Saturday, July 17, 2010

ஜுலை 18 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜுலை 18 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு

Gen 18:1-10a
Ps 15:1-5
Col 1:24-28
Luke 10:38-42



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 10


மார்த்தா மரியாவைச் சந்தித்தல்
38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார்.41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நமது கவலைகள் மற்றும் பயம் பற்றியும் யேசு நம்மிடம் பேசுகிறார். அவைகள் நம்மை தொந்தரவு செய்கிறது. அவைகள் நம்மை கட்டுபடுத்த ஆரம்பித்தால், நம் வாழ்விற்கு கேடு வந்து விடும். ஏனெனில், அவைகள், நாம் கடவுள் மேல் வைத்துள்ள கண்களை வேறு பக்கம் திருப்பிவிடும், மற்றும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகி விடும்.

மரியாவோ நல்ல பங்கை தேர்த்தெடுத்து கொண்டாள்; யேசுவிற்கு சீடராக இருப்பதையே குறிக்கோளாக கொண்டு , வேறு எதுவும் அவரை தொந்தரவு செய்யாதபடி பார்த்து கொண்டார். நாம் நமது பல வேலை நெருக்கடிகளிடையே, சில நேரம் ஒதுக்கி, யேசுவோடு அமைதியாக உட்கார்ந்து , அவரிடமிருந்து கற்று கொண்டால், நமது பல கவலைகள் , கவலையே பட தேவையில்லை என்று நமக்கு புரியும்.
யேசுவின் காலடியில் நாம் அமைதியாக உட்கார்ந்து அவரிடம் வேண்டினால் தான், நமது துயரங்கள் கவலைகள், மற்றும் துன்பங்கள் அனைத்தும் போக்கும், நம்பிக்கை கிடைக்கும். இந்த சோதனைகளிலிருந்து வெளிவர நமக்கு தேவையான ஞானம் கிடைக்கும். மார்த்தாவின் சின்ன கவலை போல, நமது சின்ன கவலைகளும், யேசுவின் மேல் இருந்த நமது கண்கள் எடுக்கப்பட்டால், அது பாவமாகும். எதுவும், யேசுவிடமிருந்து நம்மை அகற்றினால், அது நமக்கு நல்லதல்ல.

யேசுவிடமிருந்து , நாம் எப்படி பரிசுத்த வாழ்வை வாழ்வது என்று கற்று கொள்ளவில்லை என்றால், அவர் மேல் நம் கண்கள் இல்லாமல் இருந்தால், நாம் பரிசுத்த வாழ்வில் வளர முடியாது. அவரை போல நாமும் அன்பு செய்ய முடியாது, அவர் கொடுக்கும் எல்லா அன்பையும், நாம் பெற முடியாது. நாம் அவரோடு அமைதியாக அமர்ந்து, அவரிடம் வேண்டி, அவர் கூறும் போதனைகளை குடித்தால், ஒழிய நாம் அவரின் அன்பை அரவணைக்க முடியாது. வண்டி ஓட்டுபொழுதோ, அல்லது, ப்ரசங்கம் கேடபதும் போதாது.

கலக்கமும், கவலைகளும் பயத்தின் வகைகள் ஆவை. என்னவோ தவறான விசயம் நடக்க போகிறது என பயப்படுகிறோம். உண்மையான காரணத்திற்காக கவலைபட்டாலும், அது யேசுவின் மேல் உள்ள கண்களை தடுத்தால், அது தவறாகும். பயம் நமக்கு, ஒரு எச்சரிக்கை மணியாகும், அதனை கண்டவுடன், நாம் அமைதியாக யேசுவோடு உட்கார்ந்து ,அவருடன் கலந்தாலோசித்து, எதனால் இந்த பயம் என்று தெரிந்து, அவரிடமிருந்து அதற்கான பதிலையும், ஊக்கத்தையும், அதன் பிறகு அமைதி வரும் என்ற நம்பிக்கையையும் பெறலாம்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, June 25, 2010

ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜூன் 27, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு

1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9


1 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு
முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59 இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(thanks to www.arulvakku.com)



உங்களை யாரும் ஏற்று கொள்ளவில்லையெனில், அந்த நிலைமையை எப்படி சமாளிப்பீர்கள்? இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அந்த நிலைமையை எப்படி கையாண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யேசுவுக்கு முன்னரே சாமரியரின் ஊருக்கு சென்றவர்கள், யேசு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார்கள். ஏனெனில், சமாரியர்கள் ,யூதர்களுக்கு எதிரான தவறான எண்ணத்தில் இருந்தனர். யேசு சொல்வதை அவர்கள் கேட்க விரும்பவில்லை. யேசு என்ன சொல்ல விரும்பினாலும், அவர்கள் இதயத்தை மூடி விட்டார்கள். அதனால், உலகை இரட்சித்தவரோடு இனைந்து இருக்கும் அனுபவத்தை அவர்கள் தவற விட்டு விட்டனர்.



உங்களோடு நெருக்கமாக இருப்பவர்களிடம், யேசுவை கொன்டு செல்லும்பொழுது, அவர்கள் ஏற்று கொள்ளவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நீங்கள் சொல்வதை ஒருவர் கேட்கவில்லையெனில், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? திருச்சபையின் போதனைகளை, நீங்கள் விளக்கி சொல்லும்பொழுது, அதனை புரிந்து கொள்ள கூட அவர்கள் முயற்சிக்காத பொழுது, நீங்கள் என்ன நினைப்பீர்கள்?


உங்களை விட, யேசுவின் சீடர்கள் அவர்கள் ஏற்று கொள்ளப்படாததை அதிகம் விரும்பவில்லை. யேசுவின் நெருங்கிய நன்பர்களான ஜானும், ஜேம்ஸும் , அவர்களை நெருப்பில் வைத்து எரிக்க வேண்டும் என விரும்பினர். "' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?" என்று யேசுவிடம் கேட்டனர். இயேசு ஏற்கனவே யாரவது "உங்களை யாராவது நிராகரித்தால், உங்கள் கால் செருப்பில் உள்ள தூசியை தட்டிவிட்டு, அந்த இடத்தை விட்டு செல்லுங்கள் " என்று கூறியிருக்கிறார். தற்போது, அவர் என்ன போதனை கூறினாரோ, அதையே அவர் பின் பற்றினார். யேசு அவரின் நம்பிக்கைகளை , அந்த ஊர் மக்களுக்கு தினிக்க விரும்பவில்லை. அவரின் போதனைகளை அந்த ஊருக்கு தேவை என்று தெரிந்திருந்தும், அவர் அந்த போதனைகளை அங்கே கூறியிருக்க முடியும்.


நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த நிறைய விசயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நீங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் உங்களை ஏற்று கொள்ள வில்லையெனிலும், அதனை ஏற்று கொண்டும் நாம் யேசுவின் பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, யேசுவின் சந்தோசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.



இன்றைய நற்செய்தியின் முடிவில், யேசுவை பின் செல்வது, எப்போதுமே முன்னேறும் செயலாகும், என்று யேசு விளக்குகிறார். நாம் எப்போதுமே ஏதாவது ஒரு விசயத்தைவிட்டு வெளியே வருகிறோம். யாராவது நிராகரித்தால், அங்கிருந்து வெளியே வருகிறோம், அதிருப்தியான விசயத்தை விட்டு வெளியே வருகிறோம். இதயம் இல்லாதவர்களிடமிருந்தும் யேசுவை பின் செல்லாதவர்களிடமிருந்தும், நாம் வெளியே வருகிறோம்.


முன்னேறி செல்ல, பரிசுத்த ஆவிதான் , நம்மை தயார் பன்னி யேசுவை நாம் பெற்று கொள்ள உதவி செய்பவர். நாம் யாரையாவது, யேசுவிடம் அழைத்து வந்து, அந்த முயற்சி வெற்றி பெறவில்லயென்றால், நாம் உண்மையாக தோல்வி அடையவில்லை; நாம் அறுவடை செய்யாமல், விதை விதைக்கிறோம். பரிசுத்த ஆவி அந்த விதையை வளர்த்து, அறுவடை செய்வார். நாம் மற்ற வயல்களை பார்த்து செல்ல வேண்டும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Saturday, June 19, 2010

ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை

ஜூன் 20,2010 ஞாயிறு நற்செய்தி,மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு

Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? 'என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.



(thanks to www.arulvakku.com)


"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" இந்த கேள்வியை தான் இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஒவ்வொருவருக்கும் கேட்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கை , இந்த கேள்விக்கு சரியான பதிலை கொடுக்கிறதா? , உங்கள் வாழ்வின் மூலமாகவும், உங்கள் பேச்சின் மூலமாகவும், யேசு தான் உங்கள் கடவுள், உங்களை இரட்சிப்பவர், உங்கள் அன்பு , உங்கள் போதகர், வழிகாட்டி, மேலும், மிக்ச்சரியான வாழ்வு வாழ்வதற்கு எடுத்து காட்டாக யேசு தான் இருக்கிறார் என்பதனை ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் எடுத்து சொல்கிறீர்களா?

உங்கள் வாழ்வு நலமாக இருக்கும்போது, யேசுவால் தான் இத்தனை ஆசிர்வாதமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறீர்களா? நீங்கள் ப்ரச்சினைகளில் இருக்கும்போதும், நீங்கள் மற்றவர்களை மன்னித்து, யேசு உங்கள் வலியையும் வேதனையையும் , அவர்களின் பாவங்களையும் யேசு சிலுவைக்கு எடுத்து சென்று விட்டார் என உங்களால் சொல்ல முடிகிறதா? சரியான காரணத்திற்காக நீங்கள் கோபப்படும் பொழுது, மற்றவர்களுக்கு எரிச்சல் கொடுக்கும் பேச்சை நீங்கள் பேசுகிறீர்களா? அல்லது யேசுவிடம் வேண்டி, இருவருக்கும் நடுவே அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று கேட்கிறீர்களா?


நமது உதடுகள் யேசு தான் கடவுள் என்று சொல்லலாம் ஆனால், நமது வாழ்வோ அதற்கு எதிர்மாறாக இருக்கும். நமது நடவடிக்கைகள் மூலம், நாம் என்ன செய்தியை கொடுக்கிறோம் என்பதில் நாம் கன்னும் கருத்துமாக இருக்க வேண்டும். மிக கவனத்துடன் நமது வாழ்வை நடத்திட வேண்டும், நமது வார்த்தைக்கும், வாழவிற்கும் ஒற்றுமை இருக்க வேண்டும்.


நமது உள்ளத்திள் ஏற்படும் விளைவுகளாலும், வலியினாலும், பயத்தினாலும் நாம் பாவம் செய்கிறோம். நமது நடவடிக்கைகளில் என்ன மாறுதல் என்று நாம் கவனித்து கூர்ந்து பார்த்தால், யேசுதான் கடவுள் என்பதனை நாம் நினைவில் கொள்ளாமல் வைக்க என்ன நம்மிடம் இல்லை என்பது தெரியும். இதன் மூலம், நாம் யேசுவின் அன்பையும், அவரது குணப்படுத்தலையும் நாம் பெறுவோம்.

"எனது வாழ்வு யேசு தான் கடவுள் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறதா? , அவரின் உண்மையான ஆற்றலை , அன்பை காட்டுகிறதா? இந்த கேள்வியை நாம் ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே கேட்டு கொள்ள வேண்டும். இதற்குண்டான பதிலில்,நாம் எங்கே முன்னேற வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதன் மூலம் யேசு யார், அவர் எப்படிபட்டவர் என்பதும் நமக்கு தெரியும். இதன் மூலம், நம்மால் ஏன் மற்றவர்கள் மனதை மாற்ற முடியவில்லை என்பதும் தெரியும். நமது வாழ்க்கை வேறாக இருக்கும்பொழுது, நமது வார்த்தையை யாரும் நம்புவது இல்லை.


இயேசு யார்? அவருக்கு உன்னை நேரடியாகவும், உன் உள்ளத்தையும் அறிந்தவர். உனக்கு தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னை முழுதும் அன்பு செய்பவர், உனக்கு எப்பொழுதும் உதவி செய்பவர், நீங்கள் அந்த அன்பையும், உதவியையும் கான முடியாவிட்டாலும் கூட. என்றுமே உன்னை நிராகரித்ததில்லை. இதனை நீங்கள் நம்பினால், அவரிடம் பாதுகாப்பை நீங்கள் உணர முடியும். உங்கள் வாழ்க்கையில் எந்த ப்ரஸ்ன்னை இருந்தாலும், அவரின் அன்பு உங்களை என்றுமே அவர் பக்கத்தில் இருக்க வைக்கும். உங்கள் தூய சிலுவையை எடுத்து கொண்டு, அவரின் பின் செல்லுங்கள்.

© 2010 by Terry A. Modica

Friday, June 4, 2010

ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 6, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
நற்கருணை திருவிழா

Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.



(thanks to www.arulvakku.com)

அன்பானது ஐந்து அப்பங்களும் ,இரண்டு மீனும் போன்றது, அதனை மற்றவர்களிடம் கொடுக்காதவரை அன்பு மிகவும் குறைவாகவே காணப்படும்." கலிலேயே கடற்கரையில் வடக்கு பக்கம் உள்ள கோவிலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இரண்டு மீனையும் , ஐந்து அப்பங்களையும் பல மடங்காக பெருக்கினார். அவரை பார்க்க வந்த அனைவருக்கும் உணவு வழங்கினார்.


அந்த கோவிலின் பீடத்தின் முன்னே மொசைக்கில் செய்யப்பட்ட மீனும், ரொட்டி துண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. எந்த பாறையிலிருந்து யேசு அதனை பல மடங்காக பெருக்கினாரோ அதற்கு பக்கத்திலேயே உள்ளது. ஆனால் அங்கே 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன்? ஐந்தாவது ரொட்டி துண்டானது, நமக்கு ஒவ்வொரு திருப்பலியிலும் திவ்ய நற்கருணையாக வழங்கப்படுகிறது.

இந்த கோவிலின் முகப்பை இந்த முகவரியில் நீங்கள் பார்க்கலாம். http://wordbytes.org/holyland/pilgrim049.htm

திவ்ய நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் உடலுடன் இணைவதைவிட மேலானது, ஏனெனில், நாம் அனைவரும் திருச்சபயில் இணைகிறோம். இது ஒரு அற்புதமான தெய்வீக நிகழ்வாகும். பல மடஙக பெருகுகிறது. நமக்கு என்ன குறை இருந்தலும், யேசுவாக , பரிசுத்த ஆவி மூலம் நம்மில் வருகிறது. திருப்பலியில், நாம் திவ்ய நற்கருனையில் பங்கு கொள்ளும் பொழுது, நம்மிடம் இல்லாததை, பல மடங்காக பெருக்க வேண்டும் என நாம் யேசுவிடம் கேட்கலாம்.

இயேசு நமக்கு தேவையன அனைத்தையும் கொடுப்பார் என்று நாம் நம்பலாம், சரியான நேரத்தில், நம்மால் எவ்வளவு எடுத்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் தருவார். இருந்த போதிலும், இது ஒரு வளரும் செயலாகும்.
உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு தேவையான அன்பு கிடைத்துள்ளதா? நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்வார்கள். ஏனெனில், கடவுளை தவிர மற்றவர்கள் யாராலும், நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது. யாராலும், அவர்க்ள நம்மிடம் மிகவும் நெருக்காமாக இருந்தாலும், நம் நம்பிக்கைக்கு தகுந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவோடு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் நமக்கு தேவையான அன்பை கொடுக்க முடியாது.

திவ்ய நற்கருணை, கடவுளின் பரிசுத்த அன்பிற்கும், நமக்கும் இவ்வுலகில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகும். திவ்ய நற்கருணையோடு நம் இணைப்பை நாம் சரியாக புரிந்து கொள்ளாததால் தான், நாம் இன்னும் முழுமையான அன்பை உணரமுடியவில்லை. அந்த நற்கருணையின் முழுமையை , நம் வாழ்க்கையை மாற்றும், நற்கருணையை முழுமையாக பெற , நாம் நற்கருணையாக, முழு அன்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக , தியாகம் செய்த அன்பு தான் திவ்ய நற்கருணை. நீங்கள் உஙளுக்கு போதிய அளவு அன்பு கிடைக்கவில்ல என்றால், எவ்வளவு அன்பு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ , அவ்வளவையும் கொடுங்கள். எல்லோருக்கும் திவ்ய நற்கருணையாக இருங்கள்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, May 28, 2010

மே 30, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 30, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த திரித்துவ திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Rom 5:1-5
John 16:12-15

________________________________________
யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 16

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.


கடவுள் , உங்களுக்கு தெரியாததை உங்களுக்கு தெரியப்படுத்துவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் யேசுவிடம் என்ன கேட்டு கொண்டிருக்கிறீர்கள் , இன்னும் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை? திருச்சபை உங்களுக்கு கூறும் போதனைகளில் எது உங்களுக்கு ப்ரியவில்லை அல்லது உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை? இன்றைய நற்செய்தியில், யேசு இன்னும் உங்களுக்கு நிறைய சொல்ல ஆசைபடுகிறார் என்று கூறுகிறார். ஆனால் அவர் கூறும் எல்ல விசயங்களையும் நம்மால், கையாள முடியாது.

ஏன் இன்னும் நாம் தயாராய் இல்லை? ஏனெனில், நாம் இன்னும் பரிசுத்த ஆவியிடம் நம்மை ஒப்படைத்து நம்மை தயார் படுத்தவில்லை. பரிசுத்த ஆவி நம்மை தயார்படுத்த விடவில்லை. நாம் நம்மையே கடவுளிடம் கொடுத்து நம்மை மாற்ற அவரிடம் கேட்க வேண்டும். உண்மை நமக்கு பெரிய சுமையாகவே இருக்கும், அது நமக்கு ஆசிர்வாதமாக இல்லாமல், சுமையாக இருப்பதால், நாம் உடனடியாக ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
யேசு சொன்னது அனைத்தும், தந்தை கடவுளிடமிருந்து பரிசுத்த ஆவி மூலமாக யேசுவிற்கு வந்தது. கடவுள் நமக்கும் அதே பரிசுத்த ஆவியை கொடுத்திருக்கிறார். அதே ஞானம், அதே உண்மை, எல்லா அன்பளிப்புகளும், அதனை உபயோகப்படுத்தவில்ல என்றால், அதெல்லாம் வீனான பொருளாகிவிடும் ஆனால், நம்மையும் பரிசுத்த ஆவியிடம் ஒப்படைத்து அவர் நம்மை தூய்மைபடுத்த வேண்டும். பரிசுத்த திரித்துவத்தில், தந்தை கடவுள் நமது பாவங்களை மன்னிப்பவர், யேசு அந்த மன்னிப்பை வழங்குபவர், பரிசுத்த ஆவி நம்மை தூய்மைபடுத்தி, இனிமேல் பாவம் செய்யாதே என்ற ஆற்றலை வழங்குபவர்.

பாவசங்கீர்த்தனத்தில், குருவானவர் யேசுவின் ப்ரசன்னமாகவும், இந்த திருச்சபையின் உடலாகவும் இருக்கிறார். பாவ மன்னிப்பு பரிசுத்த ஆவியின் செயலாகும், ஆனால், அதற்கு மேலும், குற்ற உணர்வை சுத்தமாக தூக்கி எறிவதாலும், பாவ நடத்தையிலிருந்து மாறி அந்த பாவங்களை இனிமேல் செய்யாமல் இருக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். திருப்பலியில் நடக்கும் பாவ மன்னிப்பில், பரிசுத்த திரித்துவ கடவுள் நம் மனம் திருந்துவதை ஏற்று கொண்டு, நம்மை இன்னும் பரிசுத்த வாழ்வில் வாழ மாற்றுகிறார்கள்.
தாழ்ச்சியுடன் இருப்பது, நம்மால் இருக்க முடியும். நம் வாழ்வில் இன்னும் பதில் கிடைக்காத பல கேள்விகளுக்கு, நம்மாலே பதில் கண்டு பிடிக்க முடியும், எப்படி? தந்தை கடவுளின் விருப்பங்களை யேசுவுடன் இனைந்து நாம் இவ்வுலகில் நிறைவேற்றினால், இன்னும் பரிசுத்த வாழ்வில் வாழ்ந்தால், நமக்கு பதில் கிடைக்கும்.

© 2010 by Terry A. Modica

Saturday, May 22, 2010

மே 23 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 23 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

(thanks to www.arulvakku.com)



இன்று இரண்டு நற்செய்தி வாசகங்கள் நாம் வாசிக்க முடியும். அதில் யேசு, , ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று இரண்டு முறை கூறுகிறார். முதலில், இயேசு அவரின் சீடர்களுக்கு அமைதியின் அன்பளிப்பை கொடுக்கிறார், அதன் மூலம், அவர்களின் கவலைகளை விட்டு விட்டு, அவர்களின் நடுவே நின்றிருக்கும் யேசுவை அவர்கள் கண்டு கொள்ள முடியும்.


மீண்டும், அவரின் இறைசேவையை ,சீடர்கள் தொடர அவர்களை அழைக்கும் பொழுதும், அவர்களிடம், "' உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று கூறி, பரிசுத்த ஆவியோடு வாழும்பொழுது , இவ்வுலகத்திற்காக, மக்களுக்காக கடவுளின் சேவையை நாம் தொடரமுடியும். யேசு நம்மோடு இருக்கிறார் என்று நாம் நினைக்கும் பொழுது, நாம் அமைதியோடு இருக்க முடிகிறது. இருந்தாலும், மற்றவர்களிடம் இயேசுவை பற்றி சொல்லும்பொழுது, நமக்கு சவாலக தான் இருக்கிறது. ஏனெனில், நாம் தகுதியற்றவர்களாக, அல்லது அதிக உறசாகத்துடனும், மேலும், நாம் நிராகரிக்கபடுவோஓம் என்றும், அல்லது நம்மை கேலி செய்வார்கள் என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் தான் அவர் நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.


தந்தை கடவுள் நம்மிடம் கேட்கும் இறைசேவையை செய்யும்பொழுது, நம்ம என்னவெல்லாம் தேவையோ அதனையெல்லாம் நமக்கு தருபவர் பரிசுத்த ஆவியானவர் ஆவார். அதனால், நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும், கடவுள் நமக்கு ஆறுதல் தராமல் இருக்க மாட்டார், அதுவும் மக்கள் நம்மை நிராகரிக்கும் பொழுது கண்டிப்பாக நம்முடன் இருப்பார்.

பரிசுத்த ஆவியின் துனையுடன் , யேசுவோடு நாம் இனைந்து இருப்பதால், நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய நன்மை, நம்து உள் அமைதி, நமக்கு என்ன நடந்தாலும், மற்றவர்கள் நம்மை என செய்தாலும், அல்லது ஒன்றுமே செய்ய வில்லை என்றாலும், நமது உள் அமைதி அமைதியாகவே இருக்கும். ஆவியோடு வாழ்வது என்றுமே அமைதியை தரும். பரிசுத்த ஆவியின் கொடைகளில் ஒன்று நமக்கு அமைதியை தருவது.

இன்றைய நற்செய்தியின் இறுதியில், யேசு அவருடைய சீடர்களுக்கு (முதல் கத்தோலிக்க குருக்கள்) பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்து, இறைவனின் ப்ரசன்னம் இங்கே தொடர்ந்து இருக்க அவர்களை தயார் படுத்தினார். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை குருக்கள் மூலமாக யேசு நம்மிடம் வர தயார் படுத்தினார்.


பரிசுத்த ஆவியின் மன்னிக்கும் ஆற்றல், நமது பாவ வாழ்விலும் , அமளியான வாழ்விலும் , நாம் அமைதியை அனுபவிக்க ஆற்றல் தருகிறது. மன்னிப்பது ரொம்பவும் கடினமாக இருந்தாலும் கிறிஸ்துவின் ஆவியில், நாம் அதனை செய்ய முடியும். நம்மை காயப்படுத்துபவர்களை நாம் மன்னிக்கலாம், அவர்கள் திருந்தாவிட்டாலும் நாம் மன்னிக்கலாம். இது தான் நமக்கு அமைதியை கொடுக்கும்.

© 2010 by Terry A. Modica

Friday, May 14, 2010

மே 16, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 16, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம் ஞாயிறு
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 17

20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.21எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.22நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.23இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.25நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.26நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். '



(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி ஒற்றுமையின் நற்செய்தி. யேசு இறப்பதற்கு முன் விண்ணகத்தை நோக்கி முன் நமக்காக நமது திருச்சபைக்காக அவர் வேண்டினார். உறவிற்கான அருட்சாதனத்தை எஏற்படுத்துகிறார். யேசுவும் தந்தை கடவுளும் ஒன்றானவர்கள் போல, நாமும் ஒருவரோடு ஒருவர் ஒன்றானவர்கள் தான். அதன் மூலம் நமது ஒற்றுமையின் சாட்சியாக - நிரந்தரமான , பொறுப்புடனும், சுய தியாகத்தாலும், நிபந்தனையற்ற அன்பினாலும் - நாம் கடவுளின் அன்பை இந்த உலகத்திற்கு காட்டலாம். கடவுளின் அன்பு தான் உண்மையானது என்று உலகுக்கு நிருபித்து காட்டலாம். அவரின் அன்பு, நிரந்தரமானது, பொறுப்பானது, நிபந்தனையற்றது, தியாகத்தாலனது, யார் என்ன தவறு செய்திருந்தாலும், எல்லோர் மேலும் அன்போடு இருப்பவர்.

இவ்வுலகில், நமது திருமண அருட்சாதனமே , நமது ஒற்றுமையின் எடுத்து காட்டாகும். இதன் மூலம் நாம் கற்கும் போதனை கடவுள் நம்மை எந்த நிபந்தனையுமின்றி அன்பு செய்கிறார். நல்லதோ கெட்டதோ அவர் எப்பொழுமே நம்மை அன்பு செய்கிறார். நோயுற்று இருந்தாலும், மிகுந்த நலமுடன் இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், முழு நம்பிக்கையுடன் கடவுள் நம்மை அன்பு செய்கிறார். திருமண அருட்சாதனத்தில், கணவன் அவருடைய வாழ்க்கையை மனைவிக்கு சேவை செய்வதற்காக தியாகம் செய்கிறார், மனைவி, கணவனுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார். கிறிஸ்து அவருடைய வாழ்வை நமக்காக , இந்த திருச்சபைக்க்காக தம் வாழ்வை கொடுத்தார். கிறிஸ்து தான் இந்த திருச்சபையின் மணமகன் அவர். திருச்சபைக்காக , அவரின் வாழ்வை கொடுத்தார். அந்த வாழ்க்கையின் அர்ப்பணிப்பால் , நாம்மையும் அவர் பின் செல்லவும், அவருக்கு சேவை செய்யவும் நம்மை அழைக்கிறார்.



திருமணம் புனிதமானது! விவாகரத்து ஆன தம்பதிகளை கத்தோலிக்க குருக்கள் மீண்டும் திருமணம் செய்து வைக்க முடியாது, (அவர்களது முந்தைய திருமணம் உண்மையான ஒற்றுமையின்றி இருந்தால் தான்). தம்பதிகளின் இணைப்பு ஒற்றுமை , யேசுவும் , கடவுளும் கொண்ட ஒற்றுமையாக , அதே புனிதத்துடன் இருக்க வேண்டும். நாமெல்லாம் கடவுளின் இறைசேவைக்காக நாம் ஒற்றுமையின் புனிதத்துடன் இருக்க வேண்டும். அவரின் அன்பிற்கு உதாரணமாய் இருக்க வேண்டும்

இதே ஒற்றுமை, எல்லோருக்கும் பொருந்தும், கடவுள் எங்கெல்லாம் இரண்டு பேரோடு அல்லது அதற்கு மேற்பட்டவரோடு இனைகிறாரோ அங்கெல்லாம் கடவுளின் அன்புடன், நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும்.

ஒவ்வொரு இணைப்பும், (கடவுளால் உண்டாக்கப்பட்டது) அனைத்தும் புனிதமானது. ஒவ்வொரு உறவும், இவ்வுலகிற்கு யேசுவின் தியாகத்தையும், அவரின் உண்மையான அன்பையும் பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்துவின் உடலில் (நமது திருச்சபை) பிரிவினையும், வேற்றுமையும் இருந்தால், எவ்வளவு துன்பத்திற்கும் வேதனையுமாக இருக்கும். !

© 2010 by Terry A. Modica