Showing posts with label பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். Show all posts
Showing posts with label பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். Show all posts

Saturday, August 26, 2017

ஆகஸ்டு 27 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு  27 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  21ம் ஞாயிறு
Isaiah 22:19-23
Ps 138:1-3, 6, 8
Romans 11:33-36
Matthew 16:13-20
மத்தேயு நற்செய்தி
அக்காலத்தில் இயேசுபிலிப்புச் செசாரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?''என்று கேட்டார்.          அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள்.
``ஆனால் நீங்கள்நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியாவாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனேநீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை;மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுருஇந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.
பின்னர்தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

சாத்தானின் ஆக்கிரமிப்பை தகர்த்து எறிதல்
இயேசு  இராயப்பரை இந்த திருச்சபையின் பாறையாக அர்சித்து, அதன் மேல் திருச்சபையை கட்டுவேன் என்று சொல்லி, மேலும், ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா, அதன் ஆற்றலும் , இருளின் சக்தியும் , எப்பொழுதுமே வெற்றி கொள்ளா  என்று சொல்கிறார்.
இயேசு பாதாளம் கிறிஸ்துவுடன் உண்டான போரில் வெற்றி கொள்ளாது என்று சொல்லவில்லை, பாதாளத்தின் வாயில்கள் கூத வெற்றி கொள்ளாது  என்று சொல்கிறார். கண்டிப்பாக அது நடக்க போவதில்லை. வாயில்கள் என்றுமே தாக்குவதில்லை!, ஆனால், வாயில்கள் தற்காக்கும், அதனுடன் தொடர்புடைய வெளியுடன் அல்லது காம்பௌண்ட் உடன் அனைத்தையும் காக்கும். சிலர் அவர்களின் பாவங்களினால், அந்த வாயில்களுக்கு அடைந்து இருப்பவர்களை உங்களுக்கு தெரியுமா?
சாத்தானின் செயல்களை செய்பவர்களிடமிருந்து நாம் தற்காத்து இருக்க வேண்டும் என்று திருச்சபை நம்மை அழைக்கவில்லை. கிறிஸ்தாவர்கள் நாம் அனைவரும், சாத்தானை தாக்கி அழிக்க வேண்டும், அதன் வாயில்களை தாக்க அழைக்கபட்டிருக்கிறோம். வாயில்களை தாக்கி அதனை கிழே தள்ள வேண்டும். மேலும் சாத்தானை வெற்றி கொள்ள வேண்டும். சாத்தான் நம் மக்களை அவர்களின் ஆளுகைக்குள், நிரந்தர அழிவிற்கு கொண்டு செல்லும் அதன் நாம் தகர்த்து எரிய வேண்டும்.
2000 வருடங்களுக்கு முன் இயேசு எப்படி மக்களை தீய சக்தியிடமிருந்து விடுதலை கொடுத்தாரோ அதே செயலை இன்று நம் மூலம் செய்கிறார்.
சாத்தானிடமிருந்து வெளியேற நினைக்கும் பாவிகள் , வெளியே வர இரயப்பரிடம் அந்த வாயிலின் சாவியை இயேசு கொடுத்தார், அவர் தான் முதல் ஆயான் (போப் , குருக்கள்) . அந்த சாவி , அப்படியே வழி வழியாக பல தலைமுறைகளை தான்டி கத்தோலிக்க குருக்களிடம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த சாவிகள் என்ன ?  சாத்தானின் வாயில்கள் அருட் சாதனங்களால் திறக்கபடுகின்றன: நித்திய வாழ்விற்கு வழியை திறக்கின்றன. பாவ சங்கீர்த்தனம் முலம் குருவானவர் அருளினையும், கடவுளின் பாவ மன்னிப்பையும் நமக்கு கொடுக்கும் பொழுது நாம் மனம் திருந்தி பாவ மன்னிப்பு பெற விழையும் பொது நமக்கு மோட்சத்தின் வழி பிறக்கின்றது. குருவானவர் , ஆணையும் பெண்ணையும் திருமண அருட்சாதனம் மூலம் இணைக்கும் போது இயேசுவே அதனை செய்கிறார்.
இறைவனின் வரத்தால், இந்த அருட்சாதனங்கள் சாத்தானை ஆட்கொண்டு, வெளியேற்றுகிறது. பிறகும், நாம் கடவுளின் அருளை பெற்று ஒவ்வொரு முறையும் சாத்தானுடன் வெற்றி கொள்கிறோம்.

© 2017 by Terry A. Modica