பிப்ரவரி 15
2015 ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொதுகால
6ம் ஞாயிறு
Lev
13:1-2, 44-46
Ps
32:7, 1-2, 5, 11
1
Cor 10:31--11:1
Mark
1:40-45
மாற்கு
நற்செய்தி
தொழுநோயாளர்
நலமடைதல்
(மத் 8:1 - 4; லூக் 5:12 - 16)
(மத் 8:1 - 4; லூக் 5:12 - 16)
40ஒரு
நாள்
தொழுநோயாளர்
ஒருவர்
இயேசுவிடம்
வந்து,
' நீர்
விரும்பினால்
எனது
நோயை
நீக்க
உம்மால்
முடியும்
'
என்று
முழந்தாள்
படியிட்டு
வேண்டினார்.41இயேசு
அவர்மீது
பரிவு
கொண்டு
தமது
கையை
நீட்டி
அவரைத்
தொட்டு
அவரிடம்,'
நான்
விரும்புகிறேன்,
உமது
நோய்
நீங்குக!
'என்றார்.42உடனே
தொழுநோய்
அவரைவிட்டு
நீங்க,
அவர்
நலமடைந்தார்.43பிறகு
அவரிடம்,'
இதை
யாருக்கும்
சொல்ல
வேண்டாம்,
கவனமாய்
இரும்.
ஆனால்
நீர்
போய்
உம்மைக்
குருவிடம்
காட்டி,
நோய்
நீங்கியதற்காக
மோசே
கட்டளையிட்டுள்ள
காணிக்கையைச்
செலுத்தும்.44நீர்
நலமடைந்துள்ளீர்
என்பதற்கு
அது
சான்றாகும்
'என்று
மிகக்
கண்டிப்பாகக்
கூறி
உடனடியாக
அவரை
அனுப்பி
விட்டார்.45ஆனால்
அவர்
புறப்பட்டுச்
சென்று
இந்தச்
செய்தியை
எங்கும்
அறிவித்துப்
பரப்பிவந்தார்.
அதனால்
இயேசு
எந்த
நகருக்குள்ளும்
வெளிப்படையாய்ச்
செல்ல
முடியவில்லை;
வெளியே
தனிமையான
இடங்களில்
தங்கிவந்தார்.
எனினும்
மக்கள்
எல்லா
இடங்களிலிருந்தும்
அவரிடம்
வந்து
கொண்டிருந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
“எல்லாவற்றையும்
கடவுளுடைய
மாட்சிக்காகவே
செய்யுங்கள்"
என்று
இன்றைய
இரண்டாவது
வாசகத்தில்
வரும்
வார்த்தைகளை
நமது
படுக்கை
அறையில்
வைக்க
வேண்டிய
வாசகம்.
தூங்கி
எழுந்த
வுடன்
நாம்
பார்க்க
வேண்டிய
வாசகம்
எல்லாமே!
பல்
விளக்குவது
கூட
கடவுளின்
மட்சிமைக்காக,
உங்கள்
குடும்பத்தினருக்கு
"காலை
வணக்கம்
" கூறுவதும்
கடவுளை
புகழத்தான்!.
திருப்பலிக்கு
செல்வதும்
கடவுளின்
மாட்சிமைக்காக
தான்.
(வேறு
மாதிரி
சொல்வதானால்,
கோவிலுக்கு
செல்வதால்,
அதிலிருந்து
நாம்
ஏதாவது
பெற்று
வரலாம்
என்று
அர்த்தமில்லை
) . கடவுளின்
மாட்சிமைக்காக
உங்கள்
செயல்களை
செய்யுங்கள்.
கடவுளின்
மாட்சிமைக்காக
மெதுவாக
வண்டியை
ஒட்டுங்கள்.
பொருட்களை
வாங்கும்போதும்,
உணவு
உண்ணும்
பொழுதும்
கடவுளை
புகழுங்கள்.
திருச்சபைக்கு
தேவைகளுக்கு
கொடுத்திடுங்கள்,
அதன்
மூலம்
கடவுளின்
மாட்சியை
உலகிற்கு
தெரிவியுங்கள்.
கடவுள்
என்ன
எல்லாம்
கொடுக்க
விரும்புகிறாரோ
அதனை
பெற்றிடுங்கள்.
(உங்களுக்கு
கிடைக்கும்
பாராட்டுக்கள்,
சம்பாதிக்கும்
பணம்,
உங்கள்
ஜெபத்தால்
கிடைக்கும்
பலன்கள்,
நல்ல
பரிசுகள்)
அனைத்தும்
அவரிடமிருந்து
பெற்றிடுங்கள்.
எல்லாமே
கடவுளின்
மாட்சிமைக்காக
தான்.
நம்
காலை
ஜெபத்தில்
இந்த
ஜெபம்
இருக்க
வேண்டும்:
“ பரிசுத்த
ஆவியே,
இன்று
செய்யும்
அனைத்தும்
கடவுளின்
மாட்சிமைக்காக
செய்ய
எனக்கு
உதவி
செய்யுங்கள்!”
இந்த
ஜெபத்தை நாம் தினமும் ஜெபிக்கும்
வழக்கம் கொண்டால்,
கடவுளின்
மாட்சிமை அவர் புகழ் என்றென்றும்
நம் வாழ்வின் குண நலன்களோடு
ஒன்றி போய்விடும். நாம்
செய்யும் ஒவ்வொரு செயலும்,
“கடவுளின்
மாட்சிமைக்காக " என்ற
லென்ஸ் மூலம் செய்தால்,
நாம் எல்லாவிதமான
பாவங்களை தவிர்க்கும் ஆற்றலை
பெற்றிடுவோம். நம்
அனுதின ஒவ்வொரு செயல்களையும்
அது புனித படுத்துகிறது.
அடிக்கடி,
நமது சாதாராண
வாழ்க்கை வேலைகளை , சமய
, திருச்சபை
செயல்களோடு பிரித்து பார்க்கிறோம்.
கோவிலுக்கு
செல்லும் நாட்களில்,
நாம் சில
நேரங்களில் போகாமல் இருந்து
விடுகிறோம். ஜெபம்
செய்ய வேண்டும் என்று தோன்றும்
பொழுது, அப்போதைய
செயல்களை நாம் விட்டு விட்டு
ஜெபம் செய்கிறோம்.
குருவானவர்களும்,
சமய சார்புள்ளவர்களும்
தான் எப்பொழுதும் வாழ்க்கையில்
முழுதும் பக்தியோடு இருப்பவர்கள்
என்று நாம் நினைத்து கொள்கிறோம்.
ஏன் ?
“கடவுளின்
மாட்சிமையை " ஏன்
நாம் பக்தி வழிபாடுகளில்
மட்டும் நிறுத்தி விடுகிறோம்
? -- திருப்பலிக்கு
செல்வது, பக்தி
வழிபாடுகளில் கலந்து கொள்வது,
இறை
சேவை புரிவது , மற்றும்
பல பக்தி செயல்கள்.
? ஒவ்வொரு
நொடியும், நாம்
கடவுளை , அவரின்
விருப்பத்திற்கு இணங்க ,
நடந்து
கொண்டால் என்ன ?
©
2015 by Terry A. Modica