Showing posts with label பாஸ்கா விழா. Show all posts
Showing posts with label பாஸ்கா விழா. Show all posts

Friday, March 6, 2015

பிப்ரவரி 8 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 8 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு

Ex 20:1-17
Ps 19:8-11
1 Cor 1:22-25
John 2:13-25

யோவான் நற்செய்தி

கோவிலைத் தூய்மைப்படுத்துதல்
(
மத் 21:12 - 17; மாற் 11:15 - 17; லூக் 19:45 - 46)
13யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16அவர் புறா விற்பவர்களிடம்,' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் 'என்று கூறினார்.17அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19இயேசு மறுமொழியாக அவர்களிடம்,' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் 'என்றார்.20அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
இயேசு அனைவரையும் அறிபவர்
23பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் .24ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.25மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

(thanks to www.arulvakku.com)

இயேசு, அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தவர்களை இயேசு இன்னும் நம்பிவிடவில்லை. இதனை தான் இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்து காட்டுகிறது. மனித மன அளவில், விசுவாசம் கொள்பவர்களை கொண்டு இயேசுவிற்கு சாட்சியம் கொடுக்க வேண்டும் என்பதை இயேசு விரும்பியதில்லை.

அரும் செயல்களால் நம்பிக்கை கொள்வது மனிதனின் இயல்பான செயல் ஒன்று: நாம் மனிதனாக காணும் அரும் செயல்களையும், தொட்டு உணர்வதாலும், நாம் அதிக நம்பிக்கை கொள்கிறோம். நம் கண்ணுக்கு தெரியாத ஒன்றை , கடவுளின் வார்த்தையை கேட்க முடியாத ஒன்றை நாம் அந்த அளவிற்கு நம்புவதில்லை. இது மாதிரியான விசுவாசம் கொள்வது, இயற்கையை தாண்டியது அல்ல. ஆனால் கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்.


நாம் கடவுளிடம் வேண்டி , ஜெபித்து , மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்டு, ஒன்றும், அவர் செய்ய வில்ல என்றால், நம் விசுவாசம் என்ன ஆகும். இது மாதிரியான ஸூழ் நிலைகளில் நாம் நடந்து கொள்ளும் விதம், நாம் இவ்வுலக குணங்களுடன் நடந்து கொள்கிறோம். ஆனால் தெய்வீக வாழ்வு இதிலிருந்து இவ்வுலக இயற்கை நியதியிலிருந்து மாறுபட்டது.


இயேசுவுக்கு அவர் மனிதனாக இருப்பதே முக்கியமான சான்று ஆகும், ஆனால் மிக விரைவில் அதுவும் மேலே எடுத்து கொள்ள படும். சில நேரங்களில் இயேசு நம் முன்பு வந்து நம் காது கேட்க பேச மட்டாரா? என்று நாம் ஆசைபடுவது உண்டு. அப்போது நாம் இன்னும் பலமாக விசுவாசம் கொள்வோம்.

அதனால், நாம் விசுவாசம் கொள்வது : நமது ஜெபத்திற்கு கிடைக்கும் பதில், அன்பில் நமக்கு கிடைக்கும் சாட்சியம், நம் மனதில் எழும் அமைதியும், சந்தோசமும், மற்றும் பல, அதன மூலம், நாம் அதிக விசுவாசம் கொள்கிறோம். ஆனால் சோதனையிலும், கடும் கடி னமான
காலங்ககளும் நம்மை என்ன செய்கிறது ? நமது விசுவாசம் என்ன ஆனது ? தொடர்ந்து நாம் கடவுளின் மேல் விசுவாசத்துடன் அவரை தொடர்கிறோமோ ?

இதில் வெற்றி கொள்ள, நாம் இயற்கை மீறிய விசுவாசம் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தில் நாம் இணைந்து , அவரின் விசுவாசத்தோடு இணைகிறோம். அதன் பிறகு, நமக்கு எந்த சான்றும் அடையாளங்களும் தேவையில்லை. அவரை முழுமையாக
நம்புவோம்.

இதனை அடுத்த முறை இயேசுவை நற்கருணையில் வாங்கும் போது நினைவில் கொள்ளுங்கள். அவரது உடலை மட்டும் நீங்கள் உன்ன வில்லை. அவரின் தெய்விகத்தொடு ஒன்று சேர்கிறோம். அவர் உங்களோடு சேர்கிறார். இதனை நீங்கள் முழுமையான நம்பினால், கண்டிப்பாக உங்களுள் அரும் செயல்களும் நிகழும். அது மட்டும் அல்ல, அவர் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அன்பளிப்பு இது மட்டும் அல்ல,
அவர் உங்களிடம் அவரிடம் உள்ள அத்தனையும் தர ஆசையுடன் உள்ளார்.

© 2015 by Terry A. Modica