Friday, May 30, 2008

ஜூன் 1, 2008 , நற்செய்தி , மறையுரை

ஜூன் 1, 2008 , நற்செய்தி , மறையுரை

ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 7

21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். 22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர். 23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன். 24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். 25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். 27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது. '

(www.arulvakku.com)



இன்றைய ஞாயிறு நற்செய்தியில், யேசு நாம் எப்படி அவருக்கு சீடராக இருக்க முடியும் என்று விளக்குகிறார். "என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்." யேசுவிடமிருந்து என்ன கற்று கொண்டீர்களோ அதனை செயல்படுத்துங்கள். அவர் நம்மிடையே தொடர்ந்து நற்செய்தி மூலமும், திருச்சபையின் வாயிலாகவும் நம்மிடையே பேசிகொண்டிருக்கிறார். நாம் அப்படியே நற்செய்தி வார்த்தகளை கேட்டு கொண்டு இருப்பவராக இருக்க முடியாது. நமது மீட்பு, நற்செய்தியைன் படியும், கடவுளின் திருவுளப்படியும் வாழ்வதிலும் தான் அடங்கியிருக்கிறது. நாம் யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளவர்கள் என்று கூறிகொண்டு, அவர் சொன்னபடி வாழவில்லையெனில், நாம் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று கூவிகொண்டு தான் இருக்கிறோம், அவர் பின் சென்று கடவுளோடு மோட்சத்தில் சேரபோவதில்லை.

யேசு குறிப்பிடுவது போல, நாம் செயல்படுத்த ஆரம்பித்தால், இறையரசின் உண்மைகளை, நமது ஒவ்வொரு நாளிலிலும் ஒன்றினைத்து வாழ்ந்து , நாம் இந்த உலகில் ஒரு வித்தியாசத்தை நாம் காட்ட முடியும். எந்த ஒரு போராட்டத்தையும் நாம் தாங்கிகொள்ள முடியும். எவ்வித வழக்கையும், சோதனைகளையும் நாம் தாண்டி வர முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் இறப்பிலும், அவரது பாவத்தை வென்ற உயிர்ப்பின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரின் ஆற்றலில் வாழ்கிறோம். மேலும் நாம் அவரின் சக்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த சக்தி இந்த உலகை வென்ற சக்தி ஆகும்.

ஆனால், நாம் யேசுவின் படிப்பினைகள் நம்மை மாற்ற நாம் அனுமதிக்கவில்லயெனில், நமது வாழ்வு, பல் பிரச்னைகளாழ் சூழ்ந்துள்ள போது, அவைகள் நமது அமைதியை, சந்தோசத்தை அழித்து விடும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வையும் அழித்து விடும். நாம் இந்த சோதனைகளிலிருந்து மீள , இந்த உலக பாடங்கள் சொல்வது போல, நாம் இந்த சோதனைகளிலிருந்து மீள வேண்டும். மேலும், கிறுஸ்துவின் செல்வாக்கும் நம்மிடம் மெதுவாக வந்து அடையும்.

மேலும், யேசுவின் படிப்பினைகளை இந்த உலகிற்கு எடுத்து சொல்லவில்லையெனில், மற்றவர்கள் இந்த உலகின் அநீதிகள், நிந்தனைகளில் மாட்டி கொண்டு துன்புறும்போது, அதனால், அவர்கள் அழிவிறும்போது, நாமும் அந்த துன்பத்திற்கு ஒரு காரணமாகிவிடுவோம். எந்த ஒரு செயலும் , நற்செய்தி அறிவ்க்காமல் இருக்கும்போதும், யேசுவின் படிப்பினைகளை நாம் உலகிற்கு சொல்லாமல் இருக்கும்போதும், அவர்களின் துன்பத்திற்கு காரணமாகிவிடுவோம். இது மோட்சத்தின் வழி அல்ல. இந்த அக்கறையின்மை மிக பெரிய பாவமாகும். நாம் இறந்த பின்பு, மோட்சத்திற்கு செல்ல, முதலில், யேசுவோடு அவரது சிலுவைக்கு செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் நாம் அக்கறை கொண்டு, அவர்களோடு சேர்ந்து சாத்தானுக்கு எதிராக நின்று, நாம் யேசுவோடு மற்றவர்களை இணைக்க வேண்டும்.
நாம் யேசுவிற்காக, யேசுவோடு சேர்ந்து பல நல்ல செயல்கள் செய்யும்போது, பல சோதனைகள் நம்மை தாக்கும். ஆனால், நாம் வீழ்ந்து விட மாட்டோம். மேலும், இன்னும் அதிக ஆற்றலுடன் வளர்வோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: