Friday, April 4, 2014

ஏப்ரல் 6 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 6 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
Ezekiel 37:12-14
Psalm 130:1-8
Romans 8:8-11
John 11:1-45

யோவான் நற்செய்தி 

இலாசர் இறத்தல்
பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். 2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, ' ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான் ' என்று தெரிவித்தார்கள்.அவர் இதைக் கேட்டு, ' இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார் என்றார்.5மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.பின்னர் தம் சீடரிடம், ' மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள் என்று கூறினார்.அவருடைய சீடர்கள் அவரிடம், ' ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா? ' என்று கேட்டார்கள்.இயேசு மறுமொழியாக, ' பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.10ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லைஎன்றார்.http://www.arulvakku.com/images/footnote.jpg11 இவ்வாறு கூறியபின், ' நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் என்றார்.12அவருடைய சீடர் அவரிடம், ' ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார் ' என்றனர்.13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.14 அப்போது இயேசு அவர்களிடம், ' இலாசர் இறந்து விட்டான் என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,15 ' நான் அங்கு இல்லாமல் போனது பற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள் ' என்றார்.16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ' நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் ' என்றார்.

நம்புவோர் வாழ்வர்
17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது.http://www.arulvakku.com/images/footnote.jpg19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.21மார்த்தா இயேசவை நோக்கி, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் ' என்றார்.23 இயேசு அவரிடம், ' உன் சகோதரன் உயிர்த்தெழுவான் 'என்றார்.24 மார்த்தா அவரிடம், ' இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும் ' என்றார்.25 இயேசு அவரிடம், ' உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா? ' என்று கேட்டார்.27 மார்த்தா அவரிடம், ' ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன் ' என்றார்.

இயேசு கண்ணீர் விடுதல்
28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ' போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார் ' என்று காதோடு காதாய்ச் சொன்னார்.29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் ' என்றார்.33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,34 ' அவனை எங்கே வைத்தீர்கள்? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' ஆண்டவரே, வந்து பாரும் ' என்றார்கள்.35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.36 அதைக் கண்ட யூதர்கள், ' பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு! ' என்று பேசிக் கொண்டார்கள்.37ஆனால் அவர்களுள் சிலர், ' பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா? ' என்று கேட்டனர்.

இலாசர் உயிர்பெறுதல்
38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.39 ' கல்லை அகற்றி விடுங்கள் என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ' ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! ' என்றார்.40 இயேசு அவரிடம், ' நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா? ' என்று கேட்டார்.41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ' தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன் என்று கூறினார்.43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், ' இலாசரே, வெளியே வா என்று கூப்பிட்டார்.44இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ' கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள் என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

இயேசுவைக் கொலை செய்யத் திட்டம்
(
மத் 26:1 - 5; மாற் 14:1 - 2; லூக் 22:1 - 2)
45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்
(thanks to www.arulvakku.com)
தவக்காலம் என்பது வேதனைகளையும் , தியாகத்தையும் ஏற்றுகொள்வது மட்டுமில்லை. புதிய வாழ்க்கைக்கு போகும் பாதை , பெரிய வெள்ளி , சாத்தான், வலியும் , மரணம் மட்டுமில்லை. நம்மை புதிய வாழ்விற்கு இயேசு இட்டு செல்லும் கதவு ஆகும்.
ஆமாம், வேதனைகளை அனுபவிப்பது தவக்காலத்தில் ஒரு பகுதி தான் . (வருடத்தில் எல்லா காலங்களிலும் வேதனைகள் வருவது இயல்பு தான் ) தவக்காலத்தில் தியாகம், சுய கட்டுப்பாடு, பிச்சை கொடுத்தல் , மேலும், அதிக நேரம் கோவிலில் செலவிடுதல் எல்லாம் செய்வது தான். இதெல்லாம் நம் பயணத்தின் வாகனம் ஆகும்.


கடவுள் நம் வேதனைகள (நாம் அனுமதித்தால்)  உபயோகித்து, நம்மை இறக்கத்திலும், இடைவிடா முயற்சியிலும், இறைசேவையிலும் நம்மை வளர்க்கிறார். நமது தியாகங்கள், நம்மை கட்டுபாடுடன் வளர்த்து கொள்ளவும், அதன் மூலம் நம்மை சுத்திகரித்து, , பரிசுத்த வாழ்வில் நம்மை இன்னும் உறுதியாக வளர்த்து கொள்ள முடியும். ஆனால் பயணம் நமது இறுதியிடம் கிடையாது
தவக்காலம் , மீட்பை அடைவது தான் முக்கியம். நமது விசுவாசத்தை புதுபித்து கொள்வதும், பழைய பாவங்களில் இருந்து மீண்டு புது வாழ்வில் நுழைவதும், பிரச்சினையுள்ள உறவுகளை புதுபித்து கொள்வதும், கடவுளின் ஆவியில் எப்பொழுது உறுதியோடு இருப்பது இந்த தவக் காலம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

உங்கள் விசுவாசத்திற்கு பெரிய வெள்ளி முக்கியமான நாளா? அல்லது ஈஸ்டர் நாள் முக்கியமானதா? கல்வாரியில் நொறுங்குண்ட நாள் ஈஸ்டருக்கு தேவையான நாள்; ஆனால், நாம் மீட்பின் காலத்தில் வாசிக்கிறோம். கத்தோலிக்கர்கள் அனைவரும், ஈஸ்டர் மக்கள். இதன் அர்த்தம், நமக்கு எந்த வித தீங்கும் எப்பொழுதும் நமக்கு ஏற்படாது, இயேசு நமக்கு கடவுளாக இருக்கும் வரை எல்லா தீங்கும் நமக்கு ஆசிர்வாதமாக அமையும்.
இயேசு அவரது ஆற்றல் மூலம் வாழ்விற்கும் , சாவிற்கும் சேர்த்து வெற்றியை கொடுத்து விட்டார். அதன் மூலம் மீட்பு அடைந்து விட்டோம். இயேசு ஏற்கனவே உறுதியாக்கி விட்டதை, நம மூலமும், பார்ப்பவர்கள் அனைவருக்கும் நீருபித்து காட்ட விழைகிறார்


© 2014 by Terry A. Modica 
Facebook

Friday, March 21, 2014

மார்ச் 23, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 23, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம ஞாயிறு
Exodus 17:3-7
Psalm 95:1-2, 6-9
Romans 5:1-2, 5-8
John 4:5-42
 யோவான் நற்செய்தி
அதிகாரம் 4: 5 – 42
5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். 7 அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.8 இயேசு அவரிடம், ' குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் என்று கேட்டார்.9 அச்சமாரியப் பெண் அவரிடம், 'நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.http://www.arulvakku.com/images/footnote.jpg10 இயேசு அவரைப் பார்த்து, ' கடவுளுடைய கொடை எது என்பதையும் ' குடிக்கத் தண்ணீர் கொடும் ' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.11 அவர் இயேசுவிடம், ' ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?12எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம் ' என்றார்.13இயேசு அவரைப் பாhத்து, ' இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் என்றார்.15 அப்பெண் அவரை நோக்கி, ' ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது ' என்றார்.16இயேசு அவரிடம், ' நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும் என்று கூறினார்.17 அப்பெண் அவரைப் பார்த்து, ' எனக்குக் கணவர் இல்லையே ' என்றார். இயேசு அவரிடம், ' எனக்குக் கணவர் இல்லை ' என நீர் சொல்வது சரியே.18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே என்றார்.19 அப்பெண் அவரிடம், ' ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே ' என்றார்.21 இயேசு அவரிடம், ' அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். http://www.arulvakku.com/images/footnote.jpg24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும் என்றார்.25 அப்பெண் அவரிடம், ' கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார் ' என்றார்.26 இயேசு அவரிடம், ' உம்மோடு பேசும் நானே அவர் என்றார்.27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ' என்ன வேண்டும்? ' என்றோ, ' அவரோடு என்ன பேசுகிறீர்? ' என்றோ எவரும் கேட்கவில்லை.28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,29 ' நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ! ' என்றார்.30அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.31 அதற்கிடையில் சீடர், ' ரபி, உண்ணும் ' என்று வேண்டினர்.32 இயேசு அவர்களிடம், ' நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது 'என்றார்.33 ' யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ ' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.34 இயேசு அவர்களிடம், ' என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.35 ″ நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.36 அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர.http://www.arulvakku.com/images/footnote.jpg37 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.38 இவ்வாறு ' விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர் ' என்னும் கூற்று உண்மையாயிற்று என்றார்.39 \'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்\' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வவூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். 40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.42 அவர்கள் அப்பெண்ணிடம், ' இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம் ' என்றார்கள்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் எதற்கு தாகமாக இருக்கிறீர்கள்? நம்மிடம் எதோ ஒரு முக்கியமான ஒன்று இல்லாமல் இருக்கும்போது தான் நமக்கு தாகம் ஏற்படும்.  நமது உடலுக்கு தண்ணீர் அவசியம், நமது உடல் தண்ணீர் தேவைப்படும்போது, தாகம் என்ற அறிகுறி மூலம், நமக்கு உணர்த்துகிறது.
அதேபோல, நமது பரிசுத்த வாழ்விற்கு வேறு மாதிரியான தண்ணீர் தேவைபடுகிறது. -வாழும் தண்ணீர். இதனை ஞானஸ்நாணம் பெறும்போது, நாம் தண்ணீர் பெற்று, அதன் மூலம் நமது நித்திய வாழ்விற்கு நம்மை தூயபடுத்துகிறது. இந்த வாழ்வு தரும் தண்ணீர் நம்மை கிறிஸ்துவில் அதிகமான வளத்தை , வாழ்வில் கொடுக்கிறது

பரிசத்த ஆவி தான் வாழ்வை கொடுப்பவர். பைபிளில் கடவுள் பரிசத்த ஆவி இருப்பை வாழ்வு தரும் தண்ணீர் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இயேசு அந்த சமாரிய பெண்ணுக்கு பரிசுத்த ஆவியின் அன்பளிப்பை கொடுக்க முனைந்தார். ஏன்? பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி எல்லோர் மேலேயும் இறங்கி வர இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது.
ஏனெனில்,அவளுக்கு உண்மை தெரிய வேண்டியிருந்தது. பரிசுத்த ஆவி தான் உண்மை, இயேசு அவளுக்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, அவள் மனம் திரும்பவும், மீட்படையவும் விரும்பினார். மேலும், அந்த மீட்பை, அவளுடன் கூட இருப்பவர்களுக்கும், அதனை பகிர்ந்திட வேண்டும் என விரும்பினார்.

நமக்கு தேவையான தண்ணீர் குடிக்காத பொழுது தான், நமக்கு தாகம் எடுக்கும். பரிசுத்த வாழ்வின் தாகம், நமக்கு பல வேறு மாதிரிகளில் வரும். போதைக்கு அடிமை, தனிமை, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , சுய ஈடுபாடு, அல்லது வேறு மாதிரியான எண்ணங்கள், அல்லது நமது வாழ்க்கைமுறை மாற்றங்கள், நமது வாழ்வில் எதோ ஒரு குறையை கொண்டு, நமக்கு பரிசுத்த ஆவியின் உதவியை , தாகத்தை ஏற்படுத்தும்.
மேலும், நாம் பரிசுத்த வாழ்வில் குறைகளோடு இருக்கிறோம்.? ஏனெனில், சமாரிய பெண் போல, கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்று சில நேரங்களில் நாம் புரிந்து கொள்வதில்லை. இதனை எப்பொழுது நம் நினைவில் கொள்ள, நாம பரிசுத்த வாழ்வில் குணப்படுத்துதல் தேவை.
கடவுள்  எப்படி பரிசுத்த குணப்படுத்துதலை நமக்கு செய்வார் ?  அவரின் அன்பை போதும், போதும் என்கிற அளவிற்கு நமக்கு கொடுக்கிறார். அதனை முழுதும் ஏற்று கொள்ள, கிறிஸ்துவை முழுதும் திறந்த மனதுடன் நாம் அவரின் வார்த்தைகளை கேட்க வேண்டும். அந்த சமாரிய பெண்ணை போல, நாம் உண்மைக்காக மனம் மாறிட தயாராக இருக்க வேண்டும்.


© 2014 by Terry A. Modica Facebook