செப்டம்பர் 16 2007 ஞாயிறு நற்செய்தி , மறையுரை:
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 15
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். 2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர். 3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 4 ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? 5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; 6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார். 7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 8 ' பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? 9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார். 10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். ' 11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; 15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. 17 அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார். 20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார். 22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; 23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். 25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார். 27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார். 28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார். 31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '
http://www.arulvakku.com
மறையுரை:
இன்றைய நற்செய்தி, இழந்ததையெல்லாம், திரும்ப கிடைக்க வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்தை உறுதிமொழியாக குறிப்பிடபடுகிறது. நமது கடவுள், சமரசத்திற்கும், புதுபித்தலுக்குமான இறைவன் ஆவார். உண்மையை விட்டு விலகி செல்பவர்களை மீண்டும் கொண்டுவர அவர்கள் பின் செல்கிறார்.
ஏனெனில், அவர் அனைவர் மேலும் அக்கறை கொள்கிறார். அவர், உங்களையும், என்னையும் விட, நம்மில் கானாமல் போனவர்கள் மேல் அக்கறை கொள்கிறார். நம்மை ஒதுக்கி தள்ளுபவர்கள், திருச்சபையின் வாழ்வை விட்டு போனவர்கள், அல்லது தனது விசுவாசத்தை ஒதுக்கியவர்கள், மிக வெகுமதியான் பொருளை இழந்தவர்கள் ஆவர்.இன்றைய நற்செய்தியில் குறிப்பிடபடும், 'காசு' ஆகும்.
அவர்களின், குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் தேவையான மதிப்பு, இங்கே இழக்கபடுகிறது. அவர்கள் இல்லாமல் இருப்பது, சமூகத்தின் சக்தியை குறைக்கிறது. சமூக வாழ்க்கையின் சக்தி ஊற்று ஆக இருக்கிற கடவுள், எல்லா வகையான வழிகளிலும், அவர்களை சமூகத்தோடு இணைக்க முயற்சிக்கிறார். அவர்கள் ஒன்றினைத்து, திருந்தி வாழவும், பாதுகாப்பாக திரும்ப வரவும் கடவுள் உதவுகிறார்.
நாம் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டு விட்டு, அவர் பார்த்துகொள்வார் என்று இருந்து விட கூடாது. அவரோடு சேர்ந்து அவர் பணிகளை செய்ய வேண்டும். அவர் நம் மூலம் அவரின் பணிகளை செய்கிறார். ஆனால் நாம் முயற்சி செய்யும் போது, நமது செல்வாக்கு ஒன்றுமில்லை. கடவுள் அந்த எல்லா ப்ரசனைகளிலும் தொடர்ந்து, அவர் கவனித்து , அதனை விலக செய்கிறார். யேசு அந்த ப்ரச்னைகளை தொடர்ந்து விரட்டிகொண்டிருக்கிறார் என்று நாம் நம்புவோம். அந்த எதிர் மறை விசயங்கள், யேசுவை கண்டவுடன், ஓடி ஒளிகின்றன. அவைகள் யேசுவை புறந்தள்ளினாலும், அவர் அந்த ப்ரச்னைகளின் அருகில் தான் இருக்கிறார்.
நாம் இவையெல்லாம் விட்டு விலகாமல், கடவுளை விட்டு விலகி போனவைகளை, இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால், யேசுவிற்கு, நாம் ஏன் செய்யவில்லை என்று பதில் சொல்ல வேண்டும். நாம், ஏன் பாவிகளை அன்பு செய்வதில், நம்மை விட்டு விலகி செல்பவர்கள், நம்மை ஒதுக்கியவர்கள் அன்பு செய்வதில், தோற்கிறோம். யேசு அவர்கள் மேல் கொண்ட அன்பு போல், நம்மால் செய்ய முடியவில்லையே? நாம் அவர்களை ஒதுக்கி விட ஏதாவது செய்தோமோ?
நாம் நமது குற்ற உணர்வுகளிடமிருந்து மணம் திரும்பி மாற வேண்டும். நாம் தாழ்மையுடனும், அடக்கத்துடனும், இருந்தால், நமது பூர்த்தியடையாத அன்பிலிருந்து விடுபட்டு, யேசுவின் அன்பை மற்றவர்கள் முழுமையாக புரிந்து கொள்வர், அவர் அவர்கள் பின் செல்வது போல்.
சுய பரிசோதனைக்கான கேள்வி:
உங்கள் குடும்பங்களில்,உங்கள் பங்கில், யாரெல்லாம், காணாமற் போனவர்கள், இழந்த வெகுமதியான பொருள் எது? யேசுவிடம் அவர்களை கொண்டு செல்ல , அவரின் அன்பை அவர்களுக்கு வழங்க இந்த வாரம் என்ன செய்ய போகிறாய். பங்கு மன்றம், அல்லது மண மாற்றத்திற்கான புத்தகம், அல்லது பயிற்சி புத்தகங்கள் உங்களுக்கு சொல்லி கொடுக்கலாம். அதன் மூலம், மற்றவர்களை யேசுவிடம் கொண்டு செல்லுங்கள்.
http://www.gnm.org
Showing posts with label மறையுரை திருச்சபை. Show all posts
Showing posts with label மறையுரை திருச்சபை. Show all posts
Friday, September 14, 2007
Subscribe to:
Posts (Atom)