Friday, November 11, 2011

நவம்பர் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Proverbs 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30
தாலந்து உவமை
(லூக் 19:11 - 27)
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே qபெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்

இன்றைய நற்செய்தியில், நமக்கு கடவுள் கொடுத்த திறமைகளை, அன்பளிப்புகளை, புதைத்துவிட வேண்டாம் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. அப்படி செய்தால், "பொல்லாதவர்களாகவும், சோம்பேறியாகவும்" நாம் இருப்போம்.

நாம் எல்லோருமே, சில புதைக்கப்பட்ட திறமைகளை கொண்டுள்ளோம். இறையரசிற்காக இன்னும் நிறைய நாம் செய்யலாம், ஆனால், நாமோ "என்னால் முடியாது, எனக்கு போதுமான திறமைகள் இல்லை" அல்லது "வேறு யாராவது என்னை விட நன்றாக செய்ய முடியும்" அல்லது "கடவுள் எனக்கு இதனை செய் என்று சொல்ல முடியாது " அல்லது " எனக்கு நேரமில்லை, பணமில்லை, எப்படி செய்வது என்று தெரியாது, உடல் நலமில்லை" அல்லது " நாம் ரிடையர் ஆகிவிட்டேன், என்னுடைய சுய தேவைகளை செய்து கொள்ள வேண்டும்" என்றும் நாம் சொல்கிறோம்.
கடவுள் கொடுத்த எதையும் வீனாக்க நாம் எந்த ஒரு சாக்கு போக்கையும் சொல்ல முடியாது, ஆனால், இது அடிக்கடி நடக்கிறது, ஏனெனில், நமது திறமைகள் இறையர்சிற்காக, திருச்சபைக்காகவும், கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொண்டு செல்லவும் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை.
உங்கள் அன்பளிப்புகளும், திறமகளும் உங்களை எங்கே இட்டு செல்கிறது? இறையரசிற்கு உங்கள் திறமைகள் உபயோகபடாமல் இருக்க எது உங்களை தடுக்கிறது? இது தான் சரியான தருணம்/சமயம், உங்கள் திறமைகளை கடவுளின் திட்டத்திற்காக நாம் களமிறக்க வேண்டும்.
இறையர்சிற்காக நாம் செய்ய வேண்டிய அளவிற்கு, நமக்கு திறமைகள் உள்ளன. ஏனெனில், அந்த திறமைகள் கடவுளிடமிருந்து வருகிறது. நாமெல்லாம் அவருடைய சேவகர்கள், கடவுள் தான் நம்மால் என்ன செய்ய முடியும் என்று நிர்ணயிப்பவர். படுத்த படுக்கையாக இருப்பவர்கள் கூட கடவுளுக்காக செய்ய வேண்டிய வேளைகள், அதனை, அவர்கள் வேதனைகளோடு, க்ஷ்டட்தோடு செய்ய முடியும். அடிக்கடி, இவைகள் தான் மிகவும் சக்தி வாய்ந்த ஜெபமாகவும், இவ்வுலகில் நாம் பெறும், ஞானமாகவும் அமையும்.

"கடவுள் நன்மை செய்பவராக இருந்தால், ஏன் அவர் சாத்தானை , கெட்ட செயல்களை இவ்வுலகில் அனுமதிக்கிறார்? " என்ற கேள்வியை சிலர் நம்மிடம் கேட்டிருக்கலாம். அதற்கு பதில்: "கடவுள் இதனை அனுமதிக்கவில்லை, நாம் தான் அனுமதிக்கிறோம்!, நாம் கிறிஸ்து உடலின் ஒரு அங்கமாக இவ்வுலகில் இருக்கிறோம். அவருடைய கைகள், கால்களாக, குரலாக இருக்கிறோம். இயேசு உண்மையிலே இவ்வுலகை மோட்சமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார், ஆனால் நம்மில் பலர், நமது திறமைகளை புதைத்து விட்டு, எந்த வித்தியாசத்தை இவ்வுலகில் காட்ட வேண்டுமோ, அதை விட்டு விட்டு, நாம் சோம்பேறிகளாக இருக்கிறோம்.


© 2011 by Terry A. Modica

No comments: