Showing posts with label உப்பு உவர்ப்பு ஒளி கிறிஸ்து. Show all posts
Showing posts with label உப்பு உவர்ப்பு ஒளி கிறிஸ்து. Show all posts

Friday, February 3, 2017

பிப்ரவரி 5, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 5, 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Isaiah 58:7-10
Ps 112:4-9
1 Corinthians 2:1-5
Matthew 5:13-16
மத்தேயு நற்செய்தி

உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34 - 35)
13நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

14நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.

15எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.

16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

(thanks to www.arulvakku.com)
உங்கள் விசுவாசம் மூலம் இந்த உலகத்திற்கு உப்பாய் இருங்கள்
இன்றைய நற்செய்தியில் இயேசு: "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்று கூறுகிறார். உப்பாய் இருப்பது என்றால், அதன் அர்த்தம் என்ன ? உப்பு என்ன செய்கிறது என்று பாருங்கள். இது சாப்பாட்டிற்கு ருசியை சேர்க்கிறது.
மேலும், இயேசு உப்பு உவர்ப்பற்று போனால், எப்படி திருப்பி கொண்டு வருவது ? அதற்கு பதில்:
உங்கள் ஞானஸ்நானத்தில்,  உப்பாய் இருக்க ஆசிர்வதிக்கப்பட்டு உங்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன், கடவுளின் அன்பும், அமைதியும், சந்தோசமும், இன்னும் பல கொடுக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம், கடவுளின் வாழ்வை -- கடவுளின் அன்பு கொண்டு, அமைதியை, சந்தோசத்தை கொண்டு, மற்றவர்களை மனம் மாற்றுகிறார்களோ, அவர்கள் அனைவரும் பயனளிக்கும் கிறிஸ்தவர்கள் ஆவர்.
ஆனால், அதற்காக அதிகமாக முயற்சி செய்யாதீர்கள்! சாப்பாட்டிற்கு அதிக உப்பு சேர்ந்தால் என்ன ஆகும்? ருசியாக இருக்காது. நமது எண்ணம் நல்லதாக இருந்தாலும், நாம் அதிகமாக அவர்களை இழுத்தாலும், நாம் அதிக சேதத்தை தான் கொடுக்கிறோம்.
இறைவனின் அன்பை, அவரின் அமைதியை,  நம் மூலம் அவர்கள் அனுபவிக்கும் பொழுது, பலர் இயேசுவை நோக்கி திரும்புவர். நாம் எப்படி அவர்களை மதித்து நடத்துகிறோமோ  , நம் வாழ்வின் மூலம் அவர்கள் இயேசுவின் சந்தோசத்தை பார்க்கும் பொழுது , அவர்கள் இயேசுவிடம் கண்டிப்பாக திரும்புவார்கள். அவர்கள் எப்படி இருந்தாலும் , அதே நிலையில் அப்படியே இயேசு அவர்களை அன்பு செய்கிறார் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும் , இயேசு மிகவும்  மென்மையானவர் , ஆனாலும் அவர்களை அழைப்பதில் மிகவும் உண்மையாக இருப்பவர், மற்றவர்களின் கஷ்டத்தை , பிரச்சினைகளை , ஆசிர்வாதமாக மாற்றி சந்தோசத்தை கொடுப்பவர்.
இயேசு மேலும் நாம் ஒளியாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் -- ஆனால் அந்த ஒளி மற்றவர்களின் கண்களை மறைக்க கூடிய ஒளியாய் இருக்க கூடாது. இயேசுவின் பிரசன்னத்தை, மற்றவர்களின் வாழ்வில் நாம் கொண்டு வர, இயேசு அவரது ஒளியை நம் மூலம் கொண்டு வர நாம் முயல வேண்டும். மற்றவர்கள் கிறிஸ்துவின் ஒளியை நம்மில் காண வேண்டும்.
கூடுதலாக, இயேசு நகராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், நாம் தனியாக மனமாற்றம் செய்ய முடியாது. நகர் என்றால், கிறிஸ்தவர்கள் சேர்ந்த குழு: குடும்பம், அல்லது பங்கின் உள்ள சங்கங்கள் ஆகும். கிறிஸ்தவர்கள் என்பதே ஒரு குழுவாக இருப்பது தான். நம் ஒளி மற்றவர்களின் ஒளியோடு இணையும் பொழுது , அந்த ஒளி இன்னும் அதிகமாக கிறிஸ்துவின் ஒளியை இந்த உலகத்திற்கு காட்டும். ஏன்? நாம் ஒருவரோடு ஒருவர் அன்புடன் இருக்கும் பொழுது , எவ்வித நிபந்தனையும் இன்றி, தாராளமாக ஒவுவருக்கு ஒருவர் சேவை மனப்பான்மையில் அன்பு செய்கின்றதை பார்த்து மற்றவர்கள் கிறிஸ்துவின் அன்பை அவர்கள் பெற்று மனம் மாறுவார்கள்.
நாம் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துவின் ஒளியை பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்களுக்கு நாம் ருசியை கூதடுக்கிறோம். மற்றவர்கள் உதவி இல்லாமல், நம் ஒளி குறைந்து விடுகிறது, நம் உவர்ப்பு தன்மை குறைந்து விடுகிறது, மேலும், இறையரசில் உபயோகமற்றவராக ஆகி விடுகிறோம்.

© 2017 by Terry A. Modica