மை இறைபணி செய்ய பணிக்கின்றது. பாவ சங்கீர்த்தனம் இந்த இறைபணியை இன்னும் நல்ல முறையில் செய்ய நம்மை மெருகேற்றுகிறது. திருமண சடங்குகளும், மற்ற பல இறை நிகழ்வுகள் இந்த இறைபணி செய்ய ஏதுவான இடமாக மாறுகிறது. நோயில் பூசுதல் கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு சாட்சியாக காட்ட ஒரு வாய்ப்பாக அமைகிறது. திவ்ய நற்கருணை நம்மை கிறிஸ்துவின் பாடுகளோடு  இணைத்து, நாம் என்ன செய்ய வேண்டுமோ, அந்த இறைபணியாக நம்மை ஆக்கி விடுகிறது.
நமது அனுதின இறைபணி: இயேசு மற்றவர்களை அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்தல் வேண்டும்.இயேசு அவர்களுக்கு என்ன செய்வாரோ அதனை அவர்களுக்கு செய்வது, மேலும், இயேசுவின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பது அனைத்தும் நாம் அனுதினம் செய்தல் வேண்டும்.
அதிக நேரங்களில் இதனை செய்யும்பொழுது, நாம் நிறைய இழக்க வேண்டி ம், கஷ்டமான தியாகங்களை செய்ய வேண்டி வரும். பல நேரங்களில் அவர்கள் நம்மை நிராகரிக்க கூடும் , நம்மை வார்த்தை வசவுகளால் திட்ட கூடும், பல வழிகளில் நமக்கு வேதனை ஏற்படுத்தலாம். இது தான் நம்மை கிறிஸ்துவின் பாடுகளோடு இணைக்கிறது. இந்த இறைபணியை தான் நாம் செய்ய வேண்டும்.
இதற்காக தந்தை கடவுள் நம்மை பாராட்டுகிறார். எப்படி இயேசுவை மாட்சிமைபடுத்தினாரோ, அதே போல, அவர் இறக்கத்தினாலும், பரிசுகள் கொடுத்தும், நம்மை ஏற்று கொள்கிறார்.
நமது இறைபணியில் சில தொந்தரவுகள் ஏற்படுவது நமக்கு இட்ட சவால் ஆகும். ஆனால், நாம் தொடர்ந்து இதனை செய்ய நமக்கு ஆறுதல் ஆக இருப்பது , கடவுள் நம்மை உயர்த்துகிறார் என்ற உண்மை தான்.  ஒவ்வொரு சிலுவைக்கு பின்பும், ஒரு உயிர்ப்பெழுதல் இருக்கிறது.
© 2018 by Terry A. Modica

Saturday, March 3, 2018

மார்ச் 4 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச்  4 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலம் 3ம் ஞாயிறு
Exodus 20:1-17
Ps 19:8-11
1 Corinthians 1:22-25
John 2:13-25

யோவான் நற்செய்தி

கோவிலைத் தூய்மைப்படுத்துதல்
(மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46)
13யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;

14கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;

15அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

16அவர் புறா விற்பவர்களிடம்
இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்
 என்று கூறினார்.

17அப்போது அவருடைய சீடர்கள்.
உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம்
என்னை எரித்துவிடும்
என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.

18யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.

19இயேசு மறுமொழியாக அவர்களிடம்
இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்
 என்றார்.

20அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?” என்று கேட்டார்கள்.
21ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.

22அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
இயேசு அனைவரையும் அறிபவர்
23பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.

24ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும் தெரியும்.

25மனிதரைப்பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் வரும் கடைசியில் வரும் வசனங்கள் மிகவும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன: இயேசு அடையாளங்களாலும், அருட் செயல்களாலும் மனம் திரும்பியவர்களை நம்புவதில்லை. அதன் அர்த்தம்: மனித மனங்களின் அளவினோடு யாரும் இறையரசை பரப்புவதையோ அல்லது சாட்சியாக இருப்பதையோ இயேசு விரும்பவில்லை .
அடையாளங்களாலும், அருங்குறிகளாலும் விசுவாசம் கொள்வது மனித பண்பு: நாம் கண் கூடாக பார்த்து நம்புவது, தொட்டு பார்த்து நம்புவது,  நேராக கேட்பதிலும் நம்புவது என்பது மிகவும் சுலபம். ஆனால் கடவுளோ நம் கண்களுக்கு தெரியாதவர், அவர் குரலும் நமக்கு சத்தமாக கேட்பதில்லை. இப்படி நம்புவது ஒன்றும் இயற்கையை தாண்டியா விசுவாசம் இல்லை. ஆனால் கடவுளோ இயற்கைய தாண்டி அளவிட முடியாதவராக இருக்கிறார்.
நாம் ஜெபம் செய்து செய்து கடவுள் அதற்கு பதிலாக ஒரு பதிலையும் கொடுக்காமல் , எந்த ஒரூ அறி குறியும் தெரியவில்லை என்றால், நமது விசுவாசம் என்ன ஆகும். இதற்கு பதில் தான், நாம் இயற்கையோடு ஒன்றி இருக்கிறோமோ அல்லது அதனை தாண்டிய கடவுளின் தன்மையை நாம் விசுவசிக்கிறோமோ என்று தெரிகிறது. அதன் மூலம் தான் நமது தெய்வீக வாழ்வு தொடர்கிறது.
இயேசுவிற்கு தெரியும், அவர் அங்கே மனிதனாக நிற்பதே மிக பெரிய அறிகுறி என்றும், மிக விரைவில் இவ்வுலகை விட்டு சென்று விடுவார் என்றும் தெரியும். நாமே சில நேரங்களில் இயேசு நம் கண் முன்னே வந்து நிற்க வேண்டும் மேலும், அவர் குரல் நமக்கு கேட்க வேண்டும் ஏன் ஆசைபடுவது இல்லையா ?  அதன் மூலம் நம் விசுவாசம் இன்னும் உறுதி படும் என நினைக்கிறோம்.
நாம் கேட்ட ஜெபத்திற்கு பதில் கிடைத்தால், கடவுளின் அன்பு நமக்கு கிடைக்கும் பொழுதும், நம்மில் அமைதியும் சந்தோசமும் நிலவும் போதும் , நம் விசுவாசம் வளர உதவும் அறிகுறிகளாக நாமே வகைபடுத்தி கொள்கிறோம். ஆனால், நாம் பல துன்பத்திற்கு ஆளாக நேருகிற பொழுது, இருளை சந்திக்கிற பொழுது நம் விசுவாசம் என்ன ஆகும்? நாம் தொடர்ந்தும் கடவுளை நம்புகிறோமோ, நம் வேண்டுதல்களுக்கு அறிகுறிகள் வராத பொழுதும்?
உறவுகளின் நம்பிக்கை மூலம் நமக்கு வரும் விசுவாசமே , நாம் தொடர்ந்து கடைபிடிக்க  வேண்டிய ஆகும். உண்மையாகவே முழு நம்பிக்கை கொள்வது ஆகும். நாம் கடவுளை நம்ப ஒரு முடிவெடுத்தால், அவரின் உண்மை தன்மையை நினைத்தும், அவர் எந்த அளவிற்கு நம் மேல் அக்கறை கொள்கிறார் என்றும்  அவர் மேல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் அறிகுறிகளால் அல்ல.
இதனை நாம் பெற்றிட, நமக்கு இயற்கையை தாண்டிய விசுவாசம் வேண்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தில் நாம் இணையும் பொழுது, அவரின் விசுவாசத்தோடு நாம் இணைகிறோம். பிறகு, எந்த அறிகுறியும் இல்லாமலே நாம் அவர் மேல் விசுவாசம் கொள்வோம்.

அடுத்த முறை, நீங்கள் நற்கருணை உட்கொள்ளும் முன்பு, இதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவர் உடலை மட்டும் நீங்கள் முழுமையாக பெற்று கொள்ளவில்லை, அவர் தெய்வீகத்தொடும் நீங்கள் இணைகிறீர்கள். மேலும், அவர் உங்களோடு தன்னை இணைத்து கொள்கிறார். இதனை உண்மையாக முழுமையாக நம்பினால், உங்களுள் அருஞ்செயல்கள் நடக்கும், அற்புதங்கள் நடக்கும், ஆனால், அது ஒன்றும், அவர் நமக்கு கொடுக்கும் பெரிய அன்பளிப்பு அல்ல,
அவரையே முழுமையாக நமக்கு கொடுக்கிறார்.
© 2018 by Terry A. Modica