Saturday, June 22, 2019

கடவுளின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா


கடவுளின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா
ஜூன் 23 2019
Genesis 14:18-20
Ps 110:1-4
1 Corinthians 11:23-26
Luke 9:11b-17
லூக்கா நற்செய்தி
11அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
12பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்என்றனர்.

13இயேசு அவர்களிடம்
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்
 என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்என்றார்கள்.
14ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி
இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்
 என்றார்.

15அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.

17அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஐந்தாவது ரொட்டி
"அன்பானது ஐந்து ரொட்டி துண்டுகளும் மற்றும் இரண்டு மீன் துண்டுகளுக்கும் சமமானது . நீங்கள் அதனை மற்றவர்களுக்கும் கொடுக்கும் வரை அது சிறியதாகவே காணப்படும்." கலிலேயாவில் உள்ள கடல் அருகே உள்ள கோவிலில் இது எழுதப்பட்டிருக்கிறது. அங்கே தான், இயேசு இந்த சிறிய உணவை பல மடங்காக பெருக்கி அங்கு உள்ள அனைவருக்கும் பசியாற வழங்கினார்.

பலிபீடத்தின் முன்னே பைசைனைட் மொசைக் கல்லால் ரொட்டி துண்டுகளும், மீன்களும் 480 கி பி ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்டு அங்கே இருக்கிறது. அந்த பாறையில் தான் இயேசு அந்த உணவினை ஆசிர்வதித்தார். இருந்தாலும், அந்த மொசைக்கிள் 4 ரொட்டி துண்டுகள் தான் இருக்கும். ஐந்து இல்லை ? ஏன் ? இயேசுவை பாருங்கள்.

அந்த ஐந்தாவது ரொட்டி துண்டு திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார். ஒவ்வொரு திருப்பலியிலும் நம்மிடம் வருகிறார்.
அந்த திருத்தலத்தின் விளக்கங்கள் இந்த சுட்டியில் உள்ளது. http://gnm-holyland.org/church-of-the-multiplication-mosaic/
திவ்ய நற்கருணை  இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் திரு உடலோடு இணைந்த திருகுழுவுடன் சமுகத்துடன்  மேலானது. பல மடங்காக பெருக்கிய அதிசயத்திற்கு இணையானது. கடவுளிடமிருந்து நாம் ஏதாவது கிடைக்காமல் இருந்தால்,   நமக்கு தேவையான திறமை இல்லாமலிருந்தால், பரிசுத்த  ஆவியின் மூலம் இயேசு திவ்ய நற்கருணையில் நமக்கு கொடுக்கிறார். மேலும் திருப்பலியில் நாம் கலந்து கொள்ளும்பொழுது , நாம் இயேசுவிடம் நமக்கு தேவையானதை கொடுக்க சொல்லி கேட்கலாம்.
இந்த திவ்ய நற்கருணை தான் இந்த உலகில் கடவுளை இணைக்கும் ஒரே கருவியாகும். அதனுடைய முழு அன்பினை நாம் அனுபவிக்காமல் இருப்பதன் அர்த்தம், எப்படி திவ்ய நற்கருணையோடு நம்மை இணைப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். திவ்ய நற்கருணையை முழுதுமாக நாம் பெற, நாமே முழு திவ்ய நற்கருணையாக மாறவேண்டும். மற்றவர்களுக்காக தியாகம் செய்து வழங்கிய அன்பு தான் திவ்ய நற்கருணை. உங்களுக்கு தேவையான அன்பு கிடைக்கவில்லை என்றால், மற்றவர்களுக்கு உங்கள் அன்பை செலுத்துங்கள், மற்றவர்களுக்கு திவ்ய நற்கருணையாக இருங்கள்.
© 2019 by Terry A. Modica


Saturday, June 8, 2019

ஜூன் 9 2019 ஞாயிறு நச்செய்தி மறையுரை


ஜூன்  9 2019 ஞாயிறு நச்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவி ஞாயிறு
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)
யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக!”
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்”
 என்றார்.✠

