Showing posts with label திருப்பணிக்குத் தயார் செய்தல். Show all posts
Showing posts with label திருப்பணிக்குத் தயார் செய்தல். Show all posts

Friday, December 14, 2012

டிசம்பர் 16 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 16 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு

Zephaniah 3:14-18a
Isaiah 12:2-6
Philippians 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி

http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 3
 திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்


10 அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.11 அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார்.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர்.13 அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார்.14 படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார்.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்
(thanks to www.arulvakku.com)
திருவருகை காலத்தின் 3ம் வாரமான இன்று, நமது கவனத்தை மகழ்ச்சியான மண  நிலையை கொண்ட வாராமாக , சந்தோசத்துடன் நமது கவனத்தை, நோக்கத்தை குழந்தை யேசுவின் திருவருகைக்காக காத்திருப்போம். இந்த சந்தோச தருணங்கள் நமது விசுவாசத்திற்கு இன்றியமையாதது. எல்லா வாசகங்களும், நற்செய்தியும், முழு மகிழ்ச்சையையும், சந்தோசத்தையும், காத்திருத்தலையும்  நமக்கு சொல்கிறது. நற்செய்தி வாசகத்தில், யோவான் மக்களுக்கு நற்செய்தியை தமது பேச்சில் குறிப்பிடுகிறார். மெசியா வருவதை அவர் அறிவிப்பில் தெரிந்து கொண்டு, அவர்கள் அனைவரும் மண நிறைவுடனும், சந்தோச எதிர்பார்ப்பும் அடைந்தனர்.

சந்தோசமாக இருப்பது ஒரு இறைசேவை என்று உங்களுக்கு தெரியுமா? நமது விசுவாசத்தை பகிர்ந்து கொள்ள இது ஒரு முக்கியமான வழியாகும். கலக்கமும், நம்பிக்கையின்மையும் உள்ள இடத்தில், நாம் மகிழ்ச்சியை கொண்டு செல்ல நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

யோவான் எவ்வாறு இந்த சந்தோசத்தை, அதன் இறைசேவையை நிறைவேற்றினார் என்பதை பார்ப்போம். ஒட்டக தோலை அனிந்து கொண்டு, வீர வசனமாக அவர் ப்ரசங்கம் செய்து பாவத்திலிருந்து மீண்டு வாருங்கள் என்று சொல்லும்பொழுது அவர் சந்தோசமாகவே இருந்தார் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இன்னும் உற்று  நோக்கி அவர் இறைசேவையை பார்த்தோமானால், இயேசுவை வரவேற்க மக்களின் இதயத்தை தயார்படுத்தினார்.

கடவுள் மேல் விசுவாசத்துடன் இருப்பது, அவரிடம் நம்பிக்கை வைத்து , எதிர்பார்ப்போடு, சந்தோசத்தில் காத்திருப்பதற்கு ஒப்பாகும். உங்களிடமோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் மகிழ்ச்சியற்று இருப்பது, இயேசுவை இன்னும் முழுமையாக, நீங்கள் அழைக்காமல் இருக்கிறீர்கள். உங்கள் கஷ்டம் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கும் அல்லது, உங்கள் விசுவாசம் குறைவானதாக இருக்கலாம், அதனை இன்னும் உறுதியாக்கவேண்டும்.

நாம் கொண்டுள்ள விசுவாசத்தில் மகிழ்ச்சியடைய, கடவுளின் அன்பினை தேடி,  நம் கஷ்டமான நேரத்தில், கடவுளின் ஆறுதலை பெற்று, அவரது அரவனைப்பில் இருந்தால், நாம் விசுவாசத்தில் சந்தோசத்துடன் இருப்போம். இயேசுவின் போதனைகளில் மகிழ்ச்சியோடு இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளதையும், இயேசுவின் சந்தோசத்தையும் நாம் அறிந்து கொண்டால், நம்மில் இந்த விசுவாச மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

நம் முயற்சிகளில், இன்னும் ஒரு அடி அதிகம் எடுத்து வைக்க வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். பகைவரையும் அன்பு செய்வது, நமக்கு கஷ்டத்தை கொடுப்பவர்களுக்கு நல்லது செய்வது போன்றவை நமக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியை தராது. நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், பரிசுத்த வாழ்வை எப்படி வாழ்வது என்று அறிந்து அதன் படி வாழ்ந்து , அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆகும். இது நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இல்லை என்றாலும், இது தான் இயேசுவின் சந்தோசத்துடனும், சந்தோசத்திற்காக இயேச் நமக்கு கூறியதையும், நம்மோடு ஒன்றினைக்கும்.  சிலுவையை ஏற்று கொள்வது கூட சந்தோசமான முடிவை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு நல்ல செய்தி: எப்படி பரிசுத்தமாக இருப்பது என்று இயேசு நமக்கு சொல்லவில்லை. நாம் பரிசுத்தமாக இருக்க தேவையான ஆற்றலை நமக்கு இயேசு கொடுத்துள்ளார். அவரது பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்துள்ளார். மற்றவர்கள் நம்மில் பரிசுத்த ஆவியின் செயலை பார்த்தால், இது இயேசுவினால் தான் நாம் மகிழ்வோடு இருக்கிறோம் என்று அவர்கள் அறிந்து கொண்டால், நம் விசுவாசத்தின் மூலமாக அவர்கள் மணம் மாற்றமடைந்துள்ளார்கள்.
© 2012 by Terry A. Modica


Friday, December 7, 2012

டிசம்பர் 9, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



டிசம்பர் 9, 2012  ஞாயிறு  நற்செய்தி மறையுரை
திருவருகை கால இரண்டாம் ஞாயிறு
Baruch 5:1-9
Ps 126:1-6
Philippians 1:4-6, 8-11
Luke 3:1-6

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 3

3. திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்

(மத் 3:1 - 12; மாற் 1:1 - 8, யோவா 1:19 - 28)
1 திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.3 ' பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் ' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ' ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்;5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.6 மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர் ″ .

(thanks to www.arulvakku.com)

திருவருகை காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று , நற்செய்தி வாசகம், நாம் இக்காலத்தில் நமது ஆண்மிக வளர்ச்சிக்காக செலவிட வேண்டும் என்று நம்மை அறிவுறுத்துகிறது. அலங்கரிப்பதிலும், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்புவதிலும், நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம். கிறிஸ்து நம் வாழ்வில் மீண்டும் பிறக்கவும், அதனை ஒரு பரிசுத்த நாளாகவும் ஆக்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?


இந்த ஆண்டு, நாம் விசுவாச ஆண்டாகவும் கொண்டாடுகிறோம், இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தான், நாம் விசுவாச ஆண்டாக கொண்டாடுகிறோம். விசுவாசத்தில் புதிய வளர்ச்சியை அடைய நாம் என்ன செய்கிறோம்?

இன்றைய முதல் வாசகத்தில் பதிலுரை பாடலில் நாம் “ ஆண்டவர் நமக்கு மாபெரும்செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.” என்று முழக்கமிட்டு சொல்கிறோம். இதனை நீங்கள் சொல்லும்பொழுது, உண்மையாக மகிழ்ச்சியாக சொல்கிறீர்களா? கடினமான  நமது ஒவ்வொரு நாள் வாழ்விலும், விசுவாசத்தோடு இருந்தால் தான், நாம் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்று யோவான் முழங்குகிறார்.
இயேசுவோடு நல்லுறவு கொண்டு, அவர் மேல் உள்ள விசுவாசத்தில் நிலைத்து, மகிழ்ச்சியோடும் சந்தோசத்துடனும் இருக்க எப்படி நம்மை தயாரிப்பது என்று நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய நேரமிது.

உங்கள் வாழ்வில் உள்ள குழப்பங்களையும், கோணல்களையும் நேராக்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உறுதியான விசுவாசத்தை உங்களிடம் வைக்காமல் இருக்க செய்யும் பாவத்தை ஒழிக்க நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்ன மாதிரியான தண்டனை உங்களை நேராக்கும்? உங்களுக்கு நம்பிக்கையில்லையா? ஏனெனில், இயேசு உங்கள் வாழ்வை நேராக்குவார் என்ற விசுவாசத்தின் கதவுகளை நீங்கள் இன்னும் திறக்கவில்லை.


இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ள, மலை போல் குவிந்திருக்கும் தடைகளை அகற்ற இயேசு பல முறைகளில் , அந்த மலையை தகர்த்தெறிவார். இந்த திருவருகை காலத்தில், அந்த வழி முறைகளை தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. அந்த வழி முறைகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலம் இது. இந்த விசுவாச ஆண்டின் மூலமாக இயேசு நமக்கு வழிமுறைகளை காட்டுகிறார். இது நமது கோவிலிலும், விசுவாச கூட்டங்கள் மூலமாக நமக்கு கிடைக்கிறது.

குழப்பமான பாதை கொண்ட சாலைகள் போல உங்கள் மனதில் எதையெல்லாம் நினைத்து குழம்பி கொண்டிருக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியின் மேல் உள்ள விசுவாசம் உங்களை பரிசுத்த வாழ்விற்கு அழைத்து செல்லும். உங்களில் கடினமானது எது? எது கூர்முனையோடு அடுத்தவரை காயப்படுத்துகிறது? வைரத்தை பட்டை தீட்டுவது போல, இயேசு உங்களை பட்டை தீட்ட ஆசைபடுகிறார். இதையே வேறு மாதிரி சொல்லவேண்டுமானால், கடவுளின் மீட்பை எப்படி பார்க்க விரும்புகிறீர்கள்? அதற்காக என்ன செய்ய போகிறீர்கள்?
© 2012 by Terry A. Modica