Friday, February 20, 2009

பிப்ரவரி 22, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 22, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 7 வது ஞாயிறு

Is 43:18-19, 21-22, 24b-25
Ps 41:2-5, 13-14
2 Cor 1:18-22
Mark 2:1-12

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 2
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?9 முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,11 ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார்.12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ஒரு முடவனை வீட்டின் கூரை மேல் ஓட்டை போட்டு கீழ் இறக்கி யேசுவிடம் கொண்டு சென்றதையும், அவரின் நண்பர்களால், அவர் யேசுவிடமிருந்து குணம் பெற்றார் என்பதை பார்க்கிறோம். .

கடவுள் நாமெல்லாறும் கடினமான வாழ்வை சந்தித்து அதில் உழன்று வரவேண்டும் என எப்போதுமே நினைப்பதில்லை. மேலும், கிறிஸ்துவ குழுவின் மூலம் நமது ஜெபங்களுக்கு பதிலும் அருளும் தருகிறார். மற்றவர்கள் நம்மை கட்டி பிடிக்கும்போது, யேசு நம்மை அவர்கள் மூலம் அரவணைக்கிறார். நாம் யேசுவை அவரின் திவ்ய நற்கருணையின் மூலம் இந்த பூமியில் அறிந்து அனுபவிக்கிறோம். அது எப்படியென்றால், தூரத்தில் இருப்பவர்களை நாம் எப்படி போன் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் நெருங்கி இருக்கிறோமோ அப்படி கிறிஸ்துவை, நமது பங்கு குழுவினரிடமிருன்ந்தும், நற்கருணை வழிபாடு மூலமாக அவரோடு நெருங்கி இருக்கிறோம்.

நாம் விசுவாசத்தில் மிகவும் விரைவில் முன்னேற்றம் அடைகிறோம். மிகவும் ஆழமாக குணமடைகிறோம். மேலும், எப்படி கடவுளை விசுவசிப்பது என்பதனை கற்று அறிகிறோம். நாம் அவரை தேடுவதிலும், அவரை கண்டடைவதிலும், கிறிஸ்துவின் நண்பர்களின் மூலம் பெறும் அன்பிலும் நாம் மேலும் வளர்வோம். இதனையெல்லாம் அடைவதற்கு, நாம் நமக்கு உள்ளதெல்லாம் போதும், என்ற சுய கொளரவத்தை விட்டு, மற்றவர்கள் நமக்கு என்ன கொடுக்க விருபுகிறார்களோ, அதனை நாம் ஏற்கவேன்டும்.

உங்களை பாயில் வைத்து யேசுவிடம் தூக்கிகொண்டு போக, நெருங்கிய நான்கு நன்பர்கள் இருக்கிறார்களா? அப்படிபட்ட நன்பர்களை கண்டறிய, நாம் பங்கு குழுவுடன் சேர்ந்து, அவர்களோடு இறைபணியிலும், சமூக பணியிலும் ஈடுபட வேண்டும். உங்கள் பங்கில், நிச்சயம் நிறைய வாய்ப்புகள் இருக்கும், திருப்பலி திருப்பணிகள்,சமூக பணிகள் , மற்றும் பலருடன் சேர்ந்து சந்தோசமாக பல பணிகளில் ஈடுபடலாம்.

எந்த ஒரு குழுவிலும் இல்லாமல், நாம் கடவுளோடு நல்ல உறவுடன் இருப்பதாக சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நல்ல விசுவாசம் கொண்ட குழுவோடு , பல பேருடன் சேர்ந்து கடவுளை அடைவதில் தான் நாம் ஈடுபட வேன்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: