மே 1, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 2ம் ஞாயிறு
Acts 2:42-47
Ps 118:1-4, 13-15, 22-24
1 Peter 1:3-9
John 20:19-31
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 20
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)
ஈஸ்டரை அனுபவித்து வாழ்வது என்பதற்கு அர்த்தம் என்ன? நாமெல்லாம் ஈஸ்டர் மக்கள், ஏனெனில், இயேசு சிலுவை மரணத்திலிருந்து எழுந்து வந்து விட்டார் என்பது தெரிந்து நாம் கொண்டாடுகிறோம். இருந்தாலும், எப்பொழுதுமே "அல்லேலூயா" என்று மகிழ்ந்து பாடுவதில்லை. கொண்டாட்டத்தை எப்பொழுது நாம் உணர்வதில்லை- திருப்பலியிலும், வெளியிலும் நமது ஈஸ்டர் சந்தோசம் , மற்றவர்களின் மண மாற்றத்திற்கு உதவியாக இருக்கிறதா?
நமது சிலுவைகளினால் உண்டான பெரிய வெள்ளியை ஒரு முடிவுக்கு நம்மால் கொண்டு வர முடியவில்லை.
இன்றைய இரண்டாவது வாசகம் , ஈஸ்டர் அனுபவத்தினால் நாம் எப்படி உணரவேண்டும், நமது எண்ணம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறது: சொல்லமுடியாத , அளவிட முடியாத சந்தோசத்துடனும், மகிழ்வுடனும் இந்த மகிழ்வை நாம் கொண்டாட வேண்டும். ஆனால் இது எப்படி நடந்து கொண்டிருக்கிறது.
நமக்கு நடக்கும் சிலுவை முடிவுக்கு வரும் பொழுது நாம் சந்தோசமடைவதில்லை, ஆனால், கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்து, நமக்கு மீட்பை கொடுத்து, அவரது வாழ்வில் நம்மை இணைத்துள்ளார் என்பதை நாம் அறிந்து நாம் வெற்றி பெற்றதாக சந்தோசமடைகிறோம், ஆனந்தமடைகிறோஓம். மேலும், நாம் இறுதி வெற்றியை பெற்றுவிட்டோம் என்பதை அறிந்து இன்னும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அந்த வெற்றியின் மூலம், நாம் அளவற்ற அன்பும், நித்திய வாழ்வை அடைகிறோம், மேலும், இந்த அன்பளிப்பு என்றுமே அழியாதது, என்பதையும் நாம் அறிகிறோம், அது கடவுளால் பாதுகாக்கப்படுகிறது, ஏனெனில், நாம் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளதால், அந்த அன்பளிப்பை, நாம் முன்னரே பெற்றுவிடுகிறோம்.
"நம்பிக்கையின்" உண்மையான விளக்கத்தை நாம் தெரிந்து கொண்ட பின்பு நமது சந்தோசம் இன்னும் அதிகமாகிறது. நம்பிக்கை என்பது ஆசைபடுவதில்லை , அதற்கு மாறாக, பின்னாளில் நிச்சயம் நடக்கபோவதைதான் நாம் நம்பிக்கை என்கிறோம்.
பெரும்பாலான கத்தோலிக்கர்கள், அவர்களின் மீட்பை இழந்து விடுவோம் என்று பயம் கொள்கின்றனர். ஏனெனில், அவர்களை அவர்களே நம்புவதில்லை. இயேசுவிடமிருந்து இப்பொழுதிலிருந்து நமது மரணம் வரை அகன்று சென்றுவிடுவோம் என்ற பயத்துடன் உள்ளோம். நீங்கள் இதற்காக கவலைபட்டீர்களானால்: நீங்கள் கஷ்டப்படும் நேரங்களிலும், நீங்கள் கடவுளிடம் செல்வீர்களா? அல்லது அவரை விட்டு ஒதுங்கி செல்கிறீர்களா?
நாம் கடவுள் மேல் கோபம் கொண்டாலும், நாம் அவர் அருகில் தான் இருக்கிறோம். நாம் கடவுளை இவ்வளவு நம்பியும், நம்மை கைவிட்டது போல நாம் அனுமானிக்கிறோம், அதனால் அவர் மேல் கோபம் கொள்கிறோம். அவர் மேல் விசுவாசம் இல்லாமல் இல்லை. நமக்கு உண்டான சோதனைகளின் மூலம், நமது விசுவாசம் இன்னும் பலமடைகிறது. ஈஸ்டர் மக்கலாகிய நாம், நமது துன்பங்கள் எல்லாம் தற்காலிகமானவை என்பதை அறிந்து, நித்திய வாழ்வின் மகிழ்ச்சியில் நாம் இனைவோம் என்று நம்பிக்கை கொள்வோம். இதனை தான் நாம் சிலுவை சுமந்தாலும், இன்னும் கொண்டாடிகொண்டிருக்கிறோம்.
© 2011 by Terry A. Modica
Showing posts with label ஈஸ்டர் மக்கள் அல்லேலூயா. Show all posts
Showing posts with label ஈஸ்டர் மக்கள் அல்லேலூயா. Show all posts
Saturday, April 30, 2011
Subscribe to:
Posts (Atom)