Friday, January 11, 2019

ஜனவரி 13, 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 13, 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு விழா  
Isaiah 42:1-4, 6-7 (or Isaiah 40:1-5, 9-11)
Ps 29:1-4, 9-11 (or Ps 104:1-4, 24-25, 27-30)
Acts 10:34-38 (or Titus 2:11-14; 3:4-7)
Luke 3:15-16, 21-22

லூக்கா நற்செய்தி
15அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

16யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13-17; மாற் 1:9-11)
21மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.

22தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது,
“என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்”
என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.✠
(thanks to www.arulvakku.com)

நீங்கள் எதை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் ?
இன்றைய ஞாயிறின் நற்செய்தியானது, முழுதும் எதிர்பார்ப்போடு இருக்கிறது? எதற்காக காத்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்களுக்கு ஏற்படும் அநிதி, சாத்தானின் காரியாங்களிளிருந்து கடவுள் எப்படி உங்களை காக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறீர்கள்? அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் கடவுளிடம் திரும்பி வர கடவுள உதவ வேண்டும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறீர்களா? குழப்பத்திலோ அல்லது என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் இருக்கும் சுழ்நிலையில் என்ன மாதிரியான  வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறீர்கள்?
நீங்கள் கிறிஸ்துவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் போது  கிறிஸ்துவின்  அன்பளிப்பான அமைதியை உணர்கிறீர்களா? அல்லது, கவலையுடனும், அமைதியின்றியும்,விரக்தியுடனும் இருக்கிறீர்களா?
இன்றைய நற்செய்தியில், யோவான் ஞானஸ்நானம் முழுதும் எதிர்பார்ப்போடு மக்கள் இருந்தார்கள், ஏனெனில் யோவான் தான் மெசியா என்று நினைத்தனர்.. கடவுள் வந்து , அவர்களின் துயரத்தையும், அநிதியும், வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பையும் கடவுள் வந்து மீட்பார் என்ற எதிர்பார்ப்புடனும் , கடவுள் செய்தே ஆக வேண்டும் என்ற   எண்ணத்துடனும், யோவானின் ஞானஸ்நானம் மூலம் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் கடவுள், இதனை விட இன்னும் நல்ல திட்டத்தை அவர் மனதில் வைத்திருந்தார். முழுமையான திட்டம். உண்மையான மெசியா பரிசுத்த ஆவினால் திருமுழுக்கை கொடுப்பார். ஆனால் யோவானோ மனம் திருந்துங்கள் என்று மட்டுமே கூற முடிந்தது. ஆனால் உண்மையான மெசியாவோ அனைவரையும் பரிசுத்த வாழ்வில் வாழ தன்னுடைய ஆவியையே கொடுத்தார்.  
இயேசு இறுதியாக யோவானிடம் ஞானஸ்நானம் பெற வந்தார். அவர் பாவ மன்னிப்பை பெற வேண்டியதில்லை. ஏனெனில், அவர் பாவம் இல்லாதவர். நாம் மனம் திருந்த வேண்டிய கடைமையோடு தன்னையும் இயேசு இணைத்து கொண்டார். அதன் மூலம் தனது இறைபணியை (நம்மை பாவத்திலிருந்து மீட்பது) , நம்மை சிலுவையை கொண்டு செல்ல ஆரம்பிக்கிறார்.
கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில், இயேசுவின் பரிசுத்தத்திலும், அவரின் இறைபனியிலும், அவரது குருத்துவத்திலும், நற்செய்தியை அறிவிப்பதிலும், சேவை செய்வதிலும், மற்றவர்களுக்காக தியாகம் செய்வதிலும் நாம் மூழ்கடிக்கபடுகிறோம்.பரிசுத்த ஆவியானவர், இயேசு செய்ததை போல நாம் செய்ய நமக்கு உதவியாக இருக்கிறார். தந்தை நம் மேல் "“என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று கூறுகிறார்.
நீங்கள் என்ன எதிர்பார்த்து இருக்கிறிர்கள்? உங்கள் அனுதின வாழ்வில், உங்கள் ஞானஸ்நானத்தால் என்ன நடக்க வேண்டும் என நினைகிறீர்கள்? எதிர்பார்ப்பது ஒரு நல்ல குணம் தான் -- ஆனால், அதையே பொறுமையின்றி எதிர்பார்க்கும் பொழுது, நாம் ஏமாந்து விடுவோம். கடவுளின் நன்மையோடு நம் எதிர்பார்ப்பை வைக்கும் பொழுதும், மேலும், கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று நாம் இருக்கும்பொழுதும், நமக்கு சந்தோசமும், அதிகமான விசுவாசமும், இன்னும் பல அதிசயங்களும் நடக்கும்.
© 2019 by Terry A. Modica


Friday, January 4, 2019

ஜனவரி 6 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி  6 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி

ஞானிகள் வருகை
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,

2“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.
4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

5-6அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்,
‘யூதா நாட்டுப் பெத்லகேமே,
யூதாவின் ஆட்சி மையங்களில்
நீ சிறியதே இல்லை; ஏனெனில்,
என் மக்களாகிய இஸ்ரயேலை
ஆயரென ஆள்பவர் ஒருவர்
உன்னிலிருந்தே தோன்றுவார்’
என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.

8மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
கிறிஸ்துமஸ் விழாவோடு சேர்த்து கிழக்கிலிருந்து ஞானிகளின் வருகையும் நாமே சேர்ந்தே கொண்டாடுகிறோம்.
கிரேக்க வார்த்தையான "மேகி(ஞானி)' என்ற வார்த்தைக்கு, விஞ்ஞானிகள் என்று அர்த்தம். சில நேரங்களில் "ஜோதிடர்கள்" என்று கூட சொல்வது உண்டு, ஆனால், அவர்கள் குடிலில் ஏற்படுத்திய தோற்றத்தை வைத்து அவர்கள் தொடர்கள் என்று கூறி விட முடியாது. மத்தேயு நற்செய்தியில், இயேசு எல்லோருக்கும் மீட்பு கொடுக்கவே இந்த  உலகத்தில் பிறந்தார்:யூதர்கள் மற்றும் பிற இனத்தார்
இந்த திருக்காட்சி திருவிழாவை நமது திருச்சபை கொண்டாடுவதின் நோக்கம், ஞானிகள் குழந்தை இயேசுவை தெய்வமாகவும் மனிதனாகவும் வணங்கி வரவேற்றனர். அவர்கள் அனைவரையும் இறையரசை விட்டு விளக்கி வைக்கபடுவர் என்று அர்த்தம் இல்லை. கிறிஸ்துவே வழி, அவரே உண்மையும் வாழ்வும் ஆவார் .இயேசு இல்லாமால், யாரும் நித்திய வாழ்வை அடைய முடியாது. ஆனால் அனைவரும் அங்கே செல்ல அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த ஞானிகள் யாரும் மன்னர்கள் இல்லை, பைபிள் காலத்திற்கு வந்த பல நூல்கள் கூட அவர்களை ராஜாக்கள் என்று சொல்கின்றனர் ஏனெனில், அவர்கள் கொண்டு வந்த பரிசு பொருட்கள், ராயல் மன்னர்களுக்குண்டான பரிசுகள். இவை அனைத்தும் இயேசுவை மன்னர் தான் என்று அறிவுறுத்த அந்த பரிசு கொடுக்க பட்டது. அந்த ஞானிகள், இயேசு தான் தெய்வீக அரசர், இந்த உலகில் மனிதனாக மரணிப்பார் என்றும் அறிவித்தார்கள்.
தங்கம் இயேசுவை ராஜா என்று மரியாதை செலுத்தியது. நறுமணம் தைலம் இயேசுவை தெய்வம் என்று பறை சாற்றியது. வெள்ளைபோளம் மரணத்தில்  சவத்திற்கு மரியாதை செலுத்த உபயோகிக்க கூடியது. மேலும், அதே பரிசுகள் நமது கிறிஸ்தவ வாழ்விற்கான பொறுப்புகளையும் நமக்கு சுட்டி காட்டுகிறது: தங்கம் நாம் நீதியோடு இருக்க வேண்டும் என்றும், நறுமண தைலம் நமது ஜெபங்களையும் , வெள்ளைபோலம் கிறிஸ்துவுக்காக நாம் படும் துன்பங்களையும் சுட்டி காட்டுகிறது.
"திருக்காட்சி" என்ற வார்த்தையின் அர்த்தம் கண்டுபிடிப்பது என்பது ஆகும். நம் வாழ்வை மாற்றும் ஒரு வெளிப்பாடு ஆகும். அந்த ஞானிகள் , குழந்தை இயேசு தான் நமது மெசியா என்று அறிந்து கொண்டார்களா? அந்த கால கட்டத்தில், ராஜா தான் தெய்வம் என்று எல்லோரும் நம்பினார்கள். அவர்கள் இறக்கும் வரை , நம்மோடு வாழும் கடவுள் என்று நம்பினார்கள். அந்த ஞானிகள் இயேசு தான் என்றுமே ராஜா என்று கண்டு கொண்டார்களா?
கண்டிப்பாக, அவர்கள் இறை பயணம் முடிந்த பின்பு, இயேசுவை மறந்து விடவில்லை, ஜெருசலேம் இல் இறுதி ஏதாவது தகவல் வருகிறதா? என்று எதிர்பார்த்திருந்தனர். யூதர்களின் அரசர் சிலுவையில் அறையப்பட்டதை கேட்டு அறிந்தனர். நாமும் இதனை அறிவோம், அவர்கள் ஒரு நேரத்தில் புனித கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்களுடைய நினைவாக, புனித பிண்டங்கள் இன்னும் இருக்கிறது. அவர்கள் , அந்த காலத்திலேயே அர்சிக்கபட்டார்கள்.

© 2019 by Terry A. Modica

Saturday, December 15, 2018

டிசம்பர் 16 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


டிசம்பர் 16 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு

Zephaniah 3:14-18a
Isaiah 12:2-6
Philippians 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி
10அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.✠

11அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார்.
12வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர்.✠

13அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார்.

14படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.
15அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

16யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
17அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

18மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
(thanks to www.arulvakku.com)
இறைபணியில் மகிழ்வை அனுபவிப்பது
மூன்றாவது திருவருகை கால  ஞாயிறு மகிழ்ச்சியை சந்தோசத்தை  முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. கிறிஸ்துவின் மீது நாம் கொண்ட உண்மையான விசுவாசம் சந்தோசத்தில் தான் கொண்டுசெல்கிறது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் சந்தோசத்தையே மகிழ்வையே குறித்து பேசுகிறது. மேலும், எதிர்பார்ர்ப்பிலும் ஒரு திரில் இருக்க தான் செய்கிறது. நற்செய்தி வாசகத்தில், ஞானஸ்நான யோவான் மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் அவர்கள், கடவுளை பற்றி சந்தோசத்துடன் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
சந்தோசமாக மகிழ்வுடன் இருப்பதே ஒரு இறைசேவை என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் நாம் விசுவாசத்தை பரப்ப முடியும். நம்மில் பல துன்பங்களையும் துயரங்களையும் நம்பிக்கைன்மையும் கொண்டிருக்கும்போது நாம் சந்தோசமாக இருக்க தைரியத்துடன் கிறிஸ்து பார்த்து கொள்வார் என்று விசுவாசத்துடன் இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
யோவான் இந்த இறைசேவையை எப்படி செய்தார் என்று பார்ப்போம்.   ஒட்டகத்தின் தொலை ஆடையாக அணிந்து கொண்டு, பாவத்திலிருந்து மனம் திரும்புங்கள் என்று மட்டு சொல்லவில்லை. இன்னும் நன்றாக கவனியுங்கள், அவரின் இறைபணியின் மூலம் இயேசுவை வரவேற்க ஆயத்தப்டுத்தினார்.
விசுவாசத்துடன் இருப்பது என்பது, கடவுள் மேல் நம்பிக்கை கொள்வது, அந்த நம்பிக்கை நம்மில் மகிழ்வை கொண்டு வரும். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ சந்தோசம் இல்லை என்றால், இயேசுவை நாம் முழுமையாக நம்மள் ஏற்று கொள்ளவில்லை, அவரை முழுமையாக வரவிடாமால் இருக்கிறோம், என்று அர்த்தம். நமக்கு இன்னும் விசுவாசம் பத்தாமல் இருக்கலாம், அதனை நாம் இன்னும் நன்றாக உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். விசுவாசத்தில் நாம் இன்னும் வளர்ந்திட வேண்டும்.
கடவுளின் அன்பின் மீது நம் கவனத்தை திருப்பும் பொழுது, அதன் மூலம் அவரின் ஆறுதலை பெறுவதால், நம் துயரம் நம்மை விட்டு நீங்கி நாம் சந்தோசம் அடைகிறோம். மேலும் இயேசுவின் சந்தோஷ பக்கங்களையும் நாம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும். சந்தொசத்திர்கான காரண காரியங்களை அவரிடமிருந்து , அவர் போதனையிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இயேசு இன்னும் அதிக ஸ்டேப் எடுத்து செல்ல சொல்கிறார், பகைவரையும் அன்பு செய்ய சொல்கிறார், நமக்கு அதிக தொந்தரவு கொடுக்கிறவரையும் அன்பு செய்ய சொல்கிறார்.  இவை அனைத்தும் நமக்கு சந்தோசமான மகிழ்ச்சியான விஷயம் இல்லை. பரிசுத்த வாழ்வில் வாழ நாம் அறிந்து கொண்டு ,  அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இயேசுவோடு , அவரின் சந்தோசத்தோடு நாம் மற்றவர்களோடு அதனை பகிரும் பொழுது , இயேசுவின் சந்தோஷ அன்பில் நாம் இணைவோம். மேலும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், இயேசுவோடு அவரது சிலுவையில் இணையும் பொழுது இன்னும் அதிக சந்தோசத்தை நாம் பெறுவோம்.
நற்செய்தி: இயேசு நமக்கு, நாம் எப்படி பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் என சொல்லி கொடுக்கவில்லை. ஆனால், நாம் பரிசுத்தமாக இருக்க தேவையான ஆற்றலை கொடுத்துள்ளார். அவரின் பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்துள்ளார் மற்றவர்கள் நம்மில் பரிசுத்த ஆவியின் செயலை காணும் பொழுது, இயேசு தான் நம் மகிழ்ச்சிக்கு காரனம் என்று அறியும் பொழுது, நம் விசுவாசம் மூலம் மனம் மாறுகின்றனர்.
© 2018 by Terry A. Modica