Showing posts with label பரிசுத்த ஆவி. Show all posts
Showing posts with label பரிசுத்த ஆவி. Show all posts

Saturday, May 19, 2018

பரிசுத்த ஆவியின் பெருவிழா


மே  20 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை
பரிசுத்த ஆவியின் பெருவிழா
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15

யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
 என்றார்.

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா
 என்றார்.
(thanks to www.arulvakku.com)

நம் வாழ்வை முழுமையை பரிசுத்த ஆவியில் எழுப்புவோம்
பரிசுத்த ஆவியானது கிறிஸ்துவின் ஆவி நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நாம் நம் கிறிஸ்துவ வாழ்வையும் இறை பணியையும் பரிசுத்தமாக நாம் தொடர முடியும். நம் சொந்த திறமைகளினால் இயேசுவை போல மாற முடியாது. ஆனால் அவரின் ஆவி நம்மில் உயிர்ப்போடு இருந்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை கொண்டிருப்போம். அவரின் இறைபிரசன்ன அன்பையும் , இறை அமைதியையும், இயேசுவின் பொறுமையையும் , மேலும் இயேசுவில் நாம் காணும் அனைத்தும் கொண்டிருப்போம்.
ஞானஸ்நானம் மூலம் நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டீர்கள். அதன் தொடர்ச்சியாக, உறுதி பூசுதல் மூலம் பரிசுத்த ஆவி நம்மில் இருப்பதை நாம் நம்பிக்கை கொண்டு நம் இறைவாழ்வை தொடர்கிறோம். பெந்தகொஸ்தே நாளில் இருந்து, பரிசுத்த ஆவியை பெற்று கொண்டு, இறை பணியை தொடரும் அனைவர் மூலம் கடவுள் இந்த உலகை மாற்றி கொண்டிருக்கிறார். நமக்கும் அவரின் ஆவியை தாராளாமாக வழங்குகிறார். அதன் மூலம் அவர் நமக்கு கொடுக்கும் இறைபணிகளில் நாம் வெற்றியடைய செய்கிறார். ஆனால், அவரின் பரிசுத்தத்தையும் , ஆற்றலையும் வெளிபடுத்துவது நம்மை பொறுத்தது.
பரிசுத்த ஆவியின் ஜெபத்தில் என்னோடு இணையுங்கள்:
அன்பு இயேசுவே, உமது பரிசுத்த ஆவியின் முழுமையை என்னில் கிளர்ந்து எழ செய்யும். உங்களின் உண்மைகளை நான் முழுமையாக புரிந்து கொள்ள உதவி செய்யும், மேலும், உங்கள் இறை உண்மைகள் முழுதும் புரிந்து கொள்ளும் முன்பே, எனது இருதயத்தை திறந்தருளும்.
பரிசுத்த ஆவியே!, மற்ற எல்லாவற்றையும் விட இறையரசை பற்றி எனக்கு தெரியபடுத்தும். உன்னை அல்லாத வேறு எந்த விஷயத்தாலும் நான் ஆசைபட்டிருந்தால் அதனையும் தெரியபடுத்தும், மேலும், அதனை அனைத்தையும் துரத்த எனக்கு உதவி அருளும். எனக்கு நீ மட்டுமே வேண்டும்.
பரிசுத்த ஆவியே!, எனது பாவங்களை நினைத்து மனம் வருந்தி , அதனால் நான் மற்றவர்களுக்கு செய்த பாதகத்தை நினைத்து மனம் வருந்த எனக்கு உதவி அருளும். எனக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என நான் வேண்டும் பொழுது, எனக்கு ஆறுதல் அளித்தருளும், உமது ஆவியில் நான் வளர முழுமையாக என்னிடம் வந்தருளும். மேலும், என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் உம்மால் பயன் பெற நான் அவர்களிடம் உம்மை பகிர்ந்து கொள்ள உதவி அருளும்.
இயேசு "நீங்கள் போய் உலகெங்கும் நற்செய்தியை அறிவியுங்கள்!" என்று அவர்களுக்கு கட்டளை இடுகிறார். எனது திறமைகளை , ஆற்றலை உபயோகபடுத்தி இந்த உலகத்தில் மாறுதலை கொண்டுவாருங்கள் என்று கூறுகிறார். எனக்காக சில விசயங்களை செய்ய வேண்டும் , நானே செய்ய வேண்டும், மேலும் சில வற்றை செய்ய கூடாது என நினைக்கிறேன் ஆனால், தற்போது உன்னிடம் முழுதும் சரணடைகிறேன், எனது எண்ணங்கள், ஆசைகள், என்னால் செய்ய முடியாதவை, மேலும் எனது நோக்கங்கள் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். உமக்கு உபயோகமான ஆளாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் எங்கே அழைத்து செல்கிறீர்களோ அங்கே செல்ல விரும்புகிறேன். பரிசுத்த ஆவியே என்னை பல ஆற்றல்களுடனுன் அனுப்பி வை, அங்கே சென்று இயேசுவின் வெற்றியின் அன்பை உலகெங்கும் பரம் ஆணையிடும்.
© 2018 by Terry A. Modica

Friday, May 25, 2012

மே 27, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 27, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 20

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவின் ஆவியான பரிசுத்த ஆவி நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பரிசுத்தமாகவும், கிறிஸ்துவின் இறை சேவையை தொடர முடியும்நாம் தனியாக இயேசுவை போல ஆக முடியாது. ஆனால், அவரின் ஆவி நம்மில் வாழ்ந்தால், சுறுசுறுப்பாக அதன் வேலையை செய்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை பெறுவோம், அவரின் விசுவாசம், எல்லையில்லாத அன்பு, அமைதி, நம்பிக்கை, இடைவிடா ஆற்றலும், மேலும் இயேசுவிடம் நாம் கானும் அத்தனையும் நாம் பெறுவோம்.


பரிசுத்த ஆவியை உங்கள் ஞானஸ்நாணத்தில் பெற்றீர்கள். உறுதி பூசுதலில், பரிசுத்த ஆவியின் ஆற்றலையும், இருப்பையும் , இது நமக்கு உறுதி படுத்தபடுகிறது. மேலும் பரிசுத்த ஆவியின் ஆற்றல் உங்களில் அதிகபடுத்தப்படுகிறது. பெந்தகோஸ்தே நாளிலிருந்து, பரிசுத்த ஆவியை கடவுள் இவ்வுலகிற்கு கொடுத்ததிலிருந்து,   அவரின் இறையரசிற்கு சேவை செய்பவர்கள் மூலமாக  இவ்வுலகை கடவுள் மாற்றுகிறார். அவரின் ஆவியை தாராளாமாக அதிகமாகவே நமக்கு அள்ளி தந்து , அவர் கேட்பதையெல்லாம் நாம் செய்து வெற்றி பெற துணையாக இருக்கிறார்ஆனால் அவரின் பரிசுத்தமும், இறை சேவையும், நாம் எவ்வளவு வெளியே தருகிறோமோ அவ்வளவு தான் இவ்வுலகிற்கு கிடைக்கும்.

என்னோடு சேர்ந்து இந்த பரிசுத்த ஆவியின் ஜெபத்தை சொல்லுங்கள்:

அன்பு இயேசுவே, பரிசுத்த ஆவியின் முழுமையும் என்னுள் வர செய்யும், உமது பரிசுத்த ஆற்றலில் என்னை வாழச் செய்யும், உமது உண்மைகளை முழுதும் புரிந்து கொள்ள  உதவி செய்யும்.உங்கள் உண்மையை ஏற்று கொள்ள  எனது இதயத்தை திறந்தருளும், நான் அந்த உணமையை புரிந்து கொள்வதற்கு முன் என் இதயத்தை திறந்தருளும்.
பரிசுத்த ஆவியே, மற்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்வதை விட, இறையரசை புரிந்து கொள்ள உதவும். உன்னோடு என்னை இனைத்து , எதற்காக நான் அனுப்பபட்டேன் என்பதை புரிந்து கொள்ள உதவும், மண உறுதியையும், உடல் ஆற்றலையும் கொடுத்து , என்னை இவ்வுலகில் இறையரசின் சேவை செய்ய உதவும். எனக்கு நீ மட்டுமே தேவை.

பரிசுத்த ஆவியே, எனது பாவத்தை நினைத்து , அதற்காக உண்மையாக வருத்தபட்டு, அதனை கழுவி நீக்கிட உதவி செய்யும். எனது மன்னிப்பிற்காக நான் வேதனை அடையும் பொழுது எனக்கு ஆறுதலாக இருந்தருளும் , புதிய வாழ்விற்கு உமது சந்தோசத்தை கொடுத்தருளும். இந்த புதிய மகிழ்ச்சியை , இரக்கத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு துனை புரியும்.

இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டார், " இவ்வுலகிற்கு சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" என்னுடைய கொடைகளையும், திறமைகளையும் உபயோகித்து  இவ்வுலகை மாற்றுங்கள். எனக்கென்று எதை செய்ய வேண்டும், எதனை செய்ய கூடாது  என்று ஒரு வரையரை இருக்கிறது. என்னுடைய எண்ணங்களையும், முன்னுரிமைகளையும் , குறைகளையும் உங்களிடம் சரணடைய செய்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கவே விரும்புகிறேன். நீங்கள் எங்கே அழைத்து செல்கிறீர்களோ அங்கே செல்லவே விரும்புகிறேன். பரிசுத்த ஆவியே, இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த , வெற்றியின் அன்பை இவ்வுலகிற்கு பரப்ப, என்னை கொடைகளோடும், ஆற்றலோடும் அனுப்பி வையும்.!
பரிசுத்த ஆவியே என்னில் வாரும், என்னை புதுபித்தருளும். !ஆமென்.
© 2012 by Terry A. Modica


Saturday, May 30, 2009

மே, 31 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே, 31 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பெந்தகோஸ்தே ஞாயிறு (பரிசுத்த ஆவி)

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 15
26 தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.27 நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 16
12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.

(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவியாக நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம், நாம் பரிசுத்தமாக இருந்து, கிறிஸ்து தொடங்கி வைத்த இறைசேவையை நாம் தொடரலாம். நாம் யேசுவை போல இருக்க முடியாது, ஆனால், அவருடைய ஆவி நம்மில் ஆக்கபூர்வமாக இருந்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை கொண்டிருக்கிறோம். அவருடைய விசுவாசம், அவரின் இயற்கையின் அளவை தாண்டிய அன்பு, அமைதி, நம்பிக்கை மற்றும், சக்தி வாய்ந்த ஆற்றல், மற்றும் பல் நாம் யேசுவில் பார்க்கும் அனைத்தும் நாம் கொண்டிருக்கிறோம்.
உங்கள் ஞான்ஸ்நானத்தில் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டீர்கள். உறுதிபூசுதலில், பரிசுத்த ஆவி நம்மில் இருக்கிறார் என்பதனையும், ஆவியுனுடைய ஆற்றல் நம்மில் பெருகவும் செய்கிறது. பெந்தகோஸ்தோவிலிருந்து, கடவுள் அவருடைய இறையசிற்காக சேவை செய்யும் அனைவரையும், பரிசுத்த ஆவியின் மூலம் மாற்றி, அவருடைய இறையரசை இங்கே நிலை கொள்ள செய்கிறார். தாராளமாக கடவுள் நமக்கு ஆவியானவரை கொடுத்து, அவர் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறாரோ அதில் வெற்றியடைய நமக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் எந்த வழிமுறையில், எந்த அளவிற்கு கடவுளின் பரிசுத்தத்தையும், ஆற்றலையும் நம்மிடமிருந்து வெளிப்படுத்துகிறோம் என்பது நம்மை பொருத்து இருக்கிறது.

பரிசுத்த ஆவிக்கான ஜெபத்தில் என்னோடு இனைந்து கொள்ளுங்கள்:

அன்பு யேசுவே, உங்களின் பரிசுத்த ஆவியின் முழுமையை எங்களில் கொண்டுவாரும். உமது பரிசுத்த ஆற்றலில் வாழ எமக்கு உதவியருளும். உங்களின் உண்மையை நன்கு புரிந்து கொள்ள எங்கள் என்னத்தை திறக்க உதவும். எங்கள் இதயத்தை திறந்து,உங்களை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் முன்பே பரிசுத்த ஆவியை நாங்கள் ஏற்றுகொள்ள உதவும்.
இறையரசை, மற்ற எல்லாவிசயங்களை விட, அதிகமாக அறிந்து கொள்ள உதவும். கடவுளரசில் சேராத விசயங்கள் என்னோடு ஒட்டிகொண்டுள்ளன என்ன என்பதை அறிந்து கொள்ள உதவியருளும். மேலும் அதனை துடைத்தொழிக்க எனக்கு மன உறுதியையும், சக்தியையும் கொடு. எனக்கு நீ மட்டுமே வேன்டும்.

பரிசுத்த ஆவியே, எனது பாவ நிலையை ஏற்று, அதனால் ஏற்பட்ட இழப்பிற்காக, உண்மையாக வருத்தப்படவும், அதனிலிருந்து மீண்டு வர எனக்கு உதவியருளும். எனது பாவமன்னிப்பிற்காக நான் வருந்தும்போது ஆறுதலாயிருந்தருளும், மேலும், எனது புதிய வாழ்வில், மகிழ்வோடு உன்னில் வளர உனது ஆவியை கொடுத்தருளும். இந்த குணப்படுத்தும் இரக்கத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு உதவும்.

யேசு இவ்வாறு கட்டளையிட்டார், "உலகம் முழுதும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்", எனது அன்பளிப்பையும், திறமையையும் உபயோகித்து, இவ்வுலகில் இறையரசிற்காக, முயற்சி மேற்கொள்ளுங்கள். நான் எனக்குள்ளே ஓர் எதிர்பார்ப்பு வைத்துள்ளேன், நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று எனக்குள்ளே ஒரு வரையரை உண்டு. இப்போது எனது எதிர்பார்ப்புகள், என்னுடைய இயலாமை, எனது விருப்பங்கள், என்னுடைய நோக்கங்கள் அனைத்தையும், உம்மிடம் ஒப்படைக்கிறேன் . உமக்கு உபயோகமாக இருக்க விரும்புகிறேன். நீ எங்கே என்னை அழைத்து செல்கிறாயோ அங்கே நான் செல்ல ஆசைபடுகிறேன். பரிசுத்த ஆவியே, கிறிஸ்துவின் பரிசுத்த , வெற்றியின் அன்பை இந்த உலகில் பரப்ப, என்னை தயார் பன்னியருளும்.
வா!, என்னை புதுப்பித்தருளும், பரிசுத்த ஆவியே, ஆமென்!

© 2009 by Terry A. Modica

Tuesday, April 24, 2007

ஏப்ரல் 25 2007 மறையுரை

ஏப்ரல் 25 2007

Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist

Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
பேதுரு திருமுகம் (1 இராயப்பர்)

அதிகாரம் 5

5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். 6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்: அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். 7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. 9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். 11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். 12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். 13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். 14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 16

15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)



மறையுரை:

எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?

யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,

எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.


உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.


நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.

நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.

நம்முன் தற்போது உள்ள கேள்வி: மற்றவர்களுக்கு நாம் பரிசுத்தமானவர்கள் அல்லது தெய்வீகமானவர்கள் என்று எப்படி தெரியும்.? உனது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ எப்படி தெரியும். அல்லது உங்களோடு வாழ்கின்றவர்களுக்கு எப்படி தெரியும். உனது முதலாளி அல்லது மேலாளருக்கு எப்படி நீ பரிசுத்தமானவன் என தெரியும். நீ மாணவனாக இருந்தால், உனது ஆசிரியருக்கு தெரியுமா? உனது குருவானவருக்கு தெரியுமா? உனது அருகாமையில் வசிப்பவருக்கு தெரியுமா? உனது நண்பர்களுக்கு தெரியுமா? உங்களது ஏரியாவில் இருக்கு கடைக்காரர்களுக்கு தெரியுமா? கோவிலில், நீங்கள் ஒன்ரோடொன்றாக கலந்து ஜெபத்திலும், மற்ற சேவைகளிலும் கலந்து கொள்வோருக்கு, நீங்கள் பரிசுத்தமானவர் என்று தெரியுமா?

கடைசி கேள்வியால், நீங்கள் ஆச்சரியபடவேண்டாம். பிரிவுகளும், அநீதிகளூம் பங்கு வாழ்க்கையிலும் உள்ளதால், நாம், கிறிஸ்தவர்கள் நாம், நிறைய உழைத்து, தெய்வீகத்தில் வளர வேண்டும்.

கிறிஸ்துவில் நாம் கொண்ட விசுவாசம், மற்றவர்களுக்கு தெரிய வேண்டும், நம்மோடு உள்ள அடையாளங்களால், அவர்களை மத மாற்றம் செய்யவேண்டும். --கடவுளின் அடையாளங்கள், நம்மிடம் இருக்கிறது. அவரது அன்பு, இரக்கம், ஞானம், பொறுமை, அவரின் மன்னிப்பு, தாழ்மை, குணப்படுத்தும் குணம், அவரது ஆச்சரியங்கள் அனைத்தும் நம்மில் இருந்து, இந்த உலகிற்கு, நம்மை வேறுபடுத்தி காட்டுகிறது.

மக்களுக்கு நீ கிறிஸ்தவன் என்று எப்படி தெரியும்.?