Showing posts with label உன் வழியில் செல். Show all posts
Showing posts with label உன் வழியில் செல். Show all posts

Saturday, October 27, 2018

அக்டோபர் 28 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


அக்டோபர் 28 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Jeremiah 31:7-9
Ps 126:1-6
Hebrews 5:1-6
Mark 10:46-52
மாற்கு நற்செய்தி
பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்
(
மத் 20:29-34; லூக் 18:35-43)
46இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

47நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்என்று கத்தத் தொடங்கினார்.

48பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

49இயேசு நின்று
அவரைக் கூப்பிடுங்கள்
 என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்என்றார்கள்.

50அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.

51இயேசு அவரைப் பார்த்து
உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?”
என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்என்றார்.

52இயேசு அவரிடம்
நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று
 என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
(thanks to www.arulvakku.com)
தெய்வீக வாய்ப்புகளை அதிகம் பயன் படுத்தி கொள்ள முயல்வது
இயேசு நம் வாழ்வை தொட்ட பின்பு -- நாம் கேட்ட ஜெபத்திற்கு பதில் கிடைப்பது, அல்லது, நம் நோய்களுக்கு குனமளிப்பது, அல்லது, நம் வாழ்வை மாற்ற கூடிய ஞானம் கொடுத்தார் என்றால் -- நாம் அடுத்து என்ன செய்வோம்? தெய்வீக அருளால் நம் வாழ்வு மாற்றமடைந்துள்ளது.  இந்த புதிய வாய்ப்பை நாம் நன்றாக பயன்படுத்தி கொள்வோமா ? இல்லையா ?
கடவுள் நம்மை வேறு வழியில் செல்ல சொல்லவில்லை, அல்லது அவரிடம் பேரம் பேச கூட  சொல்லவில்லை. "கடவுளே என்னை குனமாக்கினால், நான் தினமும் திருப்பலிக்கு செல்வேன்" என்று வேண்ட சொல்லவில்லை
இன்றைய நற்செய்தியில் பர்திமேயுக்கு சொன்னது போல,   "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று போகலாம் என்கிறார். எங்கே போவது?

சில நேரங்களில், அவருடைய குறிப்புகள் நமக்கு சில விசயங்களை சொல்லும். சிலர் பாவங்களை குணமாக்கிய பின்பு, "போ இனிமேல் பாவம் செய்யாதே " என்கிறார். எல்லாம் சரி, எங்கே போவது ?
நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் முக்கியமானது. நாம் எங்கே செல்கிறோம், அடுத்து என்ன செய்ய இருக்கிறோம். என்பது, அதன் விளைவு பல மடங்காகும். (ஆசிர்வதாமாக இருந்தாலும் சரி அல்லது அழிவாக இருந்தாலும் சரி ) , நம்மால் என்ன நடக்க போகிறது என்று நம்மால் கணித்து சொல்ல முடியாது. இயேசு இதனை பயன்படுத்தி கொண்டு, நம்மை கீழே தள்ளி விட வில்லை, அனால், அனைத்திற்கும் நாம் பொறுப்பெடுத்து கொண்டு, நம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறார்.
இயேசு பர்திமேயுவிடம் "உன் வழியில் செல்"  என்று சொல்கிறார்.  அந்த சுதந்திரத்தோடு பர்திமேயு என்ன செய்தார், "இயேசுவை பின் சென்றார்", அவரிடம் உள்ள சிறந்த வழியை தேர்ந்தெடுத்து கொண்டார். அவரின் வாழ்வு அதன் பின்பு பிரமாதமாக மாறியது, அவருக்கு இப்போது கண் தெரிவதால் மட்டும் அல்ல, இயேசுவிடமிருந்து அவர் கற்று கொள்ள விரும்பினார் அதனால், இயேசுவை பின் செல்பவராக மாறினார்.
கிறிஸ்துவோடு நாம் ஆசிர் பெற்ற பின்பு, எத்தனை முறை நம் பழைய வாழ்விற்கு சென்றுள்ளோம்.? அவரை பின் செல்வதற்கு , புது வழியில் செல்வதாக கூட இருந்தாலும், புது இறைபணியில் செய்வதாக இருந்தாலும், அல்லது நண்பர்களின் வேலை மாற்றமாக இருந்தாலும், நாம் பழைய வாழ்விற்கே சென்று விடுகிறோம். ஆனால்   நாம் நேர்மையாக உண்மையாக இயேசுவை பின் செல்ல முடிவெடுத்து , விசுவாசம் கொண்டோமானால், நாம் வாழ்வு மாறும் சாகசமான வாழ்விற்கு மாறுவோம்.
இயேசுவை பின் செல்வது, அவரிடமிருந்து கற்றுகொள்வது மட்டுமே நம் முதன் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். கிறிஸ்துவோடு நாம் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் நம்மை மாற்றும் தருணம் ஆக இருக்க வேண்டும். -- திருப்பலியில் கூட , திவ்ய நற்கருணையில் நாம் அவரோடு இணைகிறோம்.
 © 2018 by Terry A. Modica