ஏப்ரல் 14 2019 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
குருத்து ஞாயிறு
Readings for
the Entrance Procession:
Luke 19:28-40
Readings for Mass:
Isaiah 50:4-7
Ps 22:8-9, 17-20, 23-24
Philippians 2:6-11
Luke 22:14--23:56
Luke 19:28-40
Readings for Mass:
Isaiah 50:4-7
Ps 22:8-9, 17-20, 23-24
Philippians 2:6-11
Luke 22:14--23:56
லூக்கா நற்செய்தி
\ஆண்டவரின் திருவிருந்து
(மத் 26:26-30; மாற் 14:22-26; 1கொரி 11:23-25)
(மத் 26:26-30; மாற் 14:22-26; 1கொரி 11:23-25)
14நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.
15அப்போது அவர் அவர்களை நோக்கி,
“நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.
16
ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
17பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம்,
“இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.
18
ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
19பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து,
“இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்”
என்றார்.
20அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து,
“இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.
✠
21என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.✠
22
மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு”
என்றார்.
23அப்பொழுது அவர்கள், “நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்” என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.
யார் பெரியவர்?
24மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.✠
25இயேசு அவர்களிடம்,
“பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.
26ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.✠
27யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.✠
28நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.
29என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
30ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.✠
பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்
(மத் 26:31-35; மாற் 14:27-31; யோவா 13:36-38)
(மத் 26:31-35; மாற் 14:27-31; யோவா 13:36-38)
31“சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.
32
ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து”
என்றார்.
33அதற்கு பேதுரு, “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்றார்.
34இயேசு அவரிடம்,
“பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்”
என்றார்.
பணப்பையும் வாளும்
35இயேசு சீடர்களிடம்,
“நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?”
என்று கேட்டார். அவர்கள்,
“ஒரு குறையும் இருந்ததில்லை”
என்றார்கள்.✠
36அவர் அவர்களிடம்,
“ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.
37
ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
‘கொடியவருள் ஒருவராகக்
கருதப்பட்டார்’
என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன”
என்றார்.✠
38அவர்கள் “ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம்,
“போதும்”
என்றார்.
ஒலிவ மலையில் இயேசு
(மத் 26:36-46; மாற் 14:32-42)
(மத் 26:36-46; மாற் 14:32-42)
39இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
40அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம்,
“சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்,”
என்றார்.
41பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்:
42
“தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்”
என்று கூறினார்.
43[அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.
44அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.]*
45அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
46அவர்களிடம்,
“என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்”
என்றார்.
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைதுசெய்தலும்
(மத் 26:47-56; மாற் 14:43-50; யோவா 18:3-11)
(மத் 26:47-56; மாற் 14:43-50; யோவா 18:3-11)
47இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.
48இயேசு அவனிடம்,
“யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?”
என்றார்.
49அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள்.
50அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.
51இயேசு அவர்களைப் பார்த்து,
“விடுங்கள், போதும்”
என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.
52அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து,
“ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்?
53
நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது”
என்றார்.
பேதுரு மறுதலித்தல்
(மத் 26:57-58, 69-75; மாற் 14:53-54, 66-72; யோவா 18:12-18, 25-27)
(மத் 26:57-58, 69-75; மாற் 14:53-54, 66-72; யோவா 18:12-18, 25-27)
54பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.
55வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.
56அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.
57அவரோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார்.
58சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார்.
59ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார்.
60பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.
61ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்:
“இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்”
என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,
62வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இயேசுவை ஏளனம் செய்தல்
(மத் 26:67-68; மாற் 14:65)
(மத் 26:67-68; மாற் 14:65)
63இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.
64அவரது முகத்தை மூடி, “உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்” என்று கேட்டார்கள்.
65இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு
(மத் 26:59-66; மாற் 14:55-64; யோவா 18:19-24)
(மத் 26:59-66; மாற் 14:55-64; யோவா 18:19-24)
66பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.
67அவர்கள், “நீ மெசியா தானா? எங்களிடம் சொல்” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம்,
“நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;
68நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.
69
இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்”
என்றார்.
70அதற்கு அவர்கள் அனைவரும், “அப்படியானால் நீ இறைமகனா?” என்று கேட்டனர். அவரோ,
“நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்”
என்று அவர்களுக்குச் சொன்னார்.
71அதற்கு அவர்கள், “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே” என்றார்கள்.
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்
(மத் 27:1-2, 11-14; மாற் 15:1-5; யோவா 18:28-38)
(மத் 27:1-2, 11-14; மாற் 15:1-5; யோவா 18:28-38)
1திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.
2“இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்” என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
3பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்க, அவர்,
“அவ்வாறு நீர் சொல்கிறீர்”
என்று பதில் கூறினார்.
4பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, “இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை” என்று கூறினான்.
5ஆனால் அவர்கள், “இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்” என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
ஏரோது முன்னிலையில் இயேசு
6இதைக் கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்று கேட்டான்;
7அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
8இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.
9அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.
10அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.
11ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.
12அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.
இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்
(மத் 27:15-26; மாற் 15:6-15; யோவா 18:39-19:16)
(மத் 27:15-26; மாற் 15:6-15; யோவா 18:39-19:16)
13பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.
14அவர்களை நோக்கி, “மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.
15ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.
16எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்றான்.
17[விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.]⁕
18திரண்டிருந்த மக்கள் அனைவரும், “இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்” என்று கத்தினர்.
19பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.
20பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.
21ஆனால் அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள்.
22மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, “இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்றான்.
23அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
24அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.
25கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.
இயேசுவைச் சிலுவையில் அறைதல்
(மத் 27:32-44; மாற் 15:21-32; யோவா 19:17-27)
(மத் 27:32-44; மாற் 15:21-32; யோவா 19:17-27)
26அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.
27பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.
28இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,
“எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.
29ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது ‘மலடிகள் பேறுபெற்றோர்’ என்றும் ‘பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்’ என்றும் சொல்வார்கள்.
30அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து,
‘எங்கள் மேல் விழுங்கள்’
எனவும் குன்றுகளைப் பார்த்து,
‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்’
எனவும் சொல்வார்கள்.✠
31
பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!”
என்றார்.
32வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.
33மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34அப்போது [இயேசு,
“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”
என்று சொன்னார்.]⁕ அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.✠
35மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” என்று கேலிசெய்தார்கள்.
36-37படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று எள்ளி நகையாடினர்.
38“இவன் யூதரின் அரசன்” என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று “என்று அவரைப் பழித்துரைத்தான்.
40ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.
41நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.
42பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான்.
43அதற்கு இயேசு அவனிடம்,
“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்”
என்றார்.
44ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
45கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
46
“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்”
என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.✠
47இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், “இவர் உண்மையாகவே நேர்மையாளர்” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
48இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.
49அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.✠
இயேசுவின் அடக்கம்
(மத் 27:57-61; மாற் 15:42-47; யோவா 19:38-42)
(மத் 27:57-61; மாற் 15:42-47; யோவா 19:38-42)
50யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.
51தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.
52அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.
53அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
54அன்று ஆயத்த நாள்;⁕ ஓய்வுநாளின் தொடக்கம்.
55கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,
56திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
(thanks
to www.arulvakku.com)
உங்கள் கழுதை குட்டியை
இயேசுவோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
குருந்து ஞாயிறோடு, புனித
வாரம் துவங்குகிறது. இதுவே உங்களுக்கும் , பரிசுத்த வாழ்வை கொடுத்து, இயேசுவோடு
உங்களை இணைத்து , அவரின் ஆழமான அன்போடு இனைக்குமா?
"ஆண்டவருக்கு
தேவையாக இருக்கிறது" என்ற வசனத்தை இந்த திருப்பலியின் வாசகத்தில் நாம்
கேட்கிறோம். இது தான் நம்மை கடவுளோடு இணைத்து வைக்கிறது.
ஏன் இந்த நற்செய்தியை
எழுதியவர், எப்படி இயேசு கழுதையை எப்படி அழைத்து கொண்டார் என்பதை எழுத வேண்டும் என நீங்கள் நினைத்ததுண்டா?
தற்போதைய சூழலில் நமக்கு இந்த கதை நமக்கு ஒரு போதனையை தருகிறது. நாம் அனைவரும்
நம்மில் ஒரு "கழுதை குட்டியை" கட்டி கொண்டு தான் உள்ளோம். நம்மில் உள்ள
பலவற்றில் நாம் இன்னும் கிறிஸ்துவோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறோம். நம்மில்
இருக்கும் பணம், திறமைகள், படைப்பாற்றல், கடவுளுக்காக
நேரம் செலவழித்தல், நமது ஆற்றலை அவருக்காக கொடுத்தல் ஆகியவை , நம்மோடு இருக்கும்
கழுதை குட்டிகளாகும். நம் தலைவருக்கு இது அனைத்தும் தேவை ஆக இருக்கிறது . ஆனால்
நாம் சுய நலத்துடன் நம்மில் உள்ள திறமைகளை பணத்தை, நம் சுய தேவைகளுக்காக ஒதுக்கி
வைத்துள்ளோம். ஆனால் இயேசுவுக்கு நாம் அதனை கொடுக்கும் பொழுது, அவருக்கு
கண்டிப்பாக அது உபயோகமாக இருக்கும். இயேசுவுக்கு மேலேறி சென்ற கழுதையாக , நாமும்
இருப்போம். அதன் மூலம் நம் திறமைகள், கடவுளின் மாட்சிமை போற்றப்படும்.
குருத்து ஞாயிறு ,
கடவுளின் அன்பிற்காக நாம் அவரை போற்றுதல் வேண்டும் என்றும் , அவரை மாட்சிமை படுத்த
வேண்டும். என்று நமக்கு போதிக்கிறது. அவரின் அன்பை, நமக்கு சிலுவையில் காட்டினார்.
உங்களுக்காக வேறு யார் மரணம் எய்தினார்? அதுவும் இன்னும் அதிகமான துன்பங்களுடன்.
நமது தண்டனைகளை, இயேசு மிகவும் வலியோடு, இரத்தம் சிந்தி ஏற்று கொண்டார்.
இந்த ஞாயிறும், மற்றும்
ஒவ்வொரு ஞாயிறும், நாம் ஓசானா பாடி, நாம் சந்தோஷ பட வேண்டும். திவ்ய நற்கருணையில்,
நாம் ஒன்றிணைந்து, கடவுளின் மிகப்பெரிய அன்போடு இணைந்து, அவரை மகிமை படுத்துவோம்.
இந்த இணைப்பில், நாம் ஏன் காதலர்கள் போல கடவுளோடு இருப்பதில்லை. இதற்கு பதில்: நம்
"கழுதை குட்டிகள்" இன்னும் நாம் கட்டி கொண்டிருக்கிறோம்.
இயேசு உங்களிடம் உள்ள
"கழுதை குட்டிகளை" அவரோடு பகிர்ந்து கொள்ள அவரது சீடர்களை அனுப்பியுள்ளார்.
அவர்கள் திருப்பலியின் பீடத்தில், திவ்ய நற்கருணை புனிதபடுத்தும் பொழுது, அந்த
சீடர்கள் நிற்கின்றனர். "உதவி தேவை" என்று அறிவிப்பினை அவர்கள்
வெளியிடுகின்றனர். உங்கள் வேலையினிடையே , உங்கள் உதவியை தேடி அவர்கள்
வருன்கின்றனர். அந்த புதியவர்கள், உங்கள் அன்பளிப்பு தேடி வருகின்றனர்.
இறையரசின் திட்டத்தில்
நீங்கள் அதிகம் பங்கு கொள்ள வேண்டும் என்று யார் உங்களை கேட்டது.?
© 2019
by Terry A. Modica