ஜனவரி 5,2013 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருகாட்சி ஞாயிறு
Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12
மத்தேயு நற்செய்தி
ஞானிகள் வருகை
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள
பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப்
பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை
வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான்.
அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத்
தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி,
மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், ″ யூதா
நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே
இல்லை; ஏனெனில், என் மக்களாகிய
இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ″ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல்
ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி
செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு
அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள்
புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த
இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள்
மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள்
அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய்
விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து
பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள்
எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துமஸ் விழா காலத்தில், ஞாணிகளின் வருகையும் நாம் கொண்டாடுகிறோம்.
குழ்ந்தை இயேசுவை அவர்கள் வீழ்ந்து வணங்கியதை நாமும் கவனமாக எடுத்து கொள்ள
வேண்டும். கிரேக்க வார்த்தையான ஞாணிக்கு
அர்த்தம் என்ன என்றால், கிழ்த்த்திசை விஞ்ஞாணிகள் என்று அர்த்தம். சில நேரங்களில்,
நாம் அவர்களை “ஜோசியர்கள்” என்று மாற்றி சொன்னாலும், இயேசுவின் குடிலை அவர்கள்
சென்று வணங்கியது, ஜோசியத்தால் அல்ல.
ஏனெனில், அவர்கள்
யூதர்கள் அல்ல. யூத மீட்பரை ஆவலுடன் காண அவர்கள் உறுதியோடு இருந்தனர். இதன் மூலம் “ஆண்டவரின்
திருக்காட்சி” என்று இத்திருவிழாவின் பெயருக்கு ஏற்றார் போல, அவர்கள் இயேசுவை காண
வந்த்திருந்தனர். இயேசுவின் முக்கியத்துவத்தை அந்த ஞானிகள் நம்பினார்கள். உலகிற்கு
அது புரியாவிட்டாலும், அவர்களுக்கும் அது புரியாவிட்டாலும், அவர்கள் இயேசுவை
நம்பினார்கள்.
இயேசுவை அவர்கள்
மேசியாகவும், அரசராகவும், ஆராதனை செய்தனர். அவர் எப்பட அராசராவர் என்று கூட
தெரியாமல், எப்படி அவர் அரசாட்சி இவ்வுலகை மீட்க போகிறது என்று கூட தெரியாமல் ஞானிகள்
இயேசுவை ஆராதித்தார்கள். அவர்கள் விஞ்ஞான அறிவியலாளர்கள், அவர்கள் மத போதனைகள்
படித்து உள்ளார்கள், ஆண்டவரின் ஆவியின் தூண்டுதலோடு , அவர்கள் எல்லாம்
செய்தார்கள். அதனால் அவர்கள் வாழ்வும் மாறியது.
தூய ஆவியார் ஒருவாரால் தான்,
ஒவ்வொருவரின் விசுவாசம் கொடுக்க முடியும். விசுவாசம், பரிசுத்த ஆவியின் கொடை.
(கொரிந்தியர்கள் 1 12 பார்க்கவும்). ஆண்டவரின் திருக்காட்சி என்றால், “கண்டுபிடித்தல்”,
“இரகசியத்தை வெளிப்படுத்தி நம் வாழ்வை மாற்றுதல்” என்று அர்த்தம் ஆகும். இந்த நாள் கடவுள் நமக்கு கொடுத்த அன்பளிப்பு
ஆகும், இதன் மூலம் நாம் புது வாழ்வை வாழ ஆசை படுவதை தொடங்கி வைக்கிறது.
ஆண்டவரின் திருக்காட்சியின் மூலம்
ஞானிகள் , கிறிஸ்துவின் பிரசன்னத்தில்,
எவ்வளவு சந்தோசத்துடன், இருந்த்திருப்பார்கள் என்பதை நம்மால் நாம் கற்பனை பண்ணி
பார்க்கலாம். ஒரு ஏழையின் குடும்பத்தில் பிறந்த இந்த குழ்ந்தை எப்படி அரசராக
போகிறார் என்று அவர்களுக்கு புரியாவிட்டாலும், அவரை பற்றிய ஏதாவது செய்தி இஸ்ரேலிலுருந்து
வருகிறதா? என்று அவர்கள் வாழ்நாள் முழுதும் அவர் நினைவாகவே இருந்தனர். இயேசுவின்
சிலுவை மரணத்தையும், அவர் சீடர்களின் போதனைகளையும் அவர்கள் கேட்டிருக்கலாம் . அதன
முலம் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கலாம். அதன் மூலம் எஞ்சியுள்ள புனித
சின்னங்கள் புனிதபடுத்தபட்டுள்ளது .
© 2013 by Terry A. Modica