Showing posts with label கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. Show all posts
Showing posts with label கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. Show all posts

Friday, November 13, 2015

நவம்பர் 15 2௦15 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 15 2௦15 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Daniel 12:1-3
Ps 16:5, 8-11
Hebrews 10:11-14, 18
Mark 13:24-32

மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.

பின்பு அவர் வானதூதரை அனுப்பிஅவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது;விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை?
உங்களுக்கு தீர்க்கபடாத பிரச்சினை ஒன்று இருக்கிறதா?  இயேசு எங்கே? இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் இரண்டாவது வருகையை பற்றி பேசுகிறார். ஆனால், அவரின் முதல் வருகையையே இன்னும் முடிக்கவில்லை! அந்த சீடர்களுக்கு கண்டிப்பாக குழப்பமாக இருந்திருக்கும்.

இயேசு இறந்த பிறகு, உயிர்தெழுந்தும், மோட்சத்திற்கு எழுந்து சென்ற பிறகும்,   சீடர்கள் இன்னும் குழப்பமாக இருந்தனர். அனால் இன்னும் இரண்டாம் வருகை நடைபெறவில்லை. இயேசு "இந்த தலைமுறை" முடிவதற்குள் இரண்டாவது வருகை இருக்கும் என்று கூறியதை  அவர்கள் இன்னும் மறக்கவில்லை. இருந்தாலும், காலங்கள் ஓடிவிட்டன. அப்போஸ்தலர்கள் செத்து பிழைத்தனர். இயேசு மேகத்தில் இன்னும் தோன்றவில்லை. இந்த உலக வாழ்வில்  பிரச்சினை  இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது

உங்களில் தீர்க்கபட்டாத பிரச்சினை பற்றி நினைவில் கொள்ளுங்கள். இயேசு உடனே இரண்டாவது வருகை புரிந்து இந்த உலகில் உள்ள , நமக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கமாட்டாரா என நாம் ஏங்குவதில்லை? இயேசு என்ன சொன்னார் என்பதை பாருங்கள்: "இந்த நிகழ்வுகள் நடக்கும் பொழுது, நான் அருகே இருக்கிறேன், வாயில் கதவிற்கு வந்து நிற்கிறேன்  " என்று சொல்கிறார். ஆனால், சரியான தேதியை அவர் சொல்லவில்லை, சிடர்களுக்கும் , என் நமக்குமே அவர் தேதி குறித்து கொடுக்கவில்லை. -- கடவுளின் நேரத்திற்காக எந்த ஒரு துப்பு கிடைக்கவில்லை. (அந்த நேரம், எந்த மணி என்று யாருக்கும் , வான தூதர்களுக்கு கூட , மகனுக்கும் கூட , தந்தைக்கு மட்டும் தான் தெரியும் ) , இயேசு என்ன சொல்ல வருகிறார் ?

அவர் அருகில் வருகிறார்!
கடந்த 2௦௦௦ வருடங்களாக, நாமெல்லாம் இந்த "தலைமுறையில்" ஒரு அங்கத்தினாராக இருக்கிறோம், இயேசு இரண்டாம் வருகை வரும் வரை இந்த தலைமுறை போகாது. இது கிறிஸ்துவின் மனித குலத்தின் தலைமுறை , கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில், இந்த திருச்சபையில் இருக்கிறோம். இயேசுவின் தியாகத்தால், மிட்பினால், கடவுளால் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள்.
"இறுதி நாட்கள்" அந்த கடைசி காலம், முதல் பரிசுத்த ஆவியின் வருகையிலிருந்து ஆரம்பித்து விட்டது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை இந்த காலம் தொடரும். இது பரிசுத்த ஆவியின் காலம். இதிலே கிறிஸ்துவின் இந்த உலக இறைசேவை , பரிசுத்த ஆவியின் ஆசியுடன், ஆலோசனையுடன் நம் மூலம் தொடர்கிறோம்.

அத்தி மரத்தின் உவமை மூலம் நமக்கு சொல்லப்படும் போதனை என்ன என்றால், நல்ல நேரத்தையும், கெட்டதையும் நாம் கண்டு கொண்டு, இயேசு நமக்கு அருகில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம் மனித உணர்வினால் அல்ல, திவ்ய நறுகருனையிலும் , பரிசத்த ஆவியின் மூலமும் .
உங்களின் அடுத்த செயலுக்கு அருகே இயேசு வாயிலில் இருக்கிறார். மோட்சத்திற்கு நீங்கள் எடுக்கும் அடுத்த காலடி அருகில் இயேசு நிற்கிறார். வாயில் என்றால், அதற்குள் நாம் நுழைந்து செல்ல வேண்டியிருக்கும். இயேசு அதன் கதவை உங்களுக்காக இப்போது திறந்து வைக்கிறார். பரிசுத்த வாயிலை, அன்பின் வாசலை உங்களுக்காக திறக்கிறார். உங்களுக்காக இந்த உலகில் கொடுக்கப்பட்ட பணியை செயது, முழுமையான வாழ்வை வாழா அந்த வாயிலில் நுழையுங்கள்.

© 2015 by Terry A. Modica