Showing posts with label விசுவாசத்துடன் ஜெபம். Show all posts
Showing posts with label விசுவாசத்துடன் ஜெபம். Show all posts

Saturday, July 23, 2016

24 ஜூலை 2016, ஞாயிறு நற்செய்தி மறையுரை

24 ஜூலை  2016, ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
Genesis 18:20-32
Ps 138:1-3, 6-8
Colossians 2:12-14
Luke 11:1-13
லூக்கா  நற்செய்தி

இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தல்
(மத் 6:9 - 15; 7:7 - 11)
1இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்என்றார்.

2அவர் அவர்களிடம், 
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்:
தந்தையே, உமது பெயர்
தூயதெனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
3எங்கள் அன்றாட உணவை
நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
4எங்களுக்கு எதிராகக் குற்றம்
செய்வோர் அனைவரையும்
நாங்கள் மன்னிப்பதால் எங்கள்
பாவங்களையும் மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு
உட்படுத்தாதேயும்.
[தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்]
என்று கற்பித்தார்.
5மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 
உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு.

6என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லைஎன்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

7உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாதுஎன்பார்.

8எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

9மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.

10ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

11பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?

12முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

13தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!
(thanks to www.arulvakku.com)

விசுவாசத்தோடு ஜெபிப்பது எப்படி ?
இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு எப்படி விசுவாசத்துடன் ஜெபம் செய்ய வேண்டும் என போதிக்கிறார். மேலும் நீங்கள் கூர்ந்து வாசித்தால், நாம் கேட்பது அனைத்தும் கிடைக்கும் என்பதை அவர் சொல்லவில்லை. எல்லாமே நமக்கு நல்லதில்லை. "உணவு" என்று இந்த நற்செய்தியில் வரும் அனைத்தும் பரிசுத்த வாழ்வை குறிக்கிறது. இயேசு தான் "வாழ்வின் உணவு" . பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு நமக்கு கிடைக்கும் பரிசுத்த வாழ்வு.
நற்செய்தியின் உவமையில், நண்பராக வருவபவர் கடவுளின் நண்பர், அவர் ஒன்றும் புதியவர் இல்லை. மற்ற நண்பரோடு தனது உணவை பகிர்ந்து கொள்ள விரும்பினார். கடவுளின் நட்பை (மூன்று ரொட்டி துண்டுகள்-- திரித்துவ கடவுள்)  ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவதை காட்டுகிறது. ஆனால் மற்றவர்களோ அதனை பெற   தகுதி அடையவில்லை.
நம்மிடம் இல்லாதாதை பெற கடவுளின் இருதயத்திடம் கேட்கும்பொழுது , தந்தை கடவுள் எல்லாமும் நிறைந்த பரிசுத்த ஆவியை நமக்கு கொடுக்கிறார், அது மட்டும், ஒவ்வொரு முறை நாம் ஜெபம் செய்யும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் நம்மை தந்தை கடவுளிடமும் , இயேசுவிடமும் இணைக்கிறார். அதனால் ஒவ்வொரு ஜெபமும் நமது பரிசுத்தத்தை அதிகமாக்குகிறது, மேலும், நம்மை கடவுளிடம் நெருங்கி அழைத்து செல்கிறது, அதன் மூலம் இயேசுவை போல நம்மை மாற்றுகிறது. ஆனால் பரிசுத்தம் அவ்வளவு சீக்கிரத்தில் சுலபமாக வந்து விடுவதில்லை. நமது ஜெப வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு இருக்க வேண்டும். கடவுளின் ஆவியை நம்பி எப்பொழுதும் அவரின் துணை வேண்டி , நமது சோதனைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை அவரிடம் வேண்டி தொடர்ந்து பரிசுத்த வாழ்வில் பயணம் செய்ய வேண்டும்.
கடவுளிடம் நாம் என்ன கேட்டாலும், பொருளுதவி கேட்டாலும், நமது ஆசைகள் எது கேட்டாலும், கடவுள் அதன் மூலம் நமது ஆன்மா பயன் பட வேண்டும் என ஆசைபடுகிறார். "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு கொடுத்தருளும்" என்று தான் நாம் கேட்கிறோம். தொடர்ந்து ஜெபியுங்கள், ஒரே ராத்திரியில் கடவுளின் உணவு கிடைத்து விடுவதில்லை (நாம் மிகவும் மெதுவாக கற்று கொள்பவர்கள்)
சாத்தான் தான் நாம் கேட்கும் அனைத்து உடனே கிடைத்து விடும் என்று சொல்லி நம்மை அழைக்கிறது. இந்த புதிய யுகத்தில்,துரித உணவு கலாசாரத்தில் , நாம் தவறான நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். இந்த காலத்தில், பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி தடை பட்டு கொண்டு இருக்கிறது. பரிசுத்த ஆவி தான் நமக்கு பரிசுத்த வாழ்வை கொடுப்பவர் என்பதை நாம் நம்ப வேண்டும். பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதால் பல, சுலபமான சாத்தானின் வழியில் சென்று விடுகிறார்கள்.
நமது ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியை நாம் ஏற்கனவே பெற்று விட்டோம். நமக்கு தேவையான அனைத்தும் பரிசுத்த ஆவியிடம் போதுமான அளவிற்கு இருக்கிறது, அதனை நாம் கேட்க வேண்டும் . எனினும், கடவுளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலில் வாழ்வதற்கு , நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும், நமது பாவங்களை கண்டறிந்து , மனம்  வருந்தி, நமது சுய நலன்களை களைந்து எறிந்து, பரிசுத்த ஆவியின் பரிசுத்தத்திற்கு நம்மை ஒப்படைப்போம்.


© 2016 by Terry A. Modica