Saturday, October 16, 2010

அக்டோபர் 17 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 17 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 – 4:2
Luke 18:1-8


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை
1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில்,கடவுளிடம் விசுவாசம் கொள்பவர்களிடம் , அவர்கள் நீதி வேண்டி அவரிடம் வந்தால் , கண்டிப்பாக அவர்க்ளுக்கு தேவையான உரிமையையும், பாதுகாப்பையும் தருவார். நம்மை யாராவது நிராகரித்தாலோ, ஒதுக்கபட்டாலோ, தவறான குற்றமிழைக்கபட்டாலோ, கடவுள் நம்மை காப்பார். மேலும் கடைசியாக, எவ்வளவு சீக்கிரமாக உங்களை காப்பாற்ற வருவார்? நிச்சயம் உடனே வருவார். அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றினாரா?

கடவுள் எப்பொழுமே மெதுவாக தான் நாம் வேண்டும் ஜெபத்திற்கு பதிலளிப்பார். (சில நேரங்களில் மாதங்கள் , வருடங்கள் ஆகலாம்). , அந்த ப்ரச்னை முடிவிற்கு வரும் வரை, யேசு உங்களோடு இருப்பார், மேலும் சாத்தானிடமிருந்து உங்களை காப்பார்.

யேசு எங்கே என்பது நமது கேள்வியல்ல. அல்லது ஏன் அவர் உடனே நமக்கு உதவி செய்ய வில்லை என்பது நமது கேள்வி அல்ல. இன்றைய நற்செய்தியில் கடைசி வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, யேசு உங்களிடம் வரும்போது நம்பிக்கையோடு இருப்பீர்களா? அல்லது ப்ரச்னையில் உள்ள பயத்தால் அவரை நாம் அடையாளம் கொள்ளவில்லையா?

நாம் விசுவாசத்தோடு வாழாவிட்டால், நமது ப்ர்ச்னையை இன்னும் பெரிதாக்கி செல்கிறோம். கடவுளை உதவிக்கு அழைத்த பின் இன்னும் மனச்சோர்வு அடைகிறீர்களா? நன்றாக கவனியுங்கள், யேசு உங்கள் அருகிலேயே நிற்கிறார், உங்கள் அதி விசுவாசத்தையும் நம்பிக்கையும் பெற. கடவுள் உங்கள் தடைகளை உடைதெறியாமல் இருப்பதால், நீங்கள் செயல்குழைந்து போகிறீர்களா? மேலும் கவனியுங்கள் யேசு உங்கள் நீங்கள் செல்லும் வழியை விட்டு, வேறு வழிக்கு , அவர் காட்டும் வழியில் செல்ல சொல்கிறார்.

நாம் எல்லாருக்கும் பகைவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எதிராக வேலை செய்யும் சாத்தானின் ஆவியை யேசு வெட்டி உங்களை விட்டு தூர ஒட்டுகிறார். ஆனால், அந்த யேசுவின் செயலை நம்பவில்லையானால், யேசுவின் வாளினால், உங்களுக்கு ஒரு உதவியும் இல்லை.
உங்களை அடிக்கடி எப்பொழுதுமே தொந்தரவு செய்பவர்களை என்ன செய்யலாம். உங்கள் கண்கள் யேசுவை பார்க்காமல், அவர்களையே பார்த்து கொண்டிருந்தால், யேசு உங்களுக்கு கொடுக்கும் உரிமையை நீங்கள் தவற விட்டு விடுவீர்கள். நாம் விசுவாசத்தோடு வாழும்போது, யேசு நமக்கு கொடுக்கும் உரிமையை, அன்பளிப்பை நாம் அனுபவிக்க முடியும். அதனை நாம் இதயத்திலும், அவரது அமைதியையும், சமாதானத்தையும்,இடைவிடா முயற்சியையும் நாம் அனுபவிப்போம்.

© 2010 by Terry A. Modica

Friday, October 8, 2010

அக்டோபர் 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு
2 Kings 5:14-17
Psalm 98:1-4
2 Timothy 2:8-13
Luke 17:11-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17


பத்து தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்
11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?18கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார்.19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ஏன் 9 தொழு நோயாளிகள், தங்கள் நோய் குணமாகிய பின் யேசுவிடம் திரும்பி வந்து நன்றி சொல்லவில்லை? ஒரு வேளை, அவர்கள் குடும்பத்தினருக்கும் அல்லது நணபர்களிடமும் சொல்ல சென்று விட்டார்களோ? அல்லது உண்மையிலேயே நாங்கள் குணமாகிவிட்டோம், அதனால் உங்களோடு நாங்களும் சேர்ந்து இருக்கலாம் என்று அவர்களிடம் கூறினார்களோ? அல்லது ஒரு வேலை வாங்கி கொண்டு தங்கள் சம்பாத்தியத்தை பார்க்கலாம் என்று இருந்தார்களோ? ஏனெனில் தற்போது மற்றவர்களிடம் பிச்சை எடுத்து வாழமுடியாது என்று வேலை தேடியிருக்கலாம்.

எல்லாமே தகுதியான, மற்றும் நம்ப தகுந்த பதில்களே ஆகும்.
அந்த சமாரிய தொழுநோயாளிக்கும் மட்டும் என்ன வித்தியாசம். வித்தியாசம் அவனது உள்ளத்தில் இருந்தது. அவனது தெய்வீக ஆண்மாவில் இருந்தது. யேசுவின் மேல் உள்ள அவனது விசுவாசம் அவனது உடலை மட்டுமல்ல, அவனது ஆன்மாவையும் குணமாக்கியது. அவனுக்காக மட்டும் அவன் கடவுளை பார்க்க போகவில்லை. கடவுளுக்காகவும் அவன் யேசுவை பார்க்க சென்றான். அவனிடமிருந்து சிலவற்ற அவன் யேசுவுக்கு கொடுக்க விரும்பினான். பாராட்டுதல், ஆராதனை நன்றி மற்றும் பல, அவன் யேசுவிற்கு கொடுக்க விரும்பினான்.

நாமும் அப்படித்தான் இருக்கிறோமோ?
நாம் திருப்பலிக்கு செல்லும்பொழுது, நமக்காக மட்டும் தான் போகிறோமோ? அல்லது கடவுளுக்காகவும் போகிறோமா? இது இரண்டும் நடந்தால், நாம் கோவிலில் நல்ல ஒரு அனுபவத்தை அடைகிறோம். யேசு திவ்ய நற்கருணை வழியாக உங்களிடத்தில் வருவதற்கு யேசுவுக்கு நன்றியும், போற்றுதலும் கூறுகிறீர்களா? உங்கள் வேண்டுதலில் பெரு மகிழ்ச்சி அடைகிறீர்களா? நீங்கள் சந்தோசத்துடனே அங்கே இருக்கிறீர்களா?
நாம் நமது வேண்டுதலை கடவுளிடம் வைக்கும் பொழுது, நமக்காக அதனை கேட்கிறீர்களா? அல்லது கடவுளுக்காகவும் அந்த வேண்டுதல், கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கடவுளிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை என்று நினைத்து பாருங்கள். அந்த தேவைகள் கடவுளரசிற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் ?
ஒரு குறிக்கோளை நாம் அடையும் போது, அதனால் கடவுள் பயனடைகிறாரா? நமது சோதனைகளுக்கிடையே அவர் நமது வேண்டுதலுக்கு பதிலளிக்கும்போது , அவருக்கு என்ன கைமாறு கிடைக்கிறது?
கடவுள் அவருக்கே கொடுக்க முடியாத சில விசயங்கள் உங்களிடம் உள்ளன. நமது பாராட்டுதல் மற்றும் வேண்டுதல், ஆராதனை. இந்த அன்பளிப்புகளை குறைவாக மதிப்பிடாதீர்கள்.

© 2010 by Terry A. Modica

Friday, October 1, 2010

அக்டோபர் 3, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

அக்டோபர் 3, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Habakkuk 1: 2-3; 2: 2-4
Psalm 95:1-2,6-9
2 Timothy 1:6-8, 13-14
Luke 17:5-10

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17

இயேசுவின் அறிவுரைகள்
(மத் 18:6 - 9; மாற் 9:42 - 48)
. ' 5 திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ' எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் ' என்று கேட்டார்கள்.6அதற்கு ஆண்டவர் கூறியது: ' கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ' நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில் ' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.7 ' உங்கள் பணியாளர் உழுது விட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ' நீர் உடனே வந்து உணவருந்த அமரும் ' என்று உங்களில் எவராவது சொல்வாரா?8 மாறாக, ' எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம் ' என்று சொல்வாரல்லவா?9 தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?10 அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ' நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் ' எனச் சொல்லுங்கள். '

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, நமக்கு அதிகம் தொந்தரவாக உள்ளது. கடினமான வேலைகளை செய்து, அதனை கடவுளுக்கு அர்ப்பணிக்கும்பொழுது, கடவுளிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது "நீங்கள் ஒரு நல்ல பணியாளன்"
நாம் வீட்டினில் வேலை செய்தாலும், அலுவலகத்தில் வேலை செய்தாலும், அதற்குரிய பாராட்டு கிடைக்காமல், மேலும் பல வேலைகள், நம்மை செய்ய சொல்வார்கள்!. குடும்பத்தில், பெற்றோர்கள் நாள் முழுதும் வேலை செய்து ஓய்வாக இருக்கும் நேரத்தில் கூட, குழந்தைகளுக்காக படிப்பு வேலை செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில், நேர்மையாக வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை பளு தரப்படுகிறது, ஏனெனில் சோம்பேறிகளாக உள்ள நபரிடம் வேலை கொடுப்பதை விட, நல்ல முறையில் வேலை செய்பவர்களுக்கே அதிக வேலை கொடுக்கபடுகிறது. பங்கு கோவிலிலும், 10 சதவிகித மக்களே எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.
"கடவுளே நான் உங்கள் இறையரசின் நல்ல ப்ணியாளன் இல்லை! ஏனெனில், எனக்கு இடப்பட்ட வேலைகளை மட்டுமே நான் செய்கிறேன்!". என்று நாம் இந்த வேலைகளை செய்யும்போது , நம்முடைய பதில் இதுவாக இருக்கும் என்று இயேசு சொல்கிறார். அதிக வேலை பளு நமக்கு கொடுக்கபடவேன்டும் என்று இயேசு கூறுகிறாரா? அப்படி ஒன்றும் இல்லை. என்ன சொல்கிறார் என்றால், நமக்கு கொடுக்கபட்ட வேலைகளை செய்வதை விட, நமது அன்பினாலும், அக்கறையினாலும் நாமே அந்த வேலைகளை எடுத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும்.


ஓய்வெடுப்பதும் மிக முக்கியமாகும். இயேசுவும் சில நேரம் எடுத்து கொன்டு ஜெபம் செய்து, அவர் சக்தி பெறுவார். மற்றவர்களுக்கு வேலை கொடுப்பது சரியானது தான், அதனால், நாம் மட்டுமே எல்லா வேலைகளை செய்து நாம் நமது சக்தியை வீனடிக்க வேண்டியது இல்லை. இயேசுவும் சில வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். இதே போல் சமமக பிரித்து கொள்வது தான் நாம் எல்லாருக்கும் தேவையானது.
எனினும், நம்மில் பலர், இன்னும் கொஞ்சம் அதிகம் வேலை செய்ய வேன்டும் என்று நினைப்பதில்லை, அதற்காக முயற்சி எடுப்பதுமில்லை. ஏனெனில், நமக்கு எதிலும் சமமான , ஆக்கபூர்வமான விசுவாசம் இல்லை. மிதமான நிலையிலேயே, இருக்க விரும்புகிறோம். ஒரு வேலை நாம் செய்ய வேன்டிய தேவையிருந்தால் தான் நாம் செய்கிறோம். அல்லது நமக்கு தோதுவாக இருந்தால் தான் அந்த வேலையை செய்கிறோம். இதையே தான் நமது தெய்வீக வாழ்விலும் செய்கிறோம். மேலும் ஒரு மரத்தை கடலில் போய் விழு என்றால் , விழுந்துவிடும் என்று இயேசு சொல்வதை பார்த்து நாம் ஆச்சரியபடுகிறோம். எப்பொழுது நீங்கள் இது போல ஆச்சரியத்தை பார்த்தீர்கள்?

அதிக விசுவாசத்துடனும், அதிக சேவையும், வேலையும் செய்வதிலும் உள்ள தொடர்பு இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது: இந்த இரண்டுமே நடக்க, நாம் கடவுளின் அன்பு முழுமையானது என்றும், எவ்வித நிபந்தனையற்றது எனவும், நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதிலிரிந்தே கடவுள் நமக்கு சேவை செய்ய எப்பொழுது தயாராய் இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. அதனால், நம் மூலம், அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதனை அவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது. நாம் அயற்சி ஆகும்பொழுது , கடவுள் நமக்கு மீண்டும் உற்சாகமும், ஆற்றலும் சக்தியும் கொடுப்பார். இதனை நீங்கள் நம்புகிறீர்களா?

© 2010 by Terry A. Modica

Friday, September 24, 2010

செப்டெம்பர் 26, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டெம்பர் 26, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Ps 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31

செல்வரும் இலாசரும்
19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் உள்ள பணக்காரனின் பாவம் என்ன? அவன் இறந்த பிறகு எதனால் அவனுக்கு அந்த சித்திரவதை கிடைத்தது.? செல்வத்துடன் இருப்பது ஒன்றும் பாவமில்லை; அவனுடைய ஆண்மாவை துன்புறுத்தியது எது என்றால், அவருடைய செல்வத்தை பிறருக்கு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை, லாசருடனும் அவன் பகிரிந்து கொள்ளவில்லை, அவனுக்கு வாய்ப்பு இருந்தும் அந்த பணக்காரன் பயன்படுத்தி கொள்ளவில்லை.

மரணம் ஒன்றும் வாழ்வின் முடிவல்ல; நமது ஆண்மா, நமது மரணத்தில் தான் முழுதுமாக திறந்து கடவுளின் அன்பில் வாழ்வோம். மரணத்தின் மூலம்தான், நாம் கடவுளையும் அவர் நமக்கு கொடுத்த அன்பளிப்புகளையும், ஆற்றலையும் முழுது அறிந்து கொள்ள முடியும். மேலும், அந்த ஆற்றலை நாம் சரியாக பயன்படுத்த வில்லை என்றும் நாம் அறிவோம்.

நாம் நமது திறமைகளை, கடவுளின் அன்பளிப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், நாம் கடவுளரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதாரத்தில், நமது முதலீடு பல மடங்கு பெருகும். நாம் கொடுப்பதை விட பல மடங்காக நமக்கு கிடைக்கும் அதனையும் நாம் பலரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

அதற்கு மாறாக, நாம் நமது செல்வத்தை நமக்காக மட்டும் வைத்திருந்தால், இருட்டறையில் இருக்கும் பூவை போல வாடிவிடும். இருட்டறையில் பூச்செடியினால் வளர முடியாது. எதையெல்லாம் காப்பாற்றி வைக்க ஆசைபடுகிறீர்களோ , அது உபயோகமில்லாமல் போகும், மேலும் விசாமாக கூட போகலாம்; பரிசுத்த வாழ்விலும் , சொந்த வாழ்விலும் தேங்கி நிற்கிறோம். நமக்கு கிடைத்த அன்பளிப்புகள் வீணாகி விடும். நமது சுய ஆசைகளுக்காக நாம் கடவுளோடு நமக்கு உள்ள இணைப்பை நாமே அழித்து கொள்கிறோம். அந்த கடவுள் தான் தாராள மனத்தின் அரசராவார்.

ஒவ்வொரு நாளும், நாம் நம்மளுடையதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் ஆசிர்வாதங்களையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். லாசரை அந்த பணக்காரன் ஒதுக்கியதற்கு காரணம், லாசருக்கு உள்ள நோய் தான். அவன் தொழு நோயாளி என்பதை நீங்கள் அனுமானிக்கலாம்.

அடுத்து இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: நாம் கொடுத்து உதவ வேண்டியவர்களை பார்க்கும் போது அருவருப்பாக இருப்பதினால், நாம் கொஞ்சமாக கொடுக்கிறோமோ? அல்லது அவர்கள் மேல் மனக்கசப்பும் , மன்னிக்க முடியாத கோபமும் இருக்கிறதா? கடவுளோடு இனைந்திருக்க வேன்டுமானால், இதே மாதிரி நிலையில் நாம் இருக்க முடியாது. அன்பின் மூலம் நாம் நம்மையே உறசாகபடுத்தி கொண்டு, தாராள மனதை வளர்ப்போம்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராடு" யாரோடு போட்டி போடுகிறோம்.? நம்மோடு!, நேற்றையை விட இன்று இன்னும் பரிசுத்த மாக இருக்கிறீர்களா? இன்னும் தாராள மனதை கொண்டு இருக்கிரீர்களா? இன்னும் பழைய நிலையிலே மந்தமாக இருக்கிறீர்களா? அல்லது இன்னும் பரிசுத்தமாகவும், உங்கள் பாவங்களை கண்டு கொண்டு மணம் மாறி கடவுளோடு இணைந்து இருக்கிறீர்களா?

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 17, 2010

செப்டம்பர் 19, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 19, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 16


முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார்.7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். 8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், எப்படி ஒருவன் செல்வத்துடனும், பரிசுத்தமாகவும் இருக்க முடியும் என்று கூறுகிறது. பணமும், பொருட்செல்வமும் நமது கடவுளாக இருந்தால், நாம் பரிசுத்தமானவர்களாக இருக்க முடியாது; நாம் கடவுளிடமிருந்து பிரிந்து விடுகிறோம். ஏனெனில் நமக்கு கிடைத்த பொருட்களை தாராளாமாக மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று பைபிள் குறிப்பிட்டு சொல்கிறது.

செல்வத்தை சேர்த்து கொள்வதில் நாம் அதிகம் ஆர்வம் காட்டி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்தும், அதனை மற்றவர்களிடம் பிரித்து கொடுப்பதில் முக்க்யத்துவம் கொடுக்காமல் இருந்தால், கடவுள் நமது தலைவராக இருக்க மாட்டார். இது பொருட்செல்வத்திற்கு மட்டும் இல்லை, நம்மிடம் உள்ள எல்லா நல்ல விசயங்களுக்கும் பொருந்தும்.
நமக்கு எல்லா வகையான திறமைகளும், ஆற்றலும், செல்வமும் கொடுக்கப்பட்டிருக்கிறது; இதனையெல்லாம் பகிர்ந்து கொள்வதற்கு நாம் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறோம்?

"நேர்மையற்ற முறையில் வந்த செல்வம்" எது என்றால், யேசு "மற்றவர்களுக்கு போய் சேரவேண்டியது" என்று சொல்கிறார். மற்றவர்களின் பணத்தை (கடன் ) நமது சொந்த உபயோகத்திற்காக வாங்கினாலும், கடவுளரசிற்கு அதனால், சிறிதளவேனும் பயன் இல்லையெனில் , நாம் நம்பிக்கையானவர்களாக கடவுளின் பணியாளனாக இல்லை


அதே போல, நமது நேரத்தை நமது சொந்த உபயோகத்திற்காக செலவழித்தாலோ, பரிசுத்தமற்ற விசயங்களில் செல்வழித்தாலோ, நாம் கடவுளரசிற்கு நம்ப தகுந்தவர்கள் இல்லை. இயேசு உங்கள் மூலமாக மற்றவர்களை ஆசிர்வதிக்க விரும்புகிறார். அவர்களுக்கு சேரவேண்டியதை உங்களிடம் வைத்து கொண்டிருக்கிறீர்கள், யேசு அதனை அவரின் அன்பளிப்பாக உங்கள் மூலம் கொடுக்க சொல்கிறார். நாம் இந்த கடமையை (கடவுளின் பொருளாதாரத்தில் முக்கிய கொள்கை ) ஒதுக்கி தள்ளினால், "உங்களுக்கு சேர வேண்டியதை யார் தருவார்?" என்று இயேசு கேட்கிறார்.

நாம் கடவுளின் நம்பிக்கைகுரிய பணியாளனாக இருந்தால், நமக்கு என்ன கிடைக்கும். நித்திய வாழ்விற்கு உரித்தான அத்தனை செல்வங்களும் நமக்கு உண்டு: ஆவியின் செல்வங்கள், கடவுளின் பாராட்டுதலும் , அவரின் முழு அன்பும், இன்னும் பல உங்களுக்கு கிடைக்கும்.
நமது செல்வங்களுடனும், பரிசுத்த வாழ்விலும் இருக்க வேண்டுமானால், நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பை - கடவுளின் அன்பை- மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். நாம் இவ்வுலக செல்வங்களையும், நித்திய வாழ்வின் செல்வங்களையும்(விசுவாசம், ஞாணம், நம்பிக்கை, இன்னும் பல) , மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் தான் நாம் கடவுளின் நம்பிக்கை உள்ள பணியாளனாக இருக்க முடியும்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 10, 2010

செப்டம்பர் 12, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 12, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு
Exodus 32:7-11, 13-14
Ps 51:3-4, 12-13, 17, 19
1 Timothy 1:12-17
Luke 15:1-32



லூக்கா நற்செய்தி


அதிகாரம் 15


காணாமற்போன ஆடு பற்றிய உவமை
(மத் 18:12 - 14)
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:4 ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;6வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார்.7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
காணாமற்போன திராக்மா உவமை
8 'பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? 9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார்.10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். '
காணாமற்போன மகன் உவமை
11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17 அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, எதையெல்லாம் கடவுளரசிடமிருந்து இழந்தாரோ, அதனை அவர் பக்கம் கொண்டு வருவதில் தான் அவர் ஆர்வம் உள்ளது என்று கூறுகிறது. நமது கடவுள் மீண்டும் நட்பினை புதுப்பிப்பதிலும், சமாதானம் ஆவதிலும் ஆர்வம் உள்ளவர் ஆவார். உண்மையிலிருந்து விலகி நிற்பவர்களை மீண்டும் உணமை அறிய செய்பவர் ஆவார். ஏன்? காணாமற் போன ஆடுகளை போல , காணாமற் போன பொருட்களை போல உள்ளவர்கள் மேல், நாம் கொண்டுள்ள அக்கறை விட, கடவுள் அவர்கள் மேல் அதிக அக்கைறை கொண்டுள்ளார்.


உங்களை நிராகரித்தவர்கள், உங்களை விட்டு விலகியவர்களை நினைத்து பாருங்கள். அந்த நட்பினை புதுப்பிக்க , உடைந்த உறவை இணைக்க கடவுள் அக்கறை கொள்கிறார். அந்த முயற்சியை, அவர்களின் கடைசி மூச்சு இருக்கும் வரை கடவுள் கைவிடமாட்டார். (சில நேரங்களில், அந்த சமரசப்படுத்துதல், இறப்பிற்கு பிறகும் கூட நடக்கும்). மேலும் விசுவாசத்தை ஒதுக்குபவர்களை நினைத்து பாருங்கள். அவர்களை யேசு என்றும் கைவிடமாட்டார், அவர்க்ளை கடவுளிடம் திருப்பும் முயற்சியில் என்றுமே கைவிடமாட்டார்.

