Showing posts with label ஜூலை 29 2007. Show all posts
Showing posts with label ஜூலை 29 2007. Show all posts

Saturday, July 28, 2007

ஜூலை 29 2007, நற்செய்தி மறையுரை:

ஜூலை 29 2007, நற்செய்தி & மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 11

1 இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ' ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் ' என்றார். 2 அவர் அவர்களிடம், ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! 3 எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். 4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் ' ) என்று கற்பித்தார். 5 மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ' உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ' நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. 6 என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். 7 உள்ளே இருப்பவர், ' எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது ' என்பார். 8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 ' மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். 10 ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். 11 பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? 12 முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? 13 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! '

http://www.arulvakku.com


இன்றைய நற்செய்தியில், எப்படி விசுவாசத்தோடு, வேண்டுவது என்று யேசு நமக்கு சொல்லி கொடுக்கிறார். அவர் கூறும் நீதி கதையில், நாம் கேட்பதெல்லாம் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று குறிப்பிடபடுகிறது. எல்லாமே நமக்கு நன்மை தராது. 'உணவு' என்று இந்த நற்செய்தியில் குறிப்பிடபடுவதன் அர்த்தம் 'புனித வாழ்வு' ஆகும். -- "வாழ்வின் உணவு" யேசுவே. புனித வாழ்வு தான், பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு ஆகும். அவர் தான் நமக்கு வாழ்க்கை கொடுப்பவர்.

இந்த நீதிகதையின் வரும் அன்பர் கடவுளின் நண்பர் ஆவார். அவர் புதியவர் அல்ல. அவர் தனது நண்பரோடு உணவை பகிர்ந்து கொள்ள விரும்பினார். இது ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர்கள், கடவுளின் நட்பை ( "மூன்று ப்ரெட் - திரித்துவம்" ) மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. ஆனால், நானோ, நீயோ இந்த செயலை/ கடமையை செய்ய போதுமான தகுதி இல்லை.

நாம் நம்முடைய தகுதியின்மைக்காக, அதனை நிறைவு செய்ய வேண்டி கடவுளின் இதயத்தை தட்டும்போது அவர் பரிசுத்த ஆவியை தருகிறார்.பரிசுத்த ஆவி முழுமையானவர். அவரிடமிருந்து எல்லாமே நமக்கு கிடைப்பதில்லை. நாம் இறைவனிடம் வேண்டும் போதெல்லாம், நாம் யேசுவின் பரிசுத்த ஆவ்யின் மூலம் கடவுளோடு சேர்கிரோம். அதனால், ஒவ்வொரு ஜெபத்திலும், நாம் இறைவனோடு அருகில் சேருகிறோம், மேலும், நமது புனிதம் அதிகமாகிறது.ஆனால், புனிதம் அவ்வளவு சீக்கிரத்திலோ அல்லது சுலபமாக வந்துவிடாது. நாம் நமது வாழ்வில் இடைவிடாது ஜெபிக்க வேண்டும். நமக்கு தவறு செய்ய தூண்டப்படும் நேரங்களில், தொடர்ந்து கடவுளிடம் சென்று அவரிடம் ஜெபிக்க வேண்டும்.


நாம் எதை கடவுளிடம் கேட்டாலும், நமக்கு தேவையான பொருட்களை கேட்டாலும், அந்த வேண்டுதல், நமது ஆண்மாவை வளர்க்க உதவியாக இருக்க வேண்டும். இதனை தான், நாம் ஜெபத்தில், அவரிடம் கேட்கிறோம் , "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" அது ஆண்ம உணவு. இடைவிடாது ஜெபியுங்கள், இந்த உணவு ஒரே இரவில் கிடைப்பதில்லை. (நாம் மிகவும் மெதுவாக கற்று கொள்பவர்கள்)

சாத்தான் தான், நீங்கள் கேட்பதெல்லாம் விரைவில் கிடைக்கும் என்று கூறுகிறது. இன்றைய நாகரிகமும், புதிய மந்திர முறைகளும், விரைவு உணவு தெய்வீகமாகும். அது தவறான நம்பிக்கையும், தேவையில்லாத கொழுப்பையும் கொடுக்கும். இவைகளால், பரிசுத்த ஆவ்யின் மூலம் கிடைக்கும், நமது புனித வாழ்வின் வளர்ச்சி தடைபடுகிறது. நிறைய பேர், தொடர்ந்து புனித வாழ்வின் பாதையில் செல்ல விரும்புவதை விட, மந்திர , ஜாதக முறையை தான் நோக்கி செல்கின்றனர்.

பரிசுத்த ஆவ்யின் மூலம் கிடைக்கும் நிறைவான தகுதிகள், நாம் கேட்க கூடியதுதான். ஏனெனில், நம்முடைய ஞானஸ்நானத்தில் நமக்கு பரிசுத்த ஆவியின் கொடைகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும், கடவுளின் முழு தெய்வீக ஆற்றலில் வாழ்வதற்கு, நாம் இடைவிடாது ஜெபித்து , தொடர்ந்து நமது பாவங்களை கண்டறிந்து, மனம் திருந்தி, நம் சுய ஆசைகளை தூக்கிபோட்டு விட்டு, பரிசுத்த ஆவியின் புனித வாழ்விற்கு தாழ்மையுடன் மனம் திறந்து அவரை ஏற்று கொள்ளுங்கள்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:

எந்த அளவிற்கு தினமும் பரிசுத்த ஆவியை சார்ந்து இருக்கிறீர்கள். எத்தனை முறை கடவுளிடம் தாழ்மையுடன் வேண்டி, அதிக புனிதத்திற்காக ஜெபம் செய்கிறீர்கள்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm