மார்ச் 17 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Genesis 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Philippians 3:17--4:1
Luke 9:28b-36
Ps 27:1, 7-9, 13-14
Philippians 3:17--4:1
Luke 9:28b-36
லூக்கா நற்செய்தி
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1-8; மாற்
9:2-8)
28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய
எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு
இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். 29அவர்
வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய
ஆடையும் வெண்மையாய் மின்னியது. 30மோசே, எலியா
என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். 31மாட்சியுடன்
தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும்
தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும்
அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். 33அவ்விருவரும்
அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு
இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம்
இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக
மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று
தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
34இவற்றை அவர்
சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம்
அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். 35அந்த
மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான்
தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று
ஒரு குரல் ஒலித்தது.✠
36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு
மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும்
சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இருளை அகற்றும் ஒளி
http://www.gnm-media.org/luke-9-light-in-our-darkness/
இன்றைய நற்செய்தியில் இயேசு புதிய ஒளி வீசும் வெண்மையுடன் வெளிபடுத்தியதை
பார்க்கறோம், அது தான் அவரின் உண்மையான தோற்றம். மேலும், தந்தை கடவுள் , “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச்
செவிசாயுங்கள்”, சொல்வதை பார்க்கிறோம்.
நாம் ஒவ்வொரு முறையும் இயேசுவை அவரின் வார்த்தைகளை கேட்கும் பொழுதும், மேலும் பரிசுத்த ஆவியின் ஆற்றலை பெற்று நாம் கிறிஸ்துவை முழுதுமாய் அனுபவிப்போம்.
இயேசுவின் வார்த்தைகளை
கேட்கும் போது, இதுவரை யாருமே பார்க்காத, புதிதாக உருவாக்கப்பட்ட அந்த
வெளிச்சத்தை, நாம் பெற்று , நம்மில்
இன்னும் கொஞ்சம் இருக்கும் இருளும் ஓடி போய் விடும். அதன் பிறகு, நம்மை சுற்றி
உள்ளவர்களும் அந்த ஒளியை பெறுவார்கள். நம் செயல்கள் மூலம், நமது இறக்கம் மூலம் ,
மன்னிப்பின் மூலம் அவர்கள் நம்மிடமிருந்து அந்த வெளிச்சத்தை பெறுவார்கள். இது தான்
நம் மூலம் மனம் மாற்றுதல்!
தவக்காலத்தில் தான் கிறிஸ்து
நமக்கு தேவை என அதிகமாக ஒருமுகபடுத்தி, நம் இருளில் அவரின் ஒளி பட வாய்ப்பு
கொடுக்கும் காலம். நம் மனந்திருந்தி அவரின் ஒளியில் நம்மை நுழைத்து கொண்டால், நாம்
கிறிஸ்துவின் ஒளி மாற்றத்தை நம்மில் பரவ அனுமதித்தால், (நம் மனமாற்றம் மூலம்),
மன்னிப்பை தேடி பெறுதல், பரிசுத்த ஆவியை நாடி நம் மனமாற்றம் பெற சக்தியை கொடுக்க
வேண்டுவோம். அதன் மூலம் நாமும் கிறிஸ்துவை போல மாறுவோம், அவரோடு இணைந்து இன்னும்
பிரகாசமாக ஒளிர்வோம். மேலும், அவரின் இறைபணியில் இந்த உலகை மீட்க நாமும்
இணைகிறோம். இந்த இறைபணியில் சில கஷ்டங்கள் இருந்தாலும், பெரிய வெள்ளியின் வலிக்கு
பிறகு, ஈஸ்டர் எப்பொழுதுமே இருக்கும்.
சோதனையிலும்
தியாகத்திலும் -- நமது சிலுவைகள் -- நமது பரிசுத்தம் இந்த உலகை மாற்றுகிறது.
இயேசுவை கல்வாரி வரை பின் தொடர தைரியமாக இருகிறீர்களா? நமக்கு ஏற்படும் சோதனைகள் ,
அவரின் இரத்தம் மீண்டும் இங்கே சிந்துகிறது. நமது வலிகள் இயேசுவின் வலிகள். நாம்
ஏற்கனவே இயேசுவோடு சிலுவையில் இருக்கிறோம்.! பின் ஏன் நம்மை ஏமாத்தியவர்களையும்,
காலை வாரியவர்களையும் மன்னித்து, அவர்களின் நலனுக்காக, இயேசுவோடு நெருக்கமாக இருக்க
முடியாது?
நம்மிடம் அன்பு
பாராட்டாதவர்களிடம் அன்பு கொள்வோம், நம்மை அவமதிப்பவர்களை மன்னிப்போம் மேலும்,
சாத்தானை விரட்டி இறையரசை இங்கே தொடர செய்வோம். கிறிஸ்துவின் ஒளியை , இங்கே
இருளில் இருப்பவர்களுக்கு வெளிப்படுத்துவோம்.
© 2019 by Terry A. Modica