Showing posts with label இயேசுவின் சீடர். Show all posts
Showing posts with label இயேசுவின் சீடர். Show all posts

Friday, September 6, 2013

செப்டம்பர் 8, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 8, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 23ம் ஞாயிறு

Wisdom 9:13-18b
Psalm 90:(1) 3-6, 12-17
Philemon 9-10, 12-17
Luke 14:25-33

லூக்கா நற்செய்தி

அதிகாரம்: 14:25-33

              இயேசுவின் சீடர் யார்
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
(thanks to www.arulvakku.com)
உங்கள் வாழ்க்கையின் கடவுளின் உறவை விட எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அதனை தான் யேசு. இந்த வார நற்செய்தியில் நாம்  கவணிக்க வேண்டிய விசயமாக நமக்கு சுட்டி காட்டுகிறார். எந்த வித நண்பர்களை? எந்த வேலையை? எந்த சோதனைகளை? எந்த சொத்துக்களை? எந்த நோக்கத்தை? எந்த செயல்களில்? நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

எந்த விதமான சிலுவைகளை தூக்கி எறிய ஆசைபடுகிறீர்கள்? அதிலிருந்து நீங்கள் ஒதுங்க நினைப்பதால், இயேசுவை புறந்தள்ள வேண்டுமா? (இதற்காக எந்த தியாகங்களை நீங்கள் செய்ய விரும்பவில்லை? )
இயேசுவை போல மாறி, அவரிடமிருந்து கற்று, அவராக மாற முற்படும்போது, இயேசுவின் சீடர்களாக முழு அர்ப்பணிப்புடன், இருக்க முடியும் என்று கூறுகிறார்.

இதனை மாறாக சொல்ல வேண்டுமானால், நல்ல முக்கிய குறிக்கோளுடன், நாம் வாழ்க்கைய தொடங்க முடியும். ஆனால், கிறிஸ்து உடன்  உள்ள உறவு நம் முதன்மை குறிக்கோளாக இல்லை எனில், நாம் கிறிஸ்துவின் வழிகாட்டுதலையும், அவரின் ஆசிர்வாதத்தையும் , ஆச்சரியங்களையும் நாம் இழந்து விடுவோம். நாம் இவ்வுலகில் செய்யும் சாதனைகளை எல்லாம், மிக சாதாரணமானவை, ஏனெனில், இறையரசில், இதனை விட மிக பெரிய விசயம் நமக்காக காத்திருக்கிறது, நம் கற்பணைக்கு எட்டாத அளவில் அது இருக்கும்.

சீடர் என்பவர் ஒரு மாணவர் ஆவர். இயேசுவிடமிருந்து நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்வது என்று கற்று கொள்கிறோம். அதனால், நாம் சிலுவையை ஏற்றுகொள்ள தயாராகவும் இருக்க வேண்டும். நிபந்தனையற்ற, மன்னிப்புடன் கூடிய அன்பின் வாழ்வை எவ்வாறு சந்தோசமாக வாழ்வது என்று இயேசு நமக்கு கற்று கொடுக்கிறார். மேலும், பரிசுத்த வாழ்வின் வரையறைக்குள் நாம் வாழ , யாரும் நம்மை கெடுத்துவிடாத படி, நாம் ஒரு வேலி போட்டு கொள்ள  நாம் இயேசுவிடமிருந்து கற்று கொள்கிறோம். அதன் மூலம், நமது பரிசுத்த வாழ்வு இன்னும் வளரும், அது நமக்கு சிலுவையாக கூட இருக்க முடியும்.

முழுமையாக கிறிஸ்துவின் பின் பற்றி, அவர் போல மாறுவதற்கு, நமக்கு தேவையான ஆற்றலை, கவனத்தை பின் பற்றிட, நாம் முழு முயற்சியுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதன் மூலம் நாம் சிலுவையை ஏற்று கொள்ள, அதனை அரவணைத்து கொள்ள, நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அதன் மூலம், நாம் சிலுவையை ஏற்று கொண்டு, இயேசுவின் சிலுவையோடு இனைந்து, அவரின் ஆற்றலோடு இனைவோம். இந்த நெருங்கிய தொடர்பை நாம் பெறாத பொழுது, நாம் தளர்ந்து விழுந்து விடுகிறோம். சிலுவை பாரம் தாங்காமல் விழுந்து விடுகிறோம். ஆனால், தியாகம் செய்ய நாம் தயாராக இருந்தால், மற்றவர்கள் மேல் உள்ள அன்பினால், இயேசு செய்தது போல,  நாம் கிறிஸ்துவோடு இனைந்து,  அவரின் அன்பை முழுமையாக பெறுவோம். இது திருப்தியான வாழ்வை நமக்கு கொடுக்கும்.

© 2013 by Terry A. Modica