மார்ச் 5 2016 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின்
முதலாம் ஞாயிறு
Genesis 2:7-9; 3:1-7
Psalm 51:3-6, 12-13, 17
Romans 5:12-19
Matthew 4:1-11
மத்தேயு
நற்செய்தி
இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
(மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
1அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப்
பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.✠
2அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார்.
அதன் பின் பசியுற்றார்.
3சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக்
கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான்.
4அவர் மறுமொழியாக,
“‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல்
ஒவ்வொன்றாலும் வாழ்வர்’
என மறைநூலில் எழுதியுள்ளதே”
என்றார்.✠
5பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக்
கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,
6“நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்;
‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்.
உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’
என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது.✠
7இயேசு அதனிடம்,
“‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்’
எனவும் எழுதியுள்ளதே”
என்று சொன்னார்.✠
8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக்
கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,
9அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத்
தருவேன்” என்றது.
10அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து,
“அகன்று போ, சாத்தானே,
‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’
என்றும் மறைநூலில் எழுதியுள்ளது”
என்றார்.✠
11பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர்
வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
(thanks to www.arulvakku.com)
இந்த தவ காலத்தில் பெற வேண்டிய வெற்றி என்ன ?
சோதனைகளில் எப்படி கையாள்கிறீர்கள் ? இதனை தான் நமக்கு ஒரு சவாலாக வார்த்தைகளின்
கடவுள் இந்த முதல் தவ ஞாயிறில் கொடுக்கிறார். மேலும், நமது பயணத்தை இயேசுவோடு தொடங்கி,
மிகவும் பரிசுத்தமான இடத்திற்கு , நாம் செல்கிறோம்.
இந்த தவ காலம் வேறு தவ காலாம் போல கிடையாது. போன வருடம்,
உங்கள் தேவைகள் வேறாக இருந்தது, உங்கள் வளர்ச்சி வேறாக இருந்தது, புரிதலும்,
உள்ளார்ந்த பார்வைகளும் வேறாக இருந்தது. அதற்கு பிறகு பல் வேறு விசையங்கள் நடந்து
விட்டன. அவைகள் அனைத்தும் தயாரிப்புகள் ஆகும், அந்த தயாரிப்பின் மூலம் கடவுள் உங்களுக்கு
இதோ இப்பொழுது கொடுக்க இருக்கிறார்.
இந்த வருடம் உங்களுக்கு தேவையாக வெற்றி என்ன? எதனை மீட்க வேண்டும்?
அந்த வெற்றி அடைய இயேசு உங்களை, சிலுவையின்
வழியில், தன்னையே துறந்து, கல்லறையின் வழியில் சென்று, கடவுளின் ஒளியில் உங்களை
அழைத்து சென்று , அவரின் அன்பின் மூலம் உங்களுக்கு புது வாழ்வையும் , அன்பையும்
கொடுக்கிறார்.
இந்த தவக்காலத்தில் -- ஒவ்வொரு முறை, நாம் தியாகம்
செய்யும்பொழுது, அதனை இயேசுவின் பாடுகளோடு இணைத்து, -- நாம் இயேசுவை அவரின்
சிலுவையை பின் சென்று , கிறிஸ்துவின் மீட்பில் பின் செல்கிறோம். புதிய ஒளியில்,
நாம் நம் சிலுவைகளை பார்க்கிறோம், கல்வாரி மலை தான் ஒரே வழி, வெற்றியை அடைவதற்கு நாம்
செல்லும் வழியாகும்.
இந்த ஈஸ்டர் நாள் , மிகவும் முக்கியத்துவம் அடைய வேண்டும்
என்றால், (வண்ண முட்டைகள் , சாக்கலேட் பன்னாகவும், பெரிய விருந்தாகவும் மட்டுமே
இல்லாமல்), இந்த 40 நாட்களும், நம்முள் ஏற்பாடு எரிச்சல்களையும், கோபத்தையும், பொருட்படுத்தாமல்,
தேவையான தியாகங்களை செய்தும், வெள்ளி கிழமைகளில் சைவ உணவு உண்டு, இன்னும் அதிக
நேரம் கோவிலில் செலவிட்டு , இந்த தவ கால
வாழ்வை இன்னும் அதிகம் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
மீட்பின் ஆற்றலை நாம் அனுபவிக்க வேண்டுமெனில், துக்கத்தின்
ஆற்றலை நாம் முதலில் அனுபவிக்க வேண்டும், அதன் மூலம் , நம் பாவத்திற்கு மனம்
திரும்ப வேண்டும். வேறு விதமாக சொல்ல வேண்டுமெனில், ஆற்றல் இல்லாத மரணத்தை நாம்
அனுபவிக்க வேண்டும் -- சுய நலத்தின் மரணத்தை, இவ்வுலக ஆசைகளை விட்டு விலகுதல்,
கிறிஸ்துவிற்கு ஒத்து வராத பழக்க வழக்கங்களை விட்டு விலகுதல்.
© 2017 by
Terry A. Modica