ஏன்? ஏனெனில், அவர்களின் பங்கும், மதிப்பும், உங்களுடைய குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் இல்லாமல் இருக்கிறது. சமுகத்தில் சக்தியை குறைக்கிறது. சமூகத்தின் வாழ்விற்கு ஊற்றாக இருக்க கூடிய கடவுள், அவர்களையெல்லாம், குணப்படுத்தி, பாதுகாப்பாக மீண்டும் கடவுளரசில் இணைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.


இவையெல்லாவற்றையும், கடவுளே செய்யட்டும் என்று நாம் விட்டு விட கூடாது. எனினும், அவர் இந்த வேலைகளையெல்லாம், நம் மூலம் செய்கிறார், ஆனால், நாம் முயற்சி செய்து, அந்த் முயற்சி பலனடையாவிட்டால், இன்னும் நாம் முயற்சியை அதிகமாக்க வேண்டும் என்றில்லை. இந்த ப்ரச்னையில், கடவுள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் நம்ப வேண்டும். இயேசு அவர்களை பின் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் நம்புவோம். அவர்கள் இயேசுவிடமிருந்து ஒளிந்து இருந்தாலும், அவர்களை தேடி யேசு செல்வார். அவர்க்ளை யேசுவை தள்ளிவிட்டாலும், யேசு அவர்களை மணம் மாற்ற முயற்சிப்பார்.


இந்த மந்தையில் , வேறு ஏதாவது வழியில் அவர்களை அழைக்க வழியிருந்தாலும், அந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். அப்படியில்லையெனில், யேசுவிற்கு நாம் ஏன் அந்த வழியில் முயலவில்லை என்று பதில் சொல்ல வேண்டும். பாவிகளை அன்பு செய்வதில் நாம் ஏன் தோல்வியுற்றோம், தனியாக திரிபவர்களிடமும், ஒதுக்கபட்டோரிடமும், நாம் ஏன் நமது அன்பை காட்டவில்லை என்று யேசுவிடம் பதில் கூறவேண்டும். அவர்களுக்கு எப்படி உதவி செய்திருக்கலாம் என்றும், நாம் ஏதோ செய்து, அவர்களை தள்ளிவிட்டோமா? என்றும் நாம் யேசுவிற்கு பதில் சொல்ல வேண்டும்.


நம்முடைய குற்ற உணர்வுகளுக்காக நாம் மணம் திரும்பி நாம் முதலில் ஆரம்ப்பிபோம். நம் தாழ்ச்சியும், இரக்கமும், பாவமன்னிப்பும் , நமது குறைபாடுள்ள அன்பை விலக்கி, முழு அன்பை , தூய அன்பை அவர்கள் புரிந்து கொள்ள உதவும். அதன் மூலம் யேசுவின் தூய அன்பை அவர்களுக்கு அளிப்பார்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

Friday, September 3, 2010

செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
Wisdom 9:13-18b
Ps 90:(1) 3-6, 12-17
Philemon 9-10, 12-17
Luke 14:25-33

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 14



இயேசுவின் சீடர் யார்?
(மத் 10:37 - 38)
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

(thanks to www.arulvakku.com)

உங்கள் வாழ்க்கையில் கடவுளின் உறவை விட,வேறு எதற்கு முதன்மை இடம் கொடுக்கிறீர்கள்? இன்றைய நற்செய்தியில், யேசு எதற்கு முதன்மையிடம் கொடுக்கிறீர்கள் என்று பார்க்க சொல்கிறார். உங்கள் நன்பர்களுக்கா ?, உங்கள் வேலைக்கா? உங்கள் சொத்துக்கா? உங்கள் லட்சியங்களுக்காகவா? இல்லை உங்கள் அனுதின செயல்களுக்கா?

எந்த சிலுவையிலிருந்து விலக விரும்புகிறீர்கள்? அதிலிருந்து விலகுவதால், இயேசுவை ஒதுக்கி தள்ளுகிறீர்களா? (குறிப்பாக: அன்பிற்காக எந்த தியாகத்தை செய்ய நீங்கள் விரும்பவில்லை? )

நாம் அவருடைய சீடராக இருப்பதற்கு முழுமையான பற்றுதலோடும், ஒத்துழைப்போடும் இல்லாமல் இருந்தால், அவரை போல மாறாமலும், அவரிடமிருந்து கற்காமலும் இருந்தால், நமது வாழ்வில் மற்ற வேலைகளுக்கும் நாம் சரியாக தயார் படுத்தவில்லை என்று இயேசு கூறுகிறார்.


மாறாக சொல்வதானால், நாம் நமது முக்கிய நோக்கத்திற்காக, நமது வேலைகளை சரியாக செய்து வந்தாலும், கிறிஸ்துவோடு உள்ள நமது உறவு எல்லாவற்றிற்கும் மேலான , முதன்மையான குறிக்கோளாக இல்லையெனில், நாம் மிகச்சரியான முடிவிற்கு செல்ல முடியாமால் இருப்போம். ஏனெனில், இவ்வுலக சிந்தனைகளால், மிகவும் தொந்தரவிற்கு உள்ளாவோம். அதனால் பாதிக்கபடுவோம், வெற்றியாளராக இல்லாமல், பாதிக்கப்பட்டோராய் இருப்போம். இவ்வுலகில் நாம் செய்து முடிக்கும் எந்த வெற்றியும் தற்காலிகமானதே, ஏனெனில், அந்த வெற்றியில், கடவுளரசின் நோக்கங்களோ, அல்லது நித்திய வாழ்விற்கான ஆயத்தங்களோ இல்லை.



சீடர் என்பவர் மானவர் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை அன்பு செய்வது எப்படி என்று கற்று கொள்கிறோம். சில் நேரங்களில், இதுவே, நமக்கு மிகப்பெரிய சிலுவை ஆகும். யேசு நமக்கு எப்படி , அன்புடனும், சந்தோசத்துடனும், நிபந்தனையற்ற அன்புடனும், மன்னித்து வாழவும் வாழ கற்று தருகிறார். நமது பரிசுத்த வாழ்வில் தொந்தரவு செய்பவர்களையும் நமது எல்லைக்குள் வரவிடாமல் இருக்கவும் யேசு நமக்கு கற்று தருகிறார். இதுவே நமக்கு ஒரு சிலுவையாக இருக்க கூடும்.

இயேசுவை பின் செல்வதிலும், அவரை போலவே மாறுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றால், தொடர்ந்து நாம் முயற்சி செய்து, நமக்கு வரும் சிலுவையை தூக்கி கொண்டு , நம்மையே யேசுவோடு இணைத்து, அவரின் சிலுவையோடு, நாமும் இனைந்து, அவரது ஆற்றலோடு நாமும் இனைந்தால் தான், நம்மால் அவர் பின் செல்ல முடியும். கிறிஸ்துவோடு உள்ள இனைப்பில் நாம் கவனம் செலுத்தவில்லையென்றால், நாம் நமது முயற்சியில் தோல்வியடைவோம். சிலுவையின் பாரத்தால், நாம் கீழே விழுவோம். ஆனால் இயேசு செய்ததை போல , மற்றவர்களின் அன்பிற்காக நாம் தியாகம் செய்ய முயற்சித்தால், யேசுவை முழுமையாக அனைத்து, அவரோடு முழு இனைப்பில், நாம் செய்ய வேண்டியதை செய்வோம். இது எந்த் ஒரு ஜெபமும், அல்லது மற்ற முறைகளையும் விட மிகவும் அதிக பலனை தரக்கூடியது.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica