Saturday, February 7, 2015

பிப்ரவரி 8 , 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 8 , 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொதுகால 5ம் ஞாயிறு
Job 7:1-4, 6-7
Ps 147:1-6
1 Cor 9:16-19, 22-23
Mark 1:29-39

மாற்கு நற்செய்தி

சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்
(
மத் 8:14 - 17; லூக் 4:38 - 41)
29பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.30சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.31இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.32மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.33நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.34பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
ஊர்கள் தோறும் நற்செய்தி முழக்கம்
(
லூக் 4:42 - 44)
35இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.36சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.37அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்.38அதற்கு அவர்,' நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் 'என்று சொன்னார்.39பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், புனித பவுலின் முதல் கடிதத்தில் (கொரிந்திரியருக்கு), நான் என்ன இறைனை பணி செய்கிறேனோ அதனையே சொல்வது போல் இருக்கிறது.

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றால், அதனால், நான் என்னையே புகசவேண்டும் என்பது இல்லை,
ஏனெனில், இதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை,
ஆனால், நான் இதனை செய்யவில்லை என்றால், எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தரும்.
மனதார நான் இதனை செய்தால் , எனக்கு வெகுமதி கிடைக்கும்.
ஆனால், ஏனோ கடைமைக்காக இதனை செய்தால், எனக்கு வெகுமதி கிடைக்குமா?
நான் நற்செய்தியை எல்லோரிடம் பகிர்ந்து கொள்ளும்பொழுது , நாம் இலவசமாக இதனை செய்கிறேன் அதனால், எல்லோரும் பயன் அடைகின்றனர்.

புனித பவுல் இதற்கு வசூல் செய்தால் அதில் ஒன்றும் தவறு என்று சொல்லவில்லை. இயேசுவே கூட வேலையாட்கள் அவர்களுக்கு தகுந்த கூலி கிடைக்கவேண்டும் என்று சொல்கிறார். (லூக்கா 10:7 ). ஆனால் புனித பவுலுக்கு தெரியும், நல்ல இறை பணியாளானாக இருப்பது கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை உபயோகிப்பது
தான் .


Good News Reflections மூலம், எவ்வித வசூல் இல்லாமல் நான் இந்த சேவை செய்ய முடிவதை நினைத்து அக மகிழ்கின்றேன். ஆயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். இந்த இறை சேவையில் தாராள மனது கொண்ட பலர் உதவி புரிகின்றனர். பலர் நன்கொடை கொடுக்கின்றனர் - அதனால் இந்த இறைசேவை நலமாக நடந்து கொண்டிருக்கிறது

தந்தை Henri Nouwen “நன்கொடை வசூலித்தல், என்பது, நாம் எதனை நம்புகிறோமோ, நமது நோக்கத்திலும், கொள்கையிலும் அவர்களையும் நம்மோடு இணைய அழைக்கிறோம்" நம் இணைய தளத்தில், ஒவ்வொரு இ-மெயில் மூலம் நாம் நன்கொடை கொடுக்க , அவர்களையும் நம் இறைசெவையில் அழைக்கிறோம். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். நமது குழுவில் அங்கத்தினராக சேர அழைக்கிறோம். இப்பொழுது இந்த இறைசேவையில் என்னோடு கலந்து கொண்ட , அவர்கள் பொருளையும் உழைப்பையும் செலவிட்ட அனைவருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.
மிக்க நன்றி!

கோவிலில் உண்டியல் நம் முன்னே வரும் பொழுது, அல்லது குருவானவர் நன்கொடை கேட்கும் பொழுதும், நமக்கு கோவிலின் வளர்ச்சியில் நாம் பங்கு கொள்ள நமக்கு கிடைக்கும் வாய்ப்பு. எவ்வளவு தாரளமாக நாம் இதில் பங்கு கொள்கிறோம். ?

இந்த நவீன உலகில், கிறிஸ்துவின் இறை பணியை நாம் தொடர வேண்டும். எந்த ஒரு கிறிஸ்தவனும், இந்த இறைபணியை தொடராதவன் சோம்பேறி, அல்லது சுய லாபத்திற்கான விசுவாசியாக இருப்பவரும் தான் . உங்கள் திறமைகளை , ஞானத்தையும், அறிவையும், இரக்கத்தையும் மற்றவர்களின் விசுவாசத்திற்காக நாம் உபயோகபடுத்தல் வேண்டும். உடனடியான சந்தோசம் என்ன என்றால், கிறிஸ்துவோடு இணைந்து நாம் இறைசேவை ஆற்றுகிறோம்.

இன்றைய நற்செய்தியில், இராயப்பரின் மாமியார் எவ்வளவு தாராள குணத்துடன் அவர்களுக்கு விருந்து உபசரித்தார் என்று காட்டுகிறது . இயேசுவின் உறுதியான மனப்பான்மையை , நற்செய்தி அறிவிப்பதில் , அவர் உறுதியோடு இருந்தார்.
இது இரண்டுமே நல்ல பணியாளருக்கு உரிய எடுத்து காட்டு ஆகும். எல்லா திறமைகளும் , பண வருமானங்களும், சொத்துக்களும், கடவுளிடமிருந்து வந்தவை, அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்திட வேண்டும்


© 2015 by Terry A. Modica

Friday, January 30, 2015

பிப்ரவரி 1, 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 1, 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் பொதுகால4ம் வாரம்
Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28

மாற்கு நற்செய்தி
தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்
(
லூக் 4:31 - 37)
21அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ 'என்று இயேசு அதனை அதட்டினார்.26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி இயேசுவின் அதிகாரத்தை நமக்கு எடுத்து காட்டுகிறது. நாமும் நமது வாழ்வில், ஏசுவின் அதிகாரம் உள்ளது என்று அறிந்து அதனை ஏற்று கொண்டால் , கடவுளோடு நாமும் சந்தோசமாய் நமது வாழ்வை கொண்டாட முடியும் , நமது கடினமான காலங்களில் கூட .

ஏன்? ஏனெனில் கிறிஸ்துவின் அதிகாராம் தான் முதன்மையானது, எல்லாவற்றிற்கும் மேலானது. இதன் அர்த்தம் என்னவெனில், கிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ் நாம் வைத்த அனைத்தும் கண்டிப்பாக வெற்றியையே தரும். தவறான சூழ்நிலை கூட, தவறானதாக கருதப்படும் நிகழ்ச்சிகள் கூட ஆசிர்வாதமாக மாறும். ஆபத்தானவை கூட வெற்றியை கொடுக்கும். கவலைகள் சந்தோசமாக மாறும். பயன்கள் புதிய வளர்ச்சிக்கு வித்திடும், புதிய அறிவை புதிய அனுபவத்தை கொடுக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறமையை நமக்கு கொடுக்கும்.

எனினும், நாம் கிறிஸ்துவின் அதிகாரத்தை நிராகரித்து, நாமே நமது பிரச்சினைகளுக்கு முடிவேடுப்பதோ , அல்லது நாமாகவே நமது பிரச்சினைகளை விட்டு வெளியே வர துணிந்தால், இன்னும் பிரச்சினைகள் மோசமாக மாறும். போப் பிரான்சிஸ் அவருடைய கட்டுரையில் (64) நாமே அதிகாரத்தை எடுத்து கொண்டால், சந்தோசத்திற்கு பதில், எல்லாமே பல குழப்பங்களை கொடுக்கும். அவர் இவ்வாறு "நாம் இவ்வுலகில், தற்போது, எல்லா செய்திகளும், ஗஗஗இன்டர்நெட் , தொலைகாட்சி முலம் நமக்கு கிடைக்கிறது. - எல்லாமே ஒன்றாக தான் எடுத்து கொள்ளபடுகிறது - அதனால் பல விசயங்களில் எல்லா முடிவுகளும் எடுக்க நமக்கு துணை யாக இருக்கிறது. ஆனால் , நாம் இதற்கு , இந்த சூழ் நிலைகளுக்கு ஏற்ப முதிர்ச்சியான முறையில் நாம் முடிவெடுக்கும் திறனை பதிலாக எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

மகிழ்ச்சியின் பாதை, இயேசுவின் பாத அடிகளை தொடர்வதில் இருக்கிறது. அவரது அதிகாரத்தில் இருந்து நாம் பயன் பெற, சாத்தானின் சோதனையிலிருந்து வெற்றி பெற , மனித வாழ்வில் துன்பத்திலிருந்து வெளியே வர, இயேசுவின் எடுத்து காட்டான வாழ்வை நாமும் பின் தொடர வேண்டும், அவரது போதனைகளுக்கு கீழ் படிதல் வேண்டும். இயேசுவை முழுதும் நம்ப வேண்டும். அவர் வழி தான் சரியான வழி என்று நாம் புரிந்து கொண்டு அதனை தொடர வேண்டும். அந்த வழி மிகவும் கடினமாக இருந்தால் கூட . இதன் அர்த்தம் என்னவெனில், மீட்பின் வெற்றியை , இயேசுவின் சிலுவை மூலம் நாமும் அடைய தயாராக இருக்கிறோம் .

வெற்றிக்கு குறுக்கு வழி ஒன்று கிடையாது, சாத்தானை வெல்ல சுலபமான வழி கிடையாது. இது உண்மையில்லை எனில், இயேசு சிலுவையில் மரணமடைய தேவை இல்லை.
நல்ல செய்தி - நாம் சந்தோசப்பட காரணம் - மிகவும் அன்புள்ள , எல்லா ஆற்றலும் , எல்லா அறிவும் உடைய கடவுள் இயேசுவின் அதிகாரம் நமக்காக வேலை செய்கிறது . இங்கே கேள்வி நாம் வைப்பது : நாம் நம்மை இந்த இயேசுவின் அதிகாரத்திற்கு அர்ப்பணிப்போமா ?


© 2014 by Terry A. Modica

Friday, January 16, 2015

ஜனவரி 18, 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 18, 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொது காலம் இரண்டாம் ஞாயிறு
1 Sam 3:3b-10, 19
Ps 40:2, 4, 7-10
1 Cor 6:13c-15a, 17-20
John 1:35-42


யோவான் நற்செய்தி

முதல் சீடர்களை அழைத்தல்

35மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு,'என்ன தேடுகிறீர்கள்?'என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். 39அவர் அவர்களிடம்,' வந்து பாருங்கள் 'என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.40யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து,'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்'என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் இயேசு சிமோன் இராயப்பரிடம், “என்ன தேடுகிறீர்கள்? “ என்றும் கேட்பது போல நம் அனைவரையும் பார்த்து கேட்கிறார் :
நீங்கள் ஜெபம் செய்யும் பொழுதும், சிலுவையை நோக்கி பார்க்கும் போதும், இயேசுவின் படத்தை பார்க்கும்போதும், நம்மை பார்த்து இயேசு கேட்கிறார்.
"என்ன தேடுகிறீர்கள்? “


இயேசு "வந்து பாருங்கள்!” என்று கூறுகிறார். எதற்காக இப்படி கூறுகிறார்? அவரின் அன்பினால் ? நோயை குனமாக்குவதால்? தெய்வீக ஆற்றலால் நமது ஜெபங்களுக்கு செவி சாய்த்து, நமக்கு வேண்டியதை கொடுப்பதால்? , நாம் என்ன கேட்டாலும், அது நம்மிடத்தில் இல்லாதது தான், ஆனால் அவரிடத்தில் இருக்கிறது.




தந்தை கடவுளின் வாக்குறுதிகள் அனைத்தையும் இயேசு முழுமையாக நிறைவேற்றுகிறார். இயேசு முழுமையான அன்பாக இருக்கிறார், இரக்கத்தை நம்பக்கு தருபராக இருக்கிறார்., நோய்களை குணமாக்கும் இருக்கிறார். நமக்கு தேவையான அனைத்தையும் பெற்று தருபவராக , நமது கவலைகள் அனைத்து போக்குபவராக இருக்கிறார் . அப்புறம்
ஏன் நமக்கு இன்னும் குறைகள் இருக்கிறது ? நம்மிடம் இல்லாதது எது ? ஏன் நம் வாழ்வில் இன்னும் எதையோ இழந்தது மாதிரி இருக்கிறோம் ? ஏன் நமது வேண்டுதல் பதில் கிடைப்பதில்லை

இரயப்பார் இயேசுவை பின் சென்றதற்கு பிறகு , அவரின் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. இதனை கடவுளின் அழைப்பிற்கு சாமுவேலின் பதில்களில் பார்க்கிறோம். பதிலுரை பாடலில் "என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது " என்று பாடுகிறோம்

இயேசுவின் முதன்மையான புதுமைகளை இராயப்பர் நேராக பார்த்தவர், கடவுளின் முழுமையான அன்பை இயேசுவின் கனிவான கண்கள் மூலமாக அனுபவித்தவர், இயேசுவின் குரலில் உள்ள இரக்கத்தையும், இயேசுவின் புன்னகையில் உள்ள மன்னிப்பையும் நேராகவே பார்த்தவர்.


இப்படியெல்லாம் இருந்தும் இராயப்பர் அவருக்கு என்ன தேவையோ , அது கிடைக்கவில்லை, (சில நேரங்களில் எப்படி குழப்பத்துடனும், பயத்துடனும் அவர் இருந்தார் என்பதை நாம் பார்க்கிறோம்) , இறுதியாக, இராயப்பார் , இயேசுவின் அன்பை பகிர , கொடுக்கும் கரங்களாக மாறிய பின்பு , அவருக்கு தேவையானதை கண்டுபிடித்தார் . இயேசுவின் முழுமையை , இயேசு உடலை விட்டு அகன்ற பிறகு தான் கண்டு கொண்டார் . அதன் பிறகு தான் , இயேசுவின் அழைப்பை கிரிசுதுவின் இறைசேவையை தொடர்ந்தார்.

அதே போல தான் நாமும் இருக்கிறோம், இயேசுவின் உண்மையாங்க கண்களை பார்க்கவில்லை, அவரின் குரலை கேட்கவில்லை. நம்மிடம் உள்ளதை பிறரிடம் கொடுக்கும் பொழுது , நமக்கு தேவையானதை கண்டு நாம் பெற்று கொள்கிறோம், ஏன்? ஏனெனில் நமக்கு தேவையானது நம்மிடம் ஏற்கனவே இருக்கிறது என்பதை நாம் கண்டு கொள்கிறோம் !. இது தான் புதுமை " என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;

© 2014 by Terry A. Modica