Friday, February 22, 2019

பிப்ரவரி 24 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை



பிப்ரவரி  24 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
1 Samuel 26:2,7-9,12-13,22-23
Ps 103:1-4,8,10,12-13
1 Corinthians 15:45-49
Luke 6:27-38

லூக்கா நற்செய்தி
பகைவரிடம் அன்பு காட்டுதல்
(
மத் 5:38-48; 7:12அ)
27“நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.

28உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.✠

29உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்;

30உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.”
31“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

32உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.

33உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.✠

34திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

35நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.

36உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
தீர்ப்பிடுதல்
(
மத் 7:1-5)
37“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

38கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

(thanks to www.arulvakku.com)

கடவுளின் அன்பு அதிக அளவில், நிரம்பி வழிகிறது
இன்றைய ஞாயிறு நற்செய்தி, நமது பரிசுத்த வாழ்வு எப்படி பட்டது என்று அளக்க சொல்லி கொடுக்கிறது. கிறிஸ்தவ வாழ்வு எப்படி இருக்க வேண்டும், மிக சரியாக செல்கிறார். எப்படி அன்பு செய்யவேண்டும் என்று கிற்ஸ்து சொல்கிறார். -- நம்பிக்கையுடனும், எவ்வித நிபந்தனையுமின்றி அன்பு செய்ய சொல்கிறார். இப்படி செய்வதற்கு நாம் சில தியாகங்கள் செய்ய வேண்டும்.
கண்டிப்பாக, அவ்வளவு சுலபமாக அன்பு செய்ய முடியாது. ஆனால் இது கடவுளின் அன்பு. இப்படித்தான் கடவுள் நம்மை அன்பு செய்கிறார். அவரின் அன்பில் நிலைத்திருக்க, கடவுளை போல நாமும் அன்பு செய்தல் வேண்டும். அப்படி செய்யாத பொழுது, நாம் கடவுளை விட்டு பிரிகிறோம். அதனால் தான் பாவ சங்கீர்த்தனம் என்பதை திவ்ய அருட்சாதனமாக நாம் சொல்கிறோம். இது நம்மை கடவுளோடு மீண்டும் இணைக்கிறது. பாவத்தினால் கடவுளை விட்டு பிரிந்தவர்களை பாவ சங்கீர்த்தனம் கடவுளோடு இணைக்கிறது.
உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள் என்று இயேசு சொல்கிறார். 'பகைவர்'  என்பவர், நம்மை எதோ ஒரு விசயத்தில் எதிர்ப்பவர்கள் தான் - நமது விருப்பத்தை எதிர்ப்பவர்கள், நமது தேவைகள் எதிர்ப்பவர்கள், இன்னும் பல.
பரிசுத்த வாழ்வு, நம்மை இந்த உலகினை விட்டு கடவுளோடு இணைக்கிறது. கிறிஸ்தவம் என்பது, ஒரு வாழ்வின் முறையை மாற்றி நடப்பது, மேலும் புது வாழ்வின் முறையை புகுத்துவது ஆகும். நமது வாழ்வின் இயல்புக்கு எதிரானது-- நமது பாவ வாழ்வு, கடவுளின் இயல்புக்கு எதிராக நம் வாழ்வு செல்கிறது. ஞானஸ்நானத்தில் நாம் கடவுளின் இயல்பை பெறுகிறோம். அப்படிஎன்றால், கடவுள் அன்பு செய்வது போல, நம்மாலும் அன்பு செய்ய முடியும். கடவுளின் உதவியை (பரிசுத்த ஆவி) நாம் நம்பி, பாவத்தை விட்டு காடவுளின் இயல்போடு இருக்க முடியும்.
"உங்களுக்கு நல்லது செய்தவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதால், என்ன பயன்? பாவிகள் கூட  அதிகம் செய்கிறார்கள்." கடவுளோடு இணைந்திருக்க, நாம் எல்லோருக்கும் நல்லது செய்தல் வேண்டும், அவர்கள் அதற்கு தகுதி உள்ளவர்களா இல்லையா என்பது வேறு விஷயம்.
பரிசுத்த ஆவியின் உதவியுடன், நாம் ஒழுங்காக அனைவரையும் அன்பு செய்தோமானால், இயேசு நம் மேல் கொண்ட அன்பு போல அது இருக்கும். - அதிக அளவோடும், நிரம்பி வழியும். ஏனெனில் அவரின் அன்பை தான் நாம் மற்றவர்களிடம் கொடுக்கிறோம் , அதனை பகிர்ந்து கொள்கிறோம்.
© 2019 by Terry A. Modica



Saturday, February 16, 2019

பிப்ரவரி 17 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 17 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 6ம் ஞாயிறு
Jeremiah 17:5-8
Ps 1:1-4,6
1 Corinthians 15:12,16-20
Luke 6:17,20-26

லூக்கா நற்செய்தி

திரளான மக்களுக்குப் பணிபுரிதல்
(
மத் 4:23-25)
17இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.
சமவெளிப்பொழிவு
பேறுபெற்றோரும் கேடுற்றோரும்
(
மத் 5:1-12)
20இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை:
“ஏழைகளே,
நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில்
இறையாட்சி உங்களுக்கு உரியதே.
21இப்பொழுது பட்டினியாய் இருப்போரே,
நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில்
நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.
இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே,
நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில்
நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
22மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.✠

23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.✠
24ஆனால் செல்வர்களே
ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.✠
25இப்போது உண்டு கொழுந்திருப்போரே,
ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில்
பட்டினி கிடப்பீர்கள்.
இப்போது சிரித்து இன்புறுவோரே,
ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில்
துயருற்று அழுவீர்கள்.
26மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.
 (thanks to www.arulvakku.com)

இயேசு எளியோர் பக்கம் அவர்கள் சார்பாக இருக்கிறார்

இன்றைய நற்செய்தியில் இயேசு அடித்தட்டு மக்களோடு நான் இருப்பேன் அவர்கள் பேறுபெற்றோர் என்று சொல்கிறார்:ஏழைகள் ( செல்வத்திலும், ஆன்மிகத்திலும் ), பசியுற்றோர் (ஆன்மீக பசி, வயிற்று பசி); தன்னிடம் ஒன்றும் இல்லை என்று நினைப்பவைகள் அனைவரையும் ஆண்டவர் கவனித்து கொள்வார்.அழுபவர்களையும், வெறுப்புக்கு ஆளானவர்களையும், கேலிக்கு உள்ளானோரையும், ஆண்டவர் மேல் விசுவாசம் இல்லாதவரையும் கூட கடவுள் அக்கறையுடன் கவனித்து கொள்கிறார்.
மற்றவர்கள் கவலையில் நாம் பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் போது, நாமும் கடவுளோடு ஒன்றினைகிறோம். மற்றவர்களை பற்றி தவறாக பேசுபவர்கள், அந்த தவறு உண்மையானதாக இருந்தால் கூட, இயேசுவிற்கு எதிரான செயல் ஆகும்.
ஒழுக்க கேடான விசயங்களை பேசுவதும், அநிதிகளுக்காக வழக்காடுவதும், நமது பார்வையில் வந்தும் ஒருவர் கஷ்டப்படும்போது,நம்மில் உள்ளதை நாம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும், இயேசுவிற்கு எதிராக நாம் இருக்கிறோம் என்பதை காமிக்கிறது.
அதே போல, வேலை செய்யுமிடத்தில் மிரட்டுவதோ அல்லது வாழ்க்கை துனையை வேண்டுமென்றே மிரட்டுவதும், அல்லது தொடர்ந்து லேட்டாக வருவதும், மற்றவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு தருவதும், அல்லது மற்றவர்கள் அதிக வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அல்லது நம்மையே அதிகம் துன்புறுத்தி வேலை செய்வதும், இதனால் கடவுளுக்கு நாம் நேரம் ஒதுக்காமல் இருப்பதும், நம்மள் அருகில் உள்ளவருக்கும் நாம் நேரம் ஒதுக்காமல் இருப்பதும், கடவுளுக்கு எதிரானது ஆகும்.
மற்றவர்களின் கவலைகளுக்கு, துன்பங்களுக்கு நாம் காராணமாக இருந்தால், நாம் கிறிஸ்துவிற்கு எதிராக இருக்கிறோம்.
கடவுளுக்கு எதிராக இருப்பவர்கள், மனம் திருந்தாதவர்கள், இப்படியே இயேசுவிற்கு எதிராக இதே நிந்தனை செய்பவர்கள், அனைவருக்கும் என்ன ஆகும். ஐயோ கேடு!, கடவுளை நம்பியவர்கள் (இன்றைய வாசகங்களில் குறிப்பிடபடுவது போல ) ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.  ஆனால் மனிதனை நம்பியிருப்பவர்கள் அனைவருக்கும் கேடு விளையும்.  
செல்வந்தர்கள், அவர்கள் சொத்துகளை மோட்சத்திற்கு எடுத்து செல்ல முடியாது. மேலும், அவர்கள் மோட்சம் செல்லும் வழியிலும் எதுவும் வாங்க முடியாது. இதனிடையே கடவுள் இந்த சொத்துக்கள் எல்லாம் பகிரபடாதவர்கள் பக்கம் நின்று கொண்டுள்ளார்.
அதே போல, ஒருவர் அழுகையை பார்த்து, சிரிப்பவர்கள், அதிக காலம் சிரிக்கமாட்டார்கள். மற்றவர்களின் துன்பத்தை கண்டு சிர்ப்பவர்களின் சந்தோசம் தற்காலிகமானது, மேலும் உண்மையிலே அவர்கள் சந்தோசம் என்றும் நிலைக்காது.
புகழ் மிக்கவர்களும், பெரியவர்களையும் மிக முன்னே புகழ்பவர்கள், முதுகுக்கு பின்பு இகழ்வார்கள்.
கிழே விழுந்தவர்களை இயேசு மேலே தூக்கி விடுவார். ஆனால் , அவர்களாகவே எழுந்து வந்தவர்கள் ரொம்ப நாள் நீடித்து நிற்க முடியாது, அவர்கள் சிரிப்பும் நீண்ட நாள் நீடிக்காது.
© 2019 by Terry A. Modica