Showing posts with label வழியும் உண்மையும் வாழ்வும் நானே.. Show all posts
Showing posts with label வழியும் உண்மையும் வாழ்வும் நானே.. Show all posts

Saturday, May 17, 2014

மே 18, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 18, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 6:1-7
Psalm 33:1-2, 4-5, 18-19 (with 22)
1 Peter 2:4-9
John 14:1-12
யோவான் நற்செய்தி

மீண்டும் இயேசு, ' நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ' உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ' என்று சொல்லியிருப்பேனா?3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் என்றார்.தோமா அவரிடம், ' ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? ' என்றார்.இயேசு அவரிடம், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.7 ' நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள் என்றார்.அப்போது பிலிப்பு, அவரிடம், ' ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் ' என்றார்.இயேசு அவரிடம் கூறியது: ' பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ எப்படிக் கேட்கலாம்?10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, “நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்.“ என்று முடிகிறது.  இதன் மூலம் இயேசு என்ன சொல்ல வருகிறார்? நாம் எப்படி அவரை போலவும், அவர் செய்த புதுமைகளை விடவும், நம்மால் செய்துவிட முடியும் ?

இதற்கு பதில், இந்த அதிகாரம் முழுதும் உள்ளது. இயேசு தந்தையுடன் உள்ள அவரது நெருங்கிய உறவை பற்றி கூறுகிறார். இயேசு இன்னும் மனிதனாகவும், தெய்வாமாகவும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனை நினைவில் வைத்து கொண்டு இந்த நற்செய்தி வசனங்களை நாம் வாசிக்க வேண்டும். சூசையின் மகனாக இருந்து கொண்டு, கடவுள் தந்தைக்கு அவர் எப்படி சேவை செய்ய முடியும்? தந்தை கடவுளின் மகனாக இருந்து கொண்டு, இயேசு எப்படி இறைசேவை செய்ய முடியும் ?

“நான் செய்யும் செயல்கள்”  என்று இயேசு குறிப்பிடுவது, அவர் மனிதனாக செய்யும் செயல்கள்: அனைவரையும் அன்பு செய்வது, போதனை செய்தல், உண்மையாக அக்கறையுடன் கேட்கும் இதயத்துடன் பேசுவது, மற்றவர்களோடு அமர்ந்து உணவு உண்பது, அவரது வேளையில் அதிகம் உழைத்தது, அவரது இரைசேவையை அக்கறையுடன் செய்தல் போன்றவை.  “12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்;” – பரிசுத்த மனிதனாக இருப்பதற்கு அவர் ஓர் எடுத்து காட்டாக இருக்கிறார். இயேசு மற்றவர்களை முழுமையாக அன்பு செய்தது போல, நாமும் மற்றவர்களை அன்பு செய்வோம். விசுவாசத்தை மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம், மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். நமது வேளைகளில், கடுமையாக உழைப்போம். மற்றவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உதவி செய்வோம். இதனை செய்வதற்கு நமக்கு ஒன்றும் தெய்வீக அருள் தேவை இல்லை. மனிதனாகவே இருந்து இதனை செய்வோம். தெய்வ தந்தையின் அன்பு நிறைந்த தந்தையின், மனித குழந்தைகளாக .

இதனை தாண்டிய அளப்பற்கரிய செயல்கள், தெய்வீக கடவுளிடமிருந்து வருகிறது: இயேசு தந்தையின் தெய்வீக செயல்களை செய்தார். 12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார், தந்தையின் செயல்களையும் செய்வார். தந்தை கடவுளின், தெய்வீக காரியங்களை செய்ய , இவ்வுலகில், நாம் அவரின் கருவியாக இருக்கிறோம்.
இயேசு நம்மோடு, அவரை  மனிதனாக இணைத்து, மனித எல்லையை விட்டு, அதற்கு மேலே, நாம் எப்படி வளர முடியும், என்று காண்பித்தார். இப்பொழுது, ஞானஸ்நாணத்தின் மூலமும், திவ்ய நற்கருணை மூலமும், உறுதி பூசுதல் மூலமும் நமக்கு காண்பிக்கிறார். கிறிஸ்துவின் தெய்வீக இருப்போடு, நாமும் இணைக்கபட்டிருக்கிறோம்.அதன் மூலம் தந்த கடவுளின் செயல்களை இப்பூவுலகில் நாம் செய்யலாம். பாவ சங்கஈர்த்தனத்தின் மூலம், எந்த ஒரு இணைப்பிற்கு எதிரான செயல்கள் அழிக்கப்பட்டு மீண்டும் நாம் அவருடன் இணைகிறோம். அதன் மூலம் அன்பு செய்ய இயலாதவர்களை கூட நாம் அன்பு செய்ய முடியும். அவர்கள் நம்மை ஒதுக்கினாலும், நாம் அவர்கள் மேல் அன்பு கொள்ள முடியும். கடவுள் இறை தன்மையை இந்த பூமியில் கொண்டு வரும் தூதர்களாக இருப்போம். நம் குறைகளை தாண்டி நாம் கடவுள் நமக்கு சொல்லும் செயல்களை செய்ய முடியும்.
© 2014 by Terry A. Modica