Saturday, May 14, 2016

மே 15 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே 15 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவியின்  திருவிழிப்பு திருவிழா
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)

யோவான் நற்செய்தி 14: 15-16, 23-26
தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.
நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்லஅவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''

(thanks to www.arulvakku.com)
ஆவியின் ஆற்றலால் இயேசுவோடு இணைவோம்
இன்றைய நர்செய்தியில்-  யோவான் (20:19-23)  - "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று இரண்டு முறை இயேசு கூறுகிறார் . முதலில் அவரின் சீடர்களுக்கு , அவர்கள் கவலையில் இருந்து விடுபட்டு, இயேசுவை அந்த குழப்பமான நேரத்தில் சரியாக கண்டு கொள்ள இயேசு இவ்வாறு கூறினார்.
பிறகு, அவரின் இறைபணியை அவர்கள் தொடர்ந்து   செய்ய வேண்டும் என கூறி , "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று இயேசு கூறுகிறார். கடவுளுக்காக இந்த உலகில் இறைபணி செய்யும்போது , பரிசுத்த ஆவியில் நாம் வாழும்போது நமக்கு கிடைக்கும் கனி தான் 'அமைதி'.
இயேசு நம்மமோடு இருக்கிறார் என்பதே நமக்கு சமாதானத்தையும் அமைதியையும் தரும். இயேசுவை பற்றி மற்றவர்களிடம் சொல்லும்பொழுதே நமக்குள் அமைதி பெறுவது என்பதே ஒரு சவால் தான். இயேசுவை நாம் அறிவிக்கும்போழுது நாம் குறைவான தகுதியோடு இருக்கீறோம் என்றும் , அதிக உற்சாகத்தோடும் இருக்கிறோம். நம்மை யாராவது கேலி செய்வோர்களோ அல்லது நிரகரிப்பார்களோ என்றும் நாம் பயம் கொள்கிறோம். அதனால் தான் இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.

கடவுள் நம்மை என்ன செயல் செய்ய சொல்கிறாரோ அதனை செய்வதற்கு தேவையான அனைத்தையும் பரிசுத்த ஆவி நமக்கு கொடுக்கிறார். அதனால் நாம் எந்த தகுதியும் குறைந்தவர்கள் அல்ல, மேலும், மக்கள் நம்மை நிராகரித்தாலும், நம்மை ஆவியானவர் ஆறுதல் படுத்தவும் செய்கிறார்.

சமாதானமும் அமைதியையும் பரிசுத்த ஆவி நமக்கு அருளுகிறார். இயேசுவோடும், அவரின் பரிசுத்த ஆவியீன் ஆற்றலோடும் நாம் இணைந்து இருப்பதற்கு நமக்கு கிடைக்கும் மிக பெரிய அன்பளிப்பு நமது உள்ளார்ந்த அமைதியாகும். யார் என்ன செய்தாலும், எந்த மாதிரியான எதிர்ப்புகள் வந்தாலும், அல்லது எதுவும் வராமல் இருந்தாலும், நம் உள்ளத்தில் பேரமைதி இருக்கும். அது பரிசுத்த ஆவியின் கனி.
நற்செய்தியின் வாசகத்தில் இறுதியில், இயேசு, முதல் சீடர்களுக்கு, முதல் கத்தோலிக்க குருக்களுக்கு , பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுக்கிறார். பாவ சங்கிர்த்தன அருட்சாதனத்தை நமக்கு வழங்குகிறார். இதன் மூலம் இயேசுவே குருவின் மூலமாக நம்மிடம் வருகிறார்.
பாவ உலகில் இருக்கும் பொழுதே, ஆவியின் மன்னிக்கும் ஆற்றல், நம்மை எல்லாம் அமைதியில் இருக்க வைக்கிறது. மன்னிப்பதும் மிக கஷ்டமான காரியம் தான், ஆனால், கிறிஸ்துவின் ஆவியுடன் , நம்மால் மன்னிக்க முடியும். நம்மை காயபடுத்துபவர்களை நம்மால் மன்னிக்க முடியும். அவர்கள் மனம் திருந்தாவிட்டாலும் கூட நம்மால் மன்னிக்க இயலும். இது தான் நமக்கு அமைதியை தருகிறது.

© Terry Modica

Friday, May 6, 2016

மே 8 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை



மே 8 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழா
Acts 1:1-11
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Matthew 28:16-20 

மத்தேயு நற்செய்தி

இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.

17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.

18இயேசு அவர்களை அணுகி, 
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
 என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இயேசு ஏன்  விண்ணகம் சென்றார்?
இயேசு உயிர்த்தெழுந்தது முதல், அவர் தன் இறைபணியை தொடர்ந்து செய்திருந்தால், எத்தனை மக்கள் மனம் மாறியிருப்பார்கள் ? என்று கற்பனை பண்ணி பாருங்கள். இயேசு இறந்ததை பார்த்த பரிசேயர்கள் கூட இயேசுவின் காலடியில் கூட விழுந்திருப்பார்கள் .
எனினும்,கடவுளின் இவ்வுலக மீட்பின் திட்டம் நாம் நினைப்பதை விட பெரியது. இயேசு இந்த பூமயில் நடந்த பொழுது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். பிறகு தன்னையே திவ்ய நர்கருனையாக சீடர்களுக்கு கொடுத்த பிறகு அவர் ஒவ்வொரு மனிதனும் அந்த அன்பளிப்பை முழு அன்புடனும், ஆர்வத்துடனும் பெறுகிற பொழுது, அங்கு இயேசு மனிதனாக மாறுகிறார். நாம் இயேசுவை திவ்ய நற்கருணையில் பெரும் பொழுது நாம் அவரின் இறைபனியோடு நம்மை இணைத்து கொள்கிறோம்.
இன்றைய  நற்செய்தியில் பார்ப்பது போல, இயேசு விண்ணகம் செல்வதற்கு முன்பு, ஒவ்வொரு சீடருக்கும் கட்டளை கொடுக்கிறார். -- உங்களுக்கும் சேர்த்து தான் - அவர் கட்டளை கொடுக்கிறார். "கட்டளை"  என்பது இங்கே , இயேசுவின் பணியை  நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் , அந்த இறைபணியை அனைவரும் இணைந்து செய்தல் வேண்டும். இந்த 'கட்டளியிட்டு அனுப்புதல்' என்பது ஒவ்வொரு திருப்பலியிலும் இறுதியில் நடக்கிறது. இயேசு , குருவின் மூலமாக நமக்கு கட்டல்லியிட்டு அனுப்பிகிறார். கடவுளை அன்பு செய்யவும் , இந்த உலகில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவும், நம்மை குருவானவர் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.
மனிதானாக, இந்த உலகை மாற்ற நாம் தகுதிகள் குறைந்து உள்ளோம். அதனால் இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை அளித்தார், நாம் நமது ஆவியை , பரிசுத்த ஆவியுடன் இணைந்து, கடவுளை நம்பி நாம் இறைபணி ஆற்றும்பொழுது, நம்மில் தகுதி இல்லை என்பது ஒரு குறையே இருக்காது. கிறிஸ்துவின் கைகளாக , அவரின் கால்களாக , இயேசுவின் குரலாக மாறி, இந்த உலகில் இறைபணி செய்ய நாம் நமது முயற்சியை செய்து பரிசுத்த வாழ்வில் வளர தயாராய் இருக்கிரோமா ?
இயேசு விண்ணகத்திற்கு சென்று விட்டதால், அவருடைய கைகளாக நம் கைகள் இருக்கிறது, அவரின் குரலாக நம் குரல் இருக்கிறது.
இந்த உலகில் இருக்கிற சாத்தானால் நீங்கள் வருத்தமாக இருக்கின்றீர்களா ?  கடவுள் இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்ற பெரிய திட்டம் வைத்திருக்கிறார்.
அநிதியாக நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்வுகள் ? வேலையிடத்தில் நடைபெறும் அதர்மங்கள்? பங்கில் இருக்கும் பிரிவுகள் , நமது தலைவர்கள் நம்மை அவமானபடுத்துவது? இது போன்ற சாத்தானின் செயல்களால் வருத்தபடுகிரீர்களா ? இயேசு உங்களை விட மிகவும் கவலை படுகிறார், இந்த செயல்களால் இன்னும் வருத்தபடுகிறார். மேலும் உங்கள் மூலமாக இதனை அப்புறபடுத்த விரும்புகிறார்.
இயேசு விண்ணகம் சென்று , பரிசுத்த ஆவியை இந்த உலகத்திற்கு அனுப்பியதிலிருந்து , கடவுள் அவரது இறைபணியை நம் மூலம் செய்ய நம்மை தேர்வு செய்திருக்கிறார். முதலில் நம் வீட்டில், பிறகு நமது பங்கில், மேலும் பல இடத்தில்.
என்னோடு இணைந்து , ஆண்டவரின் விண்ணேற்றம்  பெருவிழாவில் இந்த ஜெபத்தை சொல்லுங்கள்:
எங்கள் கடவுள் இயேசுவே, உங்கள் பரிசுத்த ஆவியை என்னில் நிரப்புங்கள், எந்த திறமைகளை , ஆற்றலை நான் உபயோகிக்க வேண்டுமோ, அதனை எனக்கு கொடுங்கள், அதனை எப்பொழுது எங்கே உபயோகிக்க வேண்டும் என காட்டுங்கள், அறிவுறுத்துங்கள். மேலும், எனது கர்வத்திளிருந்தும், பயத்திலிருந்தும் , மற்ற பாவங்களிலிருந்தும் நான் மாறி வர எனக்கு உதவி செய்தருளும். இவைகளெல்லாம் உன் இறைபணி செய்ய தடையாக இருக்கும், எனவே அதனை அகற்றிவிடும். ஆண்டவரே நான் உனது கைகளாக, கால்களாக , குரலாக இருக்க ஆசைபடுகிறேன். ஆமென்.


© 2016 by Terry A. Modica

Friday, April 29, 2016

மே 1 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 1 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 15:1-2, 22-29
Ps 67:2-3, 5-6, 8
Revelation 21:10-14, 22-23
John 14:23-29

யோவான்  நற்செய்தி


23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: 
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.

24என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.

25உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.

26என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

27அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.
28நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.

29இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.
(thanks to www.arulvakku.com)

இயேசுவை போல அன்பு செய்ய, நமக்கு தேவையான  வழி
இன்றைய நற்செய்தி கூறுவது போல, இயேசுவை அன்பு செய்வது என்பது, அவர் கொடுத்த கட்டளைகளை , போதனைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். நம் இதயத்தில் நாம் இதனை விரும்புவதில்லை. நாம் கிறிஸ்துவை போற்ற விரும்புகிறோம், அவரை போல நாம் நடித்து அவரை மரியாதையை செய்ய விரும்புகிறோம். இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்ய விரும்புகிறோம். இதனை செய்யும் பொழுது, கடவுள் நம்மில் ஒளிர்கிறார் என்று நமக்கு தெரியும்.

எனினும், இது அவ்வளவு சுலபமில்லை. ஒவ்வொரு நாளும், இயேசுவை போல நாம் நடந்து கொள்வதிலும் , இயேசுவை வார்த்தையை கடைபிடிப்பதிலும் நமக்கு மிக பெரிய சவாலாக இருக்கிறது. இயேசு அது மாதிரியான நேரங்களில் எப்படி நடந்து கொண்டிருப்பார் என்று நாம் மறந்து விடுகிறோம் அல்லது , எப்படி நாம் நடந்து கொள்வது என்று நமக்கு தெரியவில்லை. சிலர் நம்மை காயபடுத்தும் பொழுதும் , அன்பு இல்லாத செயல்களில் நமக்கு காட்டும்பொழுதும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து , பாவ செயல்களாய் நாம் அவர்களிடத்தில் திருப்பி செய்கிறோம்.
நற்செய்தி வாசகங்கிளிலோ , நாம் எப்படி கிறிஸ்துவை பின் செல்வது என்று ஒவ்வொரு விசயத்திற்கும் கொடுக்கவில்லை. "எப்படி ஒரு நிகழ்வு நடந்தால், கடவுள் கட்டளை என் 12ஐ பின்பற்றவும் " என எங்கும் கொடுக்கப்படவில்லை.
அதனால் தான் , இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பேன் என்று உறுதி அளித்தார். பரிசுத்த ஆவி தான் நம்மோடு இருந்து , இயேசுவும், அவரின் வழியும் நமக்கு நினைவுபடுத்துகிறார். ஒவ்வொரு சவாலையும் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று நமக்கு பரிசுத்த ஆவியானவர் அறிவுறுத்துகிறார். காலையில் எழுந்தது முதல் மாலை தூங்க போகும் வரை அவர் நமக்கு பரிசுத்த வழியை நமக்கு சொல்லி கொண்டிருக்கிறார்.
நமது பிரச்சினை எப்படி கிறிஸ்துவின் கட்டளையை பின்பற்றுவது என்பதல்ல, பரிசுத்த ஆவியின் உதவியை பெற்று கொள்ள , அவரோடு இணைந்த வாழ்வை பெற நாம் மறந்து விடுகிறோம். அல்லது பரிசுத்த ஆவியின் வழிமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ள நமக்கு தெரியவில்லை. கடவுள் முழு உதவி நமக்கு எப்பொழுதும்  உள்ளது, ஆனால், நம் வாழ்வின் ஒவ்வொரு சவாலையும் நாமே கையாளவேண்டும் என முடிவெடுத்து அதன்படி நடக்கிறோம்.
பரிசுத்த ஆவியின் குரலை எப்பொழுதும் கேட்டு நடந்து கொள்ள இங்கே ஒரு பயிற்சி முறை கொடுக்க பட்டுள்ளது: ஒவ்வொரு மணி நேரத்தையும் புனிதமாக்குங்கள். உங்கள் கடிகாரத்திலோ அல்லது மொபைலிலோ ஒவ்வொரு 6௦௦0 நிமிடங்களுக்கும், அலாரம் வைத்து கொண்டு, பரிசுத்த ஆவியை நினைவுபடுத்தி , அவரின் வழிகாட்டுதலோடு நடந்து கொள்ள , அவர் காட்டும் பரிசுத்த வழியில் செல்ல பயிற்சி மேற் கொள்ளுங்கள். சில வாரங்களுக்கு பிறகு , உங்களுக்கு இது பழக்கமாகி விடும், கடவுளின் பிரசன்னம் நம் அருகில் எப்பொழும் இருப்பதையும் , அவரிடமிருந்து நமக்கு எப்பொழுதும் கிடைக்கும் உதவி நமக்கு அருகே இருப்பதையும் நாம் விழிப்புணர்வுடன் புரிந்து கொள்வோம்.
© 2016 by Terry A. Modica