Friday, March 29, 2013

மார்ச் 31 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மார்ச் 31 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு, ஆண்டவரின் உயிர்த்தெழுதல்
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Colossians 3:1-4 or 1 Corinthians 5:6b-8
John 20:1-9 or Mark 16:1-7 or Luke 24:13-35

இயேசு உயிர்த் தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.10 பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)


அல்லேலூயா! இந்த புனித வாரத்தில் நாம் மேற்கொண்ட தியானத்தினாலும், தவக்காலத்தில் யேசுவோடு நெருங்கியிருப்பதாலும், நம்மில் ஏற்பட்டுள்ள அதிக விசுவாசத்திற்காகவும், குணமடைதலுக்காகவும் இன்று கொண்டாடுங்கள்.

மோட்சத்திற்கு செல்லும் வழி, கதவு எல்லாமே சிலுவைதான். ஈஸ்டரின் மகிமையை நாம் நமது உள்ளத்திலும், நமது தேவைகளிலும், ஆசைகளிலும் அனுபவிக்கும் முன்பு- நமது துயரங்களை, தியாகத்தை ஏற்றுகொண்டு, நம் வாழ்வோடு இயேசுவை இனைக்கும் கருவியாக்க வேண்டும்.

தற்போது, ஈஸ்டர் சந்தோசம் யேசு சிலுவையில் என்ன செய்தாரோ அதற்காக கொண்டாடுவது மட்டும் அல்லாமல், அவரோடு தொடர்ந்து, அவரது பயனத்தில், ஒவ்வொரு அடியாக அவரோடு எடுத்து வைத்து நடந்தோமானால், இந்த ஈஸ்டர் சந்தோசம் நம்மில்  தொடர்ந்து இருக்கும். உண்மையாகவே விசுவாசத்தில் வளர வேண்டுமானால், யேசு என்ன செய்தாரோ, அதனை நாமும் செய்ய வேண்டும். அவரது இறைசேவையில் இனைந்து, மற்றவர்களுக்கு உதவவும், அவர்கள் கடவுளோடு நட்பு கொள்ளவும், நாம் தொடர்ந்து இறைசேவையாற்ற வேண்டும். இச் சேவையில் நாம் சிலுவையை தொடர்ந்து எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தியாகமும், கஷ்டமும் இல்லாமல், நாம் மீட்பை அடைய முடியாது.


சிலுவையின் வெற்றி தான், ஈஸ்டர் அன்று நாம் கூறும் அல்லேலூயா ஆகும். இதன் மூலம், நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், வாழ்க்கை முழுதும் ப்ரச்சினையே இல்லாமல் இருந்தால் தான், நாம் சந்தோசமாக இருக்க முடியும் என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், கடவுள் நம்மை சோதனைகளிலிருந்தும், ப்ரச்சினைகளிலிருந்தும், நம்மை காத்து, தீயவற்றிலிருந்து நம்மை காத்து நல்லவற்றை கொடுக்கிறார் என்ற விசுவாசத்தில் வளரவேண்டும்.


சிலர் நம்மிடம் கோபமான வார்த்தைகளால் பேசும்பொழுது, அமைதியான முறையில் நாம் பதில் கூறுவது நம்முடைய சிலுவையாகும். நாம் அந்த கோபத்திலுருந்து வெளியே செல்லலாம் என்று நினைத்தாலும், அவர்களிடம் நாம் அரவனைப்பது போன்று (நமக்கு அசௌகரியமாக இருந்தாலும்) நாம் நடந்து கொள்வது, நமது சிலுவையாகும். நமக்கு அநியாயம் செய்கிறவர்களிடம், நாம் பழிவாங்க நினைத்தாலும்,  நாம் அவர்களுக்கு நல்லது செய்கிற பொழுது அது நம் சிலுவையாக மாறுகிறது. கடவுளரசிற்காக நாம் சிலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக நாம் மீட்பின் சந்தோசத்தை அனுபவிக்கிறோம்.

கடினமான நேரத்தில் கொடுக்கபடும் அன்பு, ஆழ்ந்த அன்பாகும், தியாகத்தின் அன்பாகும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மற்றவர்களின் நித்திய வாழ்விற்கு பயன்படுவதாகும். அதனால், நமது தியாகங்கள், அளவிடமுடியாத பலன்களை கொண்டதாக இருக்கும். சாத்தானை வெற்றி கொண்டு, இயேசுவோடு, நாமும் மேலெழுந்து அவரது மகிமையில் நிலைத்திருப்பது ஈஸ்டர் ஞாயிறின் கொண்டாட்டமாகும்.
© 2013 by Terry A. Modica

Friday, March 22, 2013

மார்ச் 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மார்ச் 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
குருத்து ஞாயிறு
Procession with Palms: Luke 19:28-40
Is 50:4-7
Ps (2a) 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11 
Luke 22:14 – 23:56

லூக்கா நற்செய்தி
ஆண்டவரின் திருவிருந்து
(மத் 26:26 - 30; மாற் 14:22 - 26; 1கொரி 11:23 - 25)
14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.15 அப்போது அவர் அவர்களை நோக்கி, ' நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.16 ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.17 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், ' இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.18 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்றார்.20 அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, ' இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.21 என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.22 மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு ' என்றார்.23 அப்பொழுது அவர்கள், ' நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார் ' என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.

யார் பெரியவர்?
24 மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.25 இயேசு அவர்களிடம், ' பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.26ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.27யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.28 நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.29 என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.30 ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்
(மத் 26:31 - 35; மாற் 14:27 - 31; யோவா 13:36 - 38)
31 ' சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.32 ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து ' என்றார்.33 அதற்கு பேதுரு, ' ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன் ' என்றார்.34 இயேசு அவரிடம், ' பேதுருவே, இன்றிரவு, ″ என்னைத் தெரியாது ″ என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.

பணப்பையும் வாளும்
35 இயேசு சீடர்களிடம், ' நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா? ' என்று கேட்டார். அவர்கள், ' ஒரு குறையும் இருந்ததில்லை ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.37 ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ' கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார் ' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன ' என்றார்.38 அவர்கள் ' ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன ' என்றார்கள். இயேசு அவர்களிடம், ' போதும் ' என்றார்.

ஒலிவ மலையில் இயேசு
(மத் 26:36 - 46; மாற் 14:32 - 42)
39 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.40 அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், ' சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், ' என்றார்.41 பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்;42 ' தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ' என்று கூறினார்.43 (அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.)http://www.arulvakku.com/images/footnote.jpg45 அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.46அவர்களிடம், ' என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார்.

இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்
(மத் 26:47 - 56; மாற் 14:43 - 50; யோவா 18:3 - 11)
47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.48 இயேசு அவனிடம், ' யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? ' என்றார்.49 அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, ' ஆண்டவரே, வாளால் வெட்டலாமா? ' என்று கேட்டார்கள்.50அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.51 இயேசு அவர்களைப் பார்த்து, ' விடுங்கள், போதும் ' என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.52 அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, ' ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்?53 நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது ' என்றார்.

பேதுரு மறுதலித்தல்
(மத் 26:57 - 58, 69 - 75; மாற் 14:53 - 54, 66 -72; யோவா 18:15 - 18, 25 - 27)
54 பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.55 வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.56 அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, ' இவனும் அவனோடு இருந்தவன் ' என்றார்.57 அவரோ, ' அம்மா, அவரை எனக்குத் தெரியாது ' என்று மறுதலித்தார்.58 சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், ' நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ' என்றார். பேதுரு, ' இல்லையப்பா ' என்றார்.59 ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், ' உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான் ' என்று வலியுறுத்திக் கூறினார்.60 பேதுருவோ, ' நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது ' என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.61 ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; ' இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,62 வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இயேசுவை ஏளனம் செய்தல்
(மத் 26:67 - 68; மாற் 14:65)
63 இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.64 அவரது முகத்தை மூடி, ' உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல் ' என்று கேட்டார்கள்.65 இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.

தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு
(மத் 26:59 - 66; மாற் 14:55 - 64; யோவா 18:19 - 24)
66 பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.67 அவர்கள், ' நீ மெசியா தானா? எங்களிடம் சொல் ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;68 நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.69 இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார் ' என்றார்.70 அதற்கு அவர்கள் அனைவரும், ' அப்படியானால் நீ இறைமகனா? ' என்று கேட்டனர். அவரோ, ' நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள் 'என்று அவர்களுக்குச் சொன்னார்.71 அதற்கு அவர்கள், ' இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே ' என்றார்கள்.
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்
(மத் 27:1 - 2, 11 - 14; மாற் 15:1 - 5; யோவா 18:28 - 38)
1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.3 பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க, அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார்.4பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ' இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை ' என்று கூறினான்.5ஆனால் அவர்கள், ' இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான் ' என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

ஏரோது முன்னிலையில் இயேசு
6 இதைக் கேட்ட பிலாத்து, ' இவன் கலிலேயனா? ' என்று கேட்டான்;7 அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.8 இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.9 அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.10 அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.11 ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.12அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.

இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்
(மத் 27:15 - 26; மாற் 15:6 - 15; யோவா 18:39 - 19:16)
13 பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.14 அவர்களை நோக்கி, ' மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.15 ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.16 எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் ' என்றான்.17(விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.)http://www.arulvakku.com/images/footnote.jpg18 திரண்டிருந்த மக்கள் அனைவரும், ' இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும் ' என்று கத்தினர்.19 பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.21 ஆனால் அவர்கள், ' அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள்.22 மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, ' இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன் ' என்றான்.23 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.24 அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.25கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல்
(மத் 27:32 - 44; மாற் 15:21 - 32; யோவா 19:17 - 27)
26 அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.27 பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.28 இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, ' எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.29 ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது ' மலடிகள் பேறுபெற்றோர் ' என்றும் ' பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் ' என்றும் சொல்வார்கள்.30 அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ' எங்கள் மேல் விழுங்கள் ' எனவும் குன்றுகளைப் பார்த்து, ' எங்களை மூடிக்கொள்ளுங்கள் ' எனவும் சொல்வார்கள்.31 பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்! ' என்றார்.32 வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.33மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.34 அப்போது (இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' என்று சொன்னார். ) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.http://www.arulvakku.com/images/footnote.jpg35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள்.36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர்.38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான்.40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான்.42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான்.43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார்.44ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.45 கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.46 ' தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.47 இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், ' இவர் உண்மையாகவே நேர்மையாளர் ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.48 இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.49 அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம்
(மத் 27:57 - 61; மாற் 15:42 - 47; யோவா 19:38 - 42)
50 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.51 தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.52 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.53 அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.54 அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம்.http://www.arulvakku.com/images/footnote.jpg55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,56 திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)

குருத்து ஞாயிறு புனித வாரத்தின் முதல் நாளாக ஆரம்பிக்கிறது இயேசுவோடு இனைந்து உங்கள் பரிசுத்த வாழ்வை ஆரம்பிக்கிறது இந்த நாள் இருக்குமா? இயேசுவின் அவரின் அளப்பறிய அன்போடு இணைய தயாராகிவிட்டீர்களா?

இன்றைய திருப்பலியின் வாசகத்தில், இந்த வாசகத்தை “தலைவருக்கு தேவையாய் இருக்கிறது” என்று கேட்கிறோம். குருத்து பவனியிலும் கேட்கிறோம். இது தான் நாம் கடவுளோடு இனைவதை அதன் அனுபவத்தை குறிக்கிறது.

ஏன் நற்செய்தியை எழுதியவர், இயேச் கழுதையை கொண்டு வர நடந்த கதைகளை எழுத வேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இது நம்முடைய இக்கால வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நமக்கு விளக்கி கூறுவதாக உள்ளது. நமது வாழ்விலும் கழுதை போல ஒன்றை கட்டி கொண்டு தான் செல்கிறோம். இது நம் சொந்த பொருளாக இருக்கலாம் ஆனால், கிறிஸ்துவோடு பகிர்ந்து கொள்ளாத பொருளாக இருக்கலாம். நமது சொத்து, பணம், திறமை, நேரம், நமது ஆற்றல் , இன்னும் பலவற்றையும் குறிக்கிறது. தலைவருக்கு/குருவுக்கு தேவையாக இருக்கிறது!. ஆனால் சில நேரங்களில், சுய நலத்தோடு, நமது சொந்த விசயங்களுக்காக நாம் உபயோகித்துவிடுகிறோம். அதனை யேசுவிடம் கொடுத்தால், அவருக்கு உதவியாக இருந்திருக்கும். கழுதை மேல் ஏறி யேசு போனது போல, நாம் கொடுப்பதையும் இயேசு உபயோகிப்பர். அந்த அன்பளிப்பு, நம் மீட்பரை போற்றுவதாக இருக்கும்.

இயேசுவின் அன்பிற்காக, நாம் அவரை மகிமை படுத்த வேண்டும் என குருத்து ஞாயிறு நமக்கு அறிவுறுத்துகிறது. அந்த அன்பை அவர் சிலுவையில் நமக்கு காட்டினார். வேறு யார் உங்களுக்காக இறப்பர்? அதுவும் அவ்வளவு வேதனையோடு? இயேசு அவரின் சவுகரியங்களை, உடலை இரத்தத்தை நம் தண்டனைக்கிற்காக ஏற்று கொண்டு தியாகம் செய்தார்.

சந்தோசமாக நாம் இயேசுவை கொண்டாடவேண்டும். ஒவ்வொரு ஞாயிறும், ஓசானா சொல்லி, திவ்ய நற்கருணை மேல் ஆர்வம் கொண்டு, இயேசுவின் அன்போடு நாம் இணையவேண்டும். காதலர்கள் அவரின் துணையோடு ஒன்றினைந்து மகிழ்வது போல, நாம் இயேசுவோடு இனையும்பொழுது செய்வதில்லை. ஏனெனில் நாம் இன்னும் பலதை (கழுதையை) நம்மோடு கட்டி கொண்டிருக்கிறோம்.

உங்கள் சொத்துகளை, திறமைகளை, பணத்தை இயேசுவோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என இயேசு அவரின் சீடர்களை உங்களிடம் அனுப்பி உள்ளார். அவரின் சீடர்கள், திவ்ய நற்கருணையை பீடத்தில் புனிதப்படுத்துகிறார்கள். “உதவி தேவை” என்று அறிவிப்பு செய்கிறார்கள் உங்கள் ஜெபத்தை, ஆலோசனையையும், உதவியையும், உங்கள் வேலைக்கிடையே செய்ய சொல்லி கேட்கிறார்கள். சில புதியவர்கள் நன்கொடைகள் உங்களிடம் கேட்கிறார்கள். கடவுளின் இறையரசில் இன்னும் அதிகம் ஈடுபடவேண்டும் என்று உங்களில் யாரையாவது எவரும் கேட்டதுண்டா?

© 2013 by Terry A. Modica

Friday, March 15, 2013

மார்ச் 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
Isaiah 43:16-21
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11
யோவான் நற்செய்தி
அதிகாரம் 8 (1-11)
1 (இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,4 ' போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர்.6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ' உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்று அவர்களிடம் கூறினார்.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.10 இயேசு நிமிர்ந்து பார்த்து, ' அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? ' என்று கேட்டார்.11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம், 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, மிகவும் தாழ்ந்த நிலையில் சமூகத்தில் உள்ளவர்களை எப்படி கையாளவேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது. வாழ்வதற்கே தகுதியில்லாதவர் என சமூகத்தால் ஒதுக்கிவிடப்படுபவர் ஒருவர் இன்று கிறிஸ்துவின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுள்ளார். ஆனுக்கு கீழாக மதிக்கப்படும் பெண்களில், இப்பெண் இயேசுவின் இரக்கத்தை பெற்ற முதல் பெண்ணாகிறாள். அவள் ஒரு பாவி, அதனால் அவருக்கு தண்டனை கொடுக்கபடவேண்டும். அவளை கண்டித்த அனைவரையும் ஒரே ஆளாக எதிர் கொண்டு இருந்தாள். இதனை விட ஒருவர் எவ்வளவு தாழ்ந்து விட முடியும்.?

முக்கியமானவராக இல்லாமல், அல்லது தனித்து விடப்பட்டவராக எப்பொழுது எல்லாம் நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்? உங்களை சமூகமே கண்டித்த தருணங்கள் இருந்திருக்கலாம். மேலும், நீங்கள் யாரையாவது, அவர்கள் முக்கியமற்றவர்களாக நினைத்து ஒதுக்கியிருக்கிறீர்களா? இதுவும் சரியே, நம்மில் யாரும் முதல் கல்லை எறிய முடியாது.

இன்றைய திருச்சபையில், நிறைய பேர் ஒதுக்கி வைக்கபட்டும், மறக்கடிக்கபட்டும் இருக்கிறார்கள். நமக்கு அவர்களில் சிலரை தெரியும். அவர்களின் தனிமை நமக்கு தெரியாமல் போகிறது. நாம் நம் கடைமைகளில் மூழ்கியிருக்கும்போது, அதனிடையே, நாம் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நமக்கு அது ஒரு உற்சாகமான உணர்வை கொடுக்கிறது.  நாம் அவர்களோடு செலவிடும் நேரம், அவர்களின் தேவையைவிட பெரிதாக மதிக்கபடுகிறது. மேலும், நமது பங்கிற்கு இன்னும் ஒரு ஆள் கூடுகிறது, நம் சுகத்தை தியாகம் செய்வதால், திருச்சபை இன்னும் பலம் பெறுகிறது.

விவாகரத்தான கத்தோலிக்கர்களை எல்லோரும் கண்டிக்கிறார்கள் என்று அவர்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். திவ்ய நற்கருணையை கூட அவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். ஏனெனில், திருச்சபையின் சட்டத்தை அவர்களுக்கு தவறுதலாக புரியவைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் யாரும் அவர்களை அனுகி அவர்களை திருச்சபைக்கு கொண்டு வர முயல்வதில்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்க்களை திருச்சபையில் நிறுத்தினாலும், பெரியவர்களுக்கு எதிரான அநீதியை யாரும் சட்டை செய்யவில்லை. ஏனெனில், அதனை யாரும் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.

சில நேரங்களில் சமயம் சாராத நிறுவனங்கள் சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளவர்களை அனுகி அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதே போல், அவர்களை அனுகி , அவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பது, இத்தவக்காலத்தின் முக்கிய செயலாக இருக்ககூடும்.

© 2013 by Terry A. Modica

Friday, March 8, 2013

மார்ச் 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மார்ச் 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
Jos 5:9a, 10-12
Ps 34:2-7
2 Cor 5:17-21
Luke 15:1-3, 11-32

லூக்கா நற்செய்தி
காணாமற்போன ஆடு பற்றிய உவமை
(மத் 18:12 - 14)
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
காணாமற்போன மகன் உவமை
11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '
(thanks to www.arulvakku.com)

கடவுளின் அன்பையும், நிபந்தனையற்ற மன்னிப்பையும் பெற யாரெல்லாம் தகுதி உள்ளவர்கள்? ஒவ்வொரு திருப்பலியிலும் “ஆண்டவரே உன்னை பெற நான் தகுதியற்றவன், என்றும் மேலும், “ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்” என்று சொல்கிறோம். இயேசு இன்றைய நற்செய்தியில் நாம அனைவருமே தகுதியானவர்கள் என்று காட்டுகிறார். நாம் செய்யும் செயல்களால் அல்லாமல், இயேசு சிலுவையில் செய்த தியாகத்தினால் நாம் கடவுளின் மன்னிப்பை பெறுகிறோம். இயேசு சிலுவையில் நம் பாவங்களை ஏற்று கொண்டு, சிலுவை மரணம் அடைந்து, நாமும் அவரோடு உயிர்த்தெழுந்து,  நிலைவாழ்வுடன் ஈஸ்டரில் கடவுளொடு இனைவோம்.

இன்றைய நற்செய்தியில் வரும் நீதிகதையில், மகன் தந்தையிடம் திரும்பி வந்ததாலோ, அல்லது மகன் மனம் திருந்தியதாலோ, தந்தையின் அன்பை பெற தகுதியுள்ளவானாக ஆகிவிடவில்லை. மாறாக, தந்தை அவன் மேல் கொண்டுள்ள அன்பினால் தான் அவனை வரவேற்றார்,. தந்தை மகன் மேல் அன்பு கொண்டிருந்தார். மகன் வெகு தூரத்தில் இருக்கும்போதும், அவன் மேல் அன்பு கொண்டிருந்தார். அவன் பாவ வழியில் செல்லும்பொழுதும் அவன் மேல் தந்தை அன்பு கொண்டிருந்தார்.

நிபந்தனையற்ற, விசுவாசமான தந்தையின் அன்பை, மகனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார், ஆனால் மகனோ, அதனை நிராகரித்து விட்டார். மகன் தந்தைக்கு கொடுத்த அன்பளிப்போ, தந்தையிடம் திறந்த மனதுடன் திரும்பி வந்து, தந்தை அவன் மேல் கொண்ட அன்பை, எப்பொழுதும் இருக்கு அன்பை பெற்று கொள்வது தான்.

ஒவ்வொரு திருப்பலியிலும், இந்த ஊதாரியான மகனை போல தான் நாமும் கோவிலுக்கு செல்கிறோம். அந்த வாரம் முழுதும்,  நல்ல கிறிஸ்தவர்களாக நாம் இருந்திருந்தாலும், நாம் பாவியாக தான் கோவிலுக்குள் செல்கிறோம். ஏதோ ஒரு தருணத்தில், கடவுளின்  நிபந்தனையற்ற முழுமையான அன்பை நாம் நிராகரித்திருக்கிறோம். அதனை நாம் மற்றவர்களிடம் பகிராமல் கூட இருந்திருக்கலாம். அதனால் தான், திருப்பலியின் ஆரம்பத்தில், நாம் நமது பாவத்தை மன்னிக்க வேண்டுகிறோம். இந்த மன்னிப்பு கோரும் வாய்ப்பை மனப்பூர்வமாக உளமார பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அடுத்ததாக, நாம் இறைவார்த்தையை கேட்கிறோம். இறைவார்த்தைகள், கடவுளடான நமது உறவில் உள்ள காயங்களை ஆற்றுகிறது. ப்ரசங்கம் இதனை இன்னும் மேன்மைபடுத்துவதாக தயாரிக்கபடவேண்டும். அப்படி இல்லை என்றாலும், இயேசு பரிசுத்த ஆவியின் மூலம் நம்மிடையே பேசுகிறார். உங்கள் இருதயத்தை கவனியுங்கள், வார்த்தை உருவானவர், இயேசு உங்கள் கோரிக்கையை ஏற்கனவே கேட்டு, அதற்கு பதிலை கொடுக்க தயாராகிவிட்டார். அவரின் நற்செய்தி உங்களை குணமாக்குகிறது.

காணிக்கை நிகழ்ச்சியில், நாம் நம்மையே தந்தை கடவுளிடம் அர்ப்பணிக்கிறோம். இந்த தருணத்தில் நாம் அவரிடம் சரணடைகிறோம்: “உங்கள் மகன் என்று அழைக்க நான் தகுதியற்றவன், உங்கள் விருப்பம் போல என்னை என்ன செய்ய வேண்டுமோ அதன்படி செய்யுங்கள்” என்று அவரிடம் மன்றாடுகிறோம்.  நம் முழுமையான வாழ்க்கைக்கு கடவுளின் விருப்பம் என்ன? நம்மிடம் உள்ளதை கொடுத்தும், அவரிடம் பெற்றுகொள்வதுமாக நம் உறவு கடவுளோடும் , அவரின் குடும்பத்தோடும் இருக்க வேண்டும். அந்த குடும்பம், இந்த திருச்சபை. (சிலர் நேரடியாக திவ்ய நற்கருணை பெற முடியாமல் இருந்தால், அவர்கள் ஆவியுடன் இணைவார்கள்).

© 2013 by Terry A. Modica

Friday, March 1, 2013

மார்ச் 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி,
13:1-9
மனம் மாறாவிடில் அழிவு
1 அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார்.

காய்க்காத அத்திமரம்
6 மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.7 எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8 தொழிலாளர் மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.9 அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். ' 
(thanks to www.arulvakku.com )

சிலர் மிகவும் புன்படுத்துபவர்களாயும், மோசமானவர்களாகவும், அநியாயமாகவும் இருப்பவர்களுக்கு, சில நேரங்களில், மிக பெரிய அடி விழுந்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இயற்கையாக நியாய தீர்ப்பு கிடைத்துவிட்டது என்றும், அவர்களை விட்டு விலகியே இருப்போம்.

இதனை இந்த வார நற்செய்தியில், குறிப்பிடுகிறார். யாரையும் மிக பெரிய பாவி என்று நாம் சொல்லிவிட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார். நம்மைவிட மிக பெரிய பாவம் அவர் செய்தாலும், கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்தாலும், சாத்தானின் வேலைகள் செய்தாலும், அவர் ஒன்றும் நம்மை விட பெரிய பாவி இல்லை.

ஒவ்வொருவரும் கடவுளை போல படைக்கபட்டிருக்கிறார்கள். மிகவும் மோசமானவர்கள் கூட கடவுளை போல உருவாக்கபட்டிருக்கிறார்கள். கடவுளுக்கு எதிர்மாறாக செயல்கள் செய்தாலும், அவர்களையும் இயேசு அன்பு செய்கிறார். அவர்களுக்காகவும் சேர்த்து தான் இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் மரணமடைந்தார். கடவுள் எப்படி படைத்தாரோ, எதற்காக படைத்தாரோ, அதற்கு மாறாக, நடந்து கொள்வது என்பது, மிகபெரிய துயரமான விசயம். மேலும், யாரும் அவர்களை கிறிஸ்துவின் அன்பான வாழ்விற்கு அழைப்பு விடுக்காவிடில், அது இன்னும் துயரமாகும். கிறிஸ்து அவர்களை அன்பு செய்தது போல, நாமும் அவர்கள் மேல் அன்பு காட்டி, அரவனைக்க வேண்டும்.

யாருமே தீயவர்கள் கிடையாது. தியவற்றை செய்பவர்கள், கடவுளின் குழந்தைகள், ஆனால், அவர்கள் யார் என்ற உண்மையை அறியாதவர்கள். சாத்தானின் சூழ்ச்சியில் விழுந்தவர்கள், மேலும் இப்படி தீயவற்றோடு வாழ்வது நல்ல வாழ்வு என்று மயக்கப்பட்டிருக்கிறார்கள். பாவமில்லாத தூய இயேசு நம்மையெல்லாம் மீட்டு, அதன் பொருட்டு நம் பாவங்கள் மன்னிக்கபடும் என்பதை இன்னும் அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அவர்கள் வாழ்வில் நடக்கும் துயரங்களுக்காகவும், அவர்கள் ஆண்மாவிற்காகவும், இயேசுவை போல நாம் துயரமடைய வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் உள்ளம் உடையும் பொழுது, அவர்களுக்காக நாம் துக்கபடாமல், கண்டு கொள்ளாமல், இருக்கும்பொழுது நாம் பாவம் செய்கிறோம். சிலுவையில் இயேசு என்ன செய்தாரோ அதனை நாம் மதிக்காமல் நடந்து கொள்கிறோம். நாம் நம் ஆண்மாவிற்கு சேதம் விளைவிக்கிறோம்.

உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், இன்றைய நற்செய்தியில் வரும் அத்திமரத்தை போல. உங்களால் அவர்களை அனுக முடியும் என்றால், அவர்களது ஆண்மாவை தயார் செய்ய இயேசு அழைக்கிறார். அவர்கள் ஆண்மாவிற்கு உரமிடவும், உற்சாகபடுத்தவும் உங்களை இயேசு அழைக்கிறார். அவர்கள் மேல் அன்பையும், நற்செய்தியையும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவர்கள் தயாராய் இருக்கும் பொழுது உங்கள் வார்த்தைகளால், அன்பினையும் நல்வழியையும் காட்டுங்கள். சாந்தமாகவும், கட்டாயமாகவும், சரியான வழியில் செல்ல அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.

கவனமாக கேட்டு கொள்ளுங்கள், இயேசு உங்களை ஒன்றும், நோயாளியையோ, பாவம் செய்பவர்களையோ, நிரந்தரமாக உங்களோடு வைத்து கொள்ள சொல்லவில்லை. நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பும், தீயவர்கள் மாறவில்லை என்றால், நம் தோட்டத்திற்கு நாம் செய்யும் முதல் வேலை, அந்த மரத்தை வெட்டுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களிடமிருந்து விலகி செல்வது, சரியான அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அவர்களை கொண்டு சென்று அவர்களின் தீய நடவடிக்கைகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது. இதனையும் அன்புடன் செய்ய வேண்டும். கீழே விழுந்த மரம் கூட மக்கி போய் உரமாக மாறி புதிய செடிகளுக்கும், மரங்களுக்கும் புத்துயிர் கொடுக்கும்.
© 2013 by Terry A. Modica

Friday, February 22, 2013

பிப்ரவரி 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு
Gen 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17–4:1
Luke 9:28b-36
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1 - 8; மாற் 9:2 - 8)
28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று,  இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்  என்று ஒரு குரல் ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(Thanks to www.arulvakku.com)


இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் என்று கடவுள் கூறியதையும், இயேசு , அவரின் உண்மையான கடவுள் என்பதையும் இன்றைய நற்செய்தியில் நமக்கு காண்பிக்கபடுகிறது.

உண்மையான கிறிஸ்துவை ஒவ்வொரு முறை அவரின் நற்செய்தியை கேட்கும்பொழுதும், பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்த அனுமதிக்கும் போதும், நாம் அறிந்து கொள்கிறோம்.

இதுவரையிலும் பார்க்காத ஒளியை கொண்டு, நம்மிடம் இன்னும் இருக்கும் தீயவற்றை முழுதுமாக எடுத்து கொள்ள, நாம் இயேசுவின் நற்செய்தியை கேட்க வேண்டும். அதன் மூலம் நம்மில் உள்ள தீயவற்றை அழிக்க நாம் அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதன் பிறகு, நம்மை சுற்றியுள்ளவர்கள், இயேசுவை நம்மிடமிருந்து அனுபவிப்பார்கள். ஏனெனில் இயேசுவை நம்மில் கான்பார்கள். நமது செயலிலும், இரக்கத்திலும், மன்னிப்பிலும் கான்பார்கள். இதன் மூலம் நாம் இயேசுவை இவ்வுலகிற்கு காட்டுகிறோம்.


தவக்காலத்தில், கிறிஸ்து நம் மேல் ஒளியை நிரப்பி நம் தீயவைகளை அழிக்க அதிகம் நாம் கிறிஸ்துவை நோக்கி ஜெபிக்கவேண்டும். நம்மில் அவர் ஒளி பட்டால் தான் நாம் மனம் திருந்த முடியும். மன்னிப்பை கேட்டு பெற்று, பரிசுத்த ஆவியின் ஆற்றலால்,   நாம் மனம் திரும்ப முடியும். அதே போல் கிறிஸ்துவை போல மாற முடியும். கிறிஸ்துவோடு இனைந்து நாம் இன்னும் ஒளிருவோம். இவ்வுலகை மீட்கும் இயேசுவின் இறைசேவையில் முழுதுமாக இனைவோம். இந்த இறைசேவையில் கஷ்டம் இருந்தாலும், பெரிய வெள்ளியின் வலிக்கு பிறகு, ஈஸ்டர் அன்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது.

இந்த தியாகத்திலும், சோதனையிலும் – நமது சிலுவையும் – இவ்வுலகை பரிசுத்தமாக்குகிறது.  கல்வாரி வரைக்கும் இயேசுவோடு செல்ல தைரியாமக இருக்கிறீர்களா? ஈஸ்டருக்கு செல்ல அது ஒன்று தான் வழி.! நமது சோதனைகளில், கிறிஸ்துவின் இரத்தம் மீண்டும் சிந்துகிறது. நமது வலியெல்லாம், கிறிஸ்துவின் வலியாகும். இயேசுவோடு நாம் ஏற்கனவே சிலுவையில் இருக்கிறோம்!. ஏன் இதனை அப்படியே முழுமனதுடன்  நம்மை ஏமாற்றியவர்களுக்கும், துன்பபடுத்தியவர்களுக்காகவும் ஏற்று கொண்டால் என்ன.?

நம்மை அன்பு செய்யாதவர்களை நாம் அன்பு செய்வதாலும், நம்மை மதிக்காதவர்களை மன்னித்தும், சாத்தானை விரட்டி இறையரசை கொண்டுவர கடின உழைப்பு கொடுத்தும், இருளில் உள்ளவர்களுக்கு நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோம்.

© 2013 by Terry A. Modica

Friday, February 15, 2013

பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Deut 26:4-10
Ps 91:1-2, 10-15
Rom 10:8-13
Luke 4:1-13

லூக்கா நற்செய்தி

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1 - 11; மாற் 1:12 - 13)
1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.3 அப்பொழுது அலகை அவரிடம், ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது.4 அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,6 அவரிடம், ' இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது.8 இயேசு அதனிடம் மறுமொழியாக, ″ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.9 பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;10 ' உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும்11 ' உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது.12 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ″ என்றும் சொல்லியுள்ளதே ' என்றார்.13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.
(thanks to www.arulvakku.com)

நாம் நமது விசுவாசத்தில், மனப்பூர்வமாக இருந்தால்,  இயேசுவின் வாழ்வு தான் நம் வாழ்வாக இருக்கும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெற்று கொண்டும், நாம் அவரோடு இனைகிறோம். நற்செய்தி வாசகம் மூலம், அவரை பார்த்து, அவரோடு மோட்சத்திற்கு செல்கிறோம்.

இந்த தவக்காலத்தில், திருச்சபை ஒவ்வொரு திருப்பலியிலும் கொடுக்கும் நற்செய்தி வாசகங்கள், நமது பயணத்தை செம்மை படுத்த உதவுகிறது. அதனை முழு மனதோடு கேட்டு, அதனை நம் வாழ்வோடு ஏற்று கொண்டால், நாம் கிறிஸ்துவோடு இனைகிறோம்.

இன்றைய நற்செய்தியில்,  நாம் இயேசுவோடு பாலைவனத்திற்கு செல்கிறோம். சோதனைக்குள்ளான உங்கள் ப்ரச்சினைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாவங்கள் உங்களை வாழ்வை எப்படி பாலைவனமாக்கியது என்று நினைத்து பாருங்கள்.

இயேசுவோடு நாம் இனைந்து நடக்கும்போது, அவரின் சாத்தானின் போராட்டத்தோடு,  துன்பத்தோடு நம்மை இனைத்து கொண்டு, சாத்தானை வெற்றி கொள்கிறோம். நமது சோதனைகள், தவறு செய்ய தூண்டும் உணர்வுகள், இயேசுவினுடையதாகிறது. மேலும் அவரோடு இனைந்து நாம் இருப்பதால், நமது சோதனைகள் அவருடையதாகவும் ஆகிறது. அவரோடு இனைந்து, நாம் சாத்தானை ஒதுக்கி, பரிசுத்த வாழ்வில் இருக்கிறோம். சுய கட்டுபாடுடனும் இருக்கவும், சுய நலத்தை விரட்டி அடிக்கவும், திருச்சபை இந்த தவக்காலத்தில் நமக்கு உதவுகிறது: விரதமிருத்தல், மற்றவர்களுக்கு உதவுவது, மனம் திரும்புதல், விசுவாச முனைப்பு,  பாவங்களை தவிர்த்து வாழ்தல், நற்செய்தி வாசகங்களை வாசித்தல், இன்னும் பல.

ஒவ்வொரு முறை நாம் உணவை தவிர்த்து, ஒவ்வொரு பாவத்தை நாம் பாவ சங்கீர்த்தனத்தில், கூறி மனம் திரும்புவதும், ஒவ்வொரு தியாகமும், அதிகரிக்கும் ஜெபங்களும், நற்செய்தி வாசகங்களும், நாம் அனுதின வாழ்வை சுய கட்டுபாடுடனும், அழைத்து சென்று இயேசுவோடு இந்த பாலைவனத்தில் நம்மை இனைக்கிறது.

சாத்தானோடு உண்டான சோதனையில் ,இயேசு உணவை தவிர்த்தார், உடல் அசதியின்றி ஜெபத்தில் ஈடுபட்டார். அதன் மூலம், இந்த தவக்காலத்தின் பின்பு வந்த இறைசேவையில், திடத்துடன் அவரால் ஈடுபட முடிந்தது. இதே போல தான் நமக்கும் இந்த தவக்காலம் இருக்க வேண்டும்.
சாத்தானை பார்த்து நாம் பயம் கொள்ள வேண்டியதில்லை. இயேசு ஏற்கனவே அவர்களை  நமக்காக தோற்கடித்துவிட்டார். முதலில் பாலைவனத்திலும், பிறகு சிலுவையிலும் சாத்தானை தோற்கடித்து விட்டார்.  நமது போராட்டமோ, நம்மை தவறு செய்ய தூண்டும். உணர்வுகளுடனும், நமது பலவீனங்களுடனும், பாவத்தில் விழாமல் இருப்பதற்கும் நாம் போராட வேண்டியுள்ளது  

எப்பொழுதுமே நாம் இயேசுவை பின் செல்ல விரும்புவதில்லை. இதனை தான் இயேசுவிடம் இந்த தவக்காலத்தில் அர்ப்பனித்து விட வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஈஸ்டர், நமக்கு அத்தமுள்ளதாய் இருக்கும். இந்த தவக்காலத்திலிருந்து நாம் ஆற்றலுடனும், உறுதியுடனும் நம் விசுவாசத்தோடு வருவோம்.
© 2013 by Terry A. Modica