Showing posts with label ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். Show all posts
Showing posts with label ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். Show all posts

Sunday, May 15, 2022

மே 15 2022 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 மே 15 2022 ஞாயிறு நற்செய்தி மறையுரை 

கிறிஸ்து உயிர்ப்பின் 5ம் ஞாயிறு 

Acts 14:21-27

Ps 145:8-13

Revelation 21:1-5a

John 13:31-35


யோவான் நற்செய்தி 



புதிய கட்டளை

31அவன் வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். 32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். 33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால், நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.✠ 34‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.✠ 35நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார்.

(thanks to www.arulvakku.com)



புகழ்பெற்ற இறைபணி

நீங்கள் இறக்கப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் இறுதித் தருணங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன ஞானத்தைக் கொடுப்பீர்கள்? அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன?


இந்த ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி வாசகத்தில், இயேசு தனது வாழ்நாள் குறைவாக இருப்பதை அறிந்திருக்கிறார். அவர் தனது நண்பர்களிடம் முதலில் சொல்வது கடவுளுக்கு (தந்தை) தன்னை கடவுளுடன் சமன்படுத்திக் கொள்ளும் வார்த்தைகள். அவர் தனது நண்பர்களை கூட "குழந்தைகள்" என்று அழைக்கிறார், அவர் தந்தை கடவுளைப் போல! அவ்வாறு செய்வதன் மூலம், அவர் தந்தையுடன் ஒன்றானவர் என்பதை தெளிவாக்குகிறார் -- தந்தைக்கும் இரட்சகருக்கும் இடையே உள்ள கோடுகள் முற்றிலும் மங்கலாகின்றன. அவர் அதை பணிவுடன் செய்கிறார். "நண்பர்களே, உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், நான் தெய்வீகமானவன். நான் கடவுள். என்னை வணங்குங்கள்" என்று அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக, அவர் கடவுளின் மகிமையில் கவனம் செலுத்துகிறார்.



மகிமை என்பது கடவுளின் பிரசன்னத்தின் ஒளிரும் ஒளி: அவருடைய அன்பு, மகிழ்ச்சி, பரிசுத்தம், அமைதி, ஞானம், படைப்பாற்றல் மற்றும் அவருடைய மகிமையில் நீராட விரும்புவோருக்கு அவர் அளிக்கும் மற்ற அனைத்தும். நாம் கடவுளை மகிமைப்படுத்தும்போது, அதே மகிமையை அவருக்குப் பிரதிபலிக்கிறோம். இந்த கடவுளின் மகிமை உங்கள் வாழ்க்கையை எவ்வளவு ஒளிரச் செய்கிறது?



தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மகிமையின் பரிமாற்றத்தை விவரித்த பிறகு, இயேசு தனது சீடர்களுக்கு பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த ஞானத்தை வழங்குகிறார்: கடவுளின் மகிமையில் இயேசுவை வெற்றிகரமாக இணைப்பதற்கான திறவுகோல் அவர் நேசிப்பது போல் நேசிப்பதாகும்.


அன்பு என்பது தன்னலமின்றி பிறருக்குத் தன்னைக் கொடுக்காதவரை அன்பாகாது. இயேசு தன்னலமின்றி மரணத்தின் போதும் தம்மையே முழுமையாக நமக்குக் கொடுத்தார். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் உண்மையான சீடர்கள் அல்ல, சீடர்கள் உண்மையான சீடர்கள் அல்ல, பாதிரியார்கள் உண்மையான குருக்கள் அல்ல, சாதாரண தலைவர்கள் உண்மையான தலைவர்கள் அல்ல, அவர்கள் அன்புடனும், அன்பிலும், அன்பின் வழிலும்  சேவை செய்யாவிட்டால்.



கடவுளின் மகிமை அன்பே, அது தன்னை முழுமையாக, தியாகமாக கூட கொடுக்கிறது. ஈஸ்டர் பண்டிகையை நாம் கொண்டாடும் போது நற்செய்தி வாசிப்பு ஏன் கிறிஸ்துவின் பேரார்வத்தின் காட்சியை நமக்கு வழங்குகிறது? மற்ற வாசகங்கள் ஈஸ்டர் நிறைந்தவை: "இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்" (வெளி. 21:5a). இன்னும் இங்கே இயேசு துரோகம், சித்திரவதை மற்றும் மரணத்திற்கு தயாராகி வருகிறார். ஏன்?


இந்த நற்செய்தி வாசகம் , இயேசு ஆரம்பித்து, இப்போது செய்ய அழைக்கும் கடவுளின் மகிமையைப் பகிர்ந்துகொள்வதற்கான பணியைத் தொடர்வதற்கான திறவுகோலை இன்று இயேசு நமக்கு வழங்குகிறார். தியாக உணர்வில் ஒருவரையொருவர் நேசிப்பதன் மூலம், இயேசு உண்மையானவர், அவர் உயிர்த்தெழுந்தார், அவர் நம்மில் உயிருடன் இருக்கிறார் என்பதை உலகுக்குக் காட்டுகிறோம்.

  © 2022 by Terry Ann Modica


Friday, April 22, 2016

ஏப்ரல் 24, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஏப்ரல் 24, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Revelation 21:1-5a
John 13:31-35
யோவான் நற்செய்தி
புதிய கட்டளை
31அவன் வெளியே போனபின் இயேசு, 
இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.
32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.

33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.

34ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

35
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)
மாட்சிமைபடுத்தும்  இறைபணி
நீங்கள் இறக்க போகிறீர்கள் என்று உங்களுக்கு தெரிந்தால், உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு என்ன  ஞானம் / அறிவை கொடுக்க விருபுவீர்கள்? உங்களிடமிருந்து மிக முக்கியமான எதனை அவர்கள் கற்று கொள்ள வேண்டும்?
இன்றைய நற்செய்தியில்  , இயேசுவிற்கு அவரது நேரம் குறைவு என்று தெரியும். முதல் வார்த்தைகளாக அவர் சிடர்களுக்கு கூறியது, தந்தை கடவுளை புகழ்ந்து , இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்று என்றும் அறிவுறுத்துகிறார். பிள்ளைகளே என்றும் அவர் கூறுகிறார், இயேசுவும் தந்தை கடவுள் போல சீடர்களை கூப்பிடுகிறார். இப்படி சொல்வதால் - இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்று தான் - அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கோடு மறைந்துள்ளது போல தெரிகிறது.இதனை தாழ்மையுடன் இயேசு செய்கிறார். அவர் கூட மாற்றாக , "எல்லோரும் கேட்டு கொள்ளுங்கள், நான் தான் கடவுள் , என்னை வணங்குங்கள்" என்று கூறலாம், அதற்கு மாறாக, கடவுளை மகிமை படுத்தினார்.
கடவுளின் மாட்சி ஒளி கீற்றுகளாக வெளிபடுகிறது: அவரின் அன்பு, மகிழ்ச்சி, அவரின் பரிசுத்தம், அவரின் அமைதி, அவரின் ஞானம், அவரின் படைப்புகள், மேலும் பல நம்மில் வருகிறது, எப்பொழது ? அவரின் மாட்சிமையில் நாம் பங்கு கொள்ள வேண்டும் என்று விரும்புகிற பொழுது நமக்கு கிடைக்கும். கடவுளை புகழ்ந்து, மாட்சிமைபடுத்தும் பொழுது , அவர் நமக்கு கொடுக்கும் மாட்சியை நாம் திருப்பி கொடுக்கிறோம். உங்களில் எவ்வளவு மாட்சிமை ஒளிர்கிறது  ?
தந்தை கடவுளும் , இயேசுவும் ஒருவருக்கொருவர் மாட்சிமை படுத்துவதை கூறி விட்டு, இயேசு அவரின் சீடர்களுக்கு இந்த உலகின் அதி முக்கியமான ஞானத்தை, அறிவுரையை வழங்கினார். : கடவுளின் மாட்சியில், இயேசுவோடு இணைவதற்கு முக்கியமான வழி, இயேசுவை போல நாமும் அன்பு செய்ய வேண்டும்.
சுய நலமில்லாமல் கொடுக்கும் அன்பு தான் உண்மையான அன்பாகும். இயேசு நமக்காக அவரையே கொடுத்தார், மரணத்தில் கூட சுய நலமின்றி தன்னை ஆட்படுத்தி கொண்டார். இயேசுவின் பின்செல்பவர்களும், சீடர்களும், குருவானவர்களும் , திருச்சபை உறுப்பினர்களும் , அன்பினாலும், அன்பாலும், அன்பு மூலமாகவே இறைசேவை செய்தால் ஒழிய அவர்கள் குருவானவர்களாகவே , சீடர்களாகவோ , திருச்சபை உருப்பினராக இருக்க முடியாது.
கடவுளின் அன்பு முழுமையானது, தியாகத்தினால் ஆனது , அதிலிருந்து கடவுளின் மாட்சிமை பெருகுகிறது. அவரது மாட்சிமை அன்பினால் ஆனது. ஈஸ்டர் காலத்தை நாம் கொண்டாடுகின்ற பொழுது  , நற்செய்தி வாசகங்களில், இயேசுவின் பாடுகளை பற்றி ஏன் குறிப்பிடுகிறார்கள் ?  மற்ற வாசகங்களோ ஈஸ்டரை பற்றியே பேசுகின்றன : "  ``இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்'' என்று திருவெளிபாடு கூறுகிறது. மேலும், இயேசு, நம்பிக்கை துரோகத்திற்கும், சிலுவை வேதனைகளுக்கும், மரணத்திற்கும் தயாராகிறார் என நற்செய்தி குறிப்பிடுகிறது . ஏன் ?
நற்செய்தி மூலமாக இயேசு நமக்கு ஒன்றை அறிவுறுத்துகிறார். நாம் அனைவரும் இயேசுவின் இறைசேவையை தொடர்ந்து நடத்துதல் வேண்டும், இயேசு ஆரம்பித்த இவ்வுலக இறைபணியை நாம் தொடர்ந்து நடத்திட நம் அனைவரையும் அழைக்கிறார். தியாகம் செய்து நாம் ஒருவரை அன்பு செய்யும்பொழுது நம் மூலம் இயேசு உண்மையான கடவுள் என்று இந்த உலகம் அறியும். அவர் நமக்காக மரணமடைந்து , உயிர்த்தெழுந்து ,நம்மோடு வாழ்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் .

© 2016 by Terry A. Modica

Friday, April 26, 2013



ஏப்ரல் 28, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Rev 21:1-5a
John 13:31-35
 

யோவான் நற்செய்தி
புதிய கட்டளை
31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 ' ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் மரணம் அடைய போகீறீர்கள் என்று தெரிந்தால், உங்கள் அன்பானவர்களுக்கு என்ன அறிவுரை உங்களின் கடைசி நேரத்தில் வழங்குவீர்கள்? உங்களிடமிரிந்து அவர்கள் கற்று கொள்ள கூடிய முக்கியமான விசயம் என்ன?

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசுவிற்கு அவரது காலம் குறைவு என்பது தெரியும். முதலில் அவரது நண்பர்கள் அனைவரிடமும், தந்தை கடவுளுக்கு புகழ் கூறி ஆரம்பிக்கிறார். அதே  நேரத்தில்,   தந்தை கடவுளும் அவரும் ஒன்றே என்பதையும் குறிப்பிடுகிறார். அவரது நண்பர்களை பிள்ளைகளே என்றும் கூறுகிறார், தந்தை கடவுள் போல அவர்களை கூப்பிடுகிறார். தந்தை கடவுளோடு அவரும் ஒன்றானவர் என்பதை இதன் மூலம் விளக்கமாக நமக்கு தெரிவிக்கிறார். இதனை மிகவும் தாழ்மையுடன் தெரிவிக்கிறார்.  தந்தை கடவுளுக்கும் , மீட்பர் மகனுக்கும் இடையே உள்ள கோடு நமக்கு புரிவதில்லை. இதையே அவர் வேறு மாதிரியாக சொல்லியிருக்கலாம் , “ நான் தெய்வம், நான் தான் கடவுள், என்னை ஆராதியுங்கள் “ என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் கடவுளின் புகழை மேன்மைபடுத்துவதில் குறியாய் இருந்தார்.

கடவுளின் ப்ரசன்னம் மூலம் , அவர் புகழொளி எங்கும் வீசுகிறது. அதில், அவரின் அன்பு, புனிதம், அமைதி, ஞாணம், அவரின் படைப்பு மேலும் அவரின் எல்லாமும், அங்கே  நிறைந்திருக்கிறது, அந்த புகழொளியில் நாம் முழுதும் குளித்து அவரின் ஆசிர் பெறலாம். அவரை நாம் மகிமைபடுத்தும்பொழுது, நாமும் புகழொளியை கடவுளுக்கு திருப்பி அனுப்ப்புகிறோம். அவரின் புகழொளி உங்களில் எந்த அளவிற்கு ஒளிர்கிறது.?


தந்தை கடவுளுக்கும், மகன் சுதனுக்கும் புகழொளி ஒருவருக்கொருவர் மகிமைபடுத்திய பின்பு, யேசு அவரின் சீடர்களுக்கு, அவரின் உல்க, தெய்வீக ஞாணத்தை அளித்தார். இயேசுவின் புகழொளியில், நாம் சேர்வதற்கு, நாம் இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்ய வேண்டும்.

சுய நலமின்றி மற்றவர்களுக்கு நாம் செலுத்தும் அன்பே, உண்மையாகும். யேசு சுய நலமின்றி அவரை முழமையாக , அவரது இறப்பை நமக்கு கொடுத்தார். குருக்களும், சீடர்களும், இயேசுவை பின் செல்பவர்களும், திருச்சபையின் தலைவர்களும், உண்மையான அன்புடன் அவர்கள் இறைசேவை செய்ய வில்லை என்றால், அவர்கள், உண்மையான குருக்களோ, திருச்சபையின் தலைவர்களோ, சீடர்களாகவோ இருக்கமுடியாது.

தியாகத்துடனும், முழுதுமாக கொடுக்கப்பட்ட அன்பு தான் கடவுளின் அன்பாகும், அது தான் கடவுளின் புகழ் ஓளியாகும். ஈஸ்டர் காலத்தில், இன்றைய நற்செய்தி, ஏன் பாடுகளை பற்றி வாசிக்கிறார்கள்?  மற்ற வாசகங்களோ ஈஸ்டர் காலத்தை பற்றியது. “ இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (Rev 21:5a)  இருந்தாலும்,  இயேசு, துரோகத்தையும், துன்பத்தையும், மரணத்தையும் தாங்கி கொள்ள தயார் படுத்தி கொண்டிருந்தார். ஏன்? கடவுள் புகழை நாம் இயேசுவை தொடர்ந்து அவரின் திருப்பணிகள் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.  அதற்கு இயேசு அவரது ஞாணத்தை சீடர்களுக்கு கொடுக்கிறார். தியாகத்தோடு, நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இயேசு உண்மையானவர்  என்று உலகிற்கு அறிவிப்போம். அவர் உயிர்த்தெழுந்துவிட்டார், நம்மில் வாழ்கிறார்.

© 2013 by Terry A. Modica