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 
“தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா”
 என்றார்.✠
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் இயேசு, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று சீடர்களை நோக்கி கூறினார். முதலில் அவர்களுக்கு அமைதியை அன்பளிப்பாக கொடுத்தார், அதனால், அவர்கள் கவலையை விட்டு , இயேசுவின் மேல் அவர்கள் பார்வை திரும்பும் என்றும், இயேசுவை அவர்கள் உண்மையாக கண்டு கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் கருத்ததொற்றுமையை நோக்கத்தை இயேசுவின் பக்கம் திருப்பினார்.
அதன் பிறகு,  தந்தை அனுப்பிய அவரின் இறைப்பணியை தொடருங்கள்  என்று கூறினார். இந்த முறை, "அமைதி உங்களோடு இருப்பதாக" என்பதன் அர்த்தம் , பரிசு ஆவியின் துனையுடன், கடவுளின் இறைப்பணியை நாம் இந்த உலகில்  தொடர்ந்து செய்து வருவதின் பலனாக இருக்கும்.
இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு அமைதியை கொடுக்கும்.  இயேசுவை பற்றி நாம் மற்றவர்களுக்கு சொல்லும்போது ஒரு சவால் தான், ஆனால், நமக்கு போதிய தகுதி இல்லை என்றும், அதிகமாக, நம்மை யாராவது, கேலி செய்வார்கள் என்றும், நம்மை நிராகரிப்பார்கள் என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் தான், இயேசு நமக்கு பரிசுத்த ஆவி கொடுத்தார்.
தந்தை கடவுள் நமக்கு என்ன இறைபணி செய்ய சொன்னாரோ, அதனை செய்ய தேவையானதை பரிசுத்த ஆவி நமக்கு தருகிறார். அதனால், நாம் எல்லா தகுயுடன் தான் இறைபணி செய்கிறோம், மேலும், நம்மை யாராவது நிராகரிக்கும் போது கடவுள் நம்மை தேற்றுவார்.

இயேசுவோடு இணைந்து, பரிசுத்த ஆவியின் துணையோடு நாம் பெரும் பரிசு, நமது உள்ளத்தின் அமைதி,  என்ன நடந்தாலும், அது நமது உள்  அமைதியை பாதிக்காது. நாம் பகிர்ந்து கொள்ளும் நற்செய்தியை அவர்கள் நிராகரித்தால், நம் உள் அமைதி ஒன்றும் மாறாது . பரிசுத்த ஆவி நம்மில் இருந்தால், நம் உள்ளம் என்றும் அமைதியாக இருக்கும்.  அமைதி பரிசுத்த ஆவியின் செயல்.
நற்செய்தியின் முடிவில், இயேசு அப்போஸ்தலர்களுக்கு (முதல் கத்தோலிக்க பாதிரியார்கள்) , பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொடுத்தார். அப்போஸ்தலர்கள், குருவானவர்கள்,  இயேசுவின் தெவீக ப்ரசன்னத்துடன் குருவானவர் பாவங்களை மன்னிக்கலாம்.  இயேசு, நமக்கு பாவ சங்கீர்த்தன திருச்சடங்கை நமக்கு கொடுத்து,  அந்த சடங்கின் மூலம் , இயேசு குருவின் உள்ளே பிரசன்னமாக இருக்கிறார்.
அதே மன்னிக்கும் பரிசுத்த ஆவியின் ஆற்றல், நமது பாவ வாழ்வில் நமக்கு அமைதியை கொடுக்கிறது. மன்னிப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தால் கூட,  கிறிஸ்துவின் ஆவியோடு இணைந்து நம்மால் முடியும்.நம்மை கழ்டபடுத்தியவர்களை  கூட நாம் மன்னிக்க முடியும்.  அவர்கள் மனம் திரும்பினாலும், திரும்பாவிட்டாலும், நம்மில் அமைதி ஏற்படும்.
© 2019 by Terry A. Modica

Friday, May 31, 2019

ஜுன் 2 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜுன் 2 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் வின்னேற்ற பெருவிழா
Acts 1:1-11
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Luke 24:46-53

லூக்கா நற்செய்தி
46அவர் அவர்களிடம்
மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,

47பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.

49
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்
 என்றார்.
இயேசு விண்ணேற்றம் அடைதல்
(மாற் 16:19-20; திப 1:9-11)
50பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

51அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
52அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.

53அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இயேசு ஏன் விண்ணேற்றம் அடைந்தார்?
இயேசு உயிர்த்தேழுந்ததும், அவர் மீண்டும் வந்து, அவர் இறைபணியை தொடர்ந்தால், எத்தனை பேர் மனம் திருந்தி இருப்பார்கள் என கற்பனை செய்து பாருங்கள். அவர் மரணத்தை நேராக பார்த்த பரிசேயர்கள் கூட இயேசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருப்பார்கள்.
எனினும், இந்த உலகை மீட்க கடவுளின் திட்டம் இன்னும் மிக பெரியதாக இருந்தது, இயேசு இந்த உலகில் இருந்த பொழுது, அவர் மனிதனாகவே இருந்தார், தன்னை திவ்ய நற்கருணையில் சீடர்களுக்கு கொடுத்த பின்பு, இந்த அன்பளிப்பை உண்மையாக ஏற்று கொண்ட சீடர்கள் அனைவரும் மனித இயேசுவாக மாறுகிறார்கள்.அவரோடு நாம் அனைவரும் இணைகிறோம்.அவரின் இறைபணியில் இணைகிறோம்.
இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம், இயேசு விண்ணகத்திற்கு செல்லும் முன்பு, இயேசு சீடர்கள் அனைவரையும் ஆசிர்வதித்தார் - உங்களையும் சேர்த்து தான் -- இறைபணியை தொடர நீங்கள் அனைவரும் அழைக்கபடுகிறீர்கள்.  இந்த அதிகாரம் வழங்குதல், ஒவ்வொரு திருப்பலியில் இறுதியாக நிறைவேற்றபடுகிறது. இயேசு குருவானவர் மூலமாக, அனைவரும் அன்பு செய்து, இந்த உலகத்தில் மாறுதலை கொண்டு வர நமது கடவுள் தந்தை கொடுக்கிறார்.
மனிதர்களாக, இந்த உலகை மாற்ற நாம் முழு தகுதியில்லாமல் இருக்கிறோம். அதனால், இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை நமக்கு கொடுக்கிறார். நமது ஆவியை பரிசுத்த ஆவியோடு இணைத்து, கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். நமக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதே ஒரு கேள்வியாக இருக்க கூடாது, நாம் எவ்வளவு விருப்பத்தோடு இறை பணி செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். நமது நேரத்தை ஒதுக்கி , முயற்சி செய்து, நாம் கிறிஸ்துவின் கைகள் ஆகவும், கால்கள் ஆகவும், அவரின் குரலாக இந்த உலகில் இருப்பிர்களா?
இயேசு விண்ணகம் சென்று விட்டதால், நாம் அவரின் கைகளாக இருக்க வேண்டும், அவரின் குரலாக இந்த உலகில் இருக்க வேண்டும்.
இந்த உலகத்தில் சாத்தான் இருப்பதால், நீங்கள் சந்தோசமாக இல்லையா? கடவுள் இது மாதிரியான சூழ்நிலைகளுக்கு மிக பெரிய திட்டம் வைத்திருக்கிறார்.
உங்களுக்கு எதிரான அநிதியை நினைத்து வருந்துகிறிர்களா? தொலைகாட்சியில் நடைபெறும் ஒழுக்க கேட்டை நினைத்து வருந்துகிறீர்களா உங்கள் வேலையிடத்தில் அநீதியை நினைத்து வருத்தபடுகிறீர்களா?  அல்லது உங்கள் பங்கில் உள்ள பிரிவுகளை நினைத்தோ, உங்கள் தலைவர்களின் கீழ் தரமான நடவடிக்கைகள், உங்களை வருந்த செய்கிறதா? உங்களை விட இந்த சாத்தானின் செயல்களை கண்டு இயேசு அதிகம் வருந்துகிறார். அதற்கெல்லாம் திட்டம் வைத்திருக்கிறார். அவரோடு  இணைந்து, அதற்கெல்லாம் என்ன திட்டம் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். உங்கள் மூலம் அவர் என்ன செய்ய முடியும்?
இயேசு விண்ணகம் சென்றதை அடுத்து, பரிசுத்த ஆவியை நமக்கு அனுப்பினார், கடவுள் இந்த உலகை நம் மூலம் இறைபணி செய்ய பணிக்கிறார். முதலில் நம் வீட்டில், மேலும் அதே அன்பை, நம் பங்கிற்கும், இந்த உலகிற்கும் கடவுளின் அன்பை நாம் எடுத்து செல்ல வேண்டும்.
© 2019 by Terry A. Modica


Friday, May 17, 2019

மே 19 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே  19 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Ps 145:8-13
Revelation 21:1-5a
John 13:31-35
யோவான் நற்செய்தி

புதிய கட்டளை
31அவன் வெளியே போனபின் இயேசு
இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.

32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.

33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.

34ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

35
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்
 என்றார்.

மாட்சிமை மிக்க இறைபணி
நீங்கள் இறக்க போகும் தருணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால்,உங்கள் குடும்பத்தினருக்கு என்ன ஞானத்தை கொடுப்பீர்கள்? அவர்களுக்கு மிகவும் முக்கிய தேவையானது எது ?
இன்றைய ஞாயிறு நற்செய்தியில், இயேசுவிற்கு அவரின் நேரம் குறைவானது என தெரியும். முதல் வார்த்தை அந்த சீடர்களிடம் தந்தை கடவுளை புகழ்ந்து பேசுகிறார். அதே நேரத்தில், தானும் தந்தையே ஒன்று எனவும் சொல்கிறார். மேலும் அவர் தந்தையை போல "பிள்ளைகளே" என சொல்கிறார். இதன் மூலம் அவர் தந்தையுள்ளும், தந்தை இவருள்ளும் இருக்கிறார் என்பதை நமக்கு சொல்கிறார். மொத்தமாக இந்த வார்த்தைகள் நமக்கு குழப்பத்தை கொடுப்பது போல இருக்கிறது. மேலும் இதனை பணிவுடன் இயேசு செய்தார். அவர் இப்படி கூட சொல்லியிருக்கலாம். "எல்லோரும் கவனமாக கேட்டு கொள்ளுங்கள், நான் தெய்வம். கடவுள். என்னை ஆராதியுங்கள்" என்றும் சொல்லலாம். ஆனால், அவர் கடவுளின் மாட்சிமையை பெரிது படுத்தினார்.
கடவுளின் பிரசன்னத்தை, ஒளிரும் வெளிச்சம் பரவும் , எப்படி, அவரின் அன்பு, அவரின் மகிழ்ச்சி, அவரின் பரிசுத்தம், அவரின் அமைதி, அவரின் ஞானம், அவரின் புத்திசாலித்தனம், மேலும் இன்னும் பலவும், அவரின் மாட்சியில் குளிக்க விரும்பும் அனைவருக்கும் கொடுபார். நாம் கடவுளை மாட்சிபடுத்த, அவரின் மாட்சிமை நம் மூலம் வெளிப்பட்டு மீண்டும் கடவுளுக்கே திரும்பும். இதில் எத்தனை அருள் உங்கள் வாழ்வில் ஒளிர்கிறது?
தந்தை கடவுள் மற்றும் மகனிடையே உள்ள உறவை பற்றி பேசிய பின்பு, இயேசு இந்த உலகத்திற்கே தேவையான, மிகவும் முக்கியமான, விஷயத்தை நமக்கு சொல்கிறார். இயேசுவையும், கடவுளின் மாட்சிமையை நெருங்கி இணைய நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
தன்னலமின்றி, எப்பொழுது அன்பு மற்றவருக்கு கொடுக்கபடுகிறதோ, அப்பொழுது தான் அது உண்மையான அன்பாக இருக்கும். இயேசு தன சுய நலமின்றி, தன்னையே மரணத்திற்கு முழுமையாக கொடுத்தார். குருக்களோ, அல்லது, சீடர்களோ, அல்லது இயேசுவை பின் செல்பவர்கள், அனைவரும், முழுமையாக அன்புடன் அவரவர் இறைபணி செய்ய முடியும். அன்பில்லையெனில் அது முழுமையாகாது.
கடவுளின் மாட்சிமை என்பது, முழுமையான அன்பை, அதுவும், தன்னலமின்றி கொடுப்பது ஆகும். திருவெளிப்பாடு வாசகத்தில், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று இயேசுவின் ஈஸ்டர் காலத்தை பற்றிய வாசகமாக இருக்கிறது, ஆனால், நற்செய்தி வாசகமோ கிறிஸ்துவின் பாடுகளை பற்றி பேசுகிறது. ஈஸ்டர் காலத்தில் நாம் இருக்கும் பொழுது ஏன் இந்த நற்செய்தி வாசகம். ஏனெனில் இயேசு இன்னும் பாடுகளுக்கும், ஏமாற்றத்திற்கும், மரணத்திற்கும் தயாராகி கொண்டிருக்கிறார். ஏன்?
இன்றைய நற்செய்தியில், இயேசு அதே இறைபணியை கடவுளின் மாட்சிமையை எல்லோருக்கும் பகிர நம்மை அழைக்கிறார். இயேசு ஆரம்பித்த இறைபணியை, நாம் தொடர்ந்து செய்திட விரும்புகிறார். தியாகத்தோடு, ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இயேசு தான் உண்மையானவர் , அவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்து , நம்மோடு இன்னும் வாழ்கிறார் என்று எடுத்துரைப்போம்.
© 2019 by Terry A. Modica