Friday, July 4, 2008

ஜூலை 6 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஜூலை 6 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:


Zec 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Rom 8:9, 11-13
Matt 11:25-30

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 11

25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். 26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். 27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார். 28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.

(thanks to www.arulvakku.com)
மறையுரை

பல வேலைகள் செய்யும்போதும், பங்கு , கோவில் சேவைகளில் ஈடுபடும்போதும், யேசுவை மற்றவர்களுக்கு எடுத்து செல்லும்போதும், உங்களுக்கு பாரச்சுமை அழுத்துகிறதா? வேலை சுமை அதிகமாயுள்ளதா?

நமக்கு அதிக போராட்டங்களை சந்திக்கிறோம், பல சிலுவைகளை சுமக்கிறோம்.பலருக்கு உதவி செய்ய வேண்டியுள்ளது. இதனால், நமக்கு பல வேலை சுமையாகிறது, அதனால், நாம் மிகவும் அயர்ச்சி அடைகிறோம். இருந்தாலும், யேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது " அவர் நம்மிடம் செய்ய சொல்லும் செயல்கள் யாவும், அவ்வளவு பளுவானது அல்ல.

அது எப்படி முடியும்?

வாழ்க்கையில் உள்ள பொறுப்புகள், வேலைகள் நம்மை சோர்வடைய செய்யும். ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட நாம் அதிகமாக செய்கிறோம். அல்லது, யேசு கொடுத்த சிலுவைகளிலிருந்து தப்பிக்க, நமது சொந்த வேலைகளை இழுத்து போட்டு செய்கிறோம். நமது வேலை பளு நம்மை ஆற்றல் இல்லாமல் செய்தால், கடவுள் நம்மை சோர்வடைய செய்கிரார். ஏனெனில், அவர் நமக்கு எச்சரிக்கை செய்கிறார்: உங்கள் வேலை பளுவை குறைத்து கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை சுலபமானதாக ஆக்கி கொள்ளுங்கள். மாற்றத்தை உண்டாக்குங்கள்!. செபங்களில் அதிக நேரம் செலவிடுங்கள். என்கிறார் கடவுள். இது உங்களுக்கு கோபத்தையும், ஆங்காரத்தையும் தூண்டுமெனில், நமது சுய நலங்கள் தான், நமது வாழ்வை சுல்பமானதாக்கி கொள்ள தூன்டுகின்றன ஆனால், அதுவே நமக்கு மிகவும் கடினமாக மாறிவிடுகிறது என கடவுள் நமக்கு எடுத்து சொல்கிறார்.


கடவுளின் சேவையை ஏற்று கொள்வதற்கு முன், நாம் நம்முடைய தேவைகளை கவனித்து கொள்ள வேண்டும். யேசுவின் சுமை நாம் ஏற்று கொள்ளாமல், மற்றவர்களுக்கு தள்ளி விட ஆசைபட்டால், அவரின் சுமை நமக்கு பளுவானதாக இருக்கும். யேசுவோடு சேர்ந்து, சேவை செய்திட நம்மால் எவ்வள்வு முடியுமோ, அவ்வளவு தான் அவர் நமக்கு கொடுப்பார். அப்போது தான், நமது கோபமும், ஆற்றாமையும், தானாக நீங்கிவிடும்.மேலும், நாமும், பரிசுத்த பெரும் ஆனந்தம், திருப்தி அடைவோம். ஏனினில், யேசுவின் ஆற்றலும், திறனும், நம்ம் சேவை பளுவோடு சேர்ந்து விடுகிறது.